தேசியவாத எழுச்சியின் பின்னாலுள்ள செய்தி
28 04 2017
தேசியவாத எழுச்சியின் பின்னாலுள்ள செய்தி
கனகலிங்கம் கோபிகிருஷ்ணாஉலகம் முழுவதிலும், தேசியவாதத்தைக் கக்கும் கடும்போக்கு வலதுசாரிகளின் எழுச்சி, அச்சம் கொள்ள வைக்கிறது; இந்த அச்சத்தை, பிரான்ஸ் ஜனாதிபதித் தேர்தலிலும் பார்க்கக் கூடியதாக உள்ளது. இவ்வாறான வாக்கியங்களை, அண்மைக்கால அரசியல் அலசல்களில் கண்டிருக்க முடியும்.இந்த அச்சமொன்றும், பொய்யானதோ அல்லது தவறானதோ கிடையாது. இது, தற்போது நடந்து கொண்டிருக்கும் யதார்த்தத்தையே வெளிக்காட்டுகிறது.
இந்த யதார்த்தத்தை வெளிப்படுத்தும் கண்ணாடியாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த, பிரான்ஸ் ஜனாதிபதித் தேர்தலின் முதலாவது சுற்று வாக்களிப்பு அமைந்தது. இதில், கடும்போக்கு வலதுசாரித்துவத்தைக் கடைப்பிடிக்கும் மரின் லு பென், 21.3 சதவீத வாக்குகளைப் பெற்றுக் கொண்டார். இதன்மூலம், 24 சதவீதமான வாக்குகளைப் பெற்ற, மத்திமக் கொள்கைகளைக் கொண்ட இமானுவேல் மக்ரோனும் லு பென்னும், 2ஆவது சுற்று வாக்களிப்பில் கலந்துகொள்ளவுள்ளனர். லு பென் என்பவர், நவீனகால கடும்போக்கு வலதுசாரிகளைப் பிரதிபலிக்கும் ஒருவர். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக வேண்டும்; எல்லைகளைப் பலப்படுத்த வேண்டும்; அகதிகளின் வருகையைக் குறைக்க வேண்டும் (2 இலட்சத்திலிருந்து 10,000); பாதுகாப்பை அதிகரித்தல் போன்றன தான், அவரை அடையாளப்படுத்தும் அவரது கொள்கைள். கருத்துக் கணிப்புகளின்படி, அவர் வெற்றிபெறுவதற்கு வாய்ப்புகள், மிகக்குறைவாகவே உள்ளன. மக்ரோன் வெற்றிபெறுவது, ஓரளவு உறுதியாக உள்ளது என்பது, ஓரளவு ஆறுதல் தரக்கூடிய செய்தி தான். ஆனால், ஹிலாரி கிளின்டனும் டொனால்ட் ட்ரம்ப்பும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட போது, ட்ரம்ப்பின் வெற்றிவாய்ப்புகளும் இல்லை என்றே கருதப்பட்டது. பின்னர் நடந்ததை, வரலாறு சொல்கிறது. எனவே, இவ்விடயத்தை இலகுவாக எடுத்துக் கொள்ளவும் முடியாது.
இந்த வாக்களிப்பு முடிவுகளில், முக்கியமான ஒன்றை அவதானிக்க முடிந்தது. பிரான்ஸ் தலைநகர் பரிஸில், லு பென் பெற்றுக் கொண்ட வாக்குகள், வெறுமனே 4.99 சதவீதம். பரிஸுக்கு அருகிலுள்ள நகரங்களிலும் இந்நிலை தான். லு பென்னின் பலம், கிராமப்புற வாக்குகள் தான். இந்த நிலைமையை, “கிராமப்புற மக்களுக்கு ஒன்றும் தெரியாது. ஒப்பீட்டளவில் படிப்பறிவு குறைவான மக்கள், இனவாதத்தைப் பற்றிக் கவலைப்படாமல், சொல்விளையாட்டுகளுக்கு மயங்குகிறார்கள்” என்று கூற முடியும். ஆனால் உண்மை, அதையும் தாண்டி இருக்கிறது என்பது தான் உண்மை. அதற்கு, இதற்கு முன்னர் இடம்பெற்ற, இரண்டு பிரதான நிகழ்வுகளைப் பற்றியும் ஆராய்வது அவசியமானது. முதலாவது, கடந்தாண்டு இடம்பெற்ற, ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல். யாரும் எதிர்பார்க்காத விதமாக, டொனால்ட் ட்ரம்ப் வெற்றிபெற்றார்.
இதுவரை காலமும் இல்லாததைப் போன்று, பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கொண்டிருந்த ட்ரம்ப், கடும்போக்கு வலதுசாரிகளின் பலத்த ஆதரவுடனேயே, தனது பிரசாரத்தை மேற்கொண்டார். மெக்ஸிக்கோவுக்கும் ஐ.அமெரிக்காவுக்கும் இடையில் சுவர்; எல்லைப் பாதுகாப்பு அதிகரிப்பு; அகதிகளின் வருகையைக் கட்டுப்படுத்துதல்; முஸ்லிம்கள் நாட்டுக்குள் வருவதைத் தடை செய்தல்; வசதி படைத்தோருக்கான வரிக் குறைப்பு என, அவரின் கொள்கைகள், கடும்போக்கு வலதுசாரிகளின் விருப்பங்களை நிறைவேற்றுவதாக இருந்தது. “ஐ.அமெரிக்க மக்கள், ட்ரம்ப்பைத் தெரிவுசெய்ய மாட்டார்கள். அந்தளவுக்கு அறிவில்லாதவர்கள் கிடையாது” என்று, பலரும் நம்பினர். ஆனால் இறுதியில், அவர் வென்றார். டொனால்ட் ட்ரம்ப்புக்கு, மிகவும் வளர்ச்சியடைந்த பாரிய நகரங்களில் அனேகமானவை, தோல்வியையே வழங்கின. கிராமப்புறங்கள், அவரின் கோட்டைகளாக அமைந்தன. கிராமப்புற வாக்குகளில் 62 சதவீதமானவை, ட்ரம்ப்புக்குக் கிடைத்தன. வெறுமனே 34 சதவீதமானவை மாத்திரமே, ஹிலாரிக்குக் கிடைத்தன. நகரப் புறங்களில் வெறுமனே 35 சதவீத வாக்குகள் மாத்திரமே, ட்ரம்ப்புக்குக் கிடைத்தன. ஹிலாரிக்கு, 59 சதவீதமான வாக்குகள் கிடைத்தன.
