பார்வை - Yathaartham
04 07 2025 மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கட்டாயம் தேவை மஞ்சை வசந்தன் -1 தமிழ்நாடு சட்டப்பேரவையில் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா.எழிலன், “தமிழ்நாட்டில் மூடநம்பிக்கை தடுப்புச் சட்டம் கொண்டு வரப்படுமா?” என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “நமக்கென்று ஒரு கொள்கை இருக்கலாம். அதை மக்கள் மீது திணிக்க இயலாது. மூடநம்பிக்கையைச் சட்டம் போட்டு தடுக்க முடியாது” என்று பதில் அளித்தார்.   இதற்குப் பேரவைத் தலைவர் அப்பாவு அவர்களும், “உறுப்பினர் பொருத்தமில்லாத கேள்வியை எழுப்பியதாகவும், அதற்கு அமைச்சர் சரியான விளக்கத்தை அளித்து விட்டார்” என்று கூறியிருந்தார். சட்ட அமைச்சர் ரகுபதி அவர்களும் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு அவர்களும், தங்கள் கருத்தை திராவிட மாடல் ஆட்சியின் கருத்தாகக்கூறுவது ஏற்புடையது அல்ல. அவர்கள் இன்னும் திராவிட கோட்பாடுகளை, குறிப்பாக இது பற்றிய கலைஞர்…
14 07 2025 மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கட்டாயம் தேவை மஞ்சை வசந்தன் மூடநம்பிக்கை ஒழிப்பு திராவிட ஆரிய போரின் முதன்மைக் களம் இந்தியாவைப் பொறுத்தவரை பிற அயல்நாட்டவர் இங்கு நுழைவதற்குமுன் எந்த மூடநம்பிக்கையும் இன்றிதான் தமிழர்கள் வாழ்ந்தனர். நன்றியின்பாற்பட்ட செயல்பாடுகளைத் தவிர அவர்களிடம் எந்த மூடநம்பிக்கைகளும் இல்லை. ஆனால், ஆரியர்கள் இந்த நாட்டிற்குள் நுழைந்து பரவி நிலையாக வாழத் தொடங்கியபின், தங்கள் வருவாய்க்கும், பிழைப்பிற்கும், சிறுபான்மையினரான தங்கள் பாதுகாப்பிற்கும் பல்வேறு சடங்குகளை, மூடநம்பிக்கைகளை உருவாக்கி, அவற்றிற்கு வலுச்சேர்க்கவும், வளர்க்கவும் புராணங்களையும், கதைகளையும் உருவாக்கினர். வீரத்தை மட்டுமே நம்பி வாழ்ந்த தமிழர்கள் மத்தியில் யாகம், வேண்டுதல், படையல், பலியிடல் என்று பலவற்றை உருவாக்கி தமிழர்களை ஏற்கும்படி செய்தனர்.   தங்கள் வாழ்வுக்கும், வளர்ச்சிக்கும், வருவாய்க்கும், ஆதிக்கத்திற்கும், உயர்விற்கும், மேன்மைக்கும் மூடநம்பிக்கைகள் பெரிதும் பயன்பட்டதால், உதவியதால், மூடநம்பிக்கைகளைப் பரப்புவதையே தங்கள் முதல்…
10 06 25 வேதமும், ஆகமும்தான் இந்தியப் பண்பாடா?  2 இன்று இந்தியாவில் இருப்பது எந்த பண்பாடு? வர்ணபேதம் பிரம்மாவின் முகத்தில் பிறந்தவன் பிராமணன், தோளில் பிறந்தவன் ஷத்திரியன் இடுப்பில் பிறந்தவன் வைசியன், காலில் பிறந்தவன் சூத்திரன் என்று மனிதர்களைப் பிறப்பால் உயர்வு தாழ்வாக நடத்தியது, இழிவு, புனிதம் கற்பித்தது ஆரியப்பண்பாடு. ஆரியர்கள் வருகைக்கு முன்போ அல்லது தற்காலத்திலோ அது நடப்பில் உள்ளதா, இடைப்பட்ட காலத்தில் அரசர்கள் துணையோடு