சுயமரியாதை - Yathaartham
18 07 2018 சுயமரியாதை - 24 வெள்ளையருக்கு வால் பிடித்தவர்கள் யார்? காங்கிரஸ் கட்சியில் ஆதிக்கம் செலுத்திய, சென்ற பகுதியில் நாம் பார்த்தவைகளைப் போன்ற நிகழ்வுகளைத்தான் பெரியாரும், சுயமரியாதை இயக்கமும் எதிர்த்தார்களே அல்லாமல், இந்திய விடுதலையை எதிர்க்கவில்லை. உண்மையில் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெரியார் தன் மனைவி, தங்கையுடன் ஈடுபட்டவர். காங்கிரசை விட்டு வெளியில் வந்தபின்னும் கூடச் சில ஆண்டுகள் காந்தியாரை ஆதரிக்கவே செய்தவர். 1930களில் கூட, "வெள்ளைக்காரன் நாளைக்கு இந்த நாட்டை விட்டுப் போக வேண்டும் என்று நீ சொன்னால், இன்றைக்கே போக வேண்டும் என்று சொல்கிறவர்கள் நாங்கள்" என்று எழுதினார். ஆனால் இந்த உண்மைகளை எல்லாம் முற்றிலுமாக மறைத்துவிட்டு, நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம் எல்லாம் ஆங்கிலேயருக்கு வால் பிடித்த இயக்கங்கள் என்பது போன்ற உண்மைக்கு மாறான அவதூறுகள் திட்டமிட்டுப் பரப்பப்பட்டன.சைமன் கமிஷனை ஆதரித்தனர்,…
11 07 2018 சுயமரியாதை - 23 தங்கும் அறையில் எச்சில் இலைகள் சுயமரியாதை இயக்கத்திற்கு மக்களிடம், குறிப்பாக, இளைஞர்களிடம் பெரும் வரவேற்பு கிடைக்கத் தொடங்கியது. கல்லூரிப் படிப்பை முடித்த அண்ணா போன்ற இளைஞர்கள் இயக்கத்தையும், பெரியாரையும் நாடி வந்தனர். வைதீக, சனாதன மரபில் ஊறியவர்களுக்கு அந்த நிலை அச்சத்தை ஏற்படுத்தியது. பெரியாரின் புகழைக் கெடுக்க வேறு வழிகள் குறித்து அவர்கள் எண்ணத் தொடங்கினர். அப்போது இந்திய விடுதலைப் போராட்டம் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. ஆங்கிலேயர் எதிர்ப்பும்,காங்கிரஸ் கட்சிக்கான ஆதரவும் பெருகிக் கொண்டிருந்தன. பெரியாரோ காங்கிரசை விட்டு வெளியேறியிருந்தார். எனவே அவர் விடுதலைப் போராட்டத்திற்கு எதிரானவர் என்பது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயன்றனர். அப்போது காங்கிரஸ் கட்சி எப்படியிருந்தது என்பதையும் நாம் பார்க்க வேண்டும். திலகர் காலம் தொடங்கி, அரசியல் விடுதலைக் களத்தில் முற்போக்குப்…
04 07 2018 சுயமரியாதை - 22 காத்திருந்தது காலம்! நீதிமன்றத்தால் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட அந்தத் திருமணத்தின் இணையர்கள் சிதம்பரம்-ரங்கம்மாள் என்பதைச் சென்ற பகுதியில் பார்த்தோம். அவர்கள் இருவரும் இன்றைய திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் மாமனாரும், மாமியாரும் ஆவர். அவர்களின் மகள் மோகனா அம்மையாரைத்தான் பிற்காலத்தில் ஆசிரியர் மணந்து கொண்டார். அந்த நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிர் விளைவுகளும் இருந்தன. சுயமரியாதைத் திருமணங்கள் செல்லுபடியாகும் வண்ணம் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலிமையாக எழுந்தன, அப்போது (1953 ஆம் ஆண்டு) ராஜாஜி தமிழ்நாட்டின் முதமைச்சராக இருந்தார். அந்த நேரத்தில், சட்டமன்ற உறுப்பினராக இருந்த, 'திராவிடப் பார்லிமெண்டரிக் கட்சி'யைச் சேர்ந்த துறையூர் பி.ரங்கசாமி ரெட்டியார் அதற்கான தீர்மானம் ஒன்றைச் சட்டமன்றத்தில் கொண்டுவந்தார். ராஜாஜியும் அதனை மறுக்காமல் விவாதத்திற்கு அனுமதித்தார். தனக்கும் அதில் மறுப்பில்லை…
26 06 2018 சுயமரியாதை - 21 வைப்பாட்டிகளிலும் இரண்டு வகை 1953 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட அந்தத் தீர்ப்பு, சுயமரியாதை இயக்கத்திற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்றே அன்று பலரும் கருதினர். ஆனால் அந்தத் தடைக்கல்லையே ஒரு படிக்கல்லாக மாற்றிக் காட்டினார் பெரியார். திருமணம் நடந்து 19 ஆண்டுகளுக்குப் பின் அத்திருமணம் செல்லாது என்று கூறிய அத்தீர்ப்புக் குறித்தும், அத்திருமணம் குறித்தும் பல செய்திகளை நாம் அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. 1934ஆம் ஆண்டு கோட்டையூரைச் சேர்ந்த சிதம்பரம் என்பவருக்கும், திருவண்ணாமலையைச் சேர்ந்த ரங்கம்மாள் என்பவருக்கும், திருச்சியில் பெரியார் தலைமையில் ஒரு திருமணம் நடைபெற்றது.அது ஒரு சாதி மறுப்புத் திருமணம். இருவருமே தங்களின் வாழ்விணையர்களை ஏற்கனவே இழந்தவர்கள் என்பதால் அது ஒரு மறுமணமும் ஆகும். சடங்குகள், மந்திரங்கள் எவையுமில்லாத சுயமரியாதைத் திருமணமாக நடந்தது. இத்திருமணம் முடிந்து பல…
19 06 2018 சுயமரியாதை - 20 பெரியார் என்னும் புரோகிதர் "இந்தப் பெண்ணானவள் முதலில் ஸோமனிடம் இருந்தாள். பிறகு அவன் இவளைக் கந்தர்வனுக்குக் கொடுத்தான். அவனோ அக்கினியிடம் சேர்த்து வைத்தான். அவனிடமிருந்து நான் பெற்று இப்போது இந்த மனுஷனுக்குக் கொடுக்கிறேன்" என்பதுதான் அந்த மந்திரத்தின் பொருள். அதனால்தான் நாளைக்கு அக்கினி இவளைத் தன்னுடையவள் என்று கூறிவிடக் கூடாது என்பதற்காக , 'அக்கினி சாட்சியாக' நெருப்பு வளர்த்துத் திருமணம் செய்து கொடுக்கின்றனர். இந்த அவமானத்தை நாம் புரிந்து கொள்ளக் கூடாதென்றே மந்திரங்கள் நமக்குத் புரியாத சமற்கிருதத்தில் சொல்லப்படுகின்றன. பொருள் விளங்காமல் நாமும் அந்த மந்திரங்களை மகிழ்வுடன் கேட்டுக் கொண்டிருக்கிறோம். பல மந்திரங்கள் நம்மை "ஏக மாதா"விற்கும், "பகு பிதா"விற்கும் பிறந்தவர்கள் என்றுதானே சொல்கிறது. மாதா, பிதா என்னும் சொற்களுக்கு நாம் பொருள் அறிவோம். ஏக என்றால் ஒன்று,…