17 06 2018 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 115) இந்தியாவின் மத்தியஸ்த முயற்சி தொண்டமானின் இந்திய விஜயம் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசமைப்புக்கான ஆறாம் திருத்தத்தைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தைப் புறக்கணித்த வேளையில், நாடாளுமன்றத்திலிருந்த தமிழ்க்குரல் சௌமியமூர்த்தி தொண்டமானுடையதாக இருந்தது. இதற்கு அர்த்தம், வேறு தமிழர்கள் இருக்கவில்லை என்பதல்ல. ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியில் பலம் வாய்ந்ததொரு அமைச்சராக, கிழக்கு மாகாணத்தின் கல்குடா தொகுதியில், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கே. டபிள்யூ.தேவநாயகம் இருந்தார். இவரைவிடவும், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி சார்பில் போட்டியிட்டு, வெற்றியீட்டி, பின்னர் ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட சீ. இராஜதுரையும் ஜே.ஆரின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார். ஆயினும், இவர்களிடமிருந்து தொண்டமான் அளவுக்குக்கூட, தமிழ் மக்கள் சார்பான கருத்துகள்…
10 08 2018 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 113) ‘மனிதாபிமானத் தலையீடு’ எனும் துருப்புச் சீட்டு சர்வதேசத் தலையீடு நவீன சர்வதேசச் சட்டவியலின் தந்தை என்று கருதப்படும் லஸ்ஸா பிரான்ஸிஸ் லோரன்ஸ் ஒப்பன்ஹய்ம், ‘சர்வதேசத் தலையீடு’ என்பதை, ‘ஒரு நாடு, பிறிதொரு நாட்டின் மீது, அந்த நாட்டில் சில நடவடிக்கைகளை அல்லது விளைவுகளை ஏற்படுத்தும் நோக்கில், பலாத்காரமாக அல்லது எதேச்சாதிகாரமாக தலையீடு செய்தல்’ என்று வரையறுக்கிறார். தலையீடு என்பது, நேரடி இராணுவத் தலையீடுகளைத் தாண்டி, பொருளாதாரத் தலையீடுகள், இராஜதந்திரத் தலையீடுகள் என்றும் வகைப்படும். சர்வதேசத் சட்டத்தின்படி, ஒரு நாடு இன்னொரு நாட்டின் மீது பலாத்காரமாக, அல்லது எதேச்சாதிகாரமாகத் தலையிடுதல் சட்டவிரோதச் செயற்பாடாகும். இதற்குக் காரணம், ஒவ்வோர் அரசும் (நாடும்) கொண்டுள்ள இறைமை. ‘இறைமை’ என்ற பதம் உணர்த்தும் கோட்பாட்டின் பொருள் பற்றி உலகளாவிய…
03 06 2018 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி-112) இலங்கையும் தமிழரும் இந்திய நலனும் இந்திய சுதந்திர தினத்தில், விசேட விருந்தினராகக் கலந்துகொள்ளச் செய்து, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் அமிர்தலிங்கத்துக்கு, இந்தியாவின் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, அளித்த மரியாதை, ஜனாதிபதி ஜே.ஆருக்கும் ஆளும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும், கடும் சினத்தையும் விசனத்தையும் அளித்தது. இதன் எதிரொலியை, தேசிய நாளேடுகளில் வந்த இந்திய எதிர்ப்புக் கருத்துகளில் காணலாம். இந்திரா காந்தி, இலங்கையைக் கண்டிக்கும் வகையில் பேசியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு நாட்டுக்கும், ஒரு வெளியுறவுக் கொள்கையுண்டு. அரசாங்கங்கள் மாறினாலும், வெளியுறவுக் கொள்கைகள், பெருமளவில் மாறுவதில்லை என்பது, பொதுவாக அரசியல் ஆய்வாளர்கள் மத்தியில் காணப்படும் கருத்து. இதற்குக் காரணம், வெளியுறவுக் கொள்கைகளானவை, அந்த நாட்டின் தேசிய நலன்களை முன்னிறுத்திக் கட்டமைக்கப்படுகிறது. எந்த அரசாங்கம் வந்தாலும்,…
25 05 2018 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 111) இந்தி(யா)ரா காண் படலம் - 3 கொதித்தெழுந்த தமிழகமும் இந்திராவின் நிலைப்பாடும் கொதித்தெழுந்த தமிழகம் இலங்கை - இந்திய அரசியல் தலைமைகளின் சந்திப்பு ஒருபுறம் நடந்து கொண்டிருக்கையில், 1983 “கறுப்பு ஜூலை” இன அழிப்பைத் தொடர்ந்து தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பு உருவாகியிருந்தது. தமிழக அரசியல் தலைமைகளும் ஈழத் தமிழர் அரசியலை தமது அரசியலுக்கு உவப்பாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை தொடர்ந்து வைப்போரும் உளர். ஆயினும், தலைமைகளின் எண்ணம் எதுவாக இருப்பினும், கொதித்தெழுந்த அந்த மக்கள் எண்ணம் தூய்மையானது. அது தமது சகோதரர்கள், அல்லது பொதுவாக பலரும் குறிப்பிடுவது போல “தொப்புள் கொடி உறவுகள்” அனுபவித்த பெருந்துயரின் கொடுமை கண்டு கனன்று எழுந்த ரௌத்திரத் தீ! தமிழகத்தின் திராவிட அரசியலிலும், வாக்குவங்கி அரசியல்…
18 05 2018 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 110) இந்தி(யா)ரா காண் படலம் இந்திய விஜயம் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன, தனது சகோதரரும் இலங்கையில் பிரபல்யமிக்க வழக்குரைஞருமான எச்.டபிள்யூ.ஜெயவர்தனவை தனது விசேட பிரதிநிதியாக, இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்த அனுப்பி வைத்தார். 1983 ஓகஸ்ட் 11ஆம் திகதி எச்.டபிள்யூ.ஜெயவர்த்தன, டெல்லியை சென்று அடைந்திருந்தார். அதேதினத்தில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவரான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், விமானம் மூலம் சென்னையை வந்தடைந்திருந்தார். சென்னை வந்த அமிர்தலிங்கத்தை, இந்திய உள்துறை அமைச்சர் பென்டகன்டி வெங்கடசுப்பையாவும் இந்திய வௌிவிவகாரச் செயலாளர் கே.எஸ்.பாஜ்பாயும் சென்னையில் வரவேற்றனர். இதற்காக இவ்விருவரும் டெல்லியிலிருந்து சென்னை வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்திரா-எச்.டபிள்யு. ஜெயவர்த்தன சந்திப்பு டெல்லி வந்திருந்த எச்.டபிள்யூ.ஜெயவர்தன, இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியுடன் இரண்டு சுற்று பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தார். முதல்…