சுயமரியாதை - Yathaartham
14 08 2018 சுயமரியாதை - 29 பகத்சிங்கைப் பாராட்டிய குடியரசு! உப்புச் சத்தியாகிரகம் நாடெங்கும் மக்கள் ஆதரவுடன் வெற்றிகரமாகவே நடந்தந்து. எனினும்,அதற்குப் பிறகு ஏற்பட்ட சமரசங்களும், பகத்சிங் மற்றும் அவரது தோழர்கள் தூக்கில் ஏற்றப்பட்டதும் மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தைத் தந்தன. காந்தியார் இந்திய அரசியலுக்கு வந்தபின் அப்போதுதான் முதன்முதலில் சில எதிர்ப்புகளையும் சந்தித்தார். ஆயுதமேந்திய புரட்சியாளர்களின் இந்திய விடுதலைக்கான போராட்டம் 1920களில் வேகம் பெற்றது. வெள்ளையர்களால் ஆசாத் கொலை செய்யப்பட்டது, சாண்டர்ஸ் என்னும் காவல்துறை அதிகாரியைப் பகத் சிங் கொன்றது, சட்டசபையில் குண்டு வீசியது போன்ற பல நிகழ்வுகள் அந்தக் காலகட்டத்தில் நடந்தன.அனைத்தையும் தாண்டி பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகிய மூவரும் தூக்கில் ஏற்றப்பட்ட நிகழ்ச்சி இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 1929 வரை யார் என்றே அறியப்படாமல் இருந்த பகத்சிங் 1931இல் தூக்கில் ஏற்றப்பட்டபோது,…
10 08 2018 சுயமரியாதை - 28 பார்ப்பனர் அல்லாதோர் ஆட்சி! பார்ப்பனர் அல்லாத தமிழ்ச் சமூகத்தைக் கல்வியிலும், பிற துறைகளிலும் உயர்த்துவதற்கு நல்லாட்சி அமைய வேண்டும் என்று பெரியார் கருதினார். ஆயிரம் ஆண்டுகளாகக் கல்வி மறுக்கப்பட்ட சமூகம் கல்வியால்தான் மேம்பாடு அடைய முடியும் என்பது அவரின் கருத்தாக இருந்தது. அதே நேரத்தில் தானோ, தன் கட்சியோ நேரடியாக ஆட்சிக்கு வருவதில் அவருக்கு உடன்பாடில்லை. அதனால்தான் ஆட்சியமைக்கத் தன்னைத் தேடி வந்த இரண்டு வாய்ப்புகளை அவர் வேண்டாமென்று மறுத்தார். சென்னைத் தலை மாகாண ஆளுநராக இருந்த ஆர்தர் ஜேம்ஸ் ஹோப் ஆட்சி அமைக்குமாறு பெரியாரை நேரடியாகவே அழைத்தார். பெரியார் மறுத்துவிட்டார். ராஜாஜியே ஒரு முறை, நீங்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள், நானும் இன்னும் இரண்டு மூன்று பேரும் அமைச்சகர்களாக இருக்கிறோம் என்று 1937இல் சொன்னபோதும் அதனை மறுத்துவிட்டார்.…
06 08 2018 சுயமரியாதை - 27 தேர்தல் களத்தில் பெரியார்  காங்கிரசை விட்டு விலகிய பின்னர், சுயமரியாதை இயக்கம், நீதிக் கட்சி, திராவிடர் கழகம் ஆகிய மூன்று இயக்கங்களிலும் அவர் பணியாற்றியுள்ளார். ஆனால் எந்த இயக்கத்தின் சார்பாகவும் அவர் தேர்தலில் நிற்கவில்லை என்பதும், எந்த ஒரு தேர்தலையும் புறக்கணிக்கவில்லை என்பதும் குறிக்கத் தக்கன. சுயமரியாதை இயக்கம் தொடங்கிய நாள்களிலேயே அவர் நீதிக் கட்சியை ஆதரித்துத் தேர்தலில் பரப்புரை செய்தார். 