12 06 2018 சுயமரியாதை - 19 பெண் என்பவள் பொருளா? பெண் பார்த்தல் மட்டுமின்றி, திருமணத்தையே பெண் எடுத்தல், பெண் கொடுத்தல் போன்ற சொற்களால் பேச்சு வழக்கில் நாம் குறிக்கின்றோம். கணவனைக் 'கொண்டான்' என்று கூறுகின்ற பழக்கம் உள்ளது.அதனையொட்டியே 'கொண்டான், கொடுத்தான்' என்ற வழக்கு உள்ளது. இவை அனைத்தும், பெண்ணைக் கொடுப்பது, பெண்ணைக் கொள்வது என்ற பொருளில்தான் ஆளப்படுகின்றன. ஆகவே பெண் என்பவள், கொடுப்பதற்கும், கொள்வதற்கும் உரிய பொருள் ஆகி விடுகிறாள். ஒரு குறிப்பிட்ட சமூகத்தில், திருமணத்தை 'தாரா முகூர்த்தம் ', கன்னிகாதானம்' என்றே குறிப்பிடுகின்றனர். மணமகளின் பெற்றோர், மணமகளின் கையைப் பிடித்து, மணமகனின் கைமேல் வைத்து, எள்ளும் தண்ணீரும் விட்டு, இனி இவள் உனக்கே சொந்தமென்று தாரை வாரத்துக்கு கொடுப்பதும், கன்னியாக உள்ள மகளைத் தந்தை தன் மடியில் அமர வைத்து மணமகனிடம் தானமாகக்…
05 06 2018 சுயமரியாதை - 18 பெண் விடுதலைக்கான முதல் இயக்கம் ஒரு திருமணம் ஒரு சமூகத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விடுமா என்னும் வினாவிற்கு, ஆம் என்பதே விடை. 1928 ஆம் ஆண்டு சுக்கிலநத்தம் திருமணத்திற்கு முன்பே நாகை காளியப்பன் போன்றோர் அத்தகைய திருமணத்தைச் செய்து கொண்டுள்ள செய்தி இப்போது கிடைத்துள்ளது. எனினும் முறையாக அறிவிக்கப்பட்டு நடைபெற்ற அத்திருமணமே, அதற்குப் பின் மேலும் பல சுயமரியாதைத் திருமணங்களுக்கு வழிவகுத்தது. திருமணம் என்றால் எந்த மாதிரித் திருமணம் என்று கேள்வி கேட்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனாலும், சுயமரியாதைத் திருமணத்தைப் புதுமை என்றோ, புரட்சி என்றோ பெரியார் கூறவில்லை. "சுயமரியாதைக் கலியாணம் என்பதில் புதிய முறையோ, புதிய சடங்கோ ஒன்றுமில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அர்த்தமற்றதும், பொருத்தமற்றதுமான சடங்குகள் வேண்டாம் என்பதும், அனாவசியமான அதிகச் செலவும்,…
28 05 2018 சுயமரியாதை - 17 வரலாற்று அதிசயம் இவ்வளவு எதிர்ப்புகள் ஒரு புறம் இருந்தாலும், பெரும் ஆதரவும் பெரியாருக்கு இருந்தது. உலகில் எவ்வளவோ பகுத்தறிவாளர்கள் இருந்தனர். இன்றும் இருக்கின்றனர். ஆனால் அவர்கள் அறிவாளர்கள் என்றும், சிந்தனையாளர்கள் என்றும் போற்றப்படுகின்றனரே அல்லாமல், மக்கள் தலைவர்களாகப் பார்க்கப்படுவதில்லை. ஆனால், மிகப் பெரும்பான்மையான மக்களால் ஏற்க முடியாத கருத்தைச் சொல்லி, அந்தப் பெரும்பான்மை மக்களாலேயே தங்களின் தலைவராகவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரே உலகத் தலைவர் பெரியாராக மட்டும்தான் இருக்க முடியும். இது ஒரு வரலாற்று அதிசயம் என்றே சொல்ல வேண்டும். இன்று தமிழ்நாட்டின் இருபெரும் கட்சிகளும், பெரியாரிடமிருந்துதான் தங்கள் அரசியல் வரலாற்றைத் தொடங்கியுள்ளனர். அவற்றுள் ஒன்றான ஆளும் கட்சி, உள்மனத்தில் பெரியாரை ஏற்கிறதோ இல்லையோ, வெளியே ஏற்பதாகத்தான் சொல்கிறது. சொல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. அவ்விரு பெரும் கட்சிகள் மட்டுமின்றி,…
21 05 2018 சுயமரியாதை - 16 அன்பிற்கும் உண்டோ....? பகுத்தறிவு என்றாலே கடவுள் மறுப்பு மட்டும்தான் என்ற எண்ணம் மக்கள் மனங்களில் ஆழப் பதிந்து விட்ட காரணத்தினால்தான், அவ்விதமான கருத்துகளுக்கு இவ்வளவு எதிர்ப்பு நாட்டில் உள்ளது. கடவுள் பக்தி என்பது வெறும் நம்பிக்கை மட்டுமன்று, அதற்குள் ஒரு விதமான அச்ச உணர்வும் கலந்திருக்கிறது அதனாலேதான் அதற்குப் பயபக்தி என்றே பெயர். கடவுளை நிந்தித்தால் அல்லது மறுத்தால் கூட தங்களுக்கு ஏதும் ஆகிவிடும் என்ற அச்சம் வெகு மக்களிடையே விரவிக் கிடக்கிறது. கடவுளை நம்புதல் எளிமையானதாகவும், ஆறுதல் தருவதாகவும் உள்ளது. அவனன்றி ஓர் அணுவும் அசையாது, எல்லாவற்றையும் அவன் பார்த்துக் கொள்வான் என்பன போன்ற நம்பிக்கைகள், நமக்கு வசதியாக உள்ளன. யாரும் எதையும் பார்த்துக் கொள்ள மாட்டார்கள், நாம்தான் எல்லாவற்றிற்கும் பொறுப்பேற்க வேண்டும் என்றால் அது கடினமாக…
14 05 2018 சுயமரியாதை - 15 வேலியிட முடியாத காற்று! சுவரெழுத்து சுப்பையா பிறந்த ஊர், காரைக்குடிக்கு அருகில் உள்ள சூரக்குடி என்றாலும், அவர் தன் வாழ்நாள் முழுவதும் மயிலாடுதுறையில்தான் வாழ்ந்தார். அவ்வூரில் உள்ள, ரங்கசாமியின் புத்தன் தேநீர்க் கடையில்தான் அவரைப் பார்க்க முடியும் என்பார்கள். உணவு, உறைவிடம் எல்லாம் அந்தக் கடையில்தான், பசி வரும்பபோது கடையில் என்ன இருக்கிறதோ அதை உண்பார், அங்கேயே இரவு படுத்துக் கொள்வார் என்கிறார் ரங்கசாமி. தன்னைப் பற்றிய விவரங்களைக் கூட அவர் யாரிடமும் சொல்வதில்லை. . எது உங்கள் சொந்த ஊர் என்று கேட்டால், அதெல்லாம் எதற்கு உங்களுக்கு என்பாராம். பெரியாரின் பகுத்தறிவுக் கருத்துகளைச் சுவர்களில் எழுதுவதற்கென்றே வேறு எந்த நோக்கமும், ஆசையும் இல்லாமல் வாழ்ந்திருக்கிறார். இரவு 12 மணிக்கு மேல் கிளம்பி, ஒற்றை மனிதராக ஊர்ச் சுவர்களிலெல்லாம்…