15 01 2016 13.07.1989 அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் சுட்டுக்கொல்லப்பட்ட நாள் நினைவுகள் இனிமை: துயரமும் கலந்த தருணங்களாக…. அமிர் என்ற அமுதர் என்ற அமிர்தலிங்கம் கடந்த சில வருடங்களாகவே இலங்கைப் பாராளுமன்றத்தின் முன்னாள் எதிர்கட்சித் தலைவரும், அப்போதய தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களைப் பற்றி எனது சில நினைவுகளையும் எண்ணங்களையும் எழுதவேண்டும் என்றிருந்தேன். எனினும் அது இந்த வருடம் தான் நிறைவேறுகிறது. இது அமிர்தலிங்கம் அவர்கள் பற்றிய எனது எண்ணக்கருத்துக்களே அன்றி அவர் பற்றிய ஒரு மதிப்பீடு அல்ல என்பதைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். அமிர்தலிங்கம் என்ற அந்த மனிதரின் குணம் நாடிக் குற்றம் நாடி அவற்றின் மிகை நாடி மிக்க சொல்லும் முயற்சியாக இல்லையெனினும் அவற்றின் சில அம்சங்கள் இங்கு தவிர்க்க முடியாததாகவே இருக்கின்றன. இற்றைக்கு இருபத்தாறு வருடங்களுக்கு முன்னர் 13/07/1989 அன்று கொழும்பில்…
22 04 2015  அமிர்தலிங்கம் வாழ்க்கை வரலாறு 2 அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் (Appapillai Amirthalingam, ஆகஸ்ட் 26, 1927 - ஜூலை 13, 1989) இலங்கையின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைதொடர் பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவருமாவார். தொடர்.........
20 05 2015 சேர் பொன்னம்பலம் இராமநாதன்  சேர் பொன்னம்பலம் இராமநாதன் (ஏப்ரல் 16, 1851 - நவம்பர் 26, 1930) இலங்கையின் தேசியத் தலைவர்களுள் ஒருவராகக் கருதப்பட்டவர். சிங்களவரும், தமிழரும் இன வேறுபாடு பாராது அவரைத் தங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டனர். வாழ்க்கை வரலாறு பொன்னம்பலம் இராமநாதன் யாழ்ப்பாணம், மானிப்பாயைச் சேர்ந்த இராசவாசல் முதலியார் (கேட் முதலியார்) அருணாசலம் பொன்னம்பலம் என்பவரின் இரண்டாவது புதல்வராக கொழும்பில் பிறந்தார். குமாரசாமி முதலியார், சேர் பொன்னம்பலம் அருணாசலம் ஆகியோரது சகோதரர். ஆரம்பக் கல்வியை கொழும்பு இராணிக் கல்விக்கழகத்தில் கற்றார். 13 ஆவது வயதில், பிரெசிடென்சி கல்லூரியில் கல்வி கற்பதற்காக சென்னைக்கு அனுப்பப்பட்டார். சேர் றிச்சட் மோர்கனின் கீழ் சட்டக் கல்வி பயின்று 1873 இலே உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஆனார். பின்னர் சொலிசிட்டர் ஜெனரலாகப் பதவிவகித்து 1906 ஆம் ஆண்டு,…