14 09 2016 சாதிய அமைப்பு அரசியல் -1 யமுனா ராஜேந்திரன் யாழ்ப்பாணத்தில் சாதிய அமைப்பு பற்றி ஈழ மார்க்சியரான கா.சிவத்தம்பி முதல் தலித்திய ஆய்வுகளுக்கான இந்திய நிறுவனமும், சர்வதேசிய தலித்திய ஒருமைப்பாட்டு இணையமும் இணைந்து பதிப்பித்த (Casteless or Caste-blind?: Dynamics of Concealed Caste Discrimination, Social Exclusion and Protest in Sri Lanka : 2009)1 ஆய்வுகள் வரை நிறைய கல்வித்துறை சார் நெறியுடன் நூல்கள்…
07 09 2016 தமிழருக்குத் தெரியுமா பான் கீ மூன்களின் மொழி? தெய்வீகன் ஐக்கியநாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் இலங்கை விஜயம், வழமை போன்று சம்பிரதாயபூர்மான சலசலப்புக்களை ஏற்படுத்திவிட்டு அடங்கியிருக்கிறது. சம்பந்தப்பட்ட தரப்புக்கள் அனைத்தும், ஒப்புக்கு ஓங்கி ஒலித்துவிட்டு மௌனித்து விட்டார்கள். யாழ்ப்பாணத்துக்கு வந்த பான் கீ மூன், நூலகக் கட்டடத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரைச் சந்தித்துப் பேசினார். பிறகு முதலமைச்சர் குழுவினரையும் சந்தித்தார். இந்த…
31 08 2016 சமூகவலைப் பின்னல்களும் சிக்கித் தவிக்கும் இளஞ்சந்ததியும் இன்றைய நாட்களில் கணணிகளின் இராஜாங்கமே கோலோச்சுகின்றது.எதிலும் கணனி எங்கும் கணனி எதற்கும் கணனி என்றாகி விட்ட நிலையில், கணனி அறிவுள்ளவர்கள்தான் நல்ல தொழில் வாய்ப்பைப் பெறலாம் என்ற நிலை உருவாகி விட்டது.அதிலும் முகநூல் ஆரம்பித்த பின்னர் கணனிக்குள் மணிக்கணக்காக முகத்தைப் புதைப்பவர்கள் இன்று பல்கிப் பெருகி விட்டார்கள். அதுபோல குறுஞ்செய்திகளை அனுப்பி விட்டு அவற்றின் பதிலுக்காக அடிக்கடி தமது…
24 08 2016 கூனிக்குறுகிப்போய் நிற்கும் வட மாகாண சபை கருணாகரன் வட மாகாண சபையில் மூன்று அமைச்சர்களின் நடவடிக்கைகளையும் ஊழல் குற்றச்சாட்டுக்களையும் விசாரணை செய்வதற்கு குழுவொன்று அமைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கான பிரேரணையை முதலமைச்சரே கொண்டுவரவேண்டியதாகிவிட்டது. இது விசித்திரமான ஒன்று. ஆளும் தரப்பினரே ஆளும் தரப்பின் அமைச்சுகளின் மீதும் அமைச்சர்களின் மீதும் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருப்பது வேடிக்கையன்றி வேறென்ன? மட்டுமல்ல, வட மாகாண சபை ஆட்சிப்பொறுப்பை ஏற்ற மூன்று ஆண்டுகள் நிறைவுக்குள்ளேயே,…
17 08 2016 ஓ! மந்தை? | கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் உற்சாகமாய் மீண்டும் ஒரு பட்டிமண்டபம் தொடங்கியிருக்கிறது.நடத்துகிறவர்கள் இலக்கியவாதிகள் அல்லர் அரசியல்வாதிகள்.அரசின் பொருளாதார மத்திய நிலையம் அமையவேண்டியது ‘தாண்டிக்குளத்திலா? ஓமந்தையிலா?’ என்பதுவேஇம்முறை விவாதத் தலைப்பாகியிருக்கிறது.இப்பட்டிமண்டபம், மாகாணசபை அளவில் நடந்து முடிந்து,சம்பந்தனாரிடம் மேன்முறையீட்டிற்குச் சென்றிருக்கிறது.அவரோ வழமைபோலவே, உறுதியாய்த் தீர்ப்புரைக்காமல்,அனைத்தையும் காலம் கனிவிக்கும் என்னும்தனது வழக்கமான தத்துவத்தின்படிஅதுவும் சரி, இதுவும் சரி என்னுமாப்போல் ‘சலாப்பி’தீர்ப்பினை இழுத்தடித்திருக்கிறார்.இவ்விவாதங்களால் இன ஒற்றுமை சிதைவதை அறியாமல்பட்டிமண்டபங்களில் இருஅணிக்கும்…
10 08 2016 கேள்விக்குள்ளாகும் தமிழரின் அரசியல் அபிலாஷை வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசை பற்றிய கேள்வியும் விவாதமும் இத்தருணத்தில் முக்கியமாக எழுந்திருக்கிறது. வடக்கிலுள்ள தமிழ் மக்களில் பெரும்பாலானவர்கள், சமஷ்டியைக் கோரவில்லை என்றும், அரசியல்வாதிகள் தான் அதனைக் கோரியதாகவும் புதிய அரசியலமைப்புக்கான ஆலோசனைகளைப் பெறும் குழுவின் தலைவரான சட்டத்தரணி லால் விஜயநாயக்க அண்மையில் வெளியிட்ட கருத்தே, இந்தக் கேள்வி எழுவதற்கு முக்கியமான காரணம். புதிய அரசியலமைப்புக்காக…