10 11 2018 திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? - 60 1940 ஆகஸ்டு 24, 25 தேதிகளில் திருவாரூ ரில் நடைபெற்ற நீதிக்கட்சியின் 15ஆவது மாநாடு திராவிடர் இயக்க வரலாற்றில் ஒரு திருப்புமுனை மாநாடாகும். 1938இல் தொடங்கி 1939 வரை நடைபெற்ற மாபெரும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்குப் பிறகு நடைபெற்ற மிகப்பெரிய மாநாடு இது. இம்மாநாட்டில் திராவிட நாடு பிரிவினைக்கான தீர்மானமும் திராவிட நாடு அடைவதற்கான வழிவகை களைக் கண்டறிய ஒரு குழுவும் அமைக்கப்பட்டது.இன்று தமிழ்த் தேசியர்களால் தூக்கிப் பிடிக்கப் படும் கி.ஆ.பெ. விசுவநாதன் அவர்கள்தான் அந்த மாநாட்டின் போது நீதிக்கட்சியின் பொதுச் செயலாள ராக இருந்தார்.தமிழ்த் தேசியர்களால் தூக்கி நிறுத்தப்படும் அண்ணல் தங்கோவும் நீதிக்கட்சியில் தான் தீவிரமாகப் பணி யாற்றினார். அப்போது மொழிவழி மாநிலம் பிரிய வில்லை. நான்கு மொழிகளையும் பேசக்கூடிய…
05 11 2018 திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? - 59 1940 ஆகஸ்டு 24, 25 தேதிகளில் திருவாரூரில் நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டில் தந்தை பெரியார் ஆற்றிய தலைமையுரையின் இறுதிப் பகுதி. இந்து-முஸ்லிம் ஒற்றுமை திராவிட நாட்டில் திராவிடர்களிலிருந்து திராவிட சமயத்தவர்கள் என்பவர்கள் நீங்கலாக, முஸ்லிம்கள் என்னும் பேரால் ஒருபெரும் எண்ணிக்கையுள்ள சமூக மக்கள் இருக்கிறார்கள் என்பது யாவரும் உணர்ந்ததே யாகும். அவர்கள் பெரும்பாலோர் உண்மையில் திராவிடர் களாகவே இருந்து சமயக்கொள்கைகள் காரணமாகவே வேறுபட்ட மக்களாக இதுவரை கருதிக்கொண்டிருக்க நேர்ந்தது. இப்போதும் இப்படிப்பட்ட வேறுபட்ட எண்ணத் திற்கு இந்துமதக் கொள்கைகள் தான் காரணமேயொழிய உண்மையில் சமயத்தின் பேரால்கூட முஸ்லிம்களுக்கும் மற்ற திராவிடர்களுக்கும் பெரியதான வித்தியாசம் ஒன்று மில்லை என்பதை நாளுக்கு நாள் உணர்ந்து வருகிறோம். இது விஷயத்தில் நாம் அறிந்துகொள்ள வேண்டிய இரகசியமும்…
24 10 2018 திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? -58 1940 ஆகஸ்டு 24, 25 தேதிகளில் திருவாரூரில் நடை பெற்ற நீதிக்கட்சி மாநாட்டில் பெரியார் ஆற்றிய தலைமையுரை - சென்ற இதழ் தொடர்ச்சி. ஆரிய திராவிட நாட்டுப் பிரிவினை இனி நம் கட்சி நோக்கங்கள், திட்டங்கள் ஆகியவை நிறைவேற்றப்படுவதற்கு ஆகவும் நம் மக்கள் உண்மையான விடுதலையும் சுதந்தரமும் பெறுவதற்கு ஆகவும் நாம் செய்ய வேண்டிய, வேலைகளில் முக்கியமானது ஆரியப் பிணைப் பில் இருந்து அதாவது இந்தியா, இந்தியர் என்ற பிணைப்பிலிருந்து திராவிட நாட்டையும் திராவிட மக்களையும் பிரித்துக் கொள்ள வேண்டியது அவசியமான காரியமாகும். இதைப்பற்றி சென்ற மகாநாட்டின் எனது தலைமை உரையில் விவரித்துக் கூறியிருக்கிறேன்.இந்த ஒன்றரை வருஷ காலமாகவும் ஒவ்வொரு கூட்டங்களிலும் எடுத்துப் பேசி மக்களினது ஆதரவு பெற்றும் வந்திருக்கிறேன். இதுவரை இந்த…
16 10 2018 திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? - 57 தந்தை பெரியார் அவர்கள் இந்தி எதிர்ப்புப் படையின் வரவேற்பின்போது சென்னை கடற்கரையில் 11.9.1938இல் இரண்டு இலட்சம் மக்கள் முன்பு தமிழ்நாடு தமிழருக்கே என்று முழங்கினார்.நீதிக்கட்சித் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு சென்னையில் 29, 30, 31 திசம்பர் 1938இல் நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டின் தலைமையுரையில் (பெரியார் பெல்லாரி சிறையில் இருந்ததால் அவருடைய தலைமையுரையை ஏ.டி. பன்னீர்செல்வம் படித்தார்) இறுதியில் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்று கூறி இருந்தார்.1939இல் அவர் சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு சென்னையில் நடைபெற்ற நீதிக்கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் ஆந்திரர்களும், மலையாளிகளும் “நீங்கள் தமிழ்நாடு தமிழருக்கே என்றால், நாங்கள் எங்கே போவது” என்று கேள்வி எழுப்பினர். அப்போது மொழிவழி மாநிலம் பிரியவில்லை. காங்கிரசுக் கட்சியைப் போல மொழிவழி மாநில…
08 10 2018 திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? -56 1938இல் நடைபெற்ற மாபெரும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் விளைவாக, தமிழக அரசியல் தளத்தில் மாபெரும் திருப்புமுனை ஏற்பட்டது. இனி இந்தியாவுடன் தொடர்ந்து இருக்கக்கூடாது என்பதே அது. அதை வலியுறுத்தி “தமிழ்நாடு தமிழருக்கே” என்று விடுதலை ஏட்டில் அய்ந்து தொடர் கட்டுரைகள் எழுதப்பட்டன. தமிழ்நாடு தமிழருக்கே! - V ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்னும் தலைப்பில் இதற்கு முன் 4 தலையங்கம் எழுதியிருக்கிறோம். இது 5வது தலையங்கமாகும். இதில் `ஆரியர் சமயம்’ என்பது பற்றி எழுதுவதாக முன் தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்தபடி அதைப்பற்றிச் சிறிது எழுதுவோம்.ஏன் எனில் ஆரியர்கள் இன்று `இந்திய’ நாட்டை எடுத்துக் கொண்டாலும் அல்லது திராவிட நாட்டை எடுத்துக் கொண்டாலும் 100க்கு மூன்று பேர்களாக ஜனத்தொகையில் இருக்கும் ஒரு வெகு சிறுபான்மைக் கூட்டத்தாராகிய அவர்கள்…