இவ்விடயம் இவ்வாறிருக்க, முக்கியமான அடுத்த சம்பவமாக, ‘பிரெக்சிற்’ என அழைக்கப்படும், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் விலகும் சர்வஜன வாக்கெடுப்பு அமைந்தது. ட்ரம்ப்பின் வெற்றியைப் போலவே, இதுவும், நடக்க முடியாத ஒன்று எனக் கருதப்பட்டது. கருத்துக்கணிப்புகளும் அவ்வாறு கூறின. ஆனால் இறுதியில், வெளியேற வேண்டுமென, வாக்களிப்பு முடிவுகள் வெளியாகின. ஆனால், அந்த வாக்களிப்பில், வெளியேற வேண்டாமென, இலண்டன் வாக்களித்தது. ஒட்டுமொத்தமாக, வெளியேற வேண்டுமென்பதற்கு 51.9 சதவீத ஆதரவு கிடைக்க, இலண்டனோ, வெளியேற வேண்டாமென 59.9 வாக்குகளால் வாக்களித்தது. பிரதான நகரங்களிலும் இதே நிலைமை தான் காணப்பட்டது.
மேலே கூறப்பட்ட 3 சம்பவங்களும், உலகில் கடும்போக்கு வலதுசாரித்துவத்தின் எழுச்சிக்கான உதாரணங்களாகக் கருதப்படுகின்றன. அவை மூன்றுமே, ஒரே மாதிரியான அடிப்படையைக் கொண்டிருக்கின்றன: மாபெரும் நகரங்களில், அந்தக் கடும்போக்கு வலதுசாரித்துவம் நிராகரிக்கப்படுகிறது என்பது தான் அது. இது, சிந்திக்க வைக்கிறது. இதற்குப் பின்னால், நகரங்களில் அதிகமாகக் காணப்படுவதாகக் கூறப்படும் கல்வியறிவு தான் காரணமா அல்லது வேறேதும் காரணங்கள் உள்ளனவா என்பதே, தற்போதுள்ள கேள்வி. கல்வியறிவு என்பது குறிப்பிடத்தக்க ஒரு காரணமாக இருந்தாலும், அதைவிட முக்கியமானதொரு காரணமாக, வளப்பங்கீடு, அபிவிருத்தியில் காணப்படும் பாகுபாட்டைக் குறிப்பிட முடியும்.
சிவாஜி திரைப்படத்தில், சுஜாதா எழுதிய வசனமொன்று, “பணக்காரன், மேலும் பணக்காரன் ஆகிக் கொண்டிருக்கிறான். ஏழை, இன்னும் ஏழையாகிக் கொண்டிருக்கிறான்” என்ற அர்த்தத்தில் அமையும். அதைப் போன்று தான், மாபெரும் நகரங்களும், மேலும் நவீனமயமாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால், நகரங்களைத் தாண்டியிருக்கிற சில கிராமப்புற மக்கள், தாங்கள் ஒதுக்கப்படுவதாக உணர்கிறார்கள். கிராமப்புற மக்களைப் பொறுத்தவரை, தாங்கள் ஒதுக்கப்படுவதிலிருந்து தங்களைக் காப்பாற்ற உறுதியளிக்கும் ஒருவருக்கு வாக்களிக்கத் தயாராக இருக்கிறார்கள். அவர்களது வாழ்க்கைகளைப் பற்றிய கேள்விகள் பல இருக்கும் போது, அவர்கள் வாக்களிக்க எண்ணும் நபர், கடும்போக்கு வலதுசாரியா, பெண்களைக் கீழ்த்தரமாகக் கருதுபவரா, சிறுபான்மையினரை ஒடுக்கக்கூடியவரா என்பதெல்லாம், இரண்டாம் பட்சமாக மாறிவிடுகின்றன.
