சுயமரியாதை - Yathaartham
02 09 2018 சுயமரியாதை - 34 வெளிப்பட்டது விரிசல் பொதுவுடைமைக் கொள்கைகளைப் பெரியார் பரப்பிட முயன்ற வேளையில்,அச்சிந்தனை கொண்ட சிங்காரவேலர், ஜீவானந்தம் போன்றவர்கள் பெரியாருடன் இணைந்து தொண்டாற்றினர். ஒரு வலிமையான அணி தமிழ்நாட்டில் உருவாகத் தொடங்கிற்று. அதே வேளையில், பிரித்தானிய அரசாங்கம் விழித்துக் கொண்டது. சுயமரியாதை, பொதுவுடைமை என்னும் இருபெரும் கொள்கைகள் ஒருங்கிணைவது தமக்கு ஆபத்து என்று அரசு எண்ணியது. அரசின் ஒடுக்குமுறைகள் தொடங்கின."ஏன் இந்த அரசு போக வேண்டும்?" என்று குடியரசில் பெரியார் எழுதியிருந்த கட்டுரையைக் காரணாமாகக் காட்டி அவரையும், குடியரசின் பதிப்பாளரான அவருடைய தங்கை கண்ணம்மாளையும் 1933 டிசம்பரில் அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. பொதுவுடைமைக் கட்சியின் மீதும் அடக்குமுறைகள் ஏவப்பட்டன. இந்தியா முழுவதும் பொதுவுடைமைக் கட்சி 1934 ஜூலையில் தடை செய்யப்பட்டது. அந்தச் சூழலில்தான் பெரியாரோடு இருந்த ஏ.டி. பன்னீர்செல்வம்…
29 08 2018 சுயமரியாதை - 33 சமதர்மிகளின் மே நாள் கூட்டங்கள் மே தின நிகழ்வுகளைத் தமிழ்நாட்டில் வெகு மக்களிடையே கொண்டு சென்ற அமைப்பு சுயமரியாதை இயக்கம்தான். 1923 ஆம் ஆண்டே மே முதல் நாள், தோழர் சிங்காரவேலர் சென்னை நேப்பியர் பூங்காவில் கொடியேற்றி மே நாள் கூட்டம் நடத்தினார். அதுவே தமிழகத்தில் நடைபெற்ற முதல் மே நாள் நிகழ்வு. எனினும், 1933 ஆம் ஆண்டு தந்தை பெரியார்தான் அதனைத் தமிழ்நாட்டின் எல்லா ஊர்களுக்கும், எல்லா மக்களிடமும் கொண்டு சென்றார். மே நாள் கூட்டங்கள், பேரணிகள் நடத்துவதற்கு இந்தியாவிலும், பிற நாடுகளிலும் பல தடைகள் இருந்துள்ளன. தோழர் சிங்காரவேலர் தன் முன்னோடியாக ஏற்றுக்கொண்ட, இங்கிலாந்தில் வாழ்ந்த சக்லத்வாலா, 1926 மே நாளன்று, லண்டன் பூங்கா ஒன்றில் உரையாற்றியதற்காக கைது செய்யப்பட்டு இரண்டு மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.…
25 08 2018 சுயமரியாதை -32 சுயமரியாதைக்குள் சமதர்மம் சோவியத் நாட்டிற்குப் போய் வந்தபின்தான் பெரியாருக்குப் பொதுவுடைமைக் கொள்கைகளில் ஈடுபாடு வந்தது என்று பலரும் கூறுகின்றனர். அது உண்மையன்று. பொதுவுடைமைக் கொள்கைகளில் ஈடுபாடு வந்த காரணத்தால்தான் அவர் சோவியத் நாட்டிற்குச் செல்ல வேண்டும் என்று நினைத்தார்.1929 செப். குடியரசு இதழில், பினாங்கு கே.என். மருதமுத்து என்பவர் எழுதியுள்ள கட்டுரைக்குத் தலைப்பே "சமதர்மம் ஓங்குக" என்பதுதான். 