13 07 2018 திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? - 40 சென்னையில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் பெரியார் ஈ.வெ.ரா.வின் முழக்கம் 13.11.1938ஆம் நாள் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் ஈ.வெ.ரா. ஆற்றிய உரை வருமாறு : “தலைவர் அவர்களே! தாய்மார்களே! இத்தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட்டில், உங்கள் முன்னால் பேச சந்தர்ப்பம் கிடைத்தது பற்றி உண்மை யிலேயே பெரு மகிழ்ச்சியடைகிறேன். சமுத்திரம் போல் பெண்கள் கூடியுள்ள இந்தக் கூட்டத்தைப் பார்க்க என் மனமே ஒருவித நிலை கொள்ளா மகிழ்ச்சியடை கிறது. இவ்வளவு பெரிய ஒரு பெண்கள் கூட்டம் சென் னையில் வரும் என நான் நினைக்கவில்லை. சென் னையைப் பற்றி நான் சில சமயங்களில் பரிகாசமாய் நினைப்பதுண்டு. என்னவென்றால் சென்னை மூடநம் பிக்கைக்கு இருப்பிடமானது என்று நான் சொல்லு வதுண்டு. இதை நான் அடிக்கடி பத்திரிகை…
06 07 2018 திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? - 39 தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு நடவடிக்கை விபரம்; நிறைவேற்றிய தீர்மானங்கள்  இன்று (நவம்பர் 13, 1938) பிற்பகல் 1 மணிக்கு சென்னை பெத்தநாய்க்கன் பேட்டை கிருஷ்ணாங் குளத்தையடுத்த காசி விஸ்வநாதர் கோயில் முன் பிருந்து தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட்டு ஊர்வலம் புறப்பட்டது. மாநாட்டுத் தலைவர் திருவாட்டி-திரு வரங்க நீலாம்பிகை என்ற நீலக்கண்ணியம்மையார், தோழர்கள் தாமரைக்கண்ணியம்மையார், பண்டித நாராயணி அம்மையார், டாக்டர் தருமாம்பாள், மூவா லூர் இராமாமிர்தம் அம்மையார், பார்வதி அம்மையார், மலர் முகத்தம்மையார், கலைமகளம்மையார் முதலியோரும் தலைவர் தோழர் ஈ.வெ. ராமசாமி, தோழர் அ. பொன்னம்பலம், உள்ளிட்ட 5000-த்திற்கும் மேற்பட்டவர் ஊர்வலத்தில் கலந்துவந்தனர். மாநாட்டுத் தலைவர், திறப்பாளர், வரவேற்புக் கழகத் தலைவர்களைக் கோச்சில் வைத்து அழைத்துவரப் பட்டது. ஆயிரக்கணக்கான பெண்கள் தமிழ்க் கொடிகளை…
28 06 2018 திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? - 36 ஆகஸ்ட்டு 1ஆம் தேதி திருச்சியில் புறப்பட்ட தமிழர் பெரும்படை 42வது நாளில் செப்டம்பர் 11ஆம் நாள் சென்னையை அடைந்தது. சென்னையில் சிறப்பான வர வேற்பு சென்னை கடற்கரையில் முப்பெரும் தலைவர்களின் முழக்கம் (மறைமலை அடிகள், நாவலர் சோமசுந்தர பாரதியார், ஈ.வெ.ரா.) 12-9-1938 விடுதலையில் வெளிவந்த செய்தியை அப்படியே கீழே தரப்பட்டுள்ளது. தமிழர் பெரும்படைக்கு சென்னையில் வரவேற்பு நேற்று காலை படை மைலாப்பூரில் தங்கி, மாலை 3 மணிக்குத் தண்டை விட்டுப் புறப்பட்டு, இராயப்பேட்டை, மவுண்ட்ரோடு, சிந்தாதிரிப்பேட்டை, திருவல்லிக்கேணி வழியாக மாலை 5.30 மணிக்குத் திருவல்லிக்கேணி கடற் கரைக்கு வந்து சேர்ந்தது. ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். ஊர்வலம் சிந்தாரிப் பேட்டை வந்ததும், தோழர் இராகவேலுவைத் தலைமையாகக் கொண்ட செஞ்சட்டை அணிந்த…
21 06 2018 திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? 35 அரசல் வெளிநாடு சென்றிருந்த நீதிக்கட்சியின் தலைவர் பொப்பிலி அவர்கள், போராட்டம் உச்சக் கட்டத்தில் நடந்து கொண்டிருந்த நேரத்தில்தான் சென்னைக்கு வந்து சேர்ந்தார். இந்தி எதிர்ப்புப் போராட்டம் குறித்து அவரும் ஒரு நீண்ட அறிக்கை வெளியிட்டிருந்தார். இதுவரை எந்த நூலிலும் அந்த அறிக்கை பதிவாகாததால் அதையும் முழுமையாக இங்கு வெளியிடுகிறோம். பொப்பிலி ராஜா சாஹிப் அறிக்கை ஜஸ்டிஸ் கட்சித் தலைவர் பொப்பிலி ராஜா ஸாஹி பவர்கள் பின்வருமாறு ஒரு அறிக்கை வெளியிட்டி ருக்கிறார். “நான் இந்தியாவுக்குத் திரும்பி வந்ததும் சென்னை மாகாணத்தில் நடைபெறும் கட்டாய இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியைப் பற்றி அபிப்பிராயம் கூறவேண்டு மென்று” பத்திரிகைப் பிரதிநிதிகள் என்னைக் கேட்டுக் கொண்டார்கள். ஆனால் பிரச்சினையைச் சரியாக ஆராய்ந்து பாராமலும் நிலைமையை முற்றிலும் அறியாமலும் எனது…
14 06 2018 திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? - 34 இராசாசியின் கட்டாய இந்தியை எதிர்த்துத் தமிழகம் முழுவதும் மாபெரும் கிளர்ச்சிகளும் போராட்டங்களும் நடைபெற்றுவந்த வேளையில் பம்பரமாகச் சுழன்று செயல்பட்டுவந்த பெரியார், தமிழர், பெரும்படை சென்னையை வந்தடைவதையொட்டி அதை வரவேற்கவும், கடற்கரைக் கூட்டத்தில் கலந்து கொள்ளவும் சென்னை செல்வதற்குமுன் பெரியார் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இந்தி எதிர்ப்புப் போராட்டம் தொடர்பான பெரியாரின் அறிக்கை என்பதால் அதை முழுமையாக இங்கு வெளியிடுகிறோம். நான் சிறை புகுந்தால்? ஈ.வெ.ரா. அறிக்கை அன்புமிக்க சுயமரியாதைத் தோழர்களே! இந்தி எதிர்ப்புத் தோழர்களே!! நான் இன்று சென்னைக்குச் செல்லுகிறேன். பார்ப் பன ஆட்சி அடக்குமுறையின் பயனாய் அநேகமாக 11-ந் தேதி கைது செய்யப்பட்டுவிடுவேன். (அன்றுதான் கடற்கரையில் மாபெரும் பொதுக்கூட்டம் கூட உள்ளது க.ஆ) எனக்கு சுமார் மூன்று, நான்கு வாரங்களுக்கு…