இதில், கிராமப்புறங்களில் கல்வியறிவு, அனேகமாகக் குறைவாக இருப்பதால், அவர்களை இலகுவாக ஏமாற்றுவது இலகுவாகிவிடுகிறது. உதாரணமாக, டொனால்ட் ட்ரம்ப்பின் அனேகமான தேர்தல் வாக்குறுதிகள், உயர் 1 சதவீதம் என அழைக்கப்படும் செல்வந்தர்களை இலக்கு வைத்தே காணப்பட்டன. சாதாரண மக்கள், அவரது தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியத்துவம் பெற்றிருக்கவில்லை. ஆனால், அந்த மக்களைச் சென்று பார்க்கும் போது, அந்த மக்களின் இரட்சகனாகத் தன்னைக் காட்டிக் கொண்டார். அந்த மக்களும் நம்பினர். இலங்கையிலும் கூட, இந்த நிலைமையை அவதானிக்க முடியும். தற்போதைய நிலையில் தேர்தலொன்று நடைபெற்றால், தற்போதைய அரசாங்கம், அனேகமாக வெற்றிபெறும். அந்த நம்பிக்கை காணப்படுகிறது. ஆனால், கிராமப்புற மக்கள், ஒன்றிணைந்த எதிரணி என்று அழைக்கப்படுகின்ற, கடும்போக்குக் கொள்கைகளைக் கொண்டுள்ளதாக அறியப்படுகின்ற அந்தக் குழுவுக்கு வாக்களிப்பர் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அதிக கிராமப்புற மக்களைப் பொறுத்தவரை, பேச்சுச் சுதந்திரம், மனித உரிமைகள் எல்லாம், தமது வாழ்வாதாரத்துக்குப் பின்னர் தான். வாழ்வாதாரத்தைப் பற்றியே, அவர்களது பிரதான கவனம் காணப்படும். இவற்றுக்கெல்லாம் இருக்கும் முக்கியமான காரணம், கிராமப்புறங்கள், அரசியல்ரீதியாகப் பிரதிநிதித்துவப்படுத்தப்படாமையும் அமைகிறது. நகரங்கள் என்ன தான், தாராளவாதக் கொள்கைகளையும் பல்கலாசார வாழ்க்கையையும் கொண்டு மிளிர்கின்ற போதிலும், கிராமப்புற மக்களோ, அவற்றைத் தமது எதிரிகளாக எண்ணுகின்றனர். இலங்கையிலும், அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து, அதன் செயற்பாடுகள் குறித்து, நகர மக்களுக்கு இருக்கும் எதிர்ப்பை விட, கிராமப்புற மக்களுக்கான எதிர்ப்பு அதிகமாக உள்ளது.
நவீன அரசியலென்பது, விழுமியங்களைக் காப்பதற்காக, விட்டுக்கொடுப்புகளுக்குப் பெயர்போன அரசியலாகும். இந்த வகையான அரசியலை, ஐ.அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா, இலங்கையின் தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடம் காணலாம். அவர்களைப் பொறுத்தவரை, அரசியலில் ஒருமித்த கருத்துகளைப் பெறுவது கடினமென்ற யதார்த்தத்தை அறிவர். அதன் காரணமாக, ஒரு விடயம் வெற்றிபெற வேண்டுமாயின், விட்டுக்கொடுப்புகள் அவசியமென்பதை அவர்கள் அறிவர். மறுபக்கமாக, கிராமப்புற மக்கள் விரும்பும் அரசியலென்பது, எதையும் நேரடியாக, வெளிப்படையாக எதிர்கொள்ளும் அரசியல். விட்டுக்கொடுப்புகளை விட, உறுதியாக நின்று, ஒரு காரியத்தைச் சாதிப்பர் என்ற எண்ணம். ஏனென்றால், மேலே கூறப்பட்ட விட்டுக்கொடுப்பு அரசியலில், கிராமப்புறங்கள் கோரிநிற்கும் பாரிய மாற்றமென்பது சாத்தியப்படாது. எனவே தான், டொனால்ட் ட்ரம்ப், மஹிந்த ராஜபக்ஷ, பொரிஸ் ஜோன்சனும் நைஜல் பராஜும் (இங்கிலாந்தில், பிரெக்சிற்-இன் நாயகர்கள்) போன்றோரை, கிராமப்புற மக்கள், அதிகமாக நம்புகிறார்கள்.
இவ்வாறு, கடும்போக்கு வலதுசாரிகளின் (இதில் இலங்கையின் ஒன்றிணைந்த எதிரணி, கடும்போக்கு வலதுசாரித்துவத்தின் பண்புகளைக் கொண்ட, இடதுசாரிகளையே கொண்டது) எழுச்சியைக் கட்டுப்படுத்த வேண்டுமானால், அபிவிருத்தியும் அரசியலும் மாற்றங்களும், கிராமப்புற மக்களையும் சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டும். இல்லாவிடில், டொனால்ட் ட்ரம்ப், மரின் லு பென் போன்றோரைப் போன்று, வெற்றிகள் தொடர்ந்து கிடைத்துக் கொண்டேயிருக்கும் என்பதே யதார்த்தம் -
tamilmiirror'lk 27 04 2017புதிய அரசியல் சாசனத்திற்கான சரித்திர பயணம் (06, 07)
புதிய அரசியல் சாசனத்திற்கான சரித்திர பயணம் (06, 07)
( ஆர். ராம்)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் வழிநடத்தல் குழுவின் உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனின் பதிவைத் தொடர்ந்து ஜே.வி.பி.தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவின் பதிவு வருமாறு,
கேள்வி:- தேசிய அரசாங்கம் உருவான பின்னர் முன்னெடுக்கப்பட்டு வரும் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தற்போது எந்த மட்டத்தில் உள்ளது?
பதில்:- பாராளுமன்றம் அரசியலமைப்பு சபையாக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு தொடர்பில் அரசியலமைப்பு சபையினால் நியமிக்கப்பட்ட குழுக்கள் அரசியலமைப்பில் உள்ளடங்கும் பரந்துபட்ட பல காரணிகள் தொடர்பில் ஆராய்ந்து வருகின்றன. முக்கிய அம்சங்களாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையில் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படுதல் உள்ளிட்ட காரணிகள் குறித்து இறுதி தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்படவில்லை.
கேள்வி:- புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கான வழிநடத்தல் குழுவினால் நியமிக்கப்பட்ட ஆறு உப குழுக்களும் அறிக்கைகளை வழங்கியுள்ளன. அவற்றின் பிரகாரம் நீங்கள் மேற்கொண்டுள்ள தீர்மானங்கள் என்ன?
பதில்:- அறிக்கை வழங்கிய உப குழுக்கள் ஆறுக்கும் தனிப்பட்ட பகுதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தன. அது குறித்து அவர்கள் தந்த அறிக்கையினை இறுதி தீர்மானமாகவும் கொள்ள முடியாது. ஒவ்வொரு காரணங்கள் தொடர்பில் எடுக்கக்கூடிய மாற்று நடவடிக்கைகள் குறித்தே அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன. இது தொடர்பில் பாராளுமன்ற விவாதம் ஒன்றை நடத்திய பின்பே இறுதி தீர்மானத்தினை எடுக்கவுள்ளோம்.
