01 10 2017 அறிந்தும் அறியாமலும் - 17: கொடிதினும் கொடிதாய்...! -சுப. வீரபாண்டியன் எத்தனை அபிமன்யுக்கள் தொடர்ந்து வந்தாலும், தமிழகத்தில் திராவிட இயக்கத்தின் இருப்பையும், செல்வாக்கையும் இல்லாமல் செய்துவிட முடியவில்லையே, என்ன காரணம்? எந்தத் தேவைக்காக, எந்த நோக்கத்திற்காகத் திராவிட இயக்கம் தோற்றுவிக்கப்பட்டதோ, அந்தத் தேவையும், நோக்கமும் இன்றுவரை நிறைவு செய்யப்படவில்லை என்பதே காரணம். இனமானம், மொழிஉணர்ச்சி, கடவுள் மறுப்பு, பகுத்தறிவு போன்ற பல கூறுகள் அவ்வியக்கத்துள் பொதிந்து கிடந்தாலும், சாதி எதிர்ப்பு, ஆணாதிக்க எதிர்ப்பு என்னும் இரண்டு கோட்பாடுகளின் அடிப்படையிலேயே, மற்ற அனைத்துச் சிந்தனைகளும் அங்கு சுழல்கின்றன என்பது மெய். மேலும் சுருங்கக் கூறின், ‘சமத்துவம்' அல்லது ‘சமூகநீதி' என்னும் இலக்கை நோக்கியே, அதற்காக மட்டுமே, தொடங்கப்பட்ட இயக்கம் அது! அந்தச் சமத்துவமும், சமூகநீதியும் இன்னும் இங்கே எட்டாக் கனிகளாகவே உள்ளன. பகுத்தறிவின் அடிப்படையில்…
22 09 2017 அறிந்தும் அறியாமலும் - 16: தொடரும் அபிமன்யுக்கள் சுப. வீரபாண்டியன் இத்தொடரில், பெரியாரைப் பற்றி ஓர் இயலில் மட்டுமே எழுத எண்ணியிருந்தேன். ஆனால், சென்ற இயலுக்கு வந்துள்ள பின்னூட்டங்களும், என் மின் அஞ்சலுக்கு வந்துள்ள மடல்களும், மீண்டும் இந்த இயலிலும், பெரியாரைப் பற்றியே எழுத வேண்டிய தேவையை ஏற்படுத்தியுள்ளன. பெரியாரின் சமூகத் தொண்டினை மீண்டும் மீண்டும் மக்களிடத்தில் கொண்டு செல்லும் பணியில் என்னைத் தொடர்ந்து ஈடுபடுத்தும் அந்த நண்பர்களுக்கு முதலில் என் நன்றி! பெரியார் என்ற பெயரைப் பார்த்ததுமே, சிலருக்குக் கடுமையான எரிச்சலும், சினமும் வந்து விடுகின்றன. கட்டுரையில் காணப்படும் மற்ற அனைத்துச் செய்திகளையும் புறந்தள்ளிவிட்டுப் பெரியாரைத் தாக்குவதில் முனைப்புக் காட்டத் தொடங்கி விடுகின்றனர். அதுபோன்ற கடிதங்களில், நிலவன்பறை என்பவரிடமிருந்து வந்துள்ள மடலிலிருந்து சில வரிகளைக் கீழே தருகின்றேன் : "ஆந்திராவில் கேரளாவில்,…
14 09 2017 அறிந்தும் அறியாமலும் - 15: சாதி காப்பாற்றும் கடவுள் சுப வீரபாண்டியன் 19ஆம் நூற்றாண்டின் இறுதியில், வள்ளலாருக்குப் பிறகு, மனோன்மணீயம் சுந்தரனார், நல்லுசாமிப் பிள்ளை, அயோத்திதாசப் பண்டிதர், ரெட்டைமலை சீனிவாசனார் ஆகியோர் வைதீக எதிர்ப்பில் முனைப்புக் காட்டியவர்கள் என்று கூறலாம். அதே நேரத்தில், அவர்கள் அனைவரும் ஒரே தளத்தில் நின்றவர்கள் இல்லை. வெவ்வேறு