09 09 2018 பாசிச பாஜக ஒழிக! பிஜேபியால் தமிழ்நாட்டுக்கு இன்று சோபியா என்ற ஆளுமை கிடைத்திருக்கின்றார். ஒருவேளை அந்த விமானத்தில் தமிழிசை வரவில்லை என்றால், இப்படி ஒரு வீரமிக்க, துணிவுமிக்க, தன்மானமும், சுயமரியாதையும் உள்ள தமிழ்ப் பெண் தமிழ்நாட்டில் இருப்பதே தெரியாமல் போயிருக்கும். ஒட்டுமொத்த இந்தியாவைப் பிடித்த பெரும் தரித்திரமாய், பீடையாய் பாஜக‌ மாறியிருக்கின்றது. அந்தக் கட்சியை சேர்ந்தவர்களையோ, அதற்கு ஆதரவாய் இருப்பவர்களையோ பார்த்தாலே மக்கள் இயல்பாகவே பெரும் கோபமடைகின்றார்கள். தங்கள் வாழ்வாதாரங்களை எல்லாம் அழித்து தங்களைச் சாகடிக்க வந்த குற்றக் கும்பலாக பாஜகவை மக்கள் கருதுகின்றார்கள். அதன் வெளிப்பாடுதான் விமானம் என்று கூட பார்க்காமல் சோபியாவை ஆத்திரப்பட வைத்திருக்கின்றது. அவரது கோபம் தமிழிசை என்ற தனி ஒரு பெண்ணைச் சார்ந்தது கிடையாது. அவர் சார்ந்து இருக்கும் பிஜேபி, ஆர்.எஸ்.எஸ் என்ற தரம்கெட்ட கும்பலின் மீதான…
01 09 2018 மானமிகு சுயமரியாதைக்காரனுக்கு விடை கொடுப்போம் இந்திய அரசியல்வாதிகளில் கலைஞர் அளவிற்கு முற்போக்காக செயல்பட்டவர்களை நம்மால் பார்க்க முடியாது. தேர்தல் அரசியல் வரம்பிற்குள் நின்று என்ன செய்ய முடியுமோ, அதை முடிந்தவரை செய்ய முயற்சித்தவர் கலைஞர். அண்ணாவிற்கு அடுத்து பெரும் அறிவுஜீவியாய் அனைத்தைப் பற்றியும் அறிவு கொண்டவராய் இருந்தார் கலைஞர். சாதியைப் பற்றியும், பார்ப்பன மேலாதிக்கத்தைப் பற்றியும், இந்திய மக்களை அழித்துக் கொண்டிருக்கும் மூடப்பழக்க வழக்கங்களைப் பற்றியும் அவருக்கு தெளிவான பார்வை இருந்தது. அனைத்து மக்களும் சாதி பேதமின்றி ஒரே இடத்தில் வாழ, பெரியார் நினைவு சமத்துவபுரத்தை உருவாக்கினார். தமிழகமெங்கும் ஏறக்குறைய 237 சமத்துவபுரங்களை உருவாக்கி அதில் தலித்துகள் 40 சதவீதமும், பிற்படுத்தப்பட்டவர்கள் 25 சதவீதமும், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் 25 சதவீதமும், மற்ற வகுப்பினருக்கு 10 சதவீதமும் இடம் கொடுக்கப்பட்டது. மேலும் 1970 டிசம்பர்…
21 08 2018 ஸ்டாலினுக்குத் தோள்கொடுப்போம்!... நமக்காக! “நாம் கேட்கும் சுயராஜ்யம் என்பது, வெள்ளையர்களை நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் அல்ல. எங்கள் நாட்டின் வேத, சாஸ்திரங்கள்தான் எங்களை ஆளவேண்டும். சுயராஜ்யம் வந்தால் மனுநீதியை அரசமைப்புச் சட்டமாகவே ஆக்கவேண்டும். ஆக்குவோம்” என 1917 இல் பார்ப்பன ஆதிக்க வெறியோடு பேசியவர் பாலகங்காதர திலகர். இவர் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர். இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தைத் தொடங்கிய ஸ்ரீபத் அம்ரிட் டாங்கே மற்றும் ஆர்.