03 05 25  இந்திய மாநிலங்களின் சுயாட்சி முதல்வர் – 2 பேரறிஞர் அண்ணா அவர்கள் தனது இறுதிக் காலத்தில் உறுதியாய் பேசியதில் அதிகம் மாநில சுயாட்சிக் கருத்துக்களைத்தான்! 1968 ஜூலை மாதம் நடைபெற்ற மாநில சுயாட்சி மாநாட்டில் உரையாற்றிய முதலமைச்சர் அண்ணா, “இது அரசியல் கோரிக்கையே தவிர, அரசியல் கட்சிகளின் கோரிக்கை அல்ல” என்றார். 1969 ஜனவரி மாதம் ‘காஞ்சி’ பொங்கல் மலரில் எழுதிய முதலமைச்சர் அண்ணா, “மாநிலங்கள் அதிக அளவில் அதிகாரங்கள் பெறத் தக்க வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும்” என்று எழுதினார். இதே கருத்தை ‘ஹோம் ரூல்’ பத்திரிக்கையிலும் முதலமைச்சர் அண்ணா எழுதினார்; “வெற்றுத்தாளில் கூட்டாட்சி சார்புடையது எனக்கூறி நடைமுறையில் மத்திய அரசிற்கு மென்மேலும் அதிகாரங்களைக் குவித்துக் கொண்டிருக்கிற நமது அரசியல் சட்டத்தின் கீழியங்கும் ஒரு மாநிலத்திற்கு நான் முதலமைச்சர் என்பதில் சிறிதும்…
30 04 2025  இந்திய மாநிலங்களின் சுயாட்சி முதல்வர் – 1 இந்­திய மாநி­லங்­கள் அனைத்­துக்­கு­மான உரி­மையை வாங்­கித் தரும் முன்­னெ­டுப்­பில் இறங்கி இருக்­கி­றார் ‘திரா­விட நாய­கன்’ – மாண்­பு­மிகு தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள். “மாநில சுயாட்­சியை வென்­றெ­டுக்க சட்ட முன்­னெ­டுப்­பு­களை கழ­கம் மேற்­கொள்­ளும்” என்று திரா­விட முன்­னேற்­றக் கழக பவள விழா – முப்­பெரும் விழாப் பொதுக்­கூட்­டத்­தில் கடந்த செப்­டம்­பர் மாதம் உரை­யாற்­றிய மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் உரக்­கச் சொன்­னார்­கள். “நமது எல்­லாக் கன­வு­க­ளும் நிறை­வே­றி­விட்­டதா எனக் கேட்­டால்... இல்லை! மாநில உரி­மை­களை வழங்­கும் ஓர் ஒன்­றிய அரசு அமை­ய­வில்லை. நிதி உரிமை உள்­ளிட்ட கோரிக்­கை­க­ளுக்கு இன்­ன­மும் நாம் போராட வேண்­டிய நிலை தான் இருக்­கி­றது. பேர­றி­ஞர் அண்­ணா­வும் – தலை­வர் கலை­ஞ­ரும் வலி­யு­றுத்­திய மாநில சுயாட்­சிக் கொள்கை என்­பது நமது உயிர்­நா­டிக் கொள்­கை­க­ளில்…
18 04 2025 பொருளாதார வளர்ச்சியில் புதிய உச்சம்... இந்தியாவிலேயே முதலிடம்: ஸ்டாலின் பெருமிதம் 2024-25 நிதியாண்டிற்கான தமிழ்நாட்டின் உண்மையான பொருளாதார வளர்ச்சி விகிதம் 9.69% என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் அண்மையில் வெளியிட்ட தரவுகளில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது இந்தியாவிலேயே அதிக பொருளாதார வளர்ச்சி விகிதம் உள்ள மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்று மத்திய அரசின் புள்ளிவிவரத்தில் இருந்து தெரிய வருகிறது. மேலும், கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் இதுவே மிக உயர்ந்த வளர்ச்சி விகிதமாகும். இதற்கு முன்பு அதிகபட்சமாக 2017 - 18 நிதியாண்டில் தமிழ்நாட்டின் உண்மையான பொருளாதார வளர்ச்சி விகிதம் 8.59% ஆக இருந்தது. கொரோனா நோய்த்தொற்றால் 2020 - 21 நிதியாண்டில் தமிழ்நாட்டின் உண்மையான பொருளாதார வளர்ச்சி 0.07%…
15 04 25 Supreme Court Ruling on Tamil Nadu Governor a Win For Other States Too. Here's Why The top court's ruling regarding the pending bills with the Tamil Nadu governor has brought to focus the issue of governors' powers. In a significant move, the court also laid down a timeline for all governors to decide on bills presented to them. New Delhi: The Supreme Court’s decision on Tuesday to strike down Tamil Nadu governor RN Ravi’s move to reserve 10 re-enacted state bills for presidential assent in November last year…
12 04 2025 10 மசோதாக்களுக்கு ஒப்புதல்: வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு! தமிழ்நாடு அரசு கொண்டுவந்த 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பரிந்துரை செய்தது சட்டவிரோதம் என அறிவித்துள்ள உச்ச நீதிமன்றம், அந்த மசோதாக்களுக்குத் தன்னுடைய சிறப்பு அதிகாரத்தின் கீழ் ஒப்புதல் அளித்து தீர்ப்பளித்திருக்கிறது. இந்தத் தீர்ப்பை, ‘வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு’ எனத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டிருக்கிறார். தமிழ்நாட்டுக்கு மட்டுமல்லாமல், பிற மாநிலங்களுக்கும் வழிகாட்டும் முன்னோடித் தீர்ப்பாக இது அமைந்திருக்கிறது.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் ஆளுநர்கள் நடந்துகொள்வதாக காங்கிரஸ் காலத்திலிருந்தே புகார்கள் உண்டு. தமிழ்நாடு, குஜராத், பஞ்சாப் போன்ற மாநில அரசுகள் வெவ்வேறு காலக்கட்டங்களில் ஆளுநர்களின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன; நீதிமன்றங்களையும் அணுகியிருக்கின்றன. பாஜக அல்லாத கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில், ஆளுநர்கள் மூலம்…