15 02 2018 திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்துக்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? 14 வாலாசா வல்லவன் முதல் ‘இந்தி’ எதிர்ப்புப் போர் வரலாற்றில் ‘இந்தியா’ என்கிற நாடு என்றைக் கும் ஒரே நாடாக இருந்தது இல்லை. அரசர்கள் காலங்களில் பல்வேறு தனித்தனி நாடுகளாகவே இருந்தன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சேர, சோழ, பாண்டியர்களும் பல்லவர்களும் ஆட்சி செய்து வந்தனர். இந்தியாவைப் பேரரசாக ஆண்ட ஒளரங்கசீப் ஆட்சியில்கூடத் தமிழகம் இணையவில்லை; தனித்தே இருந்தது. ஆங்கிலேயர்கள் தங்கள் நிர்வாக வசதிக்காக ‘இந்தியா’ என்கிற ஒரு கட்டமைப்பை உருவாக்கி னார்கள். முதலில் கிழக்கிந்தியக் கம்பெனி சில பகுதி களையும், சிற்றரசர்கள் சிலப் பகுதிகளையும் ஆண்டு வந்தனர். முதல் சுதந்தரப்போர் என அழைக்கப்படும் இராணுவப் புரட்சிக்குப் பிறகு, 1857இல் பிரிட்டிஷ் அரசு தங்களுடைய நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இந்தியா வைக் கொண்டு வந்தது. அப்போது…
31 01 2018 திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? 11வாலாசா வல்லவன் சென்ற இதழில் உ.வே.சா. இந்தி ஆதரவாளர் என்பதை எழுதியிருந்தேன். உ.வே.சாவைப் பார்ப் பனர்கள் எப்படியெல்லாம் விளம்பரப்படுத்தி பெரிய மனிதராக்குகிறார்கள்; பார்ப்பனரல்லாத தமிழறிஞர் களை எவ்வாறு இருட்டடிப்புச் செய்கிறார்கள் என்ப தைப் பற்றி உ.வே.சா. எண்பத்தோராம் பிறந்தநாள் விழா நடைபெற்ற காலக்கட்டத்தில், 1935இல், குடி அரசு இதழ் சுயமரியாதை இயக்கத்தின் கருத்தினை மிகச் சிறந்த முறையில் பதிவு செய்திருக்கிறது. “இன்று தமிழ்ப்பாஷை விஷயத்தில் உழைப் பவர்களும், அதில் தேர்ந்த விற்பன்னர்களும் பார்ப் பனரல்லாத மக்களிலேயே ஏராளமாக நிரம்பி இருக்கின்றார்கள் என்பது யாருக்கும் தெரியாததல்ல. தோழர் களான சுவாமி வேதாச்சலம் (மறைமலையடிகள்), எஸ்.சோமசுந்தர பாரதியார், திரு.வி. கலியாணசுந்தர முதலியார், கா.நமச்சிவாய முதலியார் போன்ற எவ்வளவோ சிறந்த புலவர்கள் இருந்தும், அவர்களை யெல்லாம் இந்தப் பார்ப்பனர்கள்…
08 02 2018 திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? - 13 வாலாசா வல்லவன் சென்னையில் 1933ஆம் ஆண்டு கே.வி. கிருஷ்ண சாமி அய்யர் என்பவர் தமிழன்பர் மாநாடு ஒன்றை நடத்த முயன்றபோது சுயமரியாதை இயக்கம் தலை யிட்டு அம்மாநாட்டை உண்மையான தமிழ் வளர்ச்சிக் குரிய மாநாடாக அமைவதற்கான முன் முயற்சிகளை எடுத்தது. மாநாட்டில் என்னென்ன தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும் என்று மாநாட்டிற்கு 15 நாட் களுக்கு முன்பே சுயமரியாதை இயக்கத்தின் தீர்மா னங்களை அச்சிட்டு, மாநாட்டின் தலைவர் கே.வி. கிருஷ்ணசாமி அய்யருக்கு அனுப்பி வைத்தது. அதன் விவரம் வருமாறு : அன்புள்ள ஐயா! இம்மாதம் 23, 24ம் தேதிகளில் நடக்கும் தமிழன்பர் மகாநாட்டில் நிறைவேற்றப்படுவதற்காக அனுப்பப் பட்டிருக்கும் கீழ்க்கண்ட தீர்மானங்களை மகாநாட்டில் வைக்கவேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம். தீர்மானங்கள் : 1. பொதுப் பள்ளிக்கூடங்களின்…
20 01 2018 திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? - 10 வாலாசா வல்லவன் “சமஸ்கிருத சனியன்” 1930 களில் உலக அளவில், பொருளாதாரப் பெருமந்தம் ஒன்று ஏற்பட்டது. அரசு தன் செலவு களைக் குறைக்க வேண்டி வந்தது. சென்னை மாகாண அரசு அமைத்த சிக்கனக் கமிட்டியினர் அரசுக்கு நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்கச் சில பரிந்துரைகளைச் செய்திருந்தனர். அதில் மாநிலக் கல்லூரியில் சமஸ்கிருத ஆனர்ஸ் வகுப்பை எடுத்து விட வேண்டும் என்பதும் ஒன்றாகும். அதை வரவேற்று 17.01.1932 குடிஅரசு ஏட்டில் ‘சமஸ்கிருத சனியன்’ என்ற தலைப்பில் தேசியத் துரோகி என்ற புனை பெயரில் ஒரு சிறப்பான கட்டுரையும் தமிழ் மக்களுக்கு வேண்டுகோளும் வெளியிடப்பட்டது. அந்தக் கட்டுரை இப்படி தொடங்குகிறது :“தேசியத் துரோகியாகிய நாம் கூறும் விஷயங்கள் முழுவதும், எழுதும் சங்கதிகள் எல்லாம், மக்களுக்குப் பயன்படாத…
11 01 2018 திராவிடர் இயக்கங்கள் - தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? - 9 எழுத்தாளர்: வாலாசா வல்லவன் பெரியார் என்றாலே தமிழ்மொழிக்கும் தமிழ்ப் புலவர்களுக்கும் விரோதமானவர் என்ற தன்மையில் தமிழ்த் தேசியம் பேசுவோரில் பலர் பேசுவதையும், எழுதுவதையும் தொடர்ந்து செய்துவருகின்றனர். அவர்கள் கூற்றில் ஒரு சிறிதும் உண்மை இல்லை. பெரியார் தமிழ்ப் புலவர்களை இரண்டு வகையாகப் பிரித்தார்.முதல்வகை,ஆரியப் பார்ப்பனர்களை எதிர்ப்பவர்கள். இரண்டாவதுவகை ஆரியப் பார்ப்பனர்களை ஆதரிப்பவர்கள். முதல்வகைப் புலவர்களைப் பெரியார் எப்போதுமே எதிர்த்து வந்ததில்லை.உதாரணமாகப் பெரியாருக்குக் கிடைத்த முதல் புலவர் சாமி சிதம்பரனார் -மனைவியை இழந்த அவருக்கு இரண்டாவது திருமணத்தைப் பெரியார் தன் சொந்தச் செலவிலேயே 5.5.1930இல் சிவகாமி-சிதம்பரனார் இணையரின் விதவைத் திருமணத்தை ஈரோட்டில் தன் வீட்டிலேயே நடத்தினார். பெரியார் வெளியூர் நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் போதெல்லாம் சாமி சிதம்பரனாருக்குத் தந்தி கொடுத்துவிடுவார்.ஈரோடு வந்து குடிஅரசு…