கேள்வி:- தற்போது தந்துள்ள அறிக்கையில் குறைபாடுகள் உள்ளதா? அது குறித்து மக்கள் விடுதலை முன்னணியின் பரிந்துரைகளைக் கொண்டிருக்கின்றதா?
பதில்:- உபகுழுக்களின் அறிக்கைகளில் கூறப்பட்டுள்ள விடயங்கள் இறுதி தீர்மானம் அல்ல. சில விடயங்கள் குறித்து பல்வேறு மாறுபட்ட வடிவங்களில் விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதால் இது விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய அறிக்கைகளாக உள்ளன.
கேள்வி:- அனைத்துக்கட்சிகளும் புதிய அரசியலமைப்பு உருவாக்குதற்கான பணியில் பங்கெடுத்துள்ள நிலையில் பிரதான செயற்பாடுகளை கொண்டுள்ள வழிநடத்தல் குழவில் அங்கம் வகிக்கும் சிலர் புதிய அரசியலமைப்பு வேண்டாம் என்ற நிலைப்பாட்டில் உள்ளனர். மறுபுறத்தில் 19திருத்தங்களுக்கு உட்பட்டுள்ள 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பில் மேலும் திருத்தங்களைச் செய்து அதனை அமுல்படுத்தலாம் என்றும் பரிந்துரைகளை கூறுகின்ற நிலையில் உங்கள் கட்சி என்ன நிலைப்பாட்டில் உள்ளது?
பதில்:- அரசியலமைப்பு என்பது ஒரு நாட்டின் சமூக, பொருளாதார நடைமுறைகளுக்கு பாதுகாப்பளிக்கும் மூல சாசனமாகும். அதனால் தான் சமூக, பொருளாதார செயற்பாடுகள் மாற்றம் பெறும் போதுதான் அதற்கமைவாக அரசியலமைப்பும் மாற்றம் செய்யப்படும். 1949 சீன புரட்சியின் பின்னர் 1950 ஆம் ஆண்டில் புதிய கொள்கைகளின் பிரகாரம் புதிய யாப்பொன்று வகுக்கப்பட்டது.
1917 ரஷ்ய பொருளாதாரத்திற்கு பொருத்தமான அரசியலமைப்பு கொண்டுவரப்பட்டது. 1959ஆம் ஆண்டில் கியூப புரட்சியின் பின்பும் அரசியலமைப்பு மாற்றம் செய்யப்பட்டது. ஆகவே சமூக பொருளாதார மாற்றங்களின் சட்டரீதியிலான பாதுகாப்பு என்றே அரசியலமைப்பினைக் கருதவேண்டும்.
எமது நாட்டில் உருவாகும் அரசியலமைப்பும் செல்வந்த பொருளாதார கொள்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலேயே புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும். இலங்கை நாட்டின் அரசியலமைப்பு செல்வந்த வகுப்புக்களை பாதுகாப்பதாக இருக்கின்றபோதும் அதில் சில மாற்றங்களை செய்யவேண்டும் என்பதை மையப்படுத்தியே நாம் போராட்டங்கள் செய்துவருகின்றோம்.
அரசியலமைப்பு மாற்றம் குறித்து பார்க்கின்ற போது 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பு தற்போது 28 வருடங்கள பழமையானதாகியுள்ளது. இதுவரையில் இந்த அரசியலமைப்பு 19 முறை திருத்தப்பட்டுள்ளது.
அதில் 17 திருத்தங்கள் அதிகாரங்களை தக்க வைத்துக்கொள்ளும் நோக்கில் செய்யப்பட்ட திருத்தங்களாகின்றன. இரு தடவைகள் மாத்திரமே ஜனநாயகத்தினை தக்க வைத்துக்கொள்ளும் வகையில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக 17,19 ஆவது திருத்தங்களே ஜனநாயகத்தை தக்கவைத்துக்கொள்வதற்காக செய்யப்பட்டவையாகின்றன.
இவ்வாறான திருத்தங்களுக்கு உட்பட்டுள்ள தற்போதைய அரசியலமைப்பானது திரிபு படுத்தப்பட்ட அரசியலமைப்பாகவே உள்ளது. எனவே தற்போதைய அரசியலமைப்பில் சமூக, பொருளாதார காரணிகள் உள்ளடங்களான மாற்றங்கள் அவசியமாகின்றன.
கேள்வி:- தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள செயற்பாடுகளின் பிரகாரம் உருவாக்கப்படும் அரசியலமைப்பில் சமஷ்டி என்ற வார்த்தை பிரயோகத்தை பயன்படுத்தி கட்டமைப்புக்களை உருவாக்குவதா? அல்லது ஒற்றையாட்சி என்ற வார்த்தையை மாற்றாது அதனை மையப்படுத்தி உருவாக்குவதா என்பது பாரிய பிரச்சினையாக காணப்படுகின்றது. ஆகவே அதிகாரப் பகிர்வுக்கட்டமைப்பு, அதற்கான வார்த்தைப் பிரயோகம் தொடர்பில் ஜே.வி.பி எவ்வாறான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றது ?
பதில்:- ஒற்றையாட்சி முறைமை, சமஷ்டி முறைமை என்பன ஒரு நாட்டின் தன்மையை பொறுத்தே அமையும். அவ்வாறான எந்த முறையிலும் எமது நாட்டு மக்களின் பிரச்சினை தீர்ந்துவிடாது. வடக்கில் வாழும் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியலமைப்பினால் மாத்திரம் தீர்வு கண்டுவிட முடியாது. பொதுவாக எமது நாட்டில் சாதாரண மட்ட மக்களுக்கு அரசியலமைப்பின் ஊடாக தீர்வு கிடைக்காது.
