21 12 2017 அறிந்தும் அறியாமலும்…(28) பெரிய மரத்தின் சிறிய விதை!  சுப.வீரபாண்டியன் சென்ற இயலில் அரசியல் குறித்தும், அரசியலில் அனைவரின் பங்களிப்பும்  தேவை என்பது குறித்தும்  எழுதியிருந்தேன். அதற்கு வந்த பின்னூட்டங்களில், இரண்டினைப் பற்றிப் பேச வேண்டியுள்ளது. ஒரு நண்பர், நீங்கள் ஏன் அரசியலுக்கு வரவில்லை என்று கேட்டுள்ளார். ஏன் அவர் அவ்வாறு வினா எழுப்பியுள்ளார் என்பது முதலில் எனக்குப் புரியவில்லை. நான் அரசியலில்தான் - முழு நேர அரசியலில்தான்  இருக்கிறேன். தேர்தலில் போட்டியிடுவதில்லை என்பதால் அப்படிக் கேட்டிருக்கலாம். தேர்தல் என்பது அரசியலின் ஒரு பகுதியே தவிர, அது மட்டுமே அரசியல் ஆகி விடாது.   இன்னொரு நண்பர், சாதிகளின் இருப்பிடமாக உள்ள மதத்திற்குள்ளும், லஞ்சத்தின் இருப்பிடமாக உள்ள அரசியலுக்குள்ளும் வர விரும்பவில்லை என்றும், கல்வியின் மூலமாக அடுத்த தலைமுறையை அணுக விரும்புவதாகவும் எழுதியுள்ளார்.எந்தத் துறையில் ஈடுபடுவது என்பதை முடிவு செய்வது…
14 12 2017 அறிந்தும்அறியாமலும்…(27)  அதுவன்றி ஓர் அணுவும் அசையாது! சுப.வீரபாண்டியன் மதுக்கடைகளை நடத்துவது அரசு. கோடிக்கணக்கான ரூபாய்க்கு மதுவை வாங்கிக் குடிப்பவர்கள் மக்கள். மக்களைக் குறை சொல்லக்கூடாது... அரசே கடைகளை நடத்தினால், மக்கள் குடிக்காமல் என்ன செய்வார்கள் என்பது ஒரு வாதம். குடியில், போதையில் மக்களுக்கு இருக்கின்ற பெரும் ஈடுபாடு காரணமாகவே, அரசு மதுக்கடைகளை நடத்துகின்றது என்பது இன்னொரு வாதம்!இரண்டும் ஒன்றையொன்று சார்ந்தே இருக்கிறது என்பதை மட்டும் மறுக்க முடியாது. எனினும், மக்களிடமுள்ள குறைபாடுகளை வளர்ப்பதற்காக இல்லை, அவற்றைக் களைவதற்காகவே அரசுகள் உள்ளன. அரசு என்பது அரசியல் சார்ந்தது. அரசியலை நடத்துகின்றவர்கள் அரசியல்வாதிகள். அந்த அரசியல்வாதிகள், மக்களேயன்றி வேறு யார்?ஆனால், மக்களுள் மிக மிகச் சிலரே அரசியலுக்கு வருகின்றனர். ஆம்... 95% மக்களின் வாழ்க்கை, 5% அரசியல்வாதிகளால் தீர்மானிக்கப்படுகின்றது. ஏன்? 95 விழுக்காடு மக்களை அரசியலுக்குள்…
07 12 2017 அறிந்தும் அறியாமலும்…(26)  வெளுக்க மறுக்கும் கறுப்பு!   சுப.வீரபாண்டியன் அமெரிக்காவிற்கு அறைகூவல் விடும் அளவுக்கு, இன்று சீனாவின் பொருளாதாரம் உயர்ந்துள்ளது. இவ்வாறு குறிப்பிடுவது சீனாவின் முதலாளித்துவப் பாதையை ஏற்பதாகவோ, பொதுவுடைமைக் கொள்கைகளை விட்டு அந்நாடு விலகிச் சென்றதை ஆதரிப்பதாகவோ ஆகாது. அது ஒரு தனி விவாதம். அவ்வாறே, சீனாவின் உள்நாட்டு, வெளியுறவுக் கொள்கைகள் அனைத்தும் நமக்கு ஏற்புடையனவும் அல்ல. உலகிலேயே மிகக் கூடுதலாக மரண தண்டனைகளை நிறைவேற்றும் நாடுகளில் ஒன்றாக அது உள்ளது. ஆடம்பரங்கள், கேளிக்கைகள் இன்று அளவு மீறிப் போய்க் கொண்டுள்ளன. இவற்றையெல்லாம் நாம் உறுதியாக ஏற்க மறுக்கிறோம்.   