01 04 2017 தலைவரை முதன்முதலாக சந்தித்தோம்: “அண்ணா எங்களைப் பயிற்சி எடுப்பதற்கு அனுப்புங்கள்” என ஒருமித்த குரலில் எல்லோரும் பாடினோம் ( ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -11) இயக்கத்தில் சேர்ந்த பிற்பாடு இயக்கத்தின் கட்டுப்பாடுகள்.• “இனிமேல் இயக்கம்தான் உங்கட குடும்பம், இங்க இருப்பவர்கள்தான் உங்கட உறவுகள், அம்மா, அப்பா எல்லாமே. எங்களுக்குத் தலைவர்தான்.• இயக்கப் போராளிக்கு இருக்க வேண்டிய முதலாவது பண்பு கட்டளைக்குக் கீழ்ப்பணிதல்.”• இயக்கத்தில் சேர்ந்த பின்னர் சொந்தப் பெயருக்குப் பதிலாக இயக்கப் பெயர் சூட்டப்பட்டது.• இயக்கப் பெயர் சூட்டப்பட்ட கணத்திலிருந்து சொந்தப் பெயர் பாவிக்கக் கூடாது எனவும், மறந்தும் பாவித்தால் தண்டனைக்குள்ளாக வேண்டியிருக்கும்தொடர்ந்து….. ஆயுதப் பயிற்சி பெற்ற அரசியல் போராளி எனது மாலைநேர வகுப்பு முடிந்ததும் வழக்கம்போல வீடு திரும்பாமல், நான் இயக்கத்தில் இணைந்துகொண்டதை எப்படியோ அறிந்து கொண்ட எனது…
26 03 2017 இந்திய படைகளுடன் தொடங்கியது போர்!: இளவயதுப் பெண்களுக்கு அதுவொரு பயங்கரமான காலம்!! ( ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -10) • முதன்முதல் புலிகளின் முகாமுக்கு சென்றபோது…ஏற்கனவே அங்கே வந்திருந்த எனது தங்கையைக் கண்டதும் அதிர்ச்சியடைந்தேன்.• இந்திய படையினர் பெண் பிள்ளைகளைக் கண்டதும் “ஏய் குட்டி ஏய் குட்டி”, “கல்யாணம் கட்டுவமா” இன்னும் ஏதேதோ மொழிகளிலெல்லாம் சொல்லிக் கத்துவார்கள். தலையைத் திருப்பிப் பார்க்கவே முடியாதபடி பயமாக இருக்கும்.• விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியப் படையினருடனான போரைத் தொடங்கிவிட்டதாக மக்கள் பேச்சு. இதனால் இளவயதுப் பெண்களுக்கு அதுவொரு பயங்கரமான காலமாக உருவெடுத்திருந்தது.• இந்திய இராணுவத்தினர் மீது தாக்குதலை நடத்திவிட்டு ஓடிச்சென்ற விடுதலைப் புலிகள். தினசரி பாடசாலைக்கும், மாலை வகுப்புகளுக்கும் சென்றுவருவது நெருப்பின் மீது நடப்பதுபோல இருந்தது.• குடும்பத்தவர்களுக்குத் தெரியாமல் நானும், தங்கையும் செய்யத்…
21 03 2017 போருக்குள் பிறந்தேன் ! : ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -9) போருக்குள் பிறந்தேன். அகன்று விரிந்த வயல்வெளிகளும், அவற்றிடையே நெளிந்தோடும் வாய்க்கால்களும், கிரவல்மண் பாதைகளும், பூவரசு வேலிகளும், நான் பிறந்த ஊரான பரந்தனின் எழில் கொஞ்சும் அழகின் கோலம். பிரதான நெடுஞ்சாலையாகிய ஏ9 வீதியில் வந்திணையும் பூநகரி-மன்னார் வீதி, முல்லைத்தீவு வீதி ஆகிய முக்கிய இரு வீதிகளும் சந்திக்கும் அழகிய சிறு கிராமம்தான் பரந்தன். 