30 12 2017 திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்கு தடைக்கல்லா? படிக்கல்லா? எழுத்தாளர்: வாலாசா வல்லவன் பெரியாருக்கு தமிழ்மொழி, தமிழர் என்றாலே பிடிக்காது என்று சிலர் எழுதுகிறார்கள் அது உண்மையல்ல. ‘தமிழர் சங்கம்’ என்ற அமைப்பை மணி திருநாவுக்கரசு முதலியார் தொடங்கியபோது அதை வரவேற்றுக் குடிஅரசு ஏட்டில் எழுதியதோடு இதே போன்ற அமைப்புகளைத் தமிழகம் முழுவதும் தொடங்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் வைத்தார். சென்னையில் சீர்திருத்தத்திற்காகத் தமிழர் சங்கம் என்பதைத் திருத்தி அமைக்கப்பட்டு இருக்கின்றது. இச்சங்கத்தை ஆதியில் தோற்றுவித்தவர் பச்சை யப்பன் கலாசாலைத் தமிழ் பண்டிதர். திரு. மணி திருநாவுக்கரசு முதலியார் ஆவார். இவர் சைவ சமயப் பற்றுடையவர். தமிழ்ப் பாஷை, கலை இலக்கிய, இலக்கணம் ஆகியவைகளில் வல்லவர் எனினும் சமயமும், கலையும், பாஷையும் நாட்டிற்கும் பொது மக்களுக்கும் பயன்படாமல் ஒரு சிறு துறையாகிய அதுவும் ஜாதி…
23 12 2017 திராவிடர் இயக்கங்கள் தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? -7 எழுத்தாளர்: வாலாசா வல்லவன் அதே 1926 ஆம் ஆண்டில் செந்தமிழ்ச் செல்வி மாத இதழுக்கும் மிகச் சிறந்த மதிப்புரையை 10.10.1926 குடிஅரசு ஏட்டில் எழுதி தமிழ் மக்கள் அந்த இதழை வாங்கி ஆதரிக்கும்படி பெரியார் எழுதியுள்ளார்.“நாகரிகத்தில் சிறந்து விளங்கும் நாடுகளில் பத்திரிகைகள் தலைசிறந்து நிற்கும் மேனாடுகளை நோக்க, நமது நாட்டில் பத்திரிகைகளின் தொகையும் செல் வாக்கும் குறைவுதான். பல அறிஞர்களின் உள்ளக் கருத்துகளை ஒருங்கு திரட்டி உணர்த்தலால், மக்கள் அறிவைப் பண்படுத்துவதால், பத்திரிக்கைகள் வல்லன வாகத் திகழ்கின்றன. நமது நாட்டில் தினசரி, வாரப் பத்திரிகைகள் ‘அரசியல் கிளர்ச்சியில்’ பாய்ந்து செல்லும் வேகத்தில் சீர்திருத்த விஷயத்தில் அசிரத்தை காட்ட வேண்டிய நிலையில் இருக்கின்றன. கல்வி, சமயம், தத்துவம், சமத்துவ உணர்ச்சி ஆகிய விஷயங்களில் எல்லோருக்கும் பயன்படத்தக்க…
16 12 2017 திராவிடர் இயக்கங்கள் தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? - 5  காங்கிரசில் மனக்கசப்பு ஈ.வெ.ராவுக்குக் காங்கிரசில் மனக்கசப்பு ஏற்பட்ட நிகழ்ச்சியை 13.8.1950இல் சென்னை பெரம்பூரில் அவரே கூறுகிறார். “1924ஆம் ஆண்டில் திருவண்ணாமலையில் என்னுடைய தலைமையின்கீழ்க் காங்கிரசு மாகாண மாநாடு கூடியது. அந்த மாநாட்டில் ரெங்கசாமி அய்யங்கார், சீனிவாச அய்யங்கார் ஆகியவர்களின் ஆள்கள் தியாகராயச் செட்டியார் அவர்களையும், ஜஸ்டிஸ் கட்சியையும் மோசமாக, அளவுக்கு