1926 தேர்தலில் நேரடியாக நீதிக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்தார். அதற்கு இரண்டு காரணங்களைப் பெரியார் கூறினார். வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ முறை ஏற்பட வேண்டும் என்பதற்காகவே நீதிக்கட்சி தோன்றியது என்பதால் அதனை ஆதரிப்பதே சரி என்றார். அடுத்ததாக, ஜஸ்டிஸ் ஆட்சிக் காலத்திலேதான் பள்ளிக்கூடங்கள் மிகுதியாகத் தோன்றின என்பதோடு, கட்டாயக் கல்விக்கும் வழிவகை செய்யப்பட்டது என்பதால் அதனை ஆதரித்துப் பிரச்சாரம்…
31 07 2018 சுயமரியாதை - 26 அரசியல் விடுதலை - யாருக்காக? காங்கிரஸ் கட்சியின் சைமன் கமிஷன் எதிர்ப்பு போலித்தனமானது என்று பெரியார் கருதியதைப் போலவே அம்பேத்கரும் எண்ணினார். எனவே ஒடுக்கப்பட்ட மக்கள் இயக்கத்தின் சார்பில் சைமன் கமிஷன் முன்னிலையில் தன் கருத்துகளை எடுத்துரைக்க வேண்டும் என்று விரும்பினார். அவ்வாறே 1928 மே மாதம் 29 ஆம் நாள், மும்பை, தாமோதர் அரங்கில், சைமன் குழுவைச் சந்தித்து, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான நியாயத்தை அவர் கோரினார். அவருடைய கோரிக்கையில் அட்டவணைச் சாதியினருக்கான கல்வித் தேவைகள் முதலிடம் பெற்றிருந்தன.உடனே அம்பேத்கருக்கும், பெரியாருக்கும் 'தேசபக்தர்கள்' சிலர் தேசவிரோதிகள் பட்டத்தை வழங்கினர். அது குறித்து இருவருமே கவலை கொள்கின்றவர்கள் இல்லை. அவர்களுக்கெல்லாம் முன்னோடியான ஜோதி ராவ் புலேவுக்கே அந்தப் பட்டம் அளிக்கப்பட்டது என்பதை அவர்கள் அறியாதவர்களா என்ன? அடுத்த ஆண்டு நடைபெற்ற…
25 07 2018 சுயமரியாதை - 25 ரௌலட் - சாஸ்திரி சட்டம் பிரித்தானிய அரசினால் 1918ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட நீதிபதி ரௌலட் தலைமையிலான குழு அளித்த வரைவறிக்கையினை ஏற்றுக்கொண்டு உருவாக்கப்பட்ட சட்டமே ரௌலட் சட்டம் என்று வழங்கப்படுகிறது. 'இந்திய அரசியல் பயங்கரவாதம்' உருவாகி வருவதாக எண்ணிய ஆங்கில அரசு, அதனைத் தடுப்பதற்காகவே அச்சட்டத்தைக் கொண்டுவருவதாகக் கூறியது. ஜெர்மனானிய அரசு மற்றும் ரஷ்ய போல்ஷ்விக்குகள் இந்தியாவிற்குள் பயங்கரவாதம் பரவுவதற்கு முயற்சிகள் செய்வதாகவும், குறிப்பாக, வங்கம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் அவர்கள் ஊடுருவி இருக்கக்கூடும் என்றும் கருதிய பிரிட்டிஷ் அரசு அச்சட்டத்தைக் கொண்டுவந்தது. நீதிபதி சிட்னி ரௌலட் குழுவில் அவர் உட்பட அறுவர் இருந்தனர். அவர்களுள் முதன்மையானவர், இந்தியரான திவான் பகதூர் சி.வி.குமாரசாமி சாஸ்திரி. அவரே அந்தச் சட்டத்தின் வரைவை முதலில் எழுதியவர். அது ஒரு கறுப்புச் சட்டம்…