1936ஆம் ஆண்டு முதல் விவசாயம் செய்யும் நோக்குடன் யாழ்ப்பாணத்திலிருந்து வந்த மக்களே காலப்போக்கில் நிரந்தரக் குடிகள் ஆகியிருந்தார்கள். எந்தவிதமான படாடோபங்களுமற்ற எளிமையால் நிறைந்திருந்தது அவர்களுடைய வாழ்வு.பரந்தனிலிருந்து தெற்கே ஐந்து கிலோ மீற்றர் தூரத்தில் கிளிநொச்சி நகரமும் வடக்கே ஆறு கிலோ மீற்றர் தூரத்தில் ஆனையிறவு உப்புக்கடல் நீரேரியும் அமைந்திருக்கிறது. முன்னைய காலங்களில் வன்னியிலிருந்து யானைத் தந்தங்கள், காட்டு…
16 03 2017 பிரபாகரனுக்கு ஏற்பட்ட உச்சக்கோபம்: சரமாரியாக இராணுவத்தினருக்கு எதிராகப் பொழியப்பட்ட எறிகணைகள்!! (ஒரு கூர்வாளின் நிழலில் இருந்து.. – பாகம்-8) • இலங்கை தேசத்தின் ஏழைத் தாய்மாரின் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் ஏ9 வீதியிலும் வன்னிக் காடுகளிலும் யாருக்கும் நன்மை பயக்காத யுத்தமொன்றில் தமதுயிரை இழந்திருந்தனர்.• 2000.04.22ஆம் திகதி ஆனையிறவு புலிகளால் கைப்பற்றப்பட்டபோது இயக்கத்தின் பல வருடக் கனவு அன்று நனவாகியது.• பல்லாயிரக்கணக்கான உயிர்களின் குருதியில் நனைந்த ஏ9 வீதி 2002 திறக்கப்பட்டபோது புலிகள் இயக்கம் இராணுவ பலத்தின் உச்சத்தில் இருந்தது என்பதை எவராலும் மறுக்க முடியாது.• யாழ்பாணத்தையும் கைப்பற்றிவிட வேண்டும் என்ற நோக்கத்துடன் பூநகரி சங்குப்பிட்டிப் பாதையூடாக ஒரு பெரும் நகர்வு மேற்கொள்ளப்பட்டது.• இயக்கம் எதிர்பார்த்த வகையில் யாழ்ப்பாணத்தை நோக்கித் தொடர்ந்து முன்னேறிச் செல்ல முடியாதிருந்த காரணத்தால் படையணிகள் மீண்டும் வன்னிக்குப் பின் நகர்த்தப்பட்டன………
11 03 2016 தமிழினியின் தங்கை ‘சந்தியா’ கிளிநொச்சியில் நடந்த சண்டையில் உயிரிழப்பு!!: (ஒரு கூர்வாளின் நிழலில் இருந்து..- (பாகம் 7) கொல்லர் புளியங்குளத்தில் அமைக்கப்பட்டிருந்த எமது முகாம் புதுக்குடியிருப்புக்கு மாற்றப்பட்டது. இயக்கத்தின் அனைத்துக் கட்டமைப்புகளும் புதுக்குடியிருப்பை மையப் படுத்தியே அமைக்கப்பட்டன.இலங்கை இராணுவத்தினர் ஒருபோதும் புதுக்குடியிருப்பை நெருங்க மாட்டார்கள் என்ற ஒரு காரணமற்ற நம்பிக்கை, தலைவர் பிரபாகரன் உட்பட அனைத்துப் போராளிகளிடமும் இருந்தது.இயக்கத்தின் அதியுயர் பாதுகாப்பு வலயமாகப் புதுக்குடியிருப்புப் பிரதேசத்தை இயக்கம் அதீத பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கட்டிக் காத்து வந்தது.1998இன் இறுதிப் பகுதியில் சுதந்திரப் பறவைகள்’ பத்திரிகையை வெளியிடும் பொறுப்பு தலைவரால் என்னிடம் ஒப்படைக்கப்பட்டது.முன்னர் பல தடவைகள் இயக்கத்தின் தலைவரைச் சந்திக்கும் சந்தர்ப்பங்கள் பேசிய சந்தர்ப்பம் சுதந்திரப் பறவைகள் தொடர் பான சந்திப்பாகத்தான் அமைந்தது. பத்திரிகையில் புதிய பல மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவருக்கு…