மீறித் தாக்கிப் பேசினார்கள். இது எனக்கு ஆத்திரத்தை மூட்டியது. எனவே, அவர்கள் பேசியதற்கு எதிராக நானும் இராமநாதனும் பேச முயன்றோம். மாநாட்டின் தலைவர் என்றதால் நான் பேச முடியாமல் போகவே, இராமநாதன் அவர்கள் பேச ஆரம்பித்தார். அப்போது நமது ஷாபி அவர்கள் இராமநாதனை எதிர்த்து வாய்க்கு வந்தபடிக் கேவலமாகப் பேசினார். அப்போது நமது ஆள்களாக இருந்த அண்ணாமலைப் பிள்ளையும் தஞ்சாவூர்…
09 12 2017 திராவிடர் இயக்கங்கள் தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? - 4 காங்கிரசில் பெரியார் ஈ.வெ.இராமசாமி பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் ஈரோட்டில் வள மான குடும்பத்தில் பிறந்தவர். வணிகத்தில் கொடி கட்டிப் பறந்தவர். 1917 முதல் 1919 வரை ஈரோடு நகர மன்றத் தலைவராக விளங்கினார். 1914 முதல் காங்கிரசு மாநாடுகளுக்குச் சென்று வந்தார். 1914இல் சென்னையில் நடைபெற்ற மாநாட் டிற்குச் சென்றிருந்த அனுபவத்தை அவரே கோட்டாறு சுயமரியாதைச் சங்க ஆண்டு விழாவில் கூறியுள்ளார். சென்னை காங்கிரசு இராஜ விசுவாசத் தீர்மானம் : “அப்பொழுதெல்லாம் காங்கிரசின் முதல் தீர்மானம் இராஜவிசுவாசத் தீர்மானமேயாகும். உதாரணமாக, 1914ஆம் வருடம் சென்னையில் கூடிய காங்கிரசுக்கு நான் சென்றிருந்தபோது, கல்கத்தா திருவாளர் பூலேந்திநாத் போஸ் தலைமை வகித்திருந்தார். காங்கிரசு நடவடிக்கை நடந்து கொண்டிருக்கையில் சென்னை கவர்னர் லார்ட் பெண்ட்லண்ட் துரைய வர்கள் காங்கிரசுக்கு…
29 11 2017 திராவிடர் இயக்கங்கள் தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? -3 வாலாசா வல்லவன் 4.1.1932 திராவிடன் ஏட்டில் சென்னைப் பல் கலைக்கழகம் சமஸ்கிருத ஆனர்ஸ் வகுப்பை எடுத்து விட்டதைப் பாராட்டி எழுதப்பட்டது.14.9.1931 அன்று திருவல்லிக்கேணியில் நடை பெற்ற ‘இந்தி’ வகுப்புத் திறப்பு விழாவில் உரை யாற்றிய எஸ். சத்தியமூர்த்தி இந்தியாவுக்குப் பொது மொழியாக இந்தித்தான் வரவேண்டும். அதனால் அனைவரும் கண்டிப்பாக இந்தி படிக்க வேண்டும் என்று பேசியதை எஸ்.வி. லிங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளார் (திராவிடன் 24.9.1931). 1931ஆம் ஆண்டு சத்தியமூர்த்தி சென்னை நகராட்சியில் இந்தியை 5ஆம் வகுப்பு தொடங்கி உயர்நிலைப் பள்ளிகளில் விருப்பப்பாடமாக வைக்க வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்தார். இது ஏற்றுக்கொள்ளப்படவில்லை (கு. நம்பிஆரூரன், தமிழ் மறுமலர்ச்சியும் திராவிடத் தேசியமும், பக்.319).1934ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் மீண்டும் இந்தி கற்பிப்பது…