02 05 2018 திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? - 28 கட்டாய இந்தியை எதிர்த்துத் தமிழர் பெரும்படை திருச்சியிலிருந்து புறப்பட்டு தமிழ் மக்களிடையே மாபெரும் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திக் கொண்டு வந்த அதேகாலத்தில் சென்னையில் இந்தியை எதிர்த்து மறியல் கிளர்ச்சிகளும் தொடர்ந்து நடைபெற்று வந்துகொண்டிருந்தன. இந்தி எதிர்ப்புத் தொண்டர்கள் சிறைக்கு அஞ்சாமல் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டு கைதாகி சிறையேகி வந்தனர். அந்த வரிசையில் மறைமலை அடிகளாரின் மகன் மறை திருநாவுக்கரசு அவர்களுக்கு 8.8.1938 அன்று ஆறு மாதம் வெறுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. மறை திருநாவுக்கரசு மீது கூறப்பட்ட குற்றச்சாட்டு வருமாறு : “தாங்கள் ஜூன் 27-ஆம் அயனாவரத்திலும், ஜூலை 2-ஆம் தேதி கோடம்பாக்கத்திலும் பேசுகையில் பொது ஜனங்களை முதன் மந்திரி வீட்டு முன்னும், இந்தி கட்டாயப் பாடமாக புகுத்தப்பட்டிருக்கும் பள்ளிக்கூடத்தின் முன்னும் மறியல் செய்யும்படி…
25 04 2018 திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? - 27 சிந்தனையாளன் தமிழர் பெரும்படை ஆகசுட்டு 1 அன்று திருச்சி யில் புறப்பட்டது. தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்றப் பொதுக் கூட்டத்தில் வழி அனுப்பு விழா திருச்சி டவுன் ஹாலில் நடைபெற்றது. விழா முடிவுற்று தமிழர் பெரும்படை வீரர்கள் 101 பேரும் வரிசையாக அணிவகுத்துச் செல்லும் காட்சியை கீழே உள்ள படத்தில் காணலாம் தமிழர் பெரும்படை புறப்படுவதற்கு ஒருநாள் முன்னதாக 31.7.1938இல் சென்னை கடற்கரையில் இந்தியை எதிர்த்து அனைத்துக் கட்சிக் கூட்டம் மிகப் பெரிய அளவில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நீதிக்கட்சியின் முன்னாள் அமைச்சர் சர். பி.டி. ராசன் (பொன்னம்பலம் தியாகராசன்) தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் கே.எம். பாலசுப்பிரமணியம், சர்.கே.வி. ரெட்டி நாயுடு, எ.பி. பாத்ரோ, முத்தையா முதலியார், என். நடராஜன், சாமி சண்முகானந்தா,…
18 04 2018 திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? - 26 வாலாசா வல்லவன் தமிழகர்களை உணர்வு பிழம்புகளாக மாற்றிய தமிழர் பெரும்படை தமிழர் பெரும்படை ஆகசுட்டு 1 அன்று திருச்சி யிலிருந்து புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. படை யில் கலந்து கொள்வோருக்குக் கடுமையான கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டன. தமிழர் பெரும்படைக்கான அமைச்சர் மணவை ரெ. திருமலைசாமி தொண்டர்கள் அனுசரிக்க வேண்டியவைகளை (நிபந்தனைகளை) 29.7.1938 விடுதலை ஏட்டில் அறிவித்தார். அவை யாவன : 1. அவசியமான (எளிய) ஆடை முதலியன அவர்களே கொண்டுவர வேண்டும். குறிப்பு : அதிகமான துணிகள் கொண்டுவரப்படாது. இடுப்பில் ஒரு வேஷ்டி, உடம்பில் ஒரு சொக்காய், தோளில் போட்டுக் கொள்ளவும் தலையில் கட்டிக் கொள்ளவும் இலாயக்குள்ளதான ஒரு வஸ்திரம் ஆக 3 உருப்படிகளுக்கு மேல் ஒரே காலத்தில் ஒரு தொண்டர்…
11 04 2018 திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? 23 (1938 சூன் மாதம் 1, 2ஆம் நாள்களில் விடுதலையில் இந்தி கட்டாயப் பாட மர்மம் என்றத் தலைப்பில் இரண்டு தலையங்கள் எழுதப்பட்டன. இரண்டாவது நாள் வெளியான தலையங்கம் இன்றைக்கும் (மோடி அரசு இந்தியைத் திணிக்கும் சூழலில்) பொருத்தப்பாடு உடையதாக இருப்பதால் அத்தலையங்கத்தை அப்படியே வெளியிடுகிறோம்) இந்தி கட்டாயப் பாட மர்மம் : 2 தேசியப் பொது மொழியொன்று இல்லாவிட்டால் தேச பக்தி வளராதா? ஒற்றுமை நிலவாதா? தேசம் முன்னேற்றம் அடையாதா? என முதலில் கவனிப்போம். ஒரே பாஷை பேசம் நாடு உலகத்திலேயே இல்லை. சுலபமான போக்குவரத்து வசதிகள் ஏற்பட்டு விட்டதினாலும், வயிற்றுப் பிழைப்புக்காக பரதேசம் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டதினாலும் ஒரு சிறு நாட்டிலும்கூட பல மொழி பேசுவோர் உயிர் வாழும் நிலைமை…
04 04 2018 திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்துக்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? - 22 சிந்தனையாளன் சென்னையில் 3.6.1938இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் முதல் சர்வாதிகாரி செ.தெ. நாயகம் கைது செய்யப்பட்டவுடன், ஈழத்து அடிகளை இரண்டாவது சர்வாதிகாரியாக அன்றே பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டுமென இந்தி எதிர்ப்புப் போராட்டக்குழுவினர் கேட்டுக் கொண்டனர். போராட்டக்களம் தியாகராயர் நகர் முதலமைச்சர் வீட்டின் முன் நடைபெற்றதை மாற்றி, சென்னை பெத்துநாயக்கன்பேட்டை உயர்நிலைப்பள்ளிக்கு முன்பு நடத்தத் திட்டமிடப்பட்டது. ஏனெனில் அந்தப் பள்ளி யில் சமஸ்கிருதமும் பாடமாகக் கற்பிக்கப்பட்டு வந்தது. 28.7.1938இல் ஈழத்து அடிகள் கைது செய்யப் பட்டவுடன், தோழர் கே.எம். பாலசுப்பிரமணியம் மூன் றாவது செயல் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண் டார். அதன்பின் அருணகிரி அடிகளார் பொறுப்பேற்றுக் கொண்டார். அவரும் 6.8.1938இல் கைது செய்யப் பட்டார். அதன்பிறகு மறைமலையடிகளாரின் இளைய மகன் மறை திருநாவுக்கரசு…