18 09 2018 விக்னேஸ்வரனின் செவ்வியும் ஊடகங்களும் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் செவ்வி ஒன்று, கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியாகி இருந்தது. கூட்டமைப்புத் தலைமைக்கும், அவருக்கும் இடையிலான பனிப்போர், தீவிரம் பெற்ற பின்னர், அவர், விரிவாகப் பல விடயங்களைப் பேசிய ஒரு செவ்வியாக இது இருந்தது.அந்தச் செவ்வி வெளியானதுமே, அதைத் தமிழ் மொழியாக்கம் செய்து, முதலமைச்சரின் செயலகம், பெரும்பாலான தமிழ் ஊடகங்களுக்கு அனுப்பியிருந்தது.தமிழ் ஊடகங்களும் அப்படியே வெளியிட்டிருந்தன.…
07 09 2018 புலிகளை விமர்சனம் செய்வதனை கைவிடுங்கள் ? இரண்டு வருடங்களுக்கு முன் தமது வலுவை இழந்து தமிழ் மக்களை அடிமைகளாக்கி விட்டு யுத்தத்தில் அழிந்து போய்விட்ட புலிகள் பற்றிய விமர்சனங்கள் வரும் போது, புலிகளை விமர்சிப்பது தற்காலத்தில் அவசியம் அற்றது என்னும் போக்கு, தங்களை கடந்த காலங்களில் ஜனநாயகவாதிகளாக இனம் காட்டி புலியின் பக்கமோ அன்றி அரசின் பக்கமோ வெளிப்படையாக சாராதிருந்த பலரிடம் இன்று காணப்படுகின்றது. இதற்கு…
05 09 2018 விக்னேஸ்வரனை முன்வைத்து சம்பந்தன் எடுக்க வேண்டிய முடிவு இரா. சம்பந்தனின் அரசியல் அணுகுமுறை என்பது, எப்போதுமே பரபரப்புகளுக்கு அப்பாலானது; மிகமிக நிதானமானது.எந்த விடயத்தையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று, அவர் கையாண்டது கிடையாது. அதுதான் அவரைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக்கியது. பெரிய சேதாரங்கள் இன்றி, கூட்டமைப்பை இன்றளவும் கட்டிக்காத்தும் வருகிறது.ஆனால், இந்த அணுகுமுறையே சம்பந்தனை, இப்போது பாரிய சிக்கலுக்குள் தள்ளிவிட்டிருக்கின்றது. 2015 பொதுத் தேர்தல் காலத்தில்,…
27 08 2016 தடுமாறும் ஈழத் தமிழர் அரசியல் கருணாநிதி தன்னுடைய அரசியலைச் செய்தார்; எம்.ஜி.ஆர் தனது அரசியலைச் செய்தார்; ஜெயலலிதா தனது அரசியலைச் செய்தார்; ஈழத்தமிழர்கள் தங்களுடைய அரசியலைச் செய்யட்டும்”.கலைஞர் மு.கருணாநிதியின் மறைவை முன்னிறுத்தி, தமிழக - ஈழ உறவுகள் தொடர்பாக, அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் எழுதியிருந்த கட்டுரை, இவ்வாறு தான் நிறைவு செய்யப்பட்டிருந்தது.இந்த இடத்தில், ஈழத் தமிழரின் அரசியல் என்ன, அது எவ்வாறு கையாளப்படுகிறது என்பது இங்குள்ளவர்களாலும்,…
23 08 2018 புலத்து வியாபாரிகளை நிராகரித்திடுவோம்! மக்களை ஏமாற்றி ....... வயிறு வளர்த்த கூட்டம் அதனை தொடர முயற்ச்சிப்பதனை மக்கள் தடுத்தாக வேண்டும். “எமது தாயகம் தமிழீழம், எமது குறிக்கோள் தமிழீழம், எமது தலைவர் பிரபாகரன்” என்று 2009ம் ஆண்டு புலம் பெயர்ந்த நாடுகளின் தெருக்களில் நின்று மக்களை கூக்குரல் போடவைத்த புலம்பெயர் வியாபாரிகள், இன்று தமக்குள் புலிகளின் பெயரால் மக்களை ஏமாற்றி பெற்ற சொத்துகளுக்காக வெட்டுக் குத்துப்படுகின்றனர்.…
20 08 2018 சீச்சீ இவையும் சிலவோ? கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் உலகை உய்விக்கும் மார்கழி மாதக் காலைப் பொழுது. சிவனைத் தொழவென இளம் பெண்கள் ஒன்று சேர்ந்து,தம் தோழியர்களைத் துயில் எழுப்பி வீதியுலா வருகின்றனர். தன் பாசம் முழுவதும் சிவனுக்கே என்று முதல்நாள் உரைத்த ஒரு பெண்,இன்று துயிலெழாமல் பஞ்சணையில் பாசம் வைத்துப் படுத்துக் கிடக்கிறாள். வந்த தோழியர்க்கோ கோபம்.நேற்றொரு வார்த்தை இன்றொரு வார்த்தை பேசுவது நியாயமா? தோழியர் குற்றம் உரைக்க, அதுபற்றி எந்தக்…