1929-31 ஆகிய ஆண்டுகளில் சமதர்மம் குறித்துப் பல கட்டுரைகள் குடியரசில் வெளிவந்துள்ளன. 1931 டிசம்பரில் பெரியார், ஐரோப்பா மற்றும் சோவியத் நாடுகளுக்குப் பயணம் செய்தார். ஏறத்தாழ ஓர் ஆண்டு அந்நாடுகளில் சுற்றுப் பயணம் செய்துவிட்டு 1932 இறுதியில்தான் தமிழகம் திரும்பினார். திரும்பும்போது இலங்கை வழியாக வந்தார். ஆனால் 1931 ஜூலையில் விருதுநகரில் நடைபெற்ற சுயமரியாதை வாலிபர் சங்க மாநாட்டிலேயே பொதுவுடமைக் கொள்கைகளை…
21 08 2018 சுயமரியாதை - 31 நெருப்பிருந்த பனிக்காலம் காங்கிரஸ், காந்தியார் எதிர்ப்பும், கம்யூனிச ஆதரவுமாக 1930களில் கால் வைத்தது சுயமரியாதை இயக்கம். அதற்கு முன்பே கூட, பொதுவுடமைக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவராகவே பெரியார் இருந்துள்ளார். பொதுவுடமைக் கொள்கைகளுக்கும், திராவிட இயக்கக் கொள்கைகளுக்கும் சில வேறுபாடுகள் இருந்த போதும், ஒற்றுமைகள்தாம் மிகுதி என்பதைத் தயங்காமல் சொல்லலாம். தந்தை பெரியாரும், தோழர் சிங்காரவேலரும் 1928இல் சந்தித்துள்ளனர். தமிழக வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்த சந்திப்பு என்று அதனைக் கூறலாம். இருபெரும் மேதைகளாகவும், இருபெரும் புரட்சியாளர்களாகவும் விளங்கிய அவர்களின் சந்திப்பால், வர்க்கம், வருணம் என்னும் இருபெரும் தடைச் சுவர்களை இடித்துத் தமிழகம் முன்னேறுவதற்கான பாதை கண்டறியப்பட்டது. அவர்கள் இருவரும் 1908 ஆம் ஆண்டே ஒரு மாநாட்டில் சந்தித்துள்ளனர் என்று ஆய்வாளர் பா. வீரமணி கூறுகின்றார். எனினும் அது ஒரு சாதாரண நிகழ்வே.…
18 08 2018 சுயமரியாதை - 30 சாதி ஏற்பும், தீண்டாமை எதிர்ப்பும் 1933 ஆம் ஆண்டு ஜூலை மாதக் குடியரசில், காந்தியார் பற்றிய நீண்ட விமர்சனம் ஒன்றைப் பெரியார் எழுதியுள்ளார். 'அரசியல் சர்வாதிகாரி'யாகவே அவர் மாறிவிட்டார் என்று பெரியார் குற்றம் சாற்றுகின்றார். அப்படி அவர் மாறியதற்கு அவருடைய சீடர்கள் மட்டுமின்றி, அவரும் கூட ஒரு காரணம் என்கிறார்."அவர் போட்டுக்கொண்ட மத வேஷமும், கடவுள் சம்பந்தமான பேச்சும், மற்றும் சத்தியம், அஹிம்சை, சத்தியாகிரகம், ஆத்ம சுத்தம், ஆத்ம சக்தி, பரித்தியாகம், தவம் முதலிய வார்த்தைகளும்" அவரை ஒரு அரசியல் தலைவர் என்ற நிலையிலிருந்து உயர்த்தி ஒரு மகானாகவும், மகாத்மாவாகவும் ஆக்கி விட்டன . அவருடைய சீடர்களோ அவரை ஒரு ரிஷி என்பது போலவும், ஒரு முனிவர் என்பது போலவும், இன்னும் சொன்னால் ஒரு இயேசு, ஒரு நபி,…