எஸ்.எஸ்.ஸ் அமைப்பைத் தொடங்கிய கேசவ் பல்ராம் ஹெட்கேவர் ஆகிய இருவருமே திலகரின் சீடர்கள். மராட்டியப் பார்ப்பனர்கள். இந்த மூன்று அமைப்புகளிலும் தலைமைப் பொறுப்புகளில் இருக்கும் பார்ப்பனர்கள் தான் இன்றளவுக்கும் இந்தியாவின் அரசியலை இயக்குபவர்களாக உள்ளனர். ஒரு நூற்றாண்டு முடிந்து விட்டது. அகில இந்திய அரசியல் தளத்தில் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை நாம் இன்னும் அசைக்கக் கூட…
16 08 2018 கருணாநிதி சகாப்தம் உலகின் நீண்ட கடற்கரைகளில் ஒன்றான மெரினாவில் தனக்கென ஆறடி நிலத்தை வாங்கிக்கொண்டு கருணாநிதி மண்ணுக்குள் உள்ளடங்கியபோது, சிறு நண்டுக் கூட்டம் ஒன்று ராணுவ மரியாதை செலுத்த நின்றிருந்த சிப்பாய்களின் பூட்ஸ் கால்கள் இடையே சுற்றுவதும் மணல் வலைக்குள் போய்ப் பதுங்கி வெளியே ஓடி வருவதுமாக இருந்தது. மக்கள் வெள்ளம் சூழ, ராணுவ வாகனத்தில் கருணாநிதியின் உடலை ஏற்றி இறக்கி, டாப்ஸ் ஊதி, அஞ்சலிக்காக 21 துப்பாக்கிக் குண்டுகளை வெடிக்கச் செய்து, அவருக்கு இறுதி வணக்கம் செலுத்தியபோது, முப்படை வீரர்களின் மனநிலை என்னவாக இருந்திருக்கும்? இலங்கை சென்ற இந்தியப் படையினரால் அங்குள்ள தமிழர்கள் பாதிக்கப்பட்டபோது, அவர்கள் நாடு திரும்ப இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்ததோடு, நாடு திரும்பிய படையினரை வரவேற்கவும் மறுத்த முதல்வராக இருந்தவர் அவர். ஒரு பிரிட்டன், ஒரு பிரான்ஸைக்…
22 07 2018 தமிழர் சமூக வாழ்வு (கி.பி 250 முதல் கி.பி 600 வரை) - எனும் நூலை முன்வைத்து... தமிழகத்தின் கி.பி.250 முதல் கி.பி.600 வரையிலான நூற்றாண்டுகளை களப்பிரர்களின் காலம் என்றும், இருண்ட காலம் என்றும் பெருவாரியான 'செல்வாக்கு மிகுந்த' வரலாற்று ஆய்வாளர்கள் சொல்லி வந்திருக்கிறார்கள். நீலகண்ட சாஸ்திரியார், சதாசிவ பண்டாரத்தார், ஔவை துரைசாமிப்பிள்ளை என பலரும் அவர்களை கொடியவர்கள் என்றும் சூறையாடியவர்கள் என்றும் சாடி உள்ளனர். கே.கே. பிள்ளை தமிழ்நாட்டு பாடநூல் கழகம் வெளியிட்ட தனது 'தமிழக வரலாறு: மக்களும் பண்பாடும்' எனும் நூலில் "தமிழகத்தில் இவர்களால் ஏற்பட்ட குழப்பமும் இழப்பும் அளவிறந்தன. இவர்கள் கொடுங்கோலர்கள், கலியரசர்கள்" என கொட்டித் தீர்க்கிறார். போதுமான, நம்பகமான தரவுகள் ஏதுமற்ற பின்சங்க காலத்தில், இலக்கியங்களைத் தவிர்த்துப் பா்த்தால் பற்றிக்கொள்ள எந்த ஆதரவும் இல்லாததாலேயே இருண்டகாலம் எனும்…