26 09 2018 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 130) சிங்கள - பௌத்த அடையாளத்தின் உருவாக்கம் இலங்கையின் பெரும்பான்மை இனம், தன்னைச் சிங்கள- பௌத்தமாக அடையாளப்படுத்திக் கொள்கிறது. ஆனால், இன்று புரிந்துகொள்ளப்படும் சிங்கள - பௌத்த அடையாளம், 19ஆம் நூற்றாண்டின் பின்னர் உருவான அல்லது உருவாக்கப்பட்ட அடையாளம் என்பதே லெஸ்லி குணவர்த்தன, ப்ரூஸ் கப்ஃபெரர், ஸ்ரான்லி ஜே. தம்பையா போன்றோரது கருத்தாகும்.சிங்கள - பௌத்த அடையாளத்தை, ‘நவீன தேசியத்துவ அடையாளம்’ என்று விளிக்கும் ப்ரூஸ் கப்ஃபெரர், “தற்போது துரதிர்ஷ்டவசமாக இனங்களிடையே ஏற்பட்டிருக்கும் எதிர்ப்புணர்வுக்கும், போருக்கும் எண்ணெய் ஊற்றும் அல்லது ஆதரவளிக்கும் வகையிலான, இந்த நவீன தேசியத்துவ அடையாளமானது, கொலனித்துவ மற்றும் கொலனித்துவத்துக்குப் பிறகான தேசிய அரசாங்கத்தின் தோற்றத்தோடு உருவானதாகும்” என்கிறார்.நவீன தேசிய - அரசாங்கங்களின் தோற்றமானது, பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய தேசிய…
19 09 2018 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி-129) சர்வகட்சி மாநாட்டில் அமீரின் உரை சர்வகட்சி மாநாட்டில் அமிர்தலிங்கம் ஆற்றிய உரையிலே, அமரபுர பீடத்தின் பீடாதிபதியான மடிஹே பஞ்ஞாசீக மகாநாயக்க தேரர், வடக்கு - கிழக்கு எங்கும், 276 பௌத்த வணக்க ஸ்தலங்கள் பரவிக்கிடப்பதாகவும் அவ்விடங்களில் எல்லாம் பௌத்த பிக்குகள் குடியமர்த்தப்பட வேண்டும் என்பதுடன், அத்தலங்களைச் சுற்றிலும் பௌத்தர்கள் குடியேற்றப்பட வேண்டும் என்பதுடன், இதே விடயத்தை, அகழ்வாராய்ச்சி ஆணையாளர் சிறிசோமவும் பதிவு செய்திருந்தமையை மேற்கோள்காட்டிய அமிர்தலிங்கம், இது பற்றிய தனதும், தமிழ் மக்களினதும் நிலைப்பாட்டைப் பதிவு செய்திருந்தார்.“இத்தகைய குடியேற்றம், வடக்கு - கிழக்கிலே நிகழ்த்தப்படுமானால், வடக்கு - கிழக்கிலும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் சிறுபான்மையினர் ஆக்கப்படுவார்கள். அதன் பின்னர், தமிழ் மக்கள் மீண்டும் வன்முறைக்குள்ளாக்கப்பட்டு அகதி முகாம்களில் தங்கவைக்கப்பட்டால், அவர்களை அள்ளிச் சென்று கொட்ட,…
11 09 2018 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 128) சர்வகட்சி மாநாட்டில் அமிர்தலிங்கம் ஆற்றிய உரையில், வடக்கு, கிழக்கில் பௌத்தம் பற்றிய சில முக்கிய கருத்துகள் உள்ளன. அதைத் தெளிவாகப் புரிந்து கொள்வதற்கும், இலங்கை இனப்பிரச்சினை வரலாற்றையும் அந்தப் இனப்பிரச்சினைக்கான, தீர்வை எட்டுவதற்கு முட்டுக்கட்டையாக இருக்கின்ற விடயங்களையும் உணர்ந்துகொள்ள, இலங்கையின் ‘சிங்கள-பௌத்த’ வரலாற்றையும் அதன் முக்கியத்துவத்தையும் சுருக்கமாகவேனும் நோக்குதல் அவசியமாகிறது. சிங்களவர்கள் இலங்கையின் இனப்பிரச்சினையானது, மேலோட்டமாகச் சிங்கள - தமிழ் இனப்பிரச்சினையாகவே அடையாளப்படுத்தப்படுகிறது. ஆனால், இது முற்றுமுழுதாக ஏற்புடைய அடையாளப்படுத்தல் என்று கூறுவது கடினம். இலங்கையின் பெரும்பான்மை அடையாளமானது, ‘சிங்களம்’ என்ற இன அடையாளம் என்று சொல்வதை விட, ‘சிங்கள-பௌத்தம்’ என்ற இனம், மதக் கலப்பு அடையாளம் என்று குறிப்பிடுவதுதான் சாலப் பொருத்தமானது. ஏனெனில், இலங்கையின் பெரும்பான்மை இன அடையாளமாக, ‘சிங்கள-பௌத்த’ அடையாளமே…
04 09 2018 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 127) தனித்த தேசமும் பிரிவினையும் பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெறும்போதே, தமிழ்த் தலைமைகள் தமிழருக்கென தனியானதொரு நாட்டை, இலங்கையில் பெற்றிருக்க வேண்டும் என்று சிலர் அவ்வப்போது அங்கலாய்ப்பதுண்டு.கிட்டத்தட்ட இந்திய சுதந்திரத்தின் போது, முஹம்மட் அலி ஜின்னாஹ், முஹம்மதியர்களுக்கென தனியானதொரு நாட்டைக் கோரியது போன்று, தமிழ்த் தலைமைகள் இலங்கையில் கோரியிருக்க வேண்டும் என்பதுதான் அந்த அங்கலாய்ப்பின் அடித்தளம். இந்தியாவுக்குச் சுதந்திரம் வழங்குவது தொடர்பில், டெல்லி வந்திருந்த பிரித்தானிய நாடாளுமன்றின் இரு அவைகளையும் சேர்ந்தவர்களின் தூதுக்குழுவுடனான கலந்துரையாடலின் போது, தமது லாஹூர் பிரகடனத்தின்படி, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மாகாணங்கள், தனித்த இறைமையுள்ள அரசாக வேண்டும் என்ற கோரிக்கையில், முஹம்மட் அலி ஜின்னாஹ் விடாப்பிடியாக இருந்தார். தூதுக்குழு, “நீங்கள் முன்வைக்கும் பாகிஸ்தான் கோரிக்கையானது, பெருமளவிலான இந்துக்களை, முஸ்லிம்களின் மேலாதிக்கத்துக்குள் ஆழ்த்தும் என்பதை…
31 08 2018 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 126) அமிர்தலிங்கத்தின் மனத்தாங்கல் இலங்கை இனப்பிரச்சினை வரலாற்றில், இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பில் நடந்த முதலாவது சர்வகட்சி மாநாடு, 1984 ஜனவரி 10ஆம் திகதி காலை 10 மணிக்கு, கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது.சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொள்ள வருகை தந்திருந்த தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், யாழ்ப்பாணத்துக்கான விஜயம் அளித்த அதிர்ச்சியிலிருந்து இன்னமும் வௌிவராதவராகவே இருந்தார்.சர்வகட்சி மாநாடு ஆரம்பிக்க முன்பு, ஊடகவியலாளர்களோடு உரையாடிய அவர், “எனது வாழ்நாள் முழுவதும், நான் அவர்களின் (தமிழ் இளைஞர்களின்) நாயகனாகவே இருந்துள்ளேன். இன்று அவர்கள், என்னைத் துரோகிகளாகப் பார்க்கிறார்கள். ஆனால், அவர்கள் தேர்ந்தெடுத்துள்ள பாதை, எனது மக்களுக்கு துன்பத்தையும் அழிவையுமே கொண்டுவரும். நான், அதைத் தவிர்க்கவே பார்க்கிறேன். ஆனால், இந்த விடயத்தில்…