18 12 2018 திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? - 65 மறியலுக்கு முதல் நாள் : மந்திரிகளுக்குத் தெளிவுரை 1948 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைத் திராவிடர் கழகம் முன்னின்று நடத்தியது. மறியலுக்கு முன்நாள் 9-10-48 அன்று பெரியார் ஆற்றியவுரை : மாலை 6 மணிக்கு பெத்துநாய்க்கன் பேட்டைச் சிவஞானம் பார்க்கில் சென்னை மாவட்டத் திராவிடக் கழகத் தலைவர் தோழர் என். ஜீவரத்தினம் அவர்கள் தலைமையில் மாபெரும் இந்தி எதிர்ப்புப் பொதுக் கூட்டம் மிக விமரிசையாக நடைபெற்றது. பார்க்கிலும், பார்க்கின் சுற்றுப்புறத்திலும் சுற்றுப்புற வீடுகளின் மாடியிலும் ஏராளமான மக்கள் குழுமியிருந்து இந்தி எதிர்ப்புப் போர் முரசொலி முழங்கக் கேட்டனர். பெரியார் அவர்களும், இந்திஎதிர்ப்பு முதல் சர்வாதிகாரியாக இருக்கும் வாய்ப்புப் பெற்ற தோழர் சி.என். அண்ணா துரை அவர்களும் சொற்பொழிவாற்றினார்கள். இடை யிடையே சிறுதூற்றல் இருந்துகொண்டிருந்ததென் றாலும்…
11 12 2018 திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? - 64 பெரியார் எச்சரித்தவாது சுதந்தரம் என்பதன் பேரால் வடநாட்டு ஆதிக்கம் தமிழகத்தின் மீது திணிக்கப்பட்டது. 1948இல் ஓமந்தூரார் ஆட்சியில் மீண்டும் பள்ளிகளில் இந்தி திணிக்கப்பட்டது. திராவிடர் கழகம் முன்னின்று அனைத்துக் கட்சிகளையும் ஓரணியில் திரட்டி போர்க்களம் கண்டது. அது தொடர்பான குடி அரசு இதழின் தலையங்கம். களம் நோக்கி வருக! வருக!! திராவிடர் கழக மத்திய கமிட்டி இந்த மாதம் 2ஆம் தேதி தலைவர் வேதாசலம் அவர்கள் தலைமையில் சென்னையில் கூடி, இந்தி எதிர்ப்பின் நடவடிக்கைகளை எப்படி எப்படிச் செய்வது என்று செய்திருக்கும் முடிவை நாம் மற்றொரு பக்கத்தில் வெளியிட்டிருக்கிறோம். அவைகளுள் பொதுக்கூட்டம் நடத்திப் பிரச்சாரம் செய்தல், வெவ்வேறு முனைகளிலிருந்து இந்தி எதிர்ப்புப் படை புறப்பட்டு, கால்நடையாகவே ஒவ்வொரு ஊரிலும் தங்கிப் பிரச்சாரம்…
04 12 2018 திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? - 62 1946 தேர்தலுக்குப் பிறகு புதிய அரசியல் அமைப்புச் சட்டத்தை எழுதுவதற்காக 1946இல் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டே அரசியல் நிர்ணய சபை உருவாக்கப்பட்டது. அதை தொடக்கம் முதலே கண்டனத் துக்கு உட்படுத்தியவர் பெரியார். 1947இல் இந்தியா சுதந்தரமடைந்ததாக நாடே கொண் டாடிய போது அது திராவிடருக்கு (தமிழருக்கு) துக்க நாள். வெளி நாட்டானுக்கு அடிமைப்பட்டது போய் இனி வடநாட் டானுக்கு நாம் அடிமையாக இருக்க நேரிடும் என்று எச்சரித் தார், பெரியார். இதுகுறித்த பெரியாரின் அறிக்கையைப் பார்ப்போம். பிரிட்டிஷ்-பனியா-பார்ப்பனர் ஒப்பந்த நாள் - பெரியார் அறிக்கை: ஆகஸ்ட் 15-ந் தேதி சுயராஜ்யத்தைப் பற்றி ஏதேதோ கூறப்படுகிறது. பூரண சுயராஜ்யம் என்றும், அதற்காகக் கொண்டாட்டமென்றும் திட்டம் வகுக்கப்படுகிறது. இதைக் கண்டு யாரும் ஆச்சரியப்படுவதற்கில்லை; வேண்டுமானால்…
30 11 2018 திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? - 62 1944இல் திராவிடர் கழகம் பெயர் மாற்றம் செய்யப்பட்டப் பிறகு, 1945 செப்டம்பர் 24, 25இல் திருச்சியில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாடு மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். இம்மாநாட்டில் திராவிட நாடு பிரிவினைக் கொள்கையைத் தீவிரப் படுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கருஞ்சட்டைத் தொண்டர்படை உருவாக்கப்பட்டது. நீதிக்கட்சியின் தராசு பொறித்த கொடி இந்த மாநாட்டில் இறுதியாக ஏற்றப்பட்டதோடு முடிவுக்கு வந்தது. திராவிடர் கழகத்துக்குப் புதிய கொடி உருவாக்கப்பட்டது. 1945இல் இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்ததையொட்டி 1946இல் இந்தியா முழுவதும் தேர்தல் நடத்தப்பட்டது. திராவிடர் கழகம் இந்த தேர்த லைப் புறக்கணித்து திராவிட நாடு பிரிவினை கோரிக் கையைப் தீவிரப்படுத்தியது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரகாசம் சென்னை மாகாண முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரகாசம் முதல்வராகத்…
16 11 2018 திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? - 61 1940 ஆகஸ்டு திருவாரூர் மாநாட்டிற்கு பிறகு நீதி கட்சியில் பெரிய போராட்டங்கள் எதுவும் நடைபெற வில்லை. 1939 இலேயே இரண்டாம் உலகப் போர் தொடங்கிவிட்டது. 1942க்கு பிறகு விடுதலை ஏடு போர் பிரச்சாரத்துக்காக ஆங்கில அரசிடம் கொடுக்கப்பட்டு விட்டது. குடிஅரசு இதழும் ஏறத்தாழ ஓராண்டு காலம் வெளிவரவில்லை.அதன்பிறகு நடைபெற்ற நிகழ்வு என்பது 1944இல் சேலத்தில் ஆகஸ்டு மாதத்தில் நடைபெற்ற ‘திராவிடர் கழகம்’ பெயர் மாற்றம் மற்றும் அமைப்புகளில் சில மாற் றங்கள் கொண்டு வரப்பட்டது. ஆங்கிலேயர் கொடுத்த பட்டம், பதவிகளை துறந்துவிடவேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. காலையில் ‘தமிழகர் கழகம்’ என்று கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை பிற்பகலில் ‘திராவிடர் கழகம்’ என்று மாற்றிவிட்டார் பெரியார் என்று தமிழ்த் தேசியவாதிகளால் பொய்யானப் பரப்புரைச்…