25 11 2018 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 135) சர்வகட்சி மாநாட்டில் மீண்டும் இரண்டு குழுக்கள்   சர்வகட்சி மாநாடு, மீண்டும் 1984 மே ஒன்பதாம் திகதி கூடியபோது, அதில் ஜனாதிபதி ஜே.ஆர், புதிதாக அமைத்த ‘அதிகாரப்பகிர்வுக் குழு’, ‘குறைகள் ஆராயும் குழு’ என்பவற்றில் பங்குபற்ற, தமிழர் தரப்பின் பிரதிநிதிகளான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியும் குமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸும் மறுத்துவிட்டனர்.    மாறாக, குறித்த குழுக்களின் அறிக்கைகளை, சர்வகட்சி மாநாட்டின் பிரதான அவை மீண்டும் கூடும் போது, தாம் ஆராய்வதாக அறிவித்திருந்தனர். அமிர்தலிங்கமும் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களும் எதிர்பார்த்தது போலவே, ஜே.ஆரின் திட்டம் முன்நகர்ந்து கொண்டிருந்தது.    புதிய குழுக்களை அமைத்து, ஜே.ஆர் ஆராய்ந்து கொண்டிருந்தமை காலங்கடத்தவே என்று தமிழர்…
13 11 2018 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 134) சுன்னாகம் சந்தைப் படுகொலை ஒரு விமானப்படை அதிகாரி, சட்டவிரோதமான முறையில், துப்பாக்கிதாரி ஒருவரினால் சுட்டுக் கொல்லப்படுகிறார். இதில் குற்றவாளி, அந்தத் துப்பாக்கிதாரி மற்றும் அந்தக் குற்றத்துக்கு உதவிபுரிந்தவர்கள் மற்றும் அந்தக் குற்றத்துக்கான சூழ்ச்சியில் ஈடுபட்டவர்கள்.குறித்த படுகொலையாளி, குறித்த ஓரினத்தைச் சார்ந்தவர் என்று அறியப்பட்டதால், குறித்த படுகொலைக்குப் பழிவாங்க, குறித்த விமானப்படை, குறித்த இனத்தைச் சேர்ந்த, பொதுமக்கள் ஒன்றுகூடும் பொது இடமொன்றுக்குச் சென்று, திறந்த துப்பாக்கிச் சூடு நடாத்தி, எட்டு அப்பாவி உயிர்களைப் பலி கொண்டதுடன், ஏறத்தாழ 50 அப்பாவிப் பொதுமக்களையும் காயமுறச் செய்தமை, நியாயத்தின் எந்த அளவுகோலின்படி, ஏற்றுக் கொள்ளத்தக்கதாகும்? இது ஒரு காடையர் குழுவோ, வன்முறைக் குழுவோ நடத்திய தாக்குதல் அல்ல; அரச படைகள் - அதாவது ஓர் அரசையும் அதன்…
03 11 2018 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 133) ஜே.ஆர் சொன்ன, அமீர் மறுத்த இணக்கப்பாடு சர்வகட்சி மாநாட்டின் இணைந்த குழுவின் கலந்தாய்வுகள், 1984 மார்ச் 15ஆம் திகதியோடு நிறைவுக்கு வந்ததைத் தொடர்ந்து, ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன, 1984 மார்ச் 20ஆம் திகதி சர்வகட்சி மாநாட்டின் பொது அவையை மீண்டும் கூட்டி, இதுவரை நடந்த கலந்துரையாடல்களில் நான்கு முக்கிய விடயதானங்கள் தொடர்பில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதென அறிவித்தார்.முதலாவதாக, அரச முறைமை பற்றிய விடயத்தில், அரசின் சகல மட்டங்களிலும் மக்களின் பங்குபற்றலைச் சாத்தியமாக்கும் வகையில், மத்தியில் குவிந்த அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்பதில் இணக்கம் உருவாகியிருப்பினும், அரச முறைமை பற்றியும், எவ்வதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்பதிலும் இறுதியான புரிந்துணர்வு எட்டப்படவில்லை என்றார். இரண்டாவதாக, உள்ளூராட்சி விடயம் தொடர்பில், தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்படும் உள்ளூராட்சி சபை முறைமையில்,…
19 10 2018 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 132 சர்வகட்சி மாநாட்டின் ‘இணைந்த குழு’ சர்வகட்சி மாநாட்டில் அரசாங்க முறைமை பற்றியும் பயங்கரவாத ஒழிப்புப் பற்றியும் இரு குழுக்களாகப் பிரிந்து, ஆராய்ந்த மாநாட்டினர், இணைந்த குழுவாக ஒன்றிணைந்தனர்.இருவிடயதானங்கள் பற்றியதுமாக, அவர்கள் இணைந்து கலந்துரையாடுவதுடன், அதனடிப்படையிலான அறிக்கையிடல், பின்வரும் தலைப்புகளில் அமைய வேண்டும் என்ற வழிகாட்டும் வரைமுறைகளும் வழங்கப்பட்டிருந்தன. அந்த வழிகாட்டும் வரைமுறைகளானவை: (1) நாட்டின் ஒற்றுமையும் ஒருமைப்பாடும் பேணப்படுவதுடன், அதன் அடிப்படையில் அனைத்துச் சமூகங்களினதும் உறுப்பினர்கள் நல்லிணக்கத்துடன் வாழத்தக்கதானதும், சகல பிரதேசங்களிலும் தமது கருமங்களை அமைதியான முறையில் கொண்டு நடத்தத்தக்கதுமானதுமான அரசாங்க முறைமையொன்றை உறுதிசெய்தல். (2) கல்வியில் நியாயமான வாய்ப்புகளை வழங்குதல். (3) தொழிலில் நியாயமான வாய்ப்புகளை வழங்குதல். (4) காணி உரிமை நிர்ணய அமைப்பு முறைகளை வழங்குதல். (5) சகல பிரதேசங்களிலும்…
10 10 2018 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 131) அமிர்தலிங்கத்தின் அழுத்தமான நிலைப்பாடு சர்வகட்சி மாநாட்டில் உரையாற்றிய அமிர்தலிங்கம், முதலில், இந்நாட்டிலிலுள்ள தமிழர்கள், ஒரு தனித்தேசம் என்பதை நிறுவினார்.அதைத் தொடர்ந்து, இனப்பிரச்சினையின் வரலாறு, அதன் திருப்புமுனைகள், அதன் சமகால அமைவு என்பவற்றை மேற்கோள்காட்டி, தமிழர் தரப்பின் நிலைப்பாட்டைத் தெளிவுற எடுத்துரைக்கும், முழுமையான உரையொன்றை ஆற்றியிருந்தார்.ஆயுதப் போராட்டம் பற்றிய அவரது நிலைப்பாடு, அறுதித் தெளிவுடன் இல்லாத போதும், அதைத் தடுப்பது அரசாங்கத்தினதும், பெரும்பான்மையினக் கட்சிகளினதும் கையில்தான் இருக்கிறது என்பதை, அவர் எடுத்துரைத்திருந்தார்.அதேவேளை, 1976ஆம் ஆண்டு, வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் படியான, தன்னுடைய கட்சியின் நிலைப்பாட்டுக்கும், அதனடிப்படையில் தமிழ் மக்கள், 1977இல் தந்திருந்த மாபெரும் மக்களாணைக்கும் குந்தகம் வரமுடியாதபடி, தனது பேச்சின் இறுதியை வடிவமைத்திருந்த அமிர்தலிங்கம், அதைப் பின்வருமாறு பதிவு செய்தார். “அதிமேதகு ஜனாதிபதி அவர்கள், தன்னுடைய…