20 11 2017 திராவிடர் இயக்கங்கள் தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? -2 எழுத்தாளர்: வாலாசா வல்லவன் தமிழ் உள்ளிட்ட திராவிடப் மொழிகளைப் பயிற்றுவிப்பதற்குச் சென்னைப் பல்கலை ஆட்சிக் குழுக் கூட்டத்தில் பார்ப்பனர்களுக்கும் பார்ப்பனரல்லாதாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.1925 அக்டோபரில் நடைபெற்ற ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் கீழ்த்திசை மொழிகளுக்கான மய்யம் அமைப்பதில் நிதி ஒதுக்குவது குறித்த விவாதத்தில் திராவிட மொழிகளுக்கு எதிராகச் சமஸ்கிருதம் என்ற கருத்து வெளிப்படையாகப் பேசப்பட்டது.திராவிட மொழிகளைப் பட்டினி போட்டுவிட்டு, சமஸ்கிருதத்துக்கு விருந்து வைப்பது போல இருக்கிறது என்று புர்ரா சத்திய நாராயணா தம் கருத்தைத் தெரிவித்தார். ஏ.இராமசாமி முதலியார் இந்தக் குழுவில் திராவிட மொழிகளுக்குச் சரியான பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை என்று கண்டித்தார். திராவிட மொழிகளின் தேவைகளைக் கருத்தில் கொண்டு நிதி ஆதார ஒதுக்கீடுகளை மாற்றியமைக்க வேண்டும் என்றார். டி.வி.சேசகிரி அய்யர் சமஸ்கிருதம் தான்…
12 11 2017 திராவிடர் இயக்கங்கள் தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? -1 எழுத்தாளர்: வாலாசா வல்லவன் திராவிடர் இயக்கம் என்பது 1912இல் டாக்டர் சி. நடேசனாரால் திராவிடர் சங்கமாகத் தொடங்கப்பட்டு, பின்பு 1916இல் சர். பிட்டி தியாகராயர், டாக்டர் டி.எம். நாயர் முயற்சியால் தென்னிந்தியர் நல உரிமைச் சங்கமாக மலர்ந்தது (South Indian Liberal Federation – S.I.L.F.). இந்தக் கட்சி பார்ப்பனரல்லாதாரின் நலன்களைப் பேணிக்காப்பதற்காக உருவாக்கப்பட்டது. பார்ப்பனரல் லாதாரின் கல்வி, வேலை வாய்ப்பு, அரசியல் உரிமை ஆகியவற்றை மய்யப்படுத்தியே இந்த அமைப்பு செயல்பட்டு வந்தது.இந்த இயக்கம் தொடங்கப்பட்ட காலத்தில் கல்வி, வேலை வாய்ப்பு, அரசியல் ஆகியவற்றில் பார்ப்ப னர்கள் மட்டுமே ஏகபோகமாக அனுபவித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது இந்திய தேசிய காங்கிரசு என்கிற ஒரே அரசியல் கட்சி தான் இருந்தது. அதிலும் பார்ப்பனர்…