18 07 2018 அவ்வண்ணமே கோரும் ......." - ரஜினிகாந்த்! விஷக்கிருமி என்ற சொல் 50 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் பாவலாகப் பேசப்பட்ட ஒரு சொல். 1967 ஆம் ஆண்டு திமுக பதவிக்கு வந்ததும், முன்னாள் முதலமைச்சர் பக்தவத்சலம், "தமிழ்நாட்டில் விஷக்கிருமிகள் பரவி விட்டன" என்றார். அது குறித்த கடுமையான விமர்சனங்கள் பல அன்று வெளிவந்தன. பிறகு பலரும் அந்தச் சொல்லை அல்லது அப்பொருள்படும் சொல்லை அடிக்கடி கையாண்டனர். அண்மையில் சல்லிக்கட்டுப் போராட்டத்திலும், இப்போது தூத்துக்குடியிலும் அந்தச் சொல் பயன்படுத்தப் பட்டது. இப்போது மீண்டும் தூத்துக்குடிப் போராட்டத்தில் விஷமிகள் பரவி விட்டனர் என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், தமிழக முதலமைச்சர் எடப்பாடி ஆகியோர் கூறினர். இப்போது அதே சொல்லையும், கருத்தையும் ஊடக நேர்காணலில் ரஜினி பயன்படுத்தியுள்ளார். கொதித்துக் கொந்தளித்து எழுந்த மக்களின் போராட்டத்தை விஷமிகள் நடத்திய…
03 07 2018 மோசடிக்குத் துணை போகும் தமிழ்த் தேசியர்கள் ஈழச் சிக்கலுக்காக இந்து மக்கள் கட்சி, கடந்த செப்.23 அன்று, சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகில் ஓர் உண்ணாவிரதத்தை நடத்தியுள்ளது. ஈழத்தின் சிவ பூமியைப் , புத்த பூமியாக மாற்ற முயற்சி நடப்பதாகவும், அந்தப் பௌத்த மயமாக்கலைக் கண்டித்துப் போராட்டம் என்றும் அறிவித்துள்ளனர். இனச் சிக்கலை, மதச் சிக்கலாக மாற்றும் 'ரசவாத வித்தை' இது! இந்த மோசடிக்குத் துணை போகும் விதத்தில், அய்யா நெடுமாறன் அவர்களும், கவிஞர் காசி ஆனந்தன் அவர்களும் மேடையில் அமர்ந்திருப்பது பெரும் அதிர்ச்சி தருவதாக உள்ளது. நாம் தமிழர் கட்சியும் இதில் பங்கேற்றுள்ளது. ஈழம் என்பது சிவ பூமி என்றால், பிற மதங்களுக்கு அங்கு இடமில்லையா? சிங்களர்கள் நவாலியில் குண்டு வீசினார்களே அங்கே சிவன் கோயிலா இருந்தது? மாதா கோயிலின் மீதுதானே…
06 05 2017 பேச மறந்த சூரியன் “என்னை நீங்கள் கடலில் தூக்கி எறிந்தால் கட்டுமரமாக மிதப்பேன்; அதில் ஏறி நீங்கள் சவாரி செய்யலாம். என்னை நீங்கள் நெருப்பிலே தூக்கி எறிந்தால், நான் விறகாக மாறி அடுப்பெரிக்கப் பயன்படுவேன்; நீங்கள் சமையல் செய்து சாப்பிடலாம். என்னை நீங்கள் பாறையிலே மோதினால், வெறும் கல்லைப்போல் பொடியாகிவிடமாட்டேன்; தேங்காய்போலச் சிதறி உங்களுக்குத் தின்பண்டமாக மாறுவேன். ஆகவே தமிழர்களே! என்னை நீங்கள் எது வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்; உங்களுக்காகவே பயன்படுவேன்” - இது மு.கருணாநிதியின் பொன்மொழியாகப் போற்றப்படும் வசனம். இந்திய விடுதலைக்குப் பிறகு, தமிழகத்தில் மொழிவாரி மாநிலப் பிரிவினை காரணமாக ஏற்பட்ட சிக்கல்கள், காங்கிரசல்லாத பிற கட்சிகளின் எழுச்சி போன்ற பல்வேறு வரலாற்றுச் சம்பவங்கள் குறிப்பிடத்தகுந்தவை. அக்காலகட்டத்தின் வரலாறு இங்கு இன்னமும் விரிவாகப் பதிவு செய்யப்படாமலும் பொருட்படுத்தப்படாமலும் இருக்கிறது. தமிழகம் உருவான…