கறுப்பும் காவியும் - Yathaartham
12 12 2018 கறுப்பும் காவியும் -3 மண்டைக்காடு  நான் முன்பு குறிப்பிட்ட நான்கு இயக்கங்களில், காங்கிரஸ் தவிர, மற்ற மூன்று இயக்கங்களும் 1915-25 காலகட்டத்தில் இங்கு தோன்றியவை. பொதுவுடைமை இயக்கம், வெளிநாட்டில் தோன்றி, இங்கு பரவியது. திராவிட இயக்கம் தமிழகத்திலும், ஆர்.எஸ்.எஸ். இயக்கம் நாக்பூரிலும் தோன்றின. இவ்விரு இயக்கங்களும் நேர் எதிரான கொள்கைகளைக் கொண்டவை. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைத் தோற்றுவித்தவர்கள் சித்பவன் பார்ப்பனர்கள். பார்ப்பனர்களின் நன்மையைக் கருத்தில் கொண்டு, இந்துக்களுக்கான இயக்கம் என்னும் பெயரில் அது உருவானது. திராவிட இயக்கமோ, மறுமுனையில், பார்ப்பனர் அல்லாதோரால் மட்டுமே உருவாக்கப்பட்டது. 1912-13 திராவிடர் சங்கம் என்னும் பெயரிலும், 1916க்குப் பிறகு, தென்னிந்திய நல உரிமைச் சங்கம் (நீதிக்கட்சி) என்னும் பெயரிலும் அதுநடைபெற்றது. அக்கட்சியின்  முதல் அறிக்கையே "பார்ப்பனரல்லாதோர் அறிக்கை" (Non-brahmin Manifesto) என்றுதான் பெயரிடப்பட்டது. தமிழர்களின் நன்மையைக் கருத்தில் கொண்டு, திராவிடர்களுக்கான இயக்கம்…
02 12 2018 கறுப்பும் காவியும் - 2 கறுப்பாய் வீசிய காற்றின் பெயர் திராவிட இயக்கம். அதற்கு எதிர்க்காற்றும் வீசத் தொடங்கியது. அதன் நிறம் காவியாய் இருந்தது. இன்றைய சமூக அமைப்பு மாற வேண்டும் என்பது கறுப்பின் கொள்கை. இந்த அமைப்பை மாற்றவே கூடாது என்பது காவியின் பிடிவாதம். இடதுசாரி, வலதுசாரிக் கொள்கைகளின் பிறப்பிடம் இது என்று கூறலாம். ஆம், நாடாளுமன்றத்தில் ஆளும்கட்சி வலப்புறம் அமர்ந்திருக்கும். எதிர்க்கட்சிகள் இடப்புறம் அமர்ந்திருப்பர். இந்த ஆட்சியோ, இந்த  அமைப்போ தொடர வேண்டும் என்பது வலதுசாரிக் கொள்கை. ஆட்சியும் அமைப்பும் மாற வேண்டும் என்பது இடதுசாரிக் கொள்கை. இப்போது நாங்கள் இடதும் இல்லை, வலதும் இல்லை, நடுநிலை என்று பேசும் கட்சிகள் தமிழ்நாட்டில் தோன்றியுள்ளன. இந்தக் கொள்கை, இந்த சித்தாந்தம் இவற்றிற்காகத்தான் எங்கள் கட்சி தொடங்கப்பட்டுள்ளது என்று தெளிவாகச் சொல்கிறவர்கள் இல்லை.…
20 11 2018 கறுப்பும் காவியும் - 1 வெற்றிடம் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு, தமிழ் நாட்டின் சமூக அரசியல் தளத்தில் ஒரு வெற்றிடம் இருந்தது.காலில் கிடக்கவேண்டிய செருப்பைக் கையில் எடுத்துக்கொண்டு, கூனிக் குறுகி மனிதர்கள் நடந்த காலம் அது. எழுபது வயதுப் பெரியவரை 'ஏன்டா முனியா' என்று ஏழு வயது சேஷாசலம் அழைத்தால், அது கண்டு கோபம் கொள்ளாத காலம் அது. மாடுகளை மேய்த்துக்கொண்டு நம் நாட்டிற்குள் வந்தவர்கள், நம்மைப் பார்த்து, "அபிஷ்டு, நோக்கெல்லாம் படிப்பு வராது, நீ எல்லாம் மாடு மேய்க்கத்தான் லாயக்கு" என்று கரித்துக் கொட்டிய காலம் அது. "பொம்பளைக்கு செருப்பு ஒரு கேடா?' என்றும், "பாருங்கோ, அந்த பொம்மனாட்டி ஆம்படையானோட ஒட்டி ஒரசி நடந்து போயிண்டிருக்கா!" என்று ஒரு பெண் தன்கணவனோடு நடந்து போவதைப் பார்த்து அவதூறு பேசியும் திரிந்த காலம்…