சுயமரியாதை - Yathaartham
26 02 2018 சுயமரியாதை - 4 சமூக நீதியும் கடவுள் மறுப்பும் பெரியாரின் கடவுள் மறுப்பே, சமூக நீதியின் அடிப்படையில் எழுந்ததுதான் என்பதற்குப் பல சான்றுகள் உண்டு! வைணவ மரபுகளைக் கடுமையாகப் பின்பற்றிய ஒரு வைதீகக் குடும்பத்தில் பிறந்த அவருக்கு, அவர் குடும்ப நடவடிக்கைகளே ஓர் எதிர்க் கருத்தை அவரிடம் தோற்றுவித்தன. அதனால், யார் ஒருவருடைய நூலையும் படிக்காமல், தன் சுயசிந்தனையின் அடிப்படையில் ஒரு பகுத்தறிவாளராக உருப்பெற்றார். என்றாலும் பகுத்தறிவு அடிப்படையில் தோன்றிய கடவுள் மறுப்புக் கோட்பாட்டைச் சாதி எதிர்ப்பு, சமூக நீதி என்னும் தளங்களிலேதான் நிலைநிறுத்தினார். 1919 இல் காங்கிரசில் சேர்ந்த அவர், 1925 இறுதியில் அக்கட்சியை விட்டு விலகினார். காங்கிரஸ் கட்சி கடவுள் மறுப்பை ஏற்கவில்லை என்று கூறி அவர் அக்கட்சியை விட்டு விலகவில்லை. சமூக நீதிக்கு வழிவகுக்கும் பாதைகளில் ஒன்றான இட…
19 02 2018 சுயமரியாதை - 3 கடவுள் மறுப்பு - அங்கும் இங்கும் உலகிலேயே கடவுள் மறுப்பை முதலில் சொன்னவர் பெரியார்தான் என்று எவரும் சொல்லமாட்டார்கள். கடவுள் நம்பிக்கை எவ்வளவு பழையதோ அதே அளவு கடவுள் மறுப்பும் பழையது. எத்தனையோ சிந்தனையாளர்கள் பெரியாருக்கு முன்பே அந்தக் கருத்தை வெளியிட்டுள்ளனர். எனினும் மேலை நாட்டுக் கடவுள் மறுப்புக்கும் , பெரியார் முன்வைத்த கடவுள் மறுப்புக்குமிடையே ஒரு பெரிய வேறுபாடு உண்டு. தத்துவ உலகில் கருத்து முதல் வாதமும், பொருள் முதல் வாதமும் மிக மிகப் பழையன. ஆதி கிரேக்கர்களின் காலத்த்திலேயே அந்த விவாதம் நடந்துள்ளது. எனினும் ஐரோப்பிய தத்துவ உலகத்தில் 16ஆம் நூற்றாண்டு தொடங்கி அது பற்றிய எழுத்துகளும், பதிவுகளும் காணக்கிடக்கின்றன. 16ஆம் நூற்றாண்டில் பிரான்சில் வாழ்ந்த தத்துவாசிரியர் டெஸ்கார்ட்ஸ், 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஹாலந்தின் ஸ்பீனோசா,…
12 02 2018 சுயமரியாதை - 2 கடவுளும் பெரியாரும் தஞ்சை, தருமபுரி ஆகிய ஊர்களில் அன்று எழுப்பப்பட்டிருந்த பெரியார் சிலைகளின் அடிபீடத்தில் கடவுள் மறுப்புத் தொடர்கள் எழுதப்பட்டிருந்தன. அவற்றை எதிர்த்தும், அந்த வரிகளை நீக்க வேண்டும் என்று கோரியும் முன்னாள் துணை மேயர் டி.ஜி. கிருஷ்ணமூர்த்தி, சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். பக்திமான்கள் நம்பிக்கையையும், உணர்வுகளையும் அவ்வரிகள் காயப்படுத்துவதாகத் தன் மனுவில் கூறியிருந்தார். அந்த வழக்கு, நீதிபதி எம்.எம்.இஸ்மாயில் அவர்களின் நீதிமன்றத்திற்கு வந்தது. தில்லி உயர்நீதி மன்றத்திலிருந்து 1967 நவம்பரில்தான் நீதிபதி இஸ்மாயில் சென்னை உயர்நீதி மன்றத்திற்கு மாற்றலாகி வந்திருந்தார். 1979 வரை நீதிபதியாகவும், 1979-81இல் தலைமை நீதிபதியாகவும் அவர் பொறுப்பு வகித்தார். வழக்கு மூன்றாண்டுகள் நடைபெற்றது. இறுதியாக, 11.10.1973 அன்று தீர்ப்பு சொல்லப்பட்டது. "மனுதாரர் குறிப்பிட்டிருப்பது போல அந்த வாசகங்கள் பொது…
05 02 2018 சுயமரியாதை - 1  அறிமுகமாய்ச் சில சொற்கள் 2000ஆம் ஆண்டில், "தமிழ் மண்ணே வணக்கம்". 2012இல் "இளமை என்னும் பூங்காற்று" தொடர்களுக்குப் பின், இப்போது மீண்டும் இத்தொடரின் மூலம் நக்கீரன் நண்பர்களைச் சந்திக்கக் கிடைத்த வாய்ப்பை எண்ணி மகிழ்கின்றேன். நீதிக்கட்சியின் நூற்றாண்டில், நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவரான பனகல் அரசரின் 150ஆவது பிறந்தநாளையொட்டி (1866 ஜூலை 9) இத்தொடர் தொடங்குவதில் மற்றுமொரு மகிழ்ச்சி இருக்கவே செய்கிறது. பிரிட்டனைச் சேர்ந்த எழுத்தாளர், மார்க்சியச் சிந்தனையாளர், யார்க்சயர் அப்சர்வர் (Yorkshire observer) என்னும் ஏட்டின் செய்தியாளர் கிறிஸ்டோபர் காட்வெல் (Christopher caudwell) தன்னுடைய தோற்றமும் உண்மையும் (illusion and reality) என்னும் நூலில் ஓர் அழுத்தமான கருத்தை வெளியிட்டிருப்பார். அந்த வரிகளே இந்தத் தொடரின் தலைப்பைத் தீர்மானித்தன என்று கூறலாம். ஒரு சொல்லுக்குப் பின்னால் ஒரு சமூகத்தினுடைய…