01 10 2018 திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? -55 1938இல் நடைபெற்ற மாபெரும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் விளைவாக, தமிழக அரசியல் தளத்தில் மாபெரும் திருப்புமுனை ஏற்பட்டது. இனி இந்தியாவுடன் தொடர்ந்து இருக்கக்கூடாது என்பதே அது. அதை வலியுறுத்தி “தமிழ்நாடு தமிழருக்கே” என்று விடுதலை ஏட்டில் அய்ந்து தொடர் கட்டுரைகள் எழுதப்பட்டன. தமிழ்நாடு தமிழருக்கே! - IV “தமிழ்நாடு தமிழருக்கே” என்னும் தலைப்பில் இதற்குமுன் மூன்று தலையங்கங்கள் எழுதி இருப்பது டன், அடுத்தபடி ஆரிய திராவிட சமய சம்பந்தமாக எழுதப்படும் என்று நேற்றைய தலையங்க முடிவில் குறித்திருந்தோம்.அந்தப்படி இன்றைய தலைங்கத்தின் கீழ் ஆரிய திராவிட சமயங்கள் என்ன? சமய ஆதாரங்கள் என்ன? என்பவைகளைப் பற்றி எழுதப்புகுகின்றோம். இப்படி எழுதுவதில் நாம் பெரிதும் தற்காலம் பிரத்தியட்ச அனு பவத்தில் உள்ளனவற்றையே பெரிதும் ஆதாரமாய்க் கொண்டு…
25 09 2018 திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? - 54 1938இல் நடைபெற்ற மாபெரும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் விளைவாக, தமிழக அரசியல் தளத்தில் மாபெரும் திருப்புமுனை ஏற்பட்டது. இனி இந்தியாவுடன் தொடர்ந்து இருக்கக்கூடாது என்பதே அது. அதை வலியுறுத்தி “தமிழ்நாடு தமிழருக்கே” என்று விடுதலை ஏட்டில் அய்ந்து தொடர் கட்டுரைகள் எழுதப்பட்டன. தமிழ்நாடு தமிழருக்கே! - III நேற்றும் முன்தினமும் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற தலைப்பின்கீழ் அதன் கருத்தையும், அவசியத்தையும், முறையையும் விளக்கி எழுதியிருந்ததுடன், மறுபடியும் அதைப்பற்றித் தொடர்ந்து திராவிடருக்கும் அந்நியருக்கும் உள்ள வாழ்க்கை முறைப் பேதம்பற்றி எழுதப்படும் என்று குறிப்பிட்டிருந்தோம். அதன்படி இன்று எழுதப் போகும் இந்த 3ஆவது தலையங்கத்தில் முதலாவதாக திராவிடர்கள்-ஆரியர்கள் என்பவர்கள் எப்படிப்பட்டவர்கள், அவர்களிருவருக்கும் எப்படி சம்பந்தமேற்பட்டது, அவர் களுடைய வாழ்க்கைமுறை பேதம் எப்படிப்பட்டது என்பவைகளை எடுத்துக்காட்ட…
17 09 2018 திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? - 53 1938இல் நடைபெற்ற மாபெரும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் விளைவாக தமிழக அரசியல் தளத்தில் மாபெரும் திருப்புமுனை ஏற்பட்டது. இனி இந்தியாவுடன் தொடர்ந்து இருக்கக்கூடாது என்பதே அது. அதை வலியுறுத்தி “தமிழ்நாடு தமிழருக்கே” என்று விடுதலை ஏட்டில் அய்ந்து தொடர் கட்டுரைகள் எழுதப்பட்டது. தமிழ்நாடு தமிழருக்கே! - II நேற்று இத்தலைப்பின்கீழ் எழுதிய தலையங்கத்தில் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்பது ‘திராவிடம் திராவி டருக்கே’ என்ற கருத்துக்கொண்டதென்றும், திராவிடம் என்றாலும் தமிழ்நாடு என்றாலும் பழைய திராவிட எல்லையையும் திராவிட பாஷைகளையுமே குறிப்பது என்றும், ‘திராவிடம் திராவிடருக்கே’ என்பதன் கருத்து, “இந்தியா”வின் பிணைப்பில் இருந்து திராவிடத்தைப் பிரித்து அதை ஒரு தனி நாடாக ஆக்கி, வேண்டுமானால் திராவிட பாஷைப்படி உள்ள பாகங்களை திராவிட தேசத்திற்குள் உள்…
13 09 2018 திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? - 52 1938இல் நடைபெற்ற மாபெரும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் விளைவாக தமிழக அரசியல் தளத்தில் மாபெரும் திருப்புமுனை ஏற்பட்டது. இனி இந்தியாவுடன் தொடர்ந்து இருக்கக்கூடாடது என்பதே அது. அதை வலியுறுத்தி “தமிழ்நாடு தமிழருக்கே” என்று விடுதலை ஏட்டில் அய்ந்து தொடர் கட்டுரைகள் எழுதப்பட்டது. தமிழ்நாடு தமிழருக்கே! “தமிழ்நாடு தமிழருக்கே” என்று, இப்போது நடைபெற்று வரும் பிரசாரத்தைப் பற்றித் தமிழ்நாட்டில் எங்கும் பேசப்பட்டு வருகிறது. நம் எதிரிகளும், தங்கள் சுய நலத்திற்கு ஆகவே, நம் கூட்டத்தில் இருக்கும் சில வேஷதாரிகளும் இதைத் திரித்துக் கூறுவதும் இதைப் பற்றி விஷமப் பிரசாரம் செய்வதும், இதற்கு எதிரான ஒரு கிளர்ச்சியை உண்டாக்கச் சூழ்ச்சி செய்வதுமான காரியங்களைப்பற்றி நாம் கேள்விப்படுவதோடு சில விஷயங்களை நேரிலும் பார்க்கிறோம்.இது விஷயமாய்ப் பெரியார்…
09 09 2018 திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? -51 மாபெரும் இந்தி எதிர்ப்புப் போரில் வீர மரண மடைந்த மற்றொருவர் தாலமுத்து ஆவார். கும்ப கோணத்தைச் சேர்ந்த அவர் சிறைச் சாலையிலேயே 12.3.1939இல் வீர மரணம் அடைந்தார். அவருடைய இறுதி ஊர்வலத்தை விடுதலை ஏடு படம்பிடித்துக் காட்டியுள்ளது. இந்தி எதிர்ப்பில் ஈடுபட்டு, சிறையில் இருந்த குடந்தை தோழர் தாலமுத்து நாடாரின், பிரேத ஊர்வலம் 13-3-1939 மாலை 5 மணிக்கு ஜெனரல் ஆஸ்பத் திரியிலிருந்து புறப்பட்டது. அலங்கரித்த பாடையில் தோழர் நாடார் கிடத்தப்பட்டிருந்தார். ஏராளமான மலர் மாலைகள் போடப்பட்டன. தொடக்கத்தில் சர்வாதிகாரி எஸ். சம்பந்தமும் மற்றும் மூவரும் பாடையைத் தூக்கி வந்தனர். தோழர் நாடாரின் வயதான பெற்றோர் களும், இளம் மனைவியும் சவத்தின்மீது விழுந்து புரண்டு அரற்றிய காட்சி கல்மனதையும் கரைத்து விட்டது. வந்திருந்த…