13 08 2018 திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? - 45 பெரியார் 13.11.1938இல் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் கலந்துகொண்டு பெண்களைப் போராட்டத்தில் ஈடுபடுமாறு பேசியதற்காக ஒரு ஆண்டு கடுங் காவல் தண்டனையும் 1000 ரூபாய் அபராதமும், மறுநாள் 14.11.1938 அன்று பெத்துநாய்க்கன் பேட் டையில் பள்ளியின் முன் பெண்கள் மறியல் செய்வதற்குத் தயாராயிருந்தபோது நடைபெற்றக் கூட்டத்தில் பேசியதற்காக ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனையும், 1000 ரூபாய் அபராதமும் கட்ட வேண்டும் என்றும் அபராதம் கட்டத் தவறினால் மேலும் ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி மாதவராவ் 6.12.1938 பிற்பகல் 3.15 மணிக்குத் தீர்ப்பளித்தார். பெரியார் எதிர் வழக்காடாமலும், அபராதம் கட்ட மறுத்தும் நீதிமன்றத்தில் தான் செய்ததில் சட்டமீறல் எதுவும் இல்லை என்ற அறிக்கையை மட்டும் படித்துக் கொடுத்துவிட்டு, மூன்றாண்டு கடுங்…
09 08 2018 திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? - 44 பெரியாரும் சிறை புகுந்தார் கடைசியாகப் பெரியார் ஈ.வெ.ராமசாமியும் சிறை புகுந்துவிட்டார். சிறைவாசம் அவருக்குப் புதியதல்ல. நாம் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தபடி இது அவரது எட்டாவது சிறைவாசமாகும். சிறைவாசத்துக்குப் பெரி யார் பயந்தவருமல்ல; சிறைக்கூடம் அவருக்கு மாமி யார் வீடு மாதிரி. சர்க்கார் அழைப்பு வரவேண்டியது தான் தாமதம். மூட்டை முடிச்சு கட்டிக்கொண்டு தயங் காமல், சிறை நோக்கிப் புறப்பட்டு விடுவார். சிறை வாசத்தில் அவருக்கு அவ்வளவு காதல். எதிர் வழக் காடுவது அவருக்குப் பெரிய வெறுப்பு. ஏற்கெனவே ஏழு முறை இவ்வாறு சிறைபுகுந்திருக்கிறார். இப்பொ ழுது புகுவது எட்டாவது முறை. நம்மைப் பொறுத்த மட்டில் அவர் சிறைபுகுவது பற்றி வருத்தப்படவில்லை. ஏனெனில் அவருக்கு ஓய்வு மிகவும் தேவையாக இருக்கிறது. வாழ்நாள் முழுவதும் ஊணுறக்கமின்றி…
03 08 2018 திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? - 43 கிராஸ் செய்ய பெரியார் மறுப்புஈ.வெ.ரா. சாட்சியை ஒன்றும் கேள்வி கேட்க வேண்டியதில்லை என்று தெரிவித்தார். நீதி :- உங்கள் பேரில் கிரிமினல் குற்றம் சாட்டப் பட்டிருக்கின்றதாகையால், வழக்கிற்குச் சம்பந்தப்பட்ட ஸ்டேட்மெண்டைத்தான் கொடுக்க வேண்டும். சம்பந்தப் படாத வெளி விஷயங்களை நான் ஏற்கமாட்டேன். ஈ.வெ.ரா. :- நான் சட்ட நிபுணனல்ல. சாட்சியங் களைக் காதில் கேட்டேன்; பார்த்தேன்; பதில் கூறு கிறேன். எனக்கு பதில் கூற உரிமையுண்டு. இயன் றால் ஏற்றுக்கொள்ளுங்கள். இல்லாவிட்டால், தள்ளி விடுங்கள். நான் வழக்கிற்குச் சம்பந்தப்பட்டவை களையே கூறுகின்றேன். பின்னர் பெரியார் தமது நீண்ட வாக்குமூலத்தைப் படித்து நீதிபதியிடம் கொடுத்தார். படிக்கும்போது நடுவில் நீதிபதி சரி சரியெனத் தலையை ஆட்டிக்கொண்டே இருந்தார்.பின்னர் கிரவுன் பிராசிக்கூட்டர் எழுந்து தங்களுக்கு இவ்வழக்கில்…
27 07 2018 திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? - 42 இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் பெண்கள் தீவிர மாகப் பங்கேற்றனர். இனி பெரியாரை கைது செய்தால் தான் போராட்டத்தை ஒடுக்க முடியும் என்று கருதிய முதலமைச்சர் இராசாசி, பெரியாரைக் கைது செய்ய முடிவு செய்தார். 1-1-1938 அன்று பெரியாருக்கு காவல் துறை கைது வாரண்ட் பிறப்பித்தது. “13.11.1938இல் நடைபெற்ற தமிழ்நாடு பெண்கள் மாநாட்டில் பேசி அவர்களைக் கிளர்ச்சியில் ஈடுபடத் தூண்டினார். மறு நாள் 14.11.1938இல் பெண்கள் போராட்டக் களத்தில் கலந்துகொள்ள வந்தபோது அவர்களிடையே பேசி அவர்களை மறியலில் ஈடுபடத் தூண்டினார்” என்ற குற்றச்சாட்டுகளின் பேரில் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. வழக்கு விசாரணை 5.12.1938 அன்றும் 6.12.1938 அன்றும் நடைபெற்றது. பெரியார் ஈ.வெ.ரா. வழக்கு சர்க்கார் தரப்பு சாட்சியம் பெரியார் வாக்குமூலம் 3 வருஷம்…
20 07 2018 திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? - 41 சென்னையில் ஈ.வெ.ரா. சிறை சென்ற தாய்மார்களுக்குப் பாராட்டு சென்னை, பெத்துநாயக்கன்பேட்டைத் தமிழர் கழகத்தின் ஆதரவில் 14-11-1938 அன்று நடைபெற்ற 5000 மக்கள் கொண்ட பொதுக் கூட்டத்தில் பெரியார் ஈ.வெ. ராமசாமி பேசியதாவது : தாய்மார்களே! தோழர்களே! அருமைச் சிறுவன் லூர்து சாமியும், சகோதரி பார்வதியம்மையாரும் பேசிய பேச்சு என் மனதை உருக்கிவிட்டது. அதனால் நான் பேசக்கருதியிருந் ததை மறந்தேன். நிற்க. காலை நடைபெற்ற சம்பவம் நடக்குமென்று நான் நினைக்கவில்லை. இரண்டு குழந்தைகளுடன் சென்ற 5 தாய்மார்கட்கும், 2 தொண்டர் கட்கும் 6 வாரம் தண்டனை விதிக்கப்பட்டது. இன்று ஒரு முத்துக்குமாரசாமிப் பாவலருக்கு 18 மாதம் கடுங் காவல் தண்டனை விதிக்கப்பட்டது. எனவே இந்த நாள் மிக வன்மத்துடன் மனதில் வைக்க வேண்டிய…