02 03 2018 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 98) கறுப்பு ஜூலை இன அழிப்பு 1983 ஜூலை 24 ஆம் திகதி, இரவு பொரளையையும் அதை அண்டிய பகுதிகளிலும் ஆரம்பித்த ‘கறுப்பு ஜூலை’ இன அழிப்பு, மெல்ல மெல்ல பொரளையை அண்டிய மற்றைய பகுதிகளுக்கும் பரவத் தொடங்கியது. பொரளை, கனத்தையில் கூடி, அதன் பின் அங்கிருந்து கலைந்தவர்களால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது என கறுப்பு ஜூலை பற்றி எழுதிய சிலர் பதிவு செய்திருப்பினும், வேறு சில பதிவுகளில், இது கனத்தைப் பொது மயானத்திலிருந்து கலைந்தவர்களால் அன்றி, அந்தக் கூட்டத்துக்குள் புகுந்த, வேறு குழுவினரால் நடத்தப்பட்டது என்று குறிப்பிடப்படுகிறது. எது எவ்வாறாயினும், 1983 ஜூலை 24 ஆம் திகதி, பொரளை, கனத்தை பொது மயானத்தில் பல்வேறு தரப்பினர்களும் கூடியிருந்தார்கள். இதில் அரசாங்கத் தரப்பினர், சாதாரண…
23 02 2018 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 97) கறுப்பு ஜூலை இன அழிப்பு இனஅழிப்பு இனஅழிப்பு (Genocide) என்பதை, 1948 ஆம் ஆண்டின் இன அழிப்புக் குற்றத்தைத் தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான சாசனத்தின் இரண்டாவது சரத்து, பின்வருமாறு வரையறை செய்கிறது: ‘இந்தச் சாசனத்தின்படி, இனவழிப்பு என்பது ஒரு தேசம் அல்லது இனம் (race and, ethnicity) அல்லது மதம் சார்ந்த குழுவை, முற்றாக அல்லது பகுதியளவில் அழிக்கும் நோக்கத்துடன் பின்வரும் செயல்களேதும் செய்யப்படுதல்: (அ) அக்குழுவைச் சேர்ந்தவர்களைக் கொல்லுதல்; (ஆ) அக்குழுவைச் சேர்ந்தவர்களின் மேல், உடல் ரீதியான அல்லது உள ரீதியான கடுமையான தீங்கை இழைத்தல்; (இ) முழுமையானதோ அல்லது பகுதியளவிலானதோவான உடல் ரீதியான அழிவை, அக்குழுவுக்கு இழைக்கும் வகையில் திட்டமிட்டு, ஒரு வாழ்க்கை நிலைமையை அக்குழுவின் மீது வேண்டுமென்றே திணித்தல்; (ஈ)…
16 02 2018 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 96) 1983 கறுப்பு ஜூலை: களம் இலங்கையின் வரலாறு இலங்கையின் இன முரண்பாடு, வரலாற்று ரீதியில் எப்போது தோன்றியது என்பது தொடர்பிலான குறிப்பிடத்தக்க ஆய்வுகளேதுமில்லை. அதற்குக் காரணம் இலங்கையின் வரலாறு பற்றியும் இங்கு வாழ்ந்த மக்கள் பற்றியுமான ஆய்வுகளே இன்னமும் முழுமையாகச் செய்யப்படவில்லை எனலாம். ஆனால், நாம் பொதுவாக அறிந்த, இலங்கையில் கற்பிக்கப்படும் வரலாறு என்பது மகாவம்சத்தை அடிப்படையாகக் கொண்டு, விஜயனுடைய வருகையோடு இலங்கையின் வரலாற்றை ஆரம்பிக்கிறது. வரலாறுகள் என்பவை, ஏதோவொரு புள்ளியிலிருந்துதான் ஆரம்பிக்கப்பட வேண்டும். ஆனால், அந்தப் புள்ளியை தேர்ந்தெடுப்பதற்கு வலுவான காரணம் ஒன்று இருக்க வேண்டும். விஜயனது வருகையோடு, இலங்கையின் வரலாற்றை எழுதுவதானது, ஏறத்தாழ ஆங்கிலேயர்களின் வருகையோடு அமெரிக்க மற்றும் அவுஸ்திரேலிய வரலாறுகளை எழுதுவதைப் போன்றது. அது, அதற்கு முன், அங்கு…
09 02 2018 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 95) 1983 இனக்கலவரத்தின் அறுநிலைப் புள்ளி 1983 ஜூலை 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் மன்னாரில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் மாநாடு நடைபெறவிருந்த நிலையில், ஜூலை 21 திகதி தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொண்டிருந்தனர். ஆனால் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி தெட்டத்தௌிவாகத் தாம், அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ள சர்வகட்சி வட்ட மேசை மாநாட்டில் கலந்துகொள்ளப் போவதில்லை என்பதை அறிவித்திருந்தது. வெறுமனே பயங்கரவாதம் பற்றி பேசுவதில் அர்த்தமில்லை என்பது தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் நிலைப்பாடாக இருந்தது. 1983 ஜூலை 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் மன்னாரில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் மாநாடு நடைபெறவிருந்த நிலையில், ஜூலை 21 ஆம்…
02 02 2018 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 94) சர்வகட்சி வட்டமேசை மாநாட்டுக்கான ஜே.ஆரின் அழைப்பும் தமிழ்த் தலைமையின் மறுப்பும் யார் காரணம்? 1983 மே மாத இறுதி முதலே, தமிழ் மக்கள் மீதான தாக்குதல்கள் ஆங்காங்கே நடைபெறத் தொடங்கியிருந்தன. 1983 ஜூலை மாதமளவில் அது மிகுந்த அளவில் அதிகரித்திருந்தது. இதேவேளை, வடக்கு-கிழக்கில் (குறிப்பாக வடக்கில்) தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகளும் தாக்குதல்களும் கணிசமாகப் பெருகியிருந்தன. பயங்கரவாதத்தை இரும்புக் கரம் கொண்டு அடக்குகிறோம் என்ற போர்வையில் ஜே.ஆர். ஜெயவர்த்தன அரசாங்கம் கொடுங்கோன்மைச் சட்டங்களை நிறைவேற்றி, அதனூடாக அரச படைகளுக்கு வரம்பிலாத அதிகார பலத்தை வழங்கியிருந்தது. பயங்கரவாதம் மீது நடவடிக்கை எடுக்கிறோம் என்ற பெயரில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் அதிகம் பாதிக்கப்பட்டது என்னமோ அப்பாவித் தமிழ் மக்கள்தான். தமிழ் மக்களின் துயர்நிலை கண்டு, அதற்கு…