03 08 2016 இயற்கையைப் போற்றுவோம் இயற்கை பற்றிப் பாடிய வள்ளலார் பெருமான் “இயற்கை உண்மையதாய் இயற்கை இன்பமும் ஆம்” என்கிறார். இதைவிடச் சுருக்கமாக முழுமையாக யாராலும் சொல்ல முடியாது.செயற்கை எப்படி பொய்யானதாக இருக்கிறதோ, அதுபோல இயற்கை உண்மையானதாக இருக்கிறது. எடுத்துக்காட்டாக, பொய் பேசுவது, போலியாகச் சிரிப்பது, ஒழுக்கமின்றி வாழ்வது என நமது இயல்புக்கு எதிராக இயங்குவது செயற்கையானவை. செயற்கையில் உண்மை இல்லாமல் இருப்பதால் அதிலிருந்து எந்தவிதமான ஆக்க சக்தியும்…
27 07 2016 யாழின் - நிலவரம்! கலவரம்! உவக்கும்படியாக இல்லை வடக்கின் நிலவரம்.கல்வியில், இலங்கையின் ஒன்பது மாகாணங்களில், கடைசி இடத்தை அது பிடித்திருக்கிறது.பிடிப்பது என்ன பிடிப்பது?கடைசி இடத்தைப் பிடிக்கவும் வேண்டுமோ?கிடைத்திருக்கிறது என்பதுதான் சரி.பத்தாவது மாகாணம் இல்லாதபடியால்த்தான்,அந்தத் தகுதியும் வாய்த்தது என்று சிலர் கிண்டல் செய்கிறார்கள்.இது வடக்கின் இன்றைய கல்வி நிலைமை.ஒழுக்க நிலைமையோ அதைவிட மோசமாகிக் கொண்டிருக்கிறது.கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வழிப்பறி என,அன்றாடம் பத்திரிகைகளில் வரும் செய்திகள்,அடிவயிற்றைக் கலங்கச் செய்கின்றன.இராணுவத்தை வெளியேற்றுங்கள்…
20 07 2016 ஜெயலலிதாவை சந்தித்து என்ன பயன்? தமிழ் மக்களுக்குப் பயன்தருமோ இல்லையோ, அரசாங்கம் எதை விரும்பவில்லையோ, அதையே செய்வதில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்பம் காண்கிறார் போலும். அதனால்தான், தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஜெயராமைச் சந்திக்க, அவர் பெருமுயற்சி எடுக்கிறார் என எண்ணத் தோன்றுகிறது. ஜெயலலிதா, தமது அரசியலுக்காக, எந்தக்கட்சி ஆட்சி செய்தாலும் இலங்கை அரசாங்கத்தை சாட ஏதாவது காரணத்தைத் தேடிக் கொண்டே இருப்பவர்.…
13 07 2016 ஈழத்தமிழர்களின் அழிவில் குளிர்காய நினைக்கும் இந்திய தரப்பினர் – இரா.துரைரத்தினம் இறுதி யுத்தம் நடைபெற்ற முள்ளிவாய்க்காலில் 2009 மே மாதம் விடுதலைப்புலிகளின் ஆயுதப்போராட்டம் அழிக்கப்பட்ட பின்னர் மேற்குலக நாடுகளில் இருந்த விடுதலைப்புலிகள் அமைப்புக்களுக்கிடையில் பல பிளவுகள் ஏற்பட்டன. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் சொத்துக்களையும் பணத்தையும் கையகப்படுத்திக் கொள்வதற்காகவே இந்த பிளவுகள் அனைத்தும் ஏற்பட்டன.விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் இறந்து விட்டார். ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டு விட்டது என அப்போது விடுதலைப்புலிகள்…
06 07 2016 டேவிட் கமரூனின் அதிர்ச்சித் தோல்வியும் பூகோள அதிர்வலைகளும் ஒரு மனிதன் ஒன்றை எதிர்பார்த்து அதீத நம்பிக்கையில் ஒரு முற்சியில் களமிறங்குகிறான். ஆனால் இறைவனோ மறுதலையான தீர்ப்பை வழங்கி விடுகிறான். இதற்கு களநிலைவரங்களும் பலம் சேர்த்து விடுகின்றன. அதீத நம்பிக்கையில் களமிறங்கி அதிர்ச்சித் தோல்வியை இலங்கையில் மகிந்த ராஜபக்ஷ சந்தித்திருந்தது போன்று இங்கிலாந்தில் டேவிட் கமரூன் சந்தித்துள்ளார். இருவருமே பதவியில் இருந்தவாறே மக்களின் தீர்மானத்துக்காக நாட்டு மக்களை…
29 06 2016 இருண்ட பங்குனி (அஜிதா: வழக்கறிஞர், சமூக செயற்பாட்டாளர்) இலங்கையைப் பற்றி, குறிப்பாக இலங்கைத் தமிழ்ச் சமூகத்தைப் பற்றி தமிழகச் சமூகம் அறிந்திருக்கும் விஷயங்கள் பல உள்ளன. இறுதி யுத்தத்திற்கு முன்னும் பின்னும் நிகழ்ந்தவற்றைக் கனத்த இதயங்களோடு, ஏதும் செய்வதறியாக் கையறு நிலையுடன் பார்த்து வந்துள்ளோம். இலங்கைத் தமிழினத்தை நம் சகோதர சகோதரிகளாய்ப் பார்க்கும் இயல்புணர்வால் இத்தாக்கம் நமது சமூகத்தில் மேலதிகமானதாக இருந்தது. இதேபோன்று வேறு பலவிதமான…