16 05 2018 திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? - 30 இந்தி எதிர்ப்பாளர்கள் சென்னைச் சட்டசபை முற்றுகை : 15.8.1938 அன்று ஏற்கெனவே திட்டமிட்டபடி சரியாக மாலை 4 மணிக்கு வடசென்னைத் தமிழர் கள் “தமிழ்த் தாயை இந்தி என்ற விஷப்பாம்பு, காலைப் பிடித்து விழுங்குவதுபோல்” எழுதப்பட்ட ஒரு பெரிய படத்தை எடுத்துக் கொண்டும், இந்திக் கண்ட னப் பாடல்களைப் பாடிக் கொண்டும், ஊர்வலமாகப் பீப்பிள்ஸ் பார்க்கை வந்து சேர்ந்தார்கள். 4.30 மணிக்குப் பார்க்கை விட்டு சுமார் 5000 பேர் கை யில் தமிழ்க் கொடிகளுடன் இந்திக் கண்டன முழக்கங்களை முழக் கிக் கொண்டு தோழர்கள் சாமி சண்முகானந்தா. டாக்டர் தருமாம் பாள். நாராயணி அம்மாள். மீனாம் பாள். பாவலர் பாலசுந்தரம். என்.வி. நடராசன் முதலியவர்கள் தலைமையில் புறப்பட்டனர். ஊர்வலம் பெரியமேடு. சிந்தாதிரிப்பேட்டை,…
07 06 2018 திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? - 33 தமிழர் பெரும்படைக்கு ‘விழுப்புரத்தில்’ உற்சாகமான வரவேற்பு ஆகத்து 22: நேற்று பகல் 1.30 மணிக்குத் தமிழர் பெரும்படை வளவனூரிலிருந்து விழுப்புரம் வந்து சேர்ந்தது. சுமார் 50 முஸ்லீம் லீக் வாலிப சங்கத் தொண்டர்களும், அன்னியூர் தமிழ்க் கழகத்தாரும் மற்றும் ஏராளமான இந்து முஸ்லிம் பெரியவர்கள் உள் ளிட்ட சுமார் 1000 பேர்கள் எதிர்கொண்டு வரவேற்று படைத்தலைவர்கட்கு மாலையிட்டு “வீழ்க இந்தி”, “வாழ்க தமிழ்” ஆகிய பேரொலியுடன் படையை அழைத்து வந்தனர். படை முன்னாள் நகர மன்றத் தலைவர் எம். கோவிந்தராசுலு நாயுடு பங்களாவில் தங்கியது. பகல் 2 மணிக்கு எம். கோவிந்தராசலு நாயுடு, எம். சண்முக உடையார் (நகர மன்ற உறுப்பினர்) எம். முத்துத்தாண்டவப் படையாட்சியார் (நகர மன்ற உறுப்பினர்) ஆகிய…
25 04 2018 திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? - 27 சிந்தனையாளன் தமிழர் பெரும்படை ஆகசுட்டு 1 அன்று திருச்சி யில் புறப்பட்டது. தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்றப் பொதுக் கூட்டத்தில் வழி அனுப்பு விழா திருச்சி டவுன் ஹாலில் நடைபெற்றது. விழா முடிவுற்று தமிழர் பெரும்படை வீரர்கள் 101 பேரும் வரிசையாக அணிவகுத்துச் செல்லும் காட்சியை கீழே உள்ள படத்தில் காணலாம் தமிழர் பெரும்படை புறப்படுவதற்கு ஒருநாள் முன்னதாக 31.7.1938இல் சென்னை கடற்கரையில் இந்தியை எதிர்த்து அனைத்துக் கட்சிக் கூட்டம் மிகப் பெரிய அளவில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நீதிக்கட்சியின் முன்னாள் அமைச்சர் சர். பி.டி. ராசன் (பொன்னம்பலம் தியாகராசன்) தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் கே.எம். பாலசுப்பிரமணியம், சர்.கே.வி. ரெட்டி நாயுடு, எ.பி. பாத்ரோ, முத்தையா முதலியார், என். நடராஜன், சாமி சண்முகானந்தா,…
27 07 2018 திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? - 42 இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் பெண்கள் தீவிர மாகப் பங்கேற்றனர். இனி பெரியாரை கைது செய்தால் தான் போராட்டத்தை ஒடுக்க முடியும் என்று கருதிய முதலமைச்சர் இராசாசி, பெரியாரைக் கைது செய்ய முடிவு செய்தார். 1-1-1938 அன்று பெரியாருக்கு காவல் துறை கைது வாரண்ட் பிறப்பித்தது. “13.11.1938இல் நடைபெற்ற தமிழ்நாடு பெண்கள் மாநாட்டில் பேசி அவர்களைக் கிளர்ச்சியில் ஈடுபடத் தூண்டினார். மறு நாள் 14.11.1938இல் பெண்கள் போராட்டக் களத்தில் கலந்துகொள்ள வந்தபோது அவர்களிடையே பேசி அவர்களை மறியலில் ஈடுபடத் தூண்டினார்” என்ற குற்றச்சாட்டுகளின் பேரில் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. வழக்கு விசாரணை 5.12.1938 அன்றும் 6.12.1938 அன்றும் நடைபெற்றது. பெரியார் ஈ.வெ.ரா. வழக்கு சர்க்கார் தரப்பு சாட்சியம் பெரியார் வாக்குமூலம் 3 வருஷம்…
11 01 2018 திராவிடர் இயக்கங்கள் - தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? - 9 எழுத்தாளர்: வாலாசா வல்லவன் பெரியார் என்றாலே தமிழ்மொழிக்கும் தமிழ்ப் புலவர்களுக்கும் விரோதமானவர் என்ற தன்மையில் தமிழ்த் தேசியம் பேசுவோரில் பலர் பேசுவதையும், எழுதுவதையும் தொடர்ந்து செய்துவருகின்றனர். அவர்கள் கூற்றில் ஒரு சிறிதும் உண்மை இல்லை. பெரியார் தமிழ்ப் புலவர்களை இரண்டு வகையாகப் பிரித்தார்.முதல்வகை,ஆரியப் பார்ப்பனர்களை எதிர்ப்பவர்கள். இரண்டாவதுவகை ஆரியப் பார்ப்பனர்களை ஆதரிப்பவர்கள். முதல்வகைப் புலவர்களைப் பெரியார் எப்போதுமே எதிர்த்து வந்ததில்லை.உதாரணமாகப் பெரியாருக்குக் கிடைத்த முதல் புலவர் சாமி சிதம்பரனார் -மனைவியை இழந்த அவருக்கு இரண்டாவது திருமணத்தைப் பெரியார் தன் சொந்தச் செலவிலேயே 5.5.1930இல் சிவகாமி-சிதம்பரனார் இணையரின் விதவைத் திருமணத்தை ஈரோட்டில் தன் வீட்டிலேயே நடத்தினார். பெரியார் வெளியூர் நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் போதெல்லாம் சாமி சிதம்பரனாருக்குத் தந்தி கொடுத்துவிடுவார்.ஈரோடு வந்து குடிஅரசு…