11 08 2018 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 123) தொண்டமானின் ஊடக சந்திப்பு சர்வகட்சி மாநாடொன்றினூடாக, இனப்பிரச்சினைக்கான தீர்வொன்றை எட்டுவது தொடர்பில், சர்வகட்சிக் கூட்டத்துக்கான அழைப்பை ஜே.ஆர் விடுத்திருந்த அதேவேளையில், இந்தியாவிலிருந்து இலங்கை திரும்பியிருந்த அமைச்சர் சௌமியமூர்த்தி தொண்டமான், இந்தியாவில் நடந்த விடயங்கள், மற்றும் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியுடன் ஏற்பட்டுள்ள இணக்கப்பாட்டுக்கான சூழல் பற்றி விளக்க, ஓர் ஊடக சந்திப்பை ஏற்படுத்தியிருந்தார்.அந்த ஊடகச் சந்திப்பில், அரசாங்கத்துக்கும் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் நிலைப்பாடுகளுக்கும் இடையிலான இடைவௌியாக வடக்கு, கிழக்கு இணைப்பு என்ற ஒரு விடயமே இருப்பதாகவும் குறிப்பிட்ட தொண்டமான், இந்த ஒரு விடயத்தினால் இணக்கப்பாடு இல்லாது போய்விடக்கூடாது என்று அழுத்திக் கேட்டுக் கொண்டார். இனப்பிரச்சினைக்கான இறுதித் தீர்வை எட்டுவதற்குக் குறுகிய மனப்பான்மைக்கப்பால் வந்து சிந்திக்க வேண்டும் என்று தெரிவித்த அவர், முழுமையான…
04 08 2018 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 122) ஜே.ஆர் - இந்திரா சந்திப்பு பிராந்திய சபைகளை அடிப்படையாகக் கொண்ட தீர்வொன்றை சர்வகட்சி மாநாட்டில் முன்வைக்க இணங்கிய ஜே.ஆர், 1983 நவம்பர் 30ஆம் திகதி மாலை, இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியை மீண்டும் சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது, பார்த்தசாரதியோடு ஜே.ஆர் இணங்கிய விடயதானங்கள் பற்றி, ஜே.ஆரும் இந்திரா காந்தியும் ஆராய்ந்தனர்.ஜே.ஆர் பிராந்திய சபைகளை ஏற்றுக்கொண்டதை வரவேற்ற இந்திரா காந்தி, வடக்கு-கிழக்கு இணைப்புக்கும் அவர் இணங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஆனால், ஜே.ஆர் அதை ஏற்பதாக இல்லை. “முஸ்லிம்களும் சிங்களவர்களும் கிழக்கிலே இணைந்தால், அது பெரும்பான்மையாகும். எனவே, வடக்கு-கிழக்கு இணையும்போது, அவர்களது எதிர்காலம் பற்றிய கவலைகள் உண்டு” என்று ஜே.ஆர் கூறினார். திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கிய கிழக்கு…
30 07 2018 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 121 ஜே.ஆரின் உரை ஜே.ஆர்.ஜெயவர்தனவுக்கும் இந்திரா காந்திக்கும் இடையில் பரஸ்பர நம்பிக்கையீனமும் கசப்புணர்வும் உருவாகியிருந்தமையை வெளிப்படையாகவே உணரத்தக்கதாக இருந்தது.1983 நவம்பர் 24 அன்று, புதுடெல்லியில் இடம்பெற்ற பொதுநலவாய அரசுத் தலைவர்களின் மாநாட்டில், ஜே.ஆர். ஜெயவர்தன ஆற்றிய உரையில் இது எதிரொலித்தது. தன்னுடைய உரையில் இந்தியாவின் ‘தேசத்தந்தை’ மகாத்மா காந்தியையும் இந்தியாவின் முதலாவது பிரதமரும் இந்திரா காந்தியின் தந்தையாருமான பண்டிட் ஜவஹர்லால் நேருவையும் மிகவும் புகழ்ந்து பேசினார் ஜே.ஆர்.குறிப்பாக, மகாத்மா காந்தியின் அஹிம்சாவாதத்தையும் ஜவஹர்லால் நேருவின் அணிசேராக் கொள்கையையும் உயர்வாகப் பேசியவர், தன்னைக் காந்தியத்தோடு அடையாளப்படுத்தவும் தவறவில்லை. தனது பேச்சின் இறுதியில், “எனக்கு உயிர்வாழும் சக்தி இருக்குமாயின், ஒருபோதும் எனது மக்கள் இன்னொருவருக்கு ஆட்பட்டு வாழ நான் அனுமதிக்க மாட்டேன். இலங்கையில் ஓர் அணுகுண்டு வெடித்தால்,…
23 07 2018 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 119) ஜே. ஆரின் அதிகார விளையாட்டு ஜே.ஆர். ஜெயவர்தனவை ‘ஆசியாவின் நரி’ என்று பிரபலமாக விளிப்பதற்குப் பின்னால், நிறைய நியாயங்கள் இருக்கின்றன. முற்றுமுழுதான அதிகாரத்தை அடைவதற்கு, ஜே.ஆர் செய்த காய்நகர்த்தல்கள் ‘மாக்கியாவலி’யின் இளவரசனை ஒத்தவை. தன்னுடைய அதிகாரத்தைப் பலப்படுத்துகிற அதேவேளை, எதிரியின் பலத்தைச் சிதைக்கும் கைங்கரியத்தை, ஜே.ஆர் சிறப்பாகவே கையாண்டார். ஜே.ஆரின் பிரதான அரசியல் எதிரியான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவியான சிறிமாவோ பண்டாரநாயக்கவின் குடியியல் உரிமைகள் களையப்பட்டு, அரசியல் அஞ்ஞாதவாசத்துக்குள் தள்ளப்பட்டிருந்தார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் சிறிமாவின் வாரிசுகளான அநுர - சந்திரிக்கா இடையே எழுந்த அதிகாரப் போட்டியை, தனக்குச் சாதகமாக்கிய ஜே.ஆர், பின்னணியில் அநுர குழுவை ஆதரித்ததன் வாயிலாக, ஏற்கெனவே அரசியல் தோல்வியில் உழன்று கொண்டிருந்த சுதந்திரக் கட்சியை…
15 07 2018 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 118) இந்திராவின் பதற்றம் டெல்லியில் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியையும் அவரது விசேட ஆலோசகரும், இலங்கை இனப்பிரச்சினை விடயத்தில் இந்திய மத்தியஸ்தராக செயற்பட்டுக் கொண்டிருந்தவருமான கோபால்சாமி பார்த்தசாரதியையும் 1983 ஒக்டோபர் 17 இல், அ. அமிர்தலிங்கம் குழு, சந்தித்திருந்தது. இந்தச் சந்திப்பில் இந்திரா காந்தி, பெரும் சவாலாகக் கருதிய விடயங்களில் ஒன்று, அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிகள் வெற்றிடமாகும் நிலைமையாகும். 1983 ஓகஸ்ட் நான்காம் திகதி, ஜே.ஆர். ஜெயவர்தன தலைமையிலான அரசாங்கம், நிறைவேற்றியிருந்த அரசமைப்புக்கான ஆறாவது திருத்தத்தின்படி, இலங்கை அரசாங்கத்துக்கு விசுவாசமாகவும் பிரிவினைக்குத் துணைபோகமாட்டோம் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்று மாத காலத்துக்குள் சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டிய கட்டாயம் உருவாகியிருந்தது. அதைச் செய்யாதவிடத்து, நாடாளுமன்ற உறுப்பினர் பதவி…