23 07 2018 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 119) ஜே. ஆரின் அதிகார விளையாட்டு ஜே.ஆர். ஜெயவர்தனவை ‘ஆசியாவின் நரி’ என்று பிரபலமாக விளிப்பதற்குப் பின்னால், நிறைய நியாயங்கள் இருக்கின்றன. முற்றுமுழுதான அதிகாரத்தை அடைவதற்கு, ஜே.ஆர் செய்த காய்நகர்த்தல்கள் ‘மாக்கியாவலி’யின் இளவரசனை ஒத்தவை. தன்னுடைய அதிகாரத்தைப் பலப்படுத்துகிற அதேவேளை, எதிரியின் பலத்தைச் சிதைக்கும் கைங்கரியத்தை, ஜே.ஆர் சிறப்பாகவே கையாண்டார். ஜே.ஆரின் பிரதான அரசியல் எதிரியான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவியான சிறிமாவோ பண்டாரநாயக்கவின் குடியியல் உரிமைகள் களையப்பட்டு, அரசியல் அஞ்ஞாதவாசத்துக்குள் தள்ளப்பட்டிருந்தார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் சிறிமாவின் வாரிசுகளான அநுர - சந்திரிக்கா இடையே எழுந்த அதிகாரப் போட்டியை, தனக்குச் சாதகமாக்கிய ஜே.ஆர், பின்னணியில் அநுர குழுவை ஆதரித்ததன் வாயிலாக, ஏற்கெனவே அரசியல் தோல்வியில் உழன்று கொண்டிருந்த சுதந்திரக் கட்சியை…
15 07 2018 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 118) இந்திராவின் பதற்றம் டெல்லியில் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியையும் அவரது விசேட ஆலோசகரும், இலங்கை இனப்பிரச்சினை விடயத்தில் இந்திய மத்தியஸ்தராக செயற்பட்டுக் கொண்டிருந்தவருமான கோபால்சாமி பார்த்தசாரதியையும் 1983 ஒக்டோபர் 17 இல், அ. அமிர்தலிங்கம் குழு, சந்தித்திருந்தது. இந்தச் சந்திப்பில் இந்திரா காந்தி, பெரும் சவாலாகக் கருதிய விடயங்களில் ஒன்று, அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிகள் வெற்றிடமாகும் நிலைமையாகும். 1983 ஓகஸ்ட் நான்காம் திகதி, ஜே.ஆர். ஜெயவர்தன தலைமையிலான அரசாங்கம், நிறைவேற்றியிருந்த அரசமைப்புக்கான ஆறாவது திருத்தத்தின்படி, இலங்கை அரசாங்கத்துக்கு விசுவாசமாகவும் பிரிவினைக்குத் துணைபோகமாட்டோம் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்று மாத காலத்துக்குள் சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டிய கட்டாயம் உருவாகியிருந்தது. அதைச் செய்யாதவிடத்து, நாடாளுமன்ற உறுப்பினர் பதவி…
08 07 2018 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 117) அரசியலில் முக்கியத்துவம் பெற்ற ஆயுதக் குழுக்கள் ‘ Out of sight is out of mind’ என்பது ஒரு பிரபலமான ஆங்கிலக் கூற்று. அதன் அர்த்தம், ‘பார்வையிலிருந்து விலகிவிட்டால், விரைவில் மனதிலிருந்தும் விலகிவிடுவர்’ என்பதாகும். அரசனின் முக்கிய பண்புகளுள் ஒன்றாக வள்ளுவன், ‘காட்சிக்கு எளியனாக’ இருப்பதைக் குறிக்கிறான். அதாவது, மக்கள் இலகுவில் காணத்தக்கவாறு, அவர்களுடைய தலைவன் இருக்க வேண்டும். ஏறக்குறைய மூன்று மாதங்களுக்கும் மேலாக, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர்கள், இந்தியாவில் இருந்தார்கள். அதற்கான நியாயங்கள் அவர்களிடம் இருக்கலாம். ஆனால், தாயகத்தில், தமது தலைவர்கள் அல்லது பிரதிநிதிகளைத் தமிழ் மக்களுக்குக் காணவே கிடைக்கவில்லை. அதுவும், 20 ஆம் நூற்றாண்டில், ஆசியாவில் கட்டவிழ்த்து விடப்பட்ட, மிகப்பெரும் இன அழிப்பைச் சந்தித்த மக்கள்…
 01 07 2018 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 116) கூட்டணி சொன்ன தமிழர்களின் நிலைப்பாடு இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் விசேட ஆலோசகராக இருந்த கோபால்சாமி பார்த்தசாரதியின் அறிவுறுத்தலின் படி, அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தலைமையிலாக தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர்கள், தமது தரப்புக் கோரிக்கையின் முதலாவது வரைபை, பார்த்தசாரதியிடம் கையளித்தனர். இந்தியக் குடியரசின் அரசமைப்பின் முதலாவது சரத்தின் முதலாவது பிரிவு, ‘இந்தியா, அதாவது பாரதம், மாநிலங்களின் ஒரு ஒன்றியமாகும்’ (Union of States) என்று வழங்குகிறது. இதையொத்தே, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியும் ‘மாநிலங்களின் ஒன்றியம்’ (Union of States) என்ற வார்த்தைகளைத் தனது கோரிக்கை வரைபில் பயன்படுத்தியிருந்தது. இலங்கை அரசாங்கத்தின் நிலை பற்றி உணர்ந்ததாலோ என்னவோ, அந்த வார்த்தைப் பிரயோகத்தை மாற்றுமாறு கோபால்சாமி பார்த்தசாரதி, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின்…
24 06 2018 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 115)அமிர்தலிங்கத்தின் செவ்வி இந்தியாவிலிருந்த தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், ‘த ஹிந்து’ பத்திரிகையின் சென்னைப் பதிப்புக்கு, நீண்டதொரு செவ்வியை வழங்கியிருந்தார். 1983 ஓகஸ்ட் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் அந்தச் செவ்வி பிரசுரமாகியிருந்தது. அந்தச் செவ்வியில், 1983 ‘கறுப்பு ஜூலை’ இன அழிப்புப் பற்றியும் இனப்பிரச்சினை பற்றியும் இலங்கை அரசியல் பற்றியும் முக்கியமான பல கருத்துகளை, அமிர்தலிங்கம் பதிவு செய்திருந்தார். 1983 ‘கறுப்பு ஜூலை’ இன அழிப்பு, திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒன்று என்றும் ஆயுதப் படைகள், தமிழர்களையும் மற்றும் தமிழர்களது சொத்துகளையும் தாக்குவதில், தீர்மானமுடைய ஒரு பங்கை வகித்திருந்தார்கள் எனவும் தெரிவித்த அமிர்தலிங்கம், இது அதிகாரத்திலுள்ள ‘யாரோ’தான் திட்டமிட்டு, ஆயுதப்படைகளையும் சிவிலியன்களையும் ஒருங்கிணைத்துச் செய்வித்திருக்க வேண்டும் என்ற தோற்றப்பாட்டை…