24 08 2018 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 125) சர்வகட்சி மாநாடு ஆரம்பம் அனெக்‌ஷர் “சி” விவகாரம் சர்வகட்சி மாநாட்டு அழைப்போடு, தற்போது இரண்டு தொகுதி முன்மொழிவுகள் அனெக்‌ஷர் “பி”, அனெக்‌ஷர் “சி” ஆகியன பின்னிணைக்கப்பட்டிருந்தன. ஆனால் இந்த இரண்டும் ஜே.ஆரினதோ, அரசாங்கத்தினதோ, ஐக்கிய தேசியக் கட்சியினதோ உடைய முன்மொழிவுகள் அல்ல. அதனை அவ்வாறு முன்னிறுத்த, ஜே.ஆர் தயாராக இருக்கவில்லை. யாருடைய முன்மொழிவுகள் என்று சொல்லப்படாமலே, அனெக்‌ஷர் “சி” முன்வைக்கப்பட்டது. அதில் குறிப்பிடப்பட்டிருந்த ஒரே விடயம், “கொழும்பிலும் டெல்லியிலும் நடந்த கலந்தாலோசனையின் விளைவாக எழுந்த முன்மொழிவுகள்” என்பது தான்.அப்படியானால் அது ஜே.ஆர், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, பார்த்தசாரதி ஆகியோரின் இணைந்த முன்மொழிவுகளாகத்தானே இருந்திருக்க வேண்டும்? ஆனால் ஜே.ஆர், இதைத் தனது முன்மொழிவுகளாக ஏற்றுக்கொள்ளவில்லை. தன்னை, இதிலிருந்து அந்நியப்படுத்தியே வைத்திருந்தார்.ஜே.ஆரின் இந்தப் போக்கு, மற்றைய…
17 08 2018 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 124) அனெக்‌ஷர் ‘B’யும் அனெக்‌ஷர் ‘C’யும்அமிர்தலிங்கத்தை அதிர்ச்சிக்கும் விசனத்துக்கும் உள்ளாக்கும்வாறாக, சர்வகட்சி மாநாட்டு அழைப்புடன் ஜே.ஆர் அரசாங்கம் முன்வைத்திருந்த அனெக்‌ஷர் (பின்னிணைப்பு) ‘பி’யும் இணைக்கப்பட்டிருந்தது. இது, டெல்லியில் இணங்கியவற்றிலிருந்து வேறுபட்ட முன்மொழிவுகளை உள்ளடக்கியிருந்தது.தமிழ் மக்களுக்கு ஏற்புடைய அரசியல் தீர்வொன்றை அரசாங்கம் முன்வைத்து, நடைமுறைப்படுத்தும் பட்சத்தில்தான் தாம் தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிடுவோம் என்பது, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் திட்டவட்டமான முடிவு.இதனை இந்தியாவிடமும் ஊடகங்களிடமும் அவற்றினூடாக இலங்கை அரசாங்கத்துக்கும் அமிர்தலிங்கம், பலமுறைகள் தொடர்ந்து எடுத்துரைத்திருக்கிறார்.  இந்த நிலையில், அனெக்‌ஷர் ‘பி’யின் முதலாவது விடயமாக, ‘தனிநாட்டு எண்ணத்தைக் கைவிடுதல்’ என்று ஜே.ஆர் அரசாங்கம் குறிப்பிட்டிருந்தமையைப் பெரும் சதியாக அமிர்தலிங்கமும் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியும் பார்த்தனர்.ஏற்கெனவே, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி,…
11 08 2018 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 123) தொண்டமானின் ஊடக சந்திப்பு சர்வகட்சி மாநாடொன்றினூடாக, இனப்பிரச்சினைக்கான தீர்வொன்றை எட்டுவது தொடர்பில், சர்வகட்சிக் கூட்டத்துக்கான அழைப்பை ஜே.ஆர் விடுத்திருந்த அதேவேளையில், இந்தியாவிலிருந்து இலங்கை திரும்பியிருந்த அமைச்சர் சௌமியமூர்த்தி தொண்டமான், இந்தியாவில் நடந்த விடயங்கள், மற்றும் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியுடன் ஏற்பட்டுள்ள இணக்கப்பாட்டுக்கான சூழல் பற்றி விளக்க, ஓர் ஊடக சந்திப்பை ஏற்படுத்தியிருந்தார்.