26 01 2018 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 93) 1983: கறுப்பு ஜூலையின் தொடக்கம் இந்தியாவின் கண்டனம் 1983 ஜூலை மாத ஆரம்பப் பகுதி; அவசரகாலச் சட்டம் நடைமுறையிலிருந்தது. எந்த நபரையும் எந்தப் பொறுப்புக் கூறலுமின்றி, விசாரணைகளுமின்றி ‘கொன்று புதைக்கும்’ அதிகாரம் இலங்கைப் படைகளுக்கு அவசரகாலச் சட்ட ஒழுங்கு 15A-யின் கீழ் வழங்கப்பட்டிருந்தது. இதற்கு நியாயம் சொன்ன, இராஜாங்க அமைச்சர் ஆனந்த திஸ்ஸ டி அல்விஸ், “வடக்கிலுள்ள படைகளினதும் பொலிஸாரினதும் மனவுறுதி மிகக் குறைவாக உள்ளது. அவர்களுக்குப் பலமூட்ட இந்தச் சட்ட ஒழுங்கு அவசியம்” என்ற தொனியின் தனது நியாயத்தை முன்வைத்தார். இதனால், வடக்கில் பல தமிழ் இளைஞர்கள் ஈவிரக்கமின்றி இலங்கை இராணுவத்தினால் சித்திரவதை செய்யப்பட்டும், சுட்டும் கொல்லப்பட்டதாக ‘இலங்கை: தேசிய இனப்பிரச்சினையும் தமிழர் விடுதலைப் போராட்டமும்’ (ஆங்கிலம்) என்ற தனது நூலில்,…
17 01 2018 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 92) 1983: பெரும் இனக்கலவரத்துக்கான முஸ்தீபுகள்என்.கே.அஷோக்பரன் LLB (Hons) இலங்கையின் போராட்ட வரலாற்றை எழுதுவதோ, போராட்டத்தின் முக்கிய சம்பவங்கள், தாக்குதல்கள் பற்றி விவரிப்பதோ இந்தத் தொடரின் நோக்கமல்ல. மாறாக, இலங்கையின் அரசியல் வரலாற்றை உற்று நோக்குவதனூடாக இலங்கையின் இனப்பிரச்சினையைப் புரிந்துகொள்ள முயல்வதுடன், இலங்கையிலுள்ள தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் என்ன என்பதை அடையாளம் கண்டு கொள்வதற்கான தேடலே இது. ஆனால், இந்தத் தேடலில், அரசியலிலும் இலங்கை மக்களின் வாழ்க்கையிலும் முக்கிய திருப்புமுனைகளை ஏற்படுத்திய சில சம்பவங்களை முழுவதுமாகப் புரிந்துகொள்வதற்கு, அதன் பின்னணியையும் அதனோடு தொடர்புடைய போராட்டக் காரணிகளையும் அறிந்து கொள்வது அவசியமாகிறது. அந்தவகையில், இலங்கையில் அப்பாவித் தமிழ் மக்கள்மீது, நாடு தழுவிய ரீதியில் கட்டவிழ்த்து விடப்பட்ட இனவெறிக் கலவரமான ‘1983 கறுப்பு ஜூலை’ கலவரத்தினுடைய…
09 01 2018 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 91) 1983: முளைவிடத் தொடங்கிய இனவெறித் தாக்குதல்கள்என்.கே.அஷோக்பரன் LLB (Hons)அரசியல் தலைமை எதிர் ஆயுதத் தலைமை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமானது, 1983 மே மாதத்தில் இடம்பெறவிருந்த உள்ளூராட்சித் தேர்தல்களைப் புறக்கணிக்க வேண்டும் என்று மேற்கொண்ட அறிவிப்பை மீறியும் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, குறித்த தேர்தலில் போட்டியிட்டது. இந்நிலைமையானது, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களையும் தமிழ் அரசியல் தலைமைகளையும் நேரெதிர் நிலைகளில் நிறுத்தியது. வெளிப்படையான இந்த மோதலுக்கு உரிய பதிலை அளிக்க வேண்டிய கடப்பாட்டில் தமிழ் மக்கள் இருந்தார்கள். தமிழ் மக்கள் அளிக்கப் போகும் பதிலே, தமிழர் அரசியலின் போக்கைத் தீர்மானிப்பதாக அமையவிருந்தது. ஐக்கிய தேசிய கட்சி சார்பில் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட இருந்தவர்கள் பின்வாங்கிய நிலையில், அகில…
02 01 2018 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 90) 1983 ஆண்டு உள்ளூராட்சித் தேர்தல்: இராணுவத்தின் வெறியாட்டம் என்.கே. அஷோக்பரன் LLB (Hons) 1983 மே 18 ஆம் திகதி இடைத் தேர்தல்களும் உள்ளூராட்சித் தேர்தல்களும் நடத்தப்படவிருந்த நிலையில், குறித்த உள்ளூராட்சித் தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்ற முடிவை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் எடுத்திருந்ததோடு, தமிழ் மக்களும் தமிழ் அரசியல் தலைமைகளும் தமிழ் அரசியல் கட்சிகளும் உள்ளூராட்சித் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்றும் அறிவித்தது. இந்த நிலையில், யாழ். மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட முன்வந்த கே.வி.இரட்ணசிங்கம், எஸ்.எஸ். முத்தையா மற்றும் வல்வெட்டித் துறையில் போட்டியிட இருந்த இன்னொருவர் ஆகிய மூவரும் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளினால் 1983 ஏப்ரல் 29 ஆம் திகதி…
26 12 2017 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 89) பலம் பெறத் தொடங்கிய தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் என்.கே.அஷோக்பரன் LLB (Hons) பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் 1983 பெப்ரவரி 24 ஆம் திகதி பேராதனை, களனி மற்றும் ருஹுணு பல்கலைக்கழகங்களின் மாணவர்கள், ஏற்கெனவே கொழும்பு மற்றும் ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் முன்னெடுத்து வந்த, வகுப்பு பகிஷ்கரிப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். கொழும்பு மற்றும் ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள், யாழ். பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் சிலர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடனும் தமது வகுப்புப் பகிஷ்கரிப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர். பல்கலைக்கழக மாணவர்கள் தம்மில் ஒருவர் பாதிக்கப்படும் போது, அதற்காக இணைந்து குரல்கொடுப்பது புதுமையல்ல. ஆனால், இந்த நிலைமை மாறுவதற்கு நீண்ட காலம்…