ஆனாலும், பொருளாதார நிலையில் அந்நாடு கண்டுள்ள முன்னேற்றத்தை நாம் மறுக்க முடியாது. சீனக் கடை வீதிகள் (China Towns) இல்லாத பெரிய நாடுகள் இன்று உலகில் இல்லை. சீன உணவு, சீனத்…
02 12 2017 அறிந்தும் அறியாமலும்…(25) களங்கள் மாறுகின்றன! சுப.வீரபாண்டியன் ஒரே ஒரு நாடு, என்றைக்கும் உலகையே ஆளுகின்ற ஒற்றை வல்லரசாக நிலைப் பெற்றுவிட முடியாது. அடுத்தடுத்த வல்லரசுகள் உருவாகிக் கொண்டேதான் இருக்கும். இந்திய மண்ணிலும் அந்தக் கனவுகள் இருக்கவே செய்கின்றன. 2020இல் இந்தியா வல்லரசாகிவிடும் என்று இன்றைய இளைஞர்கள் பலர் எண்ணுகின்றனர், விரும்புகின்றனர்.ஆனால் வல்லரசுகளே இல்லாத ஓர் உலகம்தான் நம் கனவாக இருக்க வேண்டும். அடுத்த நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்தாத, அடுத்த நாட்டைச் சுரண்டாத வல்லரசுகள் எவையும் இங்கு உண்டா? வல்லரசுகள் தேவையில்லை, உலகில் நல்லரசுகளே தேவை. இந்த எண்ணம் உலக மக்களிடையே வலுப்பெறாத வரை, ஆயுதங்களையும், அணுகுண்டுகளையும் பெருக்கிக் கொண்டே போகும் போக்குதான் வளரும். அதனால்தான் வளரும் நாடுகள் உள்பட அனைத்து நாடுகளும், தங்கள் நாட்டின் நிதிநிலை அறிக்கையில், கல்விக்கும், மக்கள் நலத்துக்கும்…
23 11 2017 அறிந்தும் அறியாமலும்…(24) பின்லேடனும் முன்லேடனும்! சுப.வீரபாண்டியன் சதாம் உசேனுக்கு முன் தொடங்கிப் பின் முடிந்தது, ஒசாமா பின்லேடன் அழித்தொழிப்பு! சதாம் உசேனை விடப் பன்மடங்கு அமெரிக்காவிற்குப் பெரிய அறைகூவலாக இருந்த பெயர் பின்லேடன் என்பது!சவூதியில் பிறந்து வளர்ந்து, அமெரிக்கப் பின்புலத்தில் உருவாகி, ஆப்கனில் சோவியத்திற்கு எதிராய், முஜாஹிதீன்களோடு இணைந்து களத்தில் நின்ற ஒசாமா பின்லேடன், அமெரிக்காவிற்கே எதிரியாக எப்படி மாறினார்? அது ஒரு சிறிய கதை. அந்தச் சிறிய கதைக்குள்தான், உலகின் பெரிய வரலாறு ஒன்று ஒளிந்து கொண்டுள்ளது.ஆப்கனிலிருந்து சோவியத் படைகள் வெளியேறிய பின்பு, 1989 பிப்ரவரியில் பின்லேடன், தன் தாயகமான சவூதிக்குத் திரும்பிவிட்டார். ‘பயங்கரவாத’ச் சிந்தனைகள் எவையும் அவரை அப்போது பற்றியிருக்கவில்லை. குவைத் நாட்டிற்குள் ஈராக் படைகள் ஊடுருவிய நேரத்தில், சவூதிக்கும் ஆபத்து வரக்கூடும் என்ற நிலை ஏற்பட்டது. அந்த அச்சத்தில்,…