அந்த ஊடகச் சந்திப்பில், அரசாங்கத்துக்கும் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் நிலைப்பாடுகளுக்கும் இடையிலான இடைவௌியாக வடக்கு, கிழக்கு இணைப்பு என்ற ஒரு விடயமே இருப்பதாகவும் குறிப்பிட்ட தொண்டமான், இந்த ஒரு விடயத்தினால் இணக்கப்பாடு இல்லாது போய்விடக்கூடாது என்று அழுத்திக் கேட்டுக் கொண்டார். இனப்பிரச்சினைக்கான இறுதித் தீர்வை எட்டுவதற்குக் குறுகிய மனப்பான்மைக்கப்பால் வந்து சிந்திக்க வேண்டும் என்று தெரிவித்த அவர், முழுமையான…
04 08 2018 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 122) ஜே.ஆர் - இந்திரா சந்திப்பு பிராந்திய சபைகளை அடிப்படையாகக் கொண்ட தீர்வொன்றை சர்வகட்சி மாநாட்டில் முன்வைக்க இணங்கிய ஜே.ஆர், 1983 நவம்பர் 30ஆம் திகதி மாலை, இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியை மீண்டும் சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது, பார்த்தசாரதியோடு ஜே.ஆர் இணங்கிய விடயதானங்கள் பற்றி, ஜே.ஆரும் இந்திரா காந்தியும் ஆராய்ந்தனர்.ஜே.ஆர் பிராந்திய சபைகளை ஏற்றுக்கொண்டதை வரவேற்ற இந்திரா காந்தி, வடக்கு-கிழக்கு இணைப்புக்கும் அவர் இணங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஆனால், ஜே.ஆர் அதை ஏற்பதாக இல்லை. “முஸ்லிம்களும் சிங்களவர்களும் கிழக்கிலே இணைந்தால், அது பெரும்பான்மையாகும். எனவே, வடக்கு-கிழக்கு இணையும்போது, அவர்களது எதிர்காலம் பற்றிய கவலைகள் உண்டு” என்று ஜே.ஆர் கூறினார். திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கிய கிழக்கு…
30 07 2018 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 121 ஜே.ஆரின் உரை ஜே.ஆர்.ஜெயவர்தனவுக்கும் இந்திரா காந்திக்கும் இடையில் பரஸ்பர நம்பிக்கையீனமும் கசப்புணர்வும் உருவாகியிருந்தமையை வெளிப்படையாகவே உணரத்தக்கதாக இருந்தது.1983 நவம்பர் 24 அன்று, புதுடெல்லியில் இடம்பெற்ற பொதுநலவாய அரசுத் தலைவர்களின் மாநாட்டில், ஜே.ஆர். ஜெயவர்தன ஆற்றிய உரையில் இது எதிரொலித்தது. தன்னுடைய உரையில் இந்தியாவின் ‘தேசத்தந்தை’ மகாத்மா காந்தியையும் இந்தியாவின் முதலாவது பிரதமரும் இந்திரா காந்தியின் தந்தையாருமான பண்டிட் ஜவஹர்லால் நேருவையும் மிகவும் புகழ்ந்து பேசினார் ஜே.ஆர்.குறிப்பாக, மகாத்மா காந்தியின் அஹிம்சாவாதத்தையும் ஜவஹர்லால் நேருவின் அணிசேராக் கொள்கையையும் உயர்வாகப் பேசியவர், தன்னைக் காந்தியத்தோடு அடையாளப்படுத்தவும் தவறவில்லை. தனது பேச்சின் இறுதியில், “எனக்கு உயிர்வாழும் சக்தி இருக்குமாயின், ஒருபோதும் எனது மக்கள் இன்னொருவருக்கு ஆட்பட்டு வாழ நான் அனுமதிக்க மாட்டேன். இலங்கையில் ஓர் அணுகுண்டு வெடித்தால்,…