14 11 2017 அறிந்தும் அறியாமலும்…(23) போர்க்களம் ஓய்ந்தது - பகை ஓயவில்லை! உலகம் ஒற்றைத் தலைமையின் கீழ் வந்துவிட்ட பிறகும், போர்கள் ஓய்ந்துவிடவில்லை. தொடர்ந்து நடைபெற்றன. இன்றும் நடந்துகொண்டுதான் உள்ளன. அவற்றுள் வளைகுடாப் போர்களையும், ஆப்கன் மீதான அமெரிக்கப் போரையும் தனித்துக் குறிப்பிட வேண்டும். பல்வேறு நாடுகளில் தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங்களும் நடைபெற்றன. சில தேசிய இனங்கள் வெற்றி பெற்றுத் தனி நாடுகளை அமைத்துக் கொண்டன. ஈழம் உள்ளிட்ட பல களங்களில், மக்கள் படுகொலைகளுக்கு உள்ளாகி மாண்டு மடிந்தனர்.ஆயுதங்களைக் கொண்டு, களங்களில் நடைபெற்ற போர்கள் ஒருபுறமிருக்க, ‘கத்தியின்றி ரத்தமின்றிப் பொருளாதாரப் போர்கள் மறுபுறம் நடந்துகொணடே உள்ளன-. அறிவியலின் ஈடு இணையற்ற வளர்ச்சி உலகிற்குப் பல நன்மைகளையும், சில தீமைகளையும் கொண்டு வந்து சேர்த்தது. தொலைத் தொடர்பு மற்றும் செய்திப் பரிமாற்ற வளர்ச்சி எண்ணிப் பார்க்க…
04 11 2017 அறிந்தும் அறியாமலும்...(22) வியத்நாமில் அவர்களும் ஆப்கனில் இவர்களும்...! சுப.வீரபாண்டியன் அமெரிக்காவிற்கும், சோவியத்திற்குமான பனிப்போர் சில நேரங்களில் வெளிப்படையான போராகவும் வெடித்தது. ஆனால் அப்போர்கள் அவர்களின் நாடுகளில் நடைபெறவில்லை. தங்களின் வலிமையை, தங்களின் நிலங்களில் சோதித்துப் பார்க்க அவர்கள் தயாராக இல்லை. உலகின் வெவ்வேறு நாடுகளைத் தங்களின் போர்க்களங்களாக அவர்கள் ஆக்கிக் கொண்டனர். அதற்குப் பல எழுத்துக்காட்டுகளை நாம் காட்டலாம். ஆனாலும், 20ஆம் நூற்றாண்டுப் பிற்பகுதி வரலாற்றில் மறக்கமுடியாத போர்கள் இரண்டு. ஒன்று, முப்பது ஆண்டுகள் வியத்நாமில் நடைபெற்ற போர். இன்னொன்று, பத்து ஆண்டுகள் ஆப்கானிஸ்தானத்தில் நடைபெற்ற போர். அமெரிக்க அதிபராக இருந்த கென்னடிக்கு, என்ன காரணத்தாலோ, இந்தியாவில் பெரும்புகழ் கிட்டியது. அவரை ஒரு கதாநாயகனாகவே நம்முடைய தமிழக மக்கள் பார்த்தனர். 60களில் பிறந்த குழந்தைகள் பலருக்கு, இங்கே கென்னடி என்று பெயர் சூட்டப்பட்டது.…
23 10 2017 அறிந்தும் அறியாமலும்…(20) நைல் நதிக்கரையின் இட்லரா, நாசர்? இரண்டாம் உலகப்போரின் முடிவில், உலகெங்கும் பல புதிய மாற்றங்கள் நிகழ்ந்தன.ஐரோப்பிய நாடுகளின் காலனி நாடுகளாக, அடிமை நாடுகளாக இருந்த ஆசிய, ஆப்பிரிக்க நாடுகள் பல விடுதலை பெற்றன. இந்தியா தன் அரசியல் விடுதலையைப் பெற்றாலும், இந்தியா & பாகிஸ்தான் என இரண்டாக உடைந்தது. இஸ்ரேல் என்று ஒரு புதிய நாடு உருவானது. உலகின் கிழக்கிலும், ஐப்பானின் தோல்வியைத் தொடர்ந்து பெரிய மாற்றங்கள் உருவாகின. இந்தோனேஷியா, இந்தோசீனா, மலாயாவில் எல்லாம் புரட்சிகரமான போராட்டங்கள் எழுச்சி பெற்றன. சீனாவில் மாவோ நடத்திய நெடும்பயணம், வெற்றி மேல் வெற்றியைப் பெற்றுக்கொண்டிருந்தது. 