உதாரணமாக கூறுவதாயின் சாதாரண மக்களுக்கு காணப்படும் சுகாதார பிரச்சினைகளுக்கு அரசியலமைப்பில் தீர்வு இல்லை. தமிழ்,சிங்கள, முஸ்லிம் பேதங்கள் இன்றி வாழும் மீனவ குடும்பங்களின் வாழ்வாதார பிரச்சினைக்கு அரசியலமைப்பினால் தீர்வு காண முடியாது.
எனவே அடிமட்ட பொருளாதார நிலையில் வாழும் மக்களை மேம்படுத்த சமூக, பொருளாதார மாற்று திட்டங்கள் வேண்டும். ஆனால் சிங்கள, முஸ்லிம் மக்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகள் போன்றல்லாது தமிழ் மக்கள் மாத்திரம் முகம்கொடுக்கும் நெருக்கடிகள் உள்ளன.
அதில் முக்கியமானது மொழிப்பிரச்சினையாகும். அதேபோல் கலாசார சிக்கல்களும் உள்ளன. ஆகவே அரசியலமைப்பு எந்த இனத்தவருக்கும் பாதகத்தினை ஏற்படுத்துவதாக அமையக்கூடாது. அதனால் மக்களின் பொது பிரச்சினைகளுக்கு அரசியலமைப்பில் தீர்வு கிட்டும் என்று நாம் நினைக்கவில்லை.
கேள்வி:- தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகள் தமிழ் மக்கள் ஏழு தசாப்தங்களாக முகங்கொடுக்கும் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதாயின் புதிய அரசியலமைப்பின் ஊடாகவே முடியும் என்ற நிலைப்பாட்டில் உள்ளனரே?
பதில்:- வடக்கு மாகாண சபை உருவானது. அவர்களுக்கான அதிகாரங்கள் போதுமானதல்ல என்று அவர்கள் தர்க்கிக்கலாம். ஆனால் மத்திய அரசாங்கத்தில் உள்ள அதிகாரங்களில் சில பகுதிகள் மாகாண சபைகளுக்கு பகிரப்பட்டுள்ளது. அவ்வாறிருக்கையில், மாகாண சபை அமைக்கப்பட முன்னரும் தமிழ் மக்கள் பிரச்சினை தீர்ந்துவிடவில்லை. அமைக்கப்பட்ட பின்னரும் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு விடவில்லை என்பதே உண்மையான நிலைப்பாடாகும்.
அதிகாரத்தினை தந்தால் பிரச்சினைகளை தீர்க்க முடியும் என்று தர்க்கிக்கவும் முடியும். இருப்பினும் அதிகாரத்தை பகிர்வதல்ல முக்கிய பிரச்சினை.
சமூக பொருளாதார சிக்கலுக்குள் அடி மட்டத்தில் வாழும் தமிழ், சிங்கள், முஸ்லிம் மக்கள் உள்ளனர். செல்வந்தர்களாக வாழும் தமிழ், சிங்கள் குழுக்களும் உள்ளன. அந்தக்குழுக்களே பிரச்சினைகளை சிக்கல்களை உருவாக்கியுள்ளன.
இந்த விடயத்தை சற்றே விரிவாக கூறுவதாயின், வடக்கு, கிழக்கில் தற்போது யுத்தம் இல்லை. தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களுக்கு இடையில் பிரச்சினைகள் இல்லை.
ஆனால் தமிழ், சிங்கள, முஸ்லிம் மேல் வகுப்பினருக்கும் கீழ் வகுப்பினருக்கும் இடையில் பிரச்சினைகள் உள்ளன என்பதே நிதர்சனமாகும். ஆகவே, மேல் வகுப்பினரிடத்திலிருந்து கீழ் வகுப்பினருக்கு அதிகாரத்தை பெற்றுக்கொடுக்கும் போராட்டத்திலேயே நாம் உள்ளோம்.
அவ்வாறிருக்கையில் இந்த வகுப்புவாதத்தை தக்க வைத்துக்கொள்வதற்காகவே மக்களை தொடர்ந்தும் பிளவுபடுத்துவதற்கு வெகுவான முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. அதற்கு சில உதாரணங்களை என்னால் கூறமுடியும்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் அமைச்சரவையில் பார்க்கின்ற போது சம்பிக்க ரணவக்க, விமல் வீரவன்ச, தொண்டமான், ரிஷாட், ஹக்கீம், டக்ளஸ் இருந்தனர். இவர்கள் சகலரும் ஒரு வகுப்பாக இருந்து கடந்த அரசாங்கத்தின் மோசடிகளுக்கு துணை போனார்கள். 18ஆவது திருத்தத்திற்கு கையுயர்த்தினார்கள். அவ்வாறானவர்களே தற்போது மக்களை முரண்படச் செய்கின்றனர்.
மற்றுமொரு உதாரணத்தை பார்க்கலாம். ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஜனவரி 8ஆம் திகதி மாலை அதிகார மாற்றத்திற்காக முன்னாள் ஜனாதிபதியை சந்திக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அலரிமாளிகைக்க்கு சென்றார். அவர்களுக்கு இடையில் தரகர் வேலை பார்ப்பவர் யாரென்று பார்த்தால் திருகுமார் நடேசன். அவ்வாறாயின் அவர்களிடையில் பிரிவினைகள் இல்லை
மேல் வகுப்பினரிடையே பிரிவினைகள் இல்லை. ஆகவே தான் கீழ் வகுப்பினர் அவர்களின் வலைக்குள் சிக்காது அனைத்தினருக்கும் பிரிவினைகள் அவசியம் இல்லை அனைவரும் ஒன்றுபட்டு வாழுங்கள் என்று அனைத்தின மக்கள் மத்தியிலும் நாம் கூறுகின்றோம்.
தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் நாம் இந்த நாட்டின் இரண்டாம் தரப்பு என்று சிந்திக்க இடமில்லாத வகையில் அவர்களின் உரிமைகள் பேணப்பட வேண்டும். சகலரும் இலங்கையர் என்று பார்க்கின்ற ஒரு அரசியலமைப்பு மாற்றத்திற்கு நாம் இணங்குகின்றோம்.
அதனை விடுத்து அடிமட்ட தமிழ்,சிங்கள, முஸ்லிம் மக்களின் பிரச்சினைளுக்கு புதிய அரசியலமைப்பு தீர்வாக அமையும் என்ற நிலைப்பாட்டில் நாம் இல்லை.
கேள்வி:- உருவாக்கப்படும் புதிய அரசியலமைப்பில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையினை ஒழித்து பாராளுமன்றத்திற்கான அதிகாரங்களை வலுப்படுத்துவதை ஆதரிக்கின்றீர்களா?
பதில்:- உலகில் மக்கள், சமூகமாக வாழ்வதற்கு எத்தனித்த காலத்திலிருந்து தனிப்பட்ட தலைவர் ஒருவர் இருந்தார். அவரால் மக்களுக்குரிய பூமி, திருமணம் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்தும் அவரே தீர்மானிப்பவராகவும் இருந்தார்.
அவ்வாறு இருந்த சமூகம் தான் தனிப்பட்ட ஒருவருக்கு இருந்த அதிகாரத்தினை மக்கள் பிரதிநிதிகள் பலருக்கும் பகிர்ந்து கொடுக்கும் ஒரு கட்டமைப்பினை உருவாக்கும் அளவுக்கு பரிணாம வளர்ச்சி கண்டிருக்கின்றது. அது சமூக வளர்ச்சியில் ஒரு சிறப்பாகும்.
அவ்வாறான முறைமையை மாற்றி 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பில் மக்கள் பிரதிநிதிகளின் சபையினை முழுமையாக கையகப்படுத்திக்கொள்ளும் வகையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை கொண்டுவரப்பட்டது.
சமூக பயணித்தமைக்கு முரணான ஒரு விடயமாகவே அச்செயற்பாடு அமைந்தது. அவ்வாறில்லாது பொதுக் கலந்துரையாடலின் பிரகாரம் சட்டங்கள் வகுக்கப்படுமாயின் அது மிகவும் சிறந்ததொரு செயற்பாடாகும்.
அதனடிப்படையில் நிறைவேற்று அதிகார முறைமையை தவிர்த்து பாராளுமன்றத்திற்கு அதிகாரத்தினை வழங்குவது சிறந்ததென நாம் கருதுகின்றோம்.
கேள்வி:- பிரதமருக்கு அதிகாரங்கள் வழங்கப்படும் போதும் நிறைவேற்று அதிகாரமுள்ள பிரதமரை உருவாக்குவதாக அமைந்துவிடுமல்லவா?
பதில்:- எமது நாட்டின் ஆட்சியாளர்கள் சகல சந்தர்ப்பங்களிலும் அதிகாரங்களை தன்வசப்படுத்திக்கொள்ளவே முயற்சிக்கின்றனர். அதனால் தான் தற்போது உருவாக்கப்படும் அரசியலமைப்பின் ஊடாகவும் பிரதமர் அதிக அதிகாரங்களை தமக்கு கீழ் கொண்டுவருவதற்கு மறைமுகமாக முயற்சிக்கின்றார். மீண்டும் ஒருமுறை பிரதமராக வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அவர் உள்ளார். பிரதமரின் அந்த முயற்சியை தோற்கடிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் உள்ளோம். அரசியலமைப்பு சபையில் முன்னெடுக்கப்படும் பேச்சுவார்த்தைகளின் போது எமது நோக்கத்தினை மையப்படுத்திய தலையீடுகளை செய்வோம்.
கேள்வி:- அவ்வாறாயின் மத்தியில் குவிக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் அடிமட்டம் வரையில் அல்லது உள்ளூராட்சி மன்றங்கள் வரையில் பகிரப்படவேண்டும் என்கின்ற போது எவ்வாறு பகிரப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டில் மக்கள் விடுதலை முன்னணி உள்ளது?
பதில்:- எமது கொள்கையின் பிரகாரம் தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண நாம் முன்மொழிந்த திட்டத்தில் மக்கள் சபை ஒன்றினை பரிந்துரைத்திருந்தோம். அந்த மக்கள் சபை இனம், மொழி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அமையாது.
அந்த சபையானது தனி மனிதன் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையிலான ஒரு சபையாக அமைய வேண்டும். உதாரணமாக மகாவலி திட்டம் அமைக்கப்பட்ட போது மகாவலி அதிகார சபைக்கு சகல அதிகாரங்களும் வழங்கப்பட்டன. அதுபோன்று யுத்தத்தினால் பாதிக்கப்பட வடக்கு பகுதிகளுக்கும் முழுமையான அவதானம் செலுத்தி அப்பகுதிகளை ஏனைய பகுதிகளுக்கு நிகரான பொருளாதார மட்டத்திற்கு மேலுயர்த்த வேண்டும். மலையகத்திற்கும் இந்த விடயம் பொருந்தும்.
அவற்றை விசேட வலயங்களாக பிரகடனப்படுத்தி அதிகார சபைகள் ஊடாக அபிவிருத்திகளை மேற்கொள்ள வேண்டும். என்பதே எமது கொள்கையாகவுள்ளது. ஆனால் இந்த தலைவர்களிடத்தில் அதனை எதிர்பார்க்க முடியாது. இவர்கள் அதிகாரங்களை பகிர்ந்து மாகாண சபைகளை வலுவாக்குவதால் தேசிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்று மட்டுமே சிந்திக்கின்றனர். அந்த நிலைப்பாட்டினை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள தயாரில்லை.
