வரலாறு - Yathaartham
13 02 25  Want a Million Dollars? Get Busy Deciphering This Ancient Script. A prize offered by an Indian state leader is intended to shed light on a Bronze Age civilization — and settle a cultural battle.By Pragati K.B. Reporting from New Delhi Feb. 1, 2025 It is a riddle that has confounded scholars for over a century. And now it carries a handsome cash prize: $1 million for anyone who can decipher the script of the ancient Indus Valley civilization. Relatively little is known about the creators of the script, who…
09 02 25 திராவிடம்' என்ற சொல் எப்படி வந்தது? தமிழ்ப் பேராசிரியர் சீனிவாசன் அளித்த வரலாற்று விளக்கம்! - DRAVIDAMகி.பி. முதலாம் நூற்றாண்டிலிருந்தே 'திராவிடம்' என்ற சொல்லுக்கான சான்றுகள் கல்வெட்டு, இதிகாசம், இலக்கியங்களில் உள்ளன' என்று மதுரை காமராஜர் பல்கலைக்கழக தமிழ்த்துறை முன்னாள் தலைவர் பேராசிரியர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.மதுரை: ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற தூர்தர்ஷன் நிகழ்ச்சியில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்தில், "தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்'' என்ற வரி விடுபட்டிருந்தது. இந்த விவகாரமும் மற்றும் நிகழ்ச்சி மேடையில் ஆளுநர் பேசியது ஆகியவை சர்ச்சைக்குள்ளானது. இது குறித்து பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் "திராவிடம் குறித்து முழுவதுமாக அறிந்து கொண்டு பேசுவதுதான் அதிகார வர்க்கத்தினருக்கு அழகு" என தெரிவித்துள்ளார் காமராஜர் பல்கலைக்கழக தமிழ்த்துறையின் முன்னாள் தலைவருமான, பேராசிரியருமான சீனிவாசன்.ஆளுநர் சுட்டிக்காட்டியிருக்கலாம்: இது குறித்து…
22 02 25 வரலாற்றுப் போக்கில் தென்னகச் சமூகம் 3 16. NK தம் ஆய்வில் காவிரிச் சமவெளியினை மட்டும் ஆய்விற்கு எடுத்துக்கொள்ளாமல் புதுக்கோட்டை போன்ற வரண்டபகுதியினையும் எடுத்துக்கொண்டார். புதுக்கோட்டை வட்டாரத்தின் மொத்தமுள்ள 381 சோழர் கல்வெட்டுகளில் 197 கல்வெட்டுகளில் வரிகளின்பெயர்கள் பதியப்பட்டுள்ளன. சோழர்கல்வெட்டுகளில் இல்லாத பலவரிகளின் பெயர்கள் புதுக்கோட்டை வட்டாரத்தின் பாண்டியர்கல்வெட்டுகளில் பதிவாகியுள்ளன. அங்கு அச்சுவரி, அந்தராயம், இறை, கடமை, குடிமை என்ற வரிகள் பலமுறை கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளன. இவற்றில் கடமையும் அந்தராயமும் அதிகமுறை இடம்பெற்றவை. இவ்விரண்டும் நிர்வாகத்தில் மிக முக்கியமானவை. புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி வட்டாரங்களில் கிடைக்கின்ற 250 பாண்டியர்கல்வெட்டுகளில் மொத்த்ம் 140 வரிகள் பதிவாகியுள்ளன. சோழர் காலத்தில் வழக்கில் இல்லாத 85 புதிய வரிகள் பாண்டியர் காலத்தில் அறிமுகமாயினை, 43%. தஞ்சாவூர் வட்டாரக்கல்வெட்டுக்களில் அடிக்கடி குறிக்கப்படும் வாய்க்கால் என்றசொல் நீர்ப்பாசனவளார்ச்சியினை நன்கு விளக்கும். வயக்கல்,…
15 02 25 வரலாற்றுப் போக்கில் தென்னகச் சமூகம் 2 09.தொடக்கத்தில் வேளாண்ஊர்களில் கூட்டுநிலவுடைமையும் பார்ப்பனர் ஊர்களில் தனியார்நிலவுடைமையும் நிலவின என்றும் தொடர்ந்துவந்த காலங்களில் இவ்விரு ஊர்களிலும் தனியார் நிலவுடைமை நிலவின என்றும் NK உறுதிப்படுத்தினார். தம் ஆய்விற்காக ஒரு பார்ப்பன ஊரினையும் (ஈசானமங்கலம்) வேளாண்ஊரினையும் (அல்லூர்) தேர்வு செய்தார். இவ்விரு ஊர்களும் காவிரியின் தென்கரையில் ஒரேசூழலில் இருந்தவை. ஈசானமங்கலத்தில் சபையுறுப்பினர்கள் தனியார் நிலவுடைமை கொண்டவராக இருந்தனர். சிலநிலங்கள் கோயில் நிர்வாகிகளான பருடையார்களிடத்தும் சிலநிலங்கள் சபைக்குப் பொதுவான கூட்டுடமையாகவும் இருந்தன. அல்லூரிலும் தனியுடைமை இருந்தது. அதனைப் பெற்றவர்கள்: கணி, நடனகலைஞர், இசைக்கலைஞர், மத்தியஸ்தன் போன்றோர். அக்கொடை பெற்றவர்களின் நிலத்தில் வந்த விளைச்சல் மூன்றுபங்குகளாகப் பிரிக்கப்பட்டது. ஸ்வாமிபோகம் தானம் பெற்ற கோயிலுக்கானது. ஆனால், இது அரசுக்கு செலுத்தப்பட வேண்டிய வரியாகும். இதுதான் கோயிலுக்குக் கொடையானது. இப்பங்கு தானமாகாளிக்கப்பட்டதால் அரசுக்கு…
08 02 25 வரலாற்றுப் போக்கில் தென்னகச் சமூகம் 1 01.எழுவர் கூட்டாகத் தமிழில் மொழிபெயர்த்த பேராசிரியர் Noboru Karashima அவர்கள் South Indian History and Society: Studies from the Inscriptions from C850 to 1800, (1984) என்ற தலைப்பில் எழுதிய நூலினை 1995 இல் வரலாற்றுப்போக்கில் தென்னகச்சமூகம் என்று தலைப்பிட்டு தமிழகத் தொல்லியல் கழகம், தஞ்சாவூர் வெளியிட்டது. அவர், சோழர் காலத்திலிருந்து பதினெட்டாம் நூற்றாண்டு வரையிலான தென்னிந்திய வரலாற்றினை கல்வெட்டுச் சான்றுகளின் அடிப்படையில் புள்ளியியல் முறையினை பயன்படுத்தி ஆய்ந்தார். சோழர்காலத்தினை தொடர்ந்த நூற்றாண்டுகளுக்கு ஓலைச்சுவடிகளையும் தாள் ஆவணங்களையும் பயன்படுத்தினார். அந்நூல் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டு 40 ஆண்டுகளும் தமிழ் மொழிபெயர்ப்பில் வெளிவந்து 30 ஆண்டுகளும் ஆகின்றன. இந்தியாவின் பிற மொழிகளில் பெயர்க்கப்பட்டனவா? தெரியவில்லை. புள்ளியியல் முறையினை ஒரு கருவியாகவும் (tool) மார்க்சிய கோட்பாட்டினை ஒரு அணுகுமுறையாகவும்…