1949இல் பீகிங்கைக் கைப்பற்றி மாவோ சீனத்தின் மக்கள் குடியரசை நிறுவினார். பிரிட்டனும், பிரான்சும் ஐரோப்பிய நாடுகளைப் பங்கு போட்டுக் கொண்டன. ஜெர்மனி இரண்டாகப் பிரிக்கப்பட்டு, கிழக்கு ஜெர்மனி…
16 10 2017 அறிந்தும் அறியாமலும்…(19) மை கொண்டு எழுத இயலாது சுப.வீரபாண்டியன் எல்லா மதங்களும் இரண்டு தளங்களில் இயங்குகின்றன. ஒன்று, கோட்பாடு (concept), இன்னொன்று நிறுவனம் (Institution). கோட்பாடுகளில் வேறுபட்ட தன்மைகளும், ஏற்கவியலாத போக்குகளும் காணப்பட்டாலும், பொதுவாக எல்லா மதங்களும் அறநெறிகளையே (Ethics) போதிக்கின்றன. அன்பு, அருள், ஒப்புரவு, ஒழுக்கம் ஆகியன அனைத்து மதங்களும் அறிவுரைக்கும் பொதுக்கோட்பாடுகள் என்று கொள்ளலாம். ஆனால், அன்பைப் பறைசாற்றும் மதங்கள், ஏன் ஆயுதங்கள் ஏந்திப் போராடுகின்றன? அங்குதான் நிறுவனங்களின் பெரும்பங்கு உள்ளது.மதங்கள் நிறுவனமயமாகும்போது, அதற்கேயுரிய வலிமையும், பலவீனமும் வந்து சேருகின்றன. நிறுவனங்கள் இன்றிக் கோட்பாடுகளைக் காப்பாற்ற முடியாது. ஆனால் நிறுவனங்களே கோட்பாடுகளைக் கொன்று, நீர்த்துப் போகவும் செய்கின்றன. இந்நிலையை, மதங்களோடு மட்டுமின்றி, இன்றையக் கட்சிகளோடும் நாம் பொருத்திப் பார்க்கலாம். குறிப்பிட்ட சில கொள்கைகளுக்காகக் கட்சி தொடங்கி, பிற்காலத்தில் கட்சியைக் காப்பாற்றுவதற்காகக்…
09 10 2017 அறிந்தும் அறியாமலும்…(18) ‘மதம்’ கொண்ட மனிதர்கள்!  சுப. வீரபாண்டியன் ‘புற்று நோயை விட, லஞ்சத்தை விட, சாதி கொடியது என்று எழுதுகின்றீர்களே, மதம் பற்றிய உங்கள் பார்வை என்ன?’ என்று ஒரு நண்பர் வினா எழுப்பினார்.நான் கடவுள் நம்பிக்கையற்றவன் என்னும் பொழுதே, மத நம்பிக்கையும் அற்றவன் என்பது தெளிவாகி விடுகின்றது. கடவுளும், மதமும் பிரிக்க இயலாவண்ணம் பிணைக்கப்பட்டுள்ளதென்பதை நாம் அறிவோம்.எனினும், சாதியையும், மதத்தையும் ஒரே தட்டில் வைத்து நாம் பார்க்க முடியாது. இரண்டிற்குமிடையில் குறிப்பிடத்தக்க சில வேறுபாடுகள் உள்ளன. மதம் என்பது, அவரவர் நம்பிக்கையையும், சொந்த அனுபவத்தையும் சார்ந்தது. சில குறிப்பிட்ட வழிமுறைகளே தம்மைக் கடவுளிடம் கொண்டு சேர்க்கும் என்ற நம்பிக்கையில் மக்கள் மதங்களைத் தழுவுகின்றனர். சில வேளைகளில், அந்த நம்பிக்கை பொய்த்துப் போகுமாயின், வேறு மதத்திற்கு மாறிவிடுகின்றனர். ஆதலால்தான் மதம் தங்களின்…