போக்குகளின் அடிப்படையில் அவர்கள் வைதீக எதிர்ப்பாளர்களாகத் திகழ்ந்தனர். சுந்தரனார், ஒரு தத்துவப் பேராசிரியர். வேதாந்தம், சித்தாந்தம் போன்றவைகளைப் பற்றித் தன் நாடக நூலான மனோன்மணீயத்தில் அவர் விரிவாகப் பேசியுள்ளார். ஆரியப் பண்பாட்டை அவர் கடுமையாகச் சாடினார். ‘ஆரியம் போல் உலக வழக்கு அழிந்து ஒழிந்து' போகாத மொழி தமிழ் என்றார். ‘உங்களின் கோத்திரம் என்ன?' என்று விவேகானந்தர் கேட்டபோது, ‘திராவிடக் கோத்திரம்' என்று விடையளித்தார். நல்லுசாமிப் பிள்ளையோ, ஆரியத்தை…
07 09 2017 அறிந்தும் அறியாமலும்- 14: தனிச் சபை, தனிக் கொடி! சுப வீரபாண்டியன் கருத்து முதல் வாதம், பொருள் முதல் வாதம் குறித்து உலகமெங்கும் விவாதங்கள் நடைபெற்று வருகின்ற போதும், இந்தியாவைப் பொறுத்தமட்டில் முன்னிறுத்தப்படும் தத்துவங்கள் இரண்டு. அவை வைதீகம் என்றும் அவைதீகம் என்றும் அழைக்கப்படுகின்றன. வேதங்களின் தலைமையை ஏற்றுக் கொள்ளும் தத்துவங்கள் வைதீகம் ஆகின்றன. அவை மீமாம்சம், வேதாந்தம், சாங்கியம், யோகம், வைசேடிகம், நியாயம் என ஆறுவகைப்படும். எனினும் பிற்காலத்தில் தோன்றிய ஆதிசங்கரர், மீமாம்சம், வேதாந்தம் ஆகியனவற்றை மட்டுமே வைதீகம் என்பார். வேதங்களின் தலைமையை ஏற்க மறுத்த ஆசிவகம், சார்வாகம், சமணம், பௌத்தம் ஆகிய நான்கும் அவைதீகங்கள் ஆயின உலகத் தத்துவங்கள் கடவுளை மையமாக வைத்துச் சுழல, இந்தியத் தத்துவங்களோ வேதத்தை மையமாகக் கொண்டன. இந்தியாவில் இந்து மதத்தைப் பொறுத்தமட்டில், நாத்திகம் என்பது…
29 08 2017 அறிந்தும் அறியாமலும் - 13: ஒன்றே இன்னொன்று சுப வீரபாண்டியன் கருத்து முதல் வாதம், பொருள் முதல் வாதம் என்பதெல்லாம், கடவுள் உண்டு, இல்லை என்னும் வாதத்தின் வேறு பெயர்களே ஆகும். காலந்தோறும், நாடுகள் தோறும் இவ்வாதம் முடிவற்றதாகத் தொடர்ந்துகொண்டே உள்ளது. ‘உண்டென்றால் அது உண்டு, இல்லையென்றால் அது இல்லை' என்னும் சமரசப் போக்கும், "நாங்கள் கடவுள் என்கிறோம், நீங்கள் இயற்கை என்கிறீர்கள். விடுங்கள் இயற்கைதான் கடவுள்" என்று ஒத்துப்போகும் போக்கும், ‘நழுவல் போக்குகளாக'ச் சிலநேரம் எழுவதுண்டு. திருமூலரின் ‘அன்பே சிவம்' என்னும் பாடல் வரியை ஏற்றுக் கொள்வர் சிலர். "கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்பதை விடுவோம், நமக்கு மேல ஒரு சக்தி இருக்குதானே?" என்று கேட்டு மறிப்பார் சிலர் இயற்கை, அன்பு, சக்தி முதலான எந்த ஒரு சொல்லும், ‘கடவுள்' என்னும்…