ஆரியர்கள் ஆதிக்கம் செலுத்திய போது நடைமுறைப்படுத்தப்பட்ட மனிதநேயமற்ற மனிதத்தன்மைக்கு எதிரான ஒரு வாழ்க்கை முறையல்லவா வருணமுறை. ஆனால் தமிழர்கள், ‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’’ என்று எல்லா உயிர்களையும் சமமாக எண்ணியவர்கள். மனிதரில் உயர்வு தாழ்வு, இழிவு, புனிதம் இல்லை என்றவர்கள். ஆரியர்கள் ஆதிக்கம் செலுத்துவதற்கு முன் இவைதான் நடப்பில் இருந்தன. இந்த இரண்டு பண்பாடுகளில் இன்று இந்தியாவின் பண்பாடாக வென்று நிற்பது…
06 06 25 வேதமும், ஆகமும்தான் இந்தியப் பண்பாடா? - 1 தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.இரவி அவர்கள் பொறுப்பேற்றதிலிருந்து ஆர்.எஸ்.சிந்தாந்தங்களைத் திணிப்பதிலும், அதன் இலக்குகளைச் செயல்படுத்துவதிலும் தொடர்ந்து முனைப்புக் காட்டி வருகிறார். ஒரு ஆளுநர் எவற்றையெல்லாம் செய்யக்கூடாதோ அவற்றையெல்லாம் தேர்ந்தெடுத்துச் செய்து வருகிறார். அண்மையில் பி.ஜே.பி. தலைவர் நட்டா அவர்களும், ஆளுநர் ஆர்.என்.இரவி அவர்களும் கலந்துகொண்ட நிகழ்வில் ஆளுநர் பேசுகையில், இந்தியாவின் பண்பாடு வேதங்கள், ஆகமங்களின் அடிப்படையில் அமைந்தது என்று பேசியுள்ளார்! முதலில் வேதங்களில் என்ன உள்ளன; ஆகமங்களில் கூறப்படுபவை எவை என்பது இவருக்குத் தெரியுமா? என்றால் உறுதியாகக் கூறலாம். இவருக்கு அவை பற்றி எதுவும் தெரியாது என்று. வேதங்களைப் படித்தவர் எவரும் வேதத்தை உயர்த்திப் பேச மாட்டார்கள். இதற்கு எழுத்தாளர் சாரு நிவேதிதாவே சான்று.   ‘‘வேதங்கள் உலகிலே உயர்ந்தவை என்று எல்லோரும் கூறுவதை நம்பி நானும் அவை உயர்ந்தவை,…
19 05 25 பதில் எங்கே?  காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா எப்போதும் மூன்றாம் நாட்டின் தலையீட்டை அனுமதித்தது இல்லை. அது அமெரிக்காவாக இருந்தாலும் சரி, அல்லது ரஷ்யாவாக இருந்தாலும் சரி. பேச்சுவார்த்தை நடந்தால் கூட அது, இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் தான் நடக்கும். இதுதான் காலங்காலமாக இந்தியா கடைபிடித்து வந்த நடைமுறை. அந்த நடைமுறையை பிரதமர் மோடி உடைத்தெறிந்து இருக்கிறார். காஷ்மீர் பிரச்னையில் அமெரிக்காவை மத்தியஸ்தம் செய்ய அனுமதித்து இருக்கிறார். அமெரிக்க அதிபர் டிரம்ப் இதை அடுத்தடுத்து உறுதிப்படுத்தி வருகிறார். ஆனால் பிரதமர் மோடி இதுபற்றி வாய் திறக்க மறுத்து வருகிறார். 1971ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவுக்கும்,பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் முற்றியது. பாக்.கிற்கு ஆதரவாக அமெரிக்கா விமானம் தாங்கிய போர்க்கப்பல்களை வங்கக்கடலில் நிறுத்தியது. இந்தியாவுக்கு ஆதரவாக அப்போதைய சோவியத் ரஷ்யா போர்கப்பலை அனுப்பி வைத்து இருக்கிறது. பதற்றத்திற்கு…