06 04 2018 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 103)1983 ‘கறுப்பு ஜூலை’: இந்தியத் தலையீடு இந்திரா - ஜே.ஆர், தொலைபேசி உரையாடல் ‘1983 கறுப்பு ஜூலை’ கலவரங்கள் தொடர்பில், இந்திய நாடாளுமன்றத்தின் லோக் சபா, ராஜ்ய சபா ஆகியவற்றில், நடந்த விவாதங்களும் பேச்சுகளும் மத்திய, மாநில அரசியல் தலைமைகளிடமிருந்து வந்த அழுத்தமும் இந்தியப் பிரதமர் இந்திரா காந்திக்கு, இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட வேண்டிய அவசியத்தை உருவாக்கியது. 1983 ஜூலை 28 ஆம் திகதி இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி, ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவுடன் தொலைபேசி ஊடாக உரையாடினார். இந்த உரையாடலின் போது, இலங்கையில் தமிழ் மக்களுக்கெதிராக, நடைபெற்றுவரும் வன்முறைத் தாக்குதல்கள் பற்றி, இந்திய நாடாளுமன்றத்தில் விவாதம் இடம்பெற்றதைக் குறிப்பிட்ட இந்திரா காந்தி, தாம் இது பற்றி வருந்துவதாகத் தெரிவித்தார். இதற்குப் பதிலளித்த ஜனாதிபதி…
30 03 2018 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 102) ஜே.ஆரின் உரையும் அரசாங்கத்தின் எதிர்வினையும் அமைச்சரவைக் கூட்டம் ‘கறுப்பு ஜூலை’ இன அழிப்பு நிகழ்ந்து நான்கு நாட்கள் கழிந்த நிலையில், இந்த நிலைபற்றி விவாதித்து முடிவெடுக்க ஜே.ஆர். ஜெயவர்தன தலைமையில் அமைச்சரவை கூடியது. இன அழிப்புத் தாக்குதல்களையும் வன்முறையையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருதல், இதற்குக் காரணமானவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகளை முன்னெடுத்தல், இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய உடனடித் தேவைகளை நிறைவேற்றுதல், பாதுகாப்பை உறுதிசெய்தல், நிவாரணமும் நட்டஈடுகளும் வழங்குதல் பற்றியெல்லாம் அமைச்சரவைக் கூட்டம் அமைந்திருந்தால் ஏற்புடையதாக இருந்திருக்கும். ஆனால், அமைச்சரவையில் ‘கறுப்பு ஜூலை’ இன அழிப்புக்கான பழி, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி மீதும், அதன் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் மீதும் சுமத்தப்பட்டது. ஜே.ஆர் அமைச்சரவையிலிருந்து பேரினவாத வெறிகொண்ட அமைச்சராக அறியப்பட்ட சிறில் மத்யூ,…
23 03 2018 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 101) நாட்டின் ஏனைய பாகங்களுக்கும் பரவிய இன அழிப்பு 1983 ஜூலை 25ஆம் திகதி, கொழும்பை மையமாகக் கொண்டு, தமிழ் மக்கள் மீதான இன அழிப்புத் தாக்குதல்கள் நடந்தேறின. கொழும்பு, கம்பஹா, களுத்துறை உள்ளிட்ட மேல்மாகாணத்தின் பல பகுதிகளிலும் தமிழ் மக்கள் தாக்குதலுக்குள்ளானதோடு, தமிழ் மக்களின் சொத்துகளும் உடைமைகளும் தீக்கிரையாக்கப்பட்டு அழித்தொழிக்கப்பட்டன. கொழும்பைத் தாண்டி காலி, கேகாலை, திருகோணமலை, வவுனியா ஆகிய நகரங்களிலும் தமிழ் மக்களின் சொத்துகளுக்கும் உடைமைகளுக்கும் எரியூட்டும் தாக்குதல்கள் நடந்தேறின. அத்துடன், தமிழ் மக்களின் சொத்துகளைச் சூறையாடும் சம்பவங்களும் நடந்தன. இத்தனை நடந்தும் இலங்கையின் ‘அதிமேதகு’ ஜனாதிபதியும் இலங்கை அரசாங்கமும் ‘கள்ள மௌனம்’ சாதித்துக் கொண்டுதான் இருந்தனர். ஊரடங்கு அறிவிக்கப்பட்டதேயன்றி, அது வினைத்திறனாகச் செயற்படுத்தப்பட்டு, இந்த இன அழிப்பு வன்கொடுமையைக் கட்டுக்குள்…
16 03 2016 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 100) வெலிக்கடைச் சிறைச்சாலை இன அழிப்புப் படுகொலை 1983 ஜூலை 24 இரவு, பொரளையில் தொடங்கிய “கறுப்பு ஜூலை” இன அழிப்புத் தாக்குதல்கள், 25ஆம் திகதி மாலையளவில், கொழும்பு மற்றும் கொழும்பை அண்டிய பகுதிகளென வேகமாகப் பரவியிருந்தது. கொழும்பு நகரத்தில், சிறுபான்மையினரின் சொத்துகளும் உடமைகளும் கொழுந்துவிட்டெரிந்து கொண்டிருந்தன. மறுபுறத்தில், தமிழ் மக்களின் இரத்தம் வழிந்தோடிக்கொண்டிருந்தது. ஜே.ஆர். ஜெயவர்தன தலைமையிலான அரசாங்கமும் அதன் அதிகாரக் கரங்களும், இந்த நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தவில்லை. அரசாங்கம் அறிவித்த ஊரடங்கு கூட, வலுவற்றதாக இருந்தது. ஏனெனில், இன அழிப்பு தொடர்ந்து கொண்டுதான் இருந்தது என்று, 1983 “கறுப்பு ஜூலை” இன அழிப்பை நேரில் கண்ட பலரும் பதிவு செய்கின்றனர். 35 தமிழ்க் கைதிகள் கொழும்பு எரிந்து கொண்டிருந்த சூழலில், ஜூலை 25ஆம்…
09 03 2018 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 99) கறுப்பு ஜூலை இன அழிப்பு தொடர்ந்த இன அழிப்பு 1983 ஜூலை 24 ஆம் திகதி கொழும்பின் பொரளைப் பகுதியில் தொடங்கிய ‘கறுப்பு ஜூலை’, தமிழ் மக்களுக்கெதிரான இன அழிப்பு 25 ஆம் திகதி கொழும்பின் மற்றைய பகுதிகளுக்கு பரவியதோடு, 25 ஆம் திகதியின் நண்பகலைத் தாண்டிய பொழுதில் கொழும்பை அண்டிய ஏனைய பகுதிகளுக்கும் பரவத் தொடங்கியது.தமிழ் மக்களின் வீடுகள், வியாபார மற்றும் வர்த்தக ஸ்தாபனங்கள், தொழிற்சாலைகள் என்பன திட்டமிட்டுத் தாக்குதலுக்குட்படுத்தப்பட்டு, எரியூட்டப்பட்டு, அழிக்கப்பட்டதோடு, தமிழ் மக்களும் கொடூரமான தாக்குதல்களுக்கும் சித்ரவதைகளுக்கும் உயிர்க்கொலைகளுக்கும் உள்ளாக்கப்பட்டார்கள். 25 ஆம் திகதி காலை ஜனாதிபதி ஜே.ஆர் தலைமையில் கூடிய பாதுகாப்புச் சபை 25 ஆம் திகதி மாலை ஆறு மணி முதல் கொழும்பில் ஊரடங்கை நடைமுறைப்படுத்துவதாக…