30 12 2016 2016: மீள்பார்வை: படிப்பினைகள் தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ காலம் கனிவுடன் நடந்துகொள்வதில்லை. காலம் யாருக்கும் எதற்காகவும் கருணை காட்டுவதுமில்லை. காலம் கடந்துபோன பின்னர், கடந்து போன காட்சிகளும் காலமும் வரலாறாகின்றன. கடந்து போன அனைத்தும் வரலாறாவதுமில்லை. அந்தச் சலுகையை வரலாறு செய்வதில்லை. கடந்து போன காலத்தின் நிகழ்தல்கள் பல. பதியப்பட்டவை அதில் சில; மறக்கப்பட்டவை பல; மறைக்கப்பட்டவை மிகப்பல. இவற்றைத் தாண்டி வரலாற்றில் இடம்பெறுபவை மிகச் சொற்பம்.…
25 11 2016 அதிகாரப் பகிர்வும் திறக்கும் பொது வாக்கெடுப்புக்கான களமும் புருசோத்தமன் தங்கமயில் எதிர்வரும் 2017 ஆம் ஆண்டு பொது வாக்கெடுப்பு ஒன்றை நாடு எதிர்கொள்ளவுள்ளது. அதிகாரப் பகிர்வு(!) உள்ளிட்ட விடயங்களை முதன்மையாகக் கொண்ட புதிய அரசியலமைப்புக்கு நாடாளுமன்றத்தின் அங்கிகாரம் மாத்திரம் போதாது, நாட்டு மக்களின் அங்கிகாரமும் அவசியம் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கடந்த 19 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியிருக்கின்றார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் அதனை…
03 11 2016 போர் வெற்றியைக் கற்றலும் இனவாதத் தீயில் கருகுதலும் இறுதிப் போரையும் அதில் அரசாங்கப் படைகள் பெற்றுக் கொண்ட வெற்றியையும் பாடசாலைப் பாடங்களில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியிருக்கின்றார். வரலாறு எப்போதுமே வெற்றியாளர்களின் பக்கத்திலிருந்து எழுதப்பட்டு வந்திருக்கின்றது. அது, ‘வெற்றியாளர்களின் நீதி’ என்கிற ஏக மனநிலையைக் காலம் காலமாக மக்களிடம் கடந்தி வந்திருக்கின்றது. தோற்கடிக்கப்பட்டவர்கள் கோரிய நீதி என்ன? அல்லது…
13 10 2016 எழுக தமிழ்! விழுக பகை! -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் உங்களில் சில பேர், ஊடகங்கள் பலவற்றினூடாகவும் என்னை திட்டப்போகிறீர்கள் என்று தெரிந்து கொண்டே, நீண்ட யோசனைக்குப் பின் இக்கட்டுரையை எழுதுவதென்று நான் முடிவு செய்துவிட்டேன். கூட்டத்தில் கூடி நின்று கூவிப்பிதற்றலன்றி நாட்டத்தில் கொள்ளாரடி கிளியே நாளில் மறப்பாரடி, என்று பாரதி சொன்னாற்போல, காலாகாலமாக சுய அறிவுப்பகுப்பின்றி பொய்யை உண்மையாய்க் கருதி,மீண்டும் மீண்டும் தீர்க்கதரிசனமற்று உணர்ச்சிவயப்படுவோரின் கைவயப்பட்டு,நம் இனம் சீரழியக்கூடாது என்பதே எனது இம்முடிவுக்கான காரணமாம்.…
28 09 2016 சாதிய அமைப்பு அரசியல் -3 யமுனா ராஜேந்திரன் எனினும் இடைத்தங்கலாகத் தங்கிய நிலங்கள் வெள்ளாளருடையதாக இருந்தால், அங்கு முன்னுரிமைகள் வெள்ளாளருக்குத் தரப்பட்டிருக்கின்றன. நலவாழ்வு முகாம்கள் (welfare camps) என அமைக்கப்பட்ட இடங்களிலேயே தலித்துகள் தங்கமுடிந்தது. வெள்ளாளர்கள் இத்தகைய சந்தர்ப்பங்களிலும் தீண்டாமை முறைகளைக் கடைப்பிடிக்க முயன்றனர். கோயிலில் நுழையத் தடை, பொதுக் கிணற்றில் நீரெடுக்கத் தடை என்பனவற்றை அச்சூழலிலும் தலித் மக்கள் எதிர்கொள்ளவே நேர்ந்தது. இத்தகைய சூழலில்…
21 09 2016 சாதிய அமைப்பு அரசியல் -1 யமுனா ராஜேந்திரன் அவ்வகையில் கம்யூனிஸ்ட்டுகளால் திரட்சியாக வெளிப்பட்டிருந்த சாதிய எதிர்ப்பு இயக்கங்கள் விடுதலைப் புலிகளால் பின்தள்ளப்பட்டன. தொடர்ந்து விடுதலைப் புலிகள் உருவாக்கிய சாதிய ஒதுக்கம் மற்றும் பெண்கள் தொடர்பான சட்டங்கள் சாதிச்சார்பற்ற மதச்சார்பற்ற (secular) தன்மையினையே கொண்டிருந்தன. வரதட்சணை தடைசெய்யப்பட்டது. கருக்கலைப்பு பெண்ணின் உரிமை ஆகியது. பெண்ணுக்கு சொத்துரிமை நிலைநாட்டப்பட்டது. சாதி ஒதுக்குதல் குற்றமாக்கப்பட்டது. விடுதலைப்புலிகள் கீழிருந்த சட்டமுறைகளையும் சமூக…