கேள்வி:- புதிய அரசியலமைப்பில் மாகாண ஆளுநர்களின் அதிகாரங்களை குறைத்து அவர்களை மத்திய அரசாங்கத்தின் கௌரவ பிரதிநிதிகளாக மாத்திரம் அமர்த்த வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதல்லவா?
பதில்:- இந்த விடயம் இன்னமும் உத்தேச மட்டத்திலேயே உள்ளது. ஆனால் மாகாண சபைகளுக்கு மேலதிக அதிகாரங்கள் வழங்குவதாயின் ஆளுநரின் தன்மை எவ்வாறானது, மாகாண சபைகள் இணைவதற்கு இடம்கொடுக்க வேண்டுமா, அதிக அதிகாரங்கள் நிறைந்த மாகாண சபைக்கும் மத்திய அரசுக்கும் உள்ள தொடர்புகள் எவை என்ற விடயங்கள் குறித்து தீர்க்கமாக ஆராயப்பட வேண்டும். இவை பாரதூரமான காரணிகள் என்றே நாம் கருதுகின்றோம். ஆகவே அரசியலமைப்பின் மற்றைய முக்கிய விடயங்களுடன் சேர்த்து இவற்றையும் ஆராய வேண்டும்.
கேள்வி:- வடக்கு, கிழக்கு இணைப்புக்கு எதிராக ஜே.வி.பியே வழக்கு தாக்கல் செயது அதனை தனித்தனி மாகாணங்களாக மாற்றியது. அவ்வாறிருக்கையில் தமிழ் மக்களின் அதிகளவான ஆணை பெற்ற கூட்டமைப்பு தேசிய பிரச்சினைக்கான தீர்வில் வடக்கு கிழக்கு இணைப்பு முக்கியமென வலியுறுத்தி வருகின்ற நலையில் அதற்கு நேர்மாறான நிலைப்பாட்டினையல்லவா நீங்கள் கொண்டிருக்கின்றீர்கள்?
பதில்:- வடக்கு, கிழக்கு இணைவிற்கு என்ன காரணம் முன்வைக்கப்படுகின்றது என்று பார்க்கையில் அந்த மாகாண சபைகள் இரண்டும் அருகில் அமைந்திருப்பதா அல்லது அபிவிருத்தி மட்டத்தில் வேறுபாடு உள்ளமையா? இவை எதுமே அல்ல.
உண்மையிலேயே இனவாதத்தினை மையப்படுத்திய கோரிக்கை என்றே கூற வேண்டும். மக்கள் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமாயின் அலகுகள் சிறிதாக வேண்டும். அப்போதுதான் மக்களுடன் நெருக்கமாக இருந்து பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுக்க முடியும். வடக்கு, கிழக்கு இணைப்புக்கு தமிழ் மக்கள் அதிகமாக வாழ்கின்றனர் என்று காரணம் கூறப்படுகின்றது.
அது உண்மையல்ல. வடக்கு, கிழக்கிற்கு வெளியிலேயே தான் 51.8 வீதமான தமிழ் மக்கள் வாழ்கின்றனர். அதனால் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களுக்கு மாத்திரம் பிரச்சினைகள் காணப்படுகின்றன. ஏனைய மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களுக்கு பிரச்சினை இல்லையெனக் கருதமுடியாது. அம்மக்களின் பிரச்சினைகள் குறித்து என்ன நிலைப்பாடு என்பது தொடர்பாகவும் கவனம் செலுத்த வேண்டும். வடக்கு, கிழக்கு இணைப்பு என்பது தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதை விடவும் கூட்டமைப்பின் உள்ளே காலம் காலமாக முன்நிறுத்தப்பட்டு வந்த எண்ணக்கருவேயாகும். அவர்கள் அந்த எண்ணக்கருவிற்குள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.
கேள்வி:- அப்படியென்றால் மக்கள் விடுதலை முன்னணி தொடர்ந்தும் வடக்கு கிழக்கு இணைப்புக்கு எதிராக போர்க்கொடி பிடித்துக்கொண்டேதான் இருக்குமா?
பதில்:- அரசியலமைப்பு பாராளுமன்றத்திற்கு வருகின்ற போது தான் அது குறித்து தீர்மானிக்க முடியும். ஆனால் புதிய அரசியலமைப்பு மீதான வாக்கெடுப்பின் வெற்றி ஜனாதிபதி தேர்தலில் கிடைத்த வெற்றி போன்று அமைய வேண்டும் என்பதில்லை.
கேள்வி:- புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையை மக்கள் விடுதலை முன்னணி கொண்டிருக்கின்றதா?
பதில்:- நாட்டில் பரந்து வாழும் மக்களின் அங்கீகாரம் புதிய அரசியலமைப்பிற்கு கிடைக்கப்பெற வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் ஒரு புதிய குழப்பம் ஏற்படும். மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற கட்சிகளுக்கு அரசியலமைப்பு குறித்து பேச முடியாது போய்விடும். அதனால் அரசியலமைப்பை நிறைவேற்றிக்கொள்வது குறித்து ஆழமாக சிந்திக்க வேண்டும்
1972 ஆம் ஆண்டு அரசியலமைப்பு மூன்றிலிரண்டு பாராளுமன்ற பெரும்பான்மையினால் நிறைவேற்றப்பட்டது. 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பு ஆறில் ஐந்து என்ற பாராளுமன்ற பெரும்பான்மையை கொண்டு நிறைவேற்றிக்கொள்ளப்பட்டது.
வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை நிறைவேற்றிக் கொள்ள முடியாத ஒப்பந்தம் ஒன்றை முறையாக கைச்சாத்திட முடியாத அரசாங்கத்திடம் மக்கள் அரசியலமைப்பொன்றினை எதிர்பார்ப்பது சற்று கடினமானதாகும்.
கேள்வி:- தேசிய அரசாங்கத்தின் வாக்குறுதியின் பிரகாரம் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் நிகழாது போவதற்கு சந்தர்ப்பங்கள் உள்ளனவா?
பதில்:- அரசியலமைப்பினை பார்க்கிலும் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காண்பதே எமது மிகப்பெரிய இலக்காகும். அதற்கு தீர்வு காண முடியாத ஒரு அரசாங்கம் எவ்வாறு அரசியலமைப்பு போன்ற கடினமான விடயத்தில் தீர்வு காணும்.
தேசிய பிரச்சினைக்கு தீர்வினை இந்த அரசாங்கம் வழங்க முடியும் என நம்ப முடியுமா? இந்த எல்லா ஆட்சியாளர்களும் தமது பதவியை பாதுகாப்பதற்கு இனவாதத்தினை தூண்டியுள்ளனர்.
யாழ்ப்பாணம் நூலகத்தினை இவர்களே தீயிட்டு கொளுத்தினார்கள். 1983 ஆம் ஆண்டில் தமது அதிகாரத்திற்காகவே கருப்பு ஜூலையை ஏற்படுத்தினார்கள். தமது அதிகாரத்திற்கான அடிமட்ட செயற்பாடுகளை முன்னெடுத்த தலைவர்களிடத்தில் எவ்வாறு நாம் தேசிய பிரச்சினைக்கு தீர்வினை எதிர்பார்ப்பது.
1948 சுதந்திரத்தின் பின் பிரதான கட்சிகள் இரண்டும் வீதியமைப்பு உள்ளிட்ட விடயங்களில் திருத்தம் செய்தாலும் நீதிக் கட்டமைப்பு, பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்களில் சிறந்த மாற்றங்கள் எவையும் ஏற்படுத்தப்படவில்லை. அதற்கு பிரதான கட்சிகள் இரண்டின் தலைமைத்துவங்களுக்கு முடியாது போனது. அவர்களின் யுகம் முடிந்துவிட்டது. உலகில் ஒரு யுகம் முடிகின்ற போது இவ்வாறுதான் திருட்டுக்களும் பொருளாதார நெருக்கடிகளும் இடம்பெறும்.
ஆகவே பணிகள் கடினமாக இருப்பினும் மக்களுக்கான தீர்வு பெற்றுகொள்ளப்படத்தான் வேண்டும். எனவே தமிழ் மக்களுக்கும் இதற்காக எம்முடன் இணைந்து போராடுவதற்கு முன்வாருங்கள் என்று அழைப்பு விடுக்கின்றோம்.
கேள்வி:- புதிய அரசியலமைப்பு நிறைவேறுவது குறித்து நீங்கள் சந்தேகத்துடன் இருக்கின்றீர்கள். அவ்வாறானால் வழிநடத்தல் குழு, உப குழுக்கள் உள்ளிட்டவற்றில் அங்கத்துவம் பெற்றுள்ள உங்களுக்கும் கட்சிக்கும் பொறுப்புக் கூறுதலிலிருந்து விலகி நிற்க முடியாதல்லவா?
பதில்:- நாம் முழுமூச்சுடன் முயற்சிப்போம் எமது எல்லைக்கு உட்பட்டு தமிழ்,சிங்கள, முஸ்லிம் மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக அழுத்தம் கொடுப்போம். அதில் மாற்றமில்லை. எவ்வாறாயினும் சிறந்த ஒரு மாற்றத்திற்கு வித்திட வேண்டும் என்பதே எமது இலக்காகும். அதனை அடைவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.
கேள்வி:- புதிய அரசியலமைப்பு அமுல்படுத்தப்படுமா அமுல்படுத்தப்படாதா என்ற இக்கட்டான நிலைமை ஏற்பட்டுள்ள நிலையில் மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு மக்கள் விடுதலை முன்னணி எவ்வாறான திட்டத்தினை கொண்டுள்ளது?
பதில்:- மக்கள் பிரச்சினையை இன பாகுபாட்டின் பிரகாரம் பார்க்கவில்லை பொதுவாக சமூக பொருளாதார கொள்கையில் ஒரு சிறந்த மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். அவ்வாறு இல்லாவிட்டாலும் யாராலும் தொழில் வாய்ப்புக்களை அடைய முடியாது.
கடந்த ஆட்சியில் அரசாங்க அலுவலகங்கள் நிரப்பப்பட்டன. ஆனால் அடைந்த பயன் எதுவும் இல்லை. நாடு கடனில் இறுகியுள்ளது. கடன் என்பது நாடு என்றும் நாட்டின் மீதுள்ள சுமையாகவே இருக்கும். தற்போது நாட்டில் மேல் வகுப்பு மக்களுக்கும் கீழ்வகுப்பு மக்களுக்கும் இடையில் நாட்டின வருமானம் பிரிந்து செல்வதில் மிகப்பெரிய வேறுபாடுகள் உள்ளன. அதனை சரிபடுத்துவதே எமது நோக்கமாகும். அவ்வாறு இல்லாவிட்டால் மக்கள் பிரச்சினைக்கு தீர்வு கிட்டாது. அதனால் ஆட்சி மாற்றம் மட்டுமின்றி மக்கள் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காகவுள்ள திட்டங்கள் முழுவதையும் மாற்றியமைக்க வேண்டும்.
அரசாங்கத்தில் உள்ள எந்த இனவாத கட்சிகளுக்கும் இடமளிக்காது மக்கள் விடுதலை முன்னணி ஆட்சியை கையிலெடுத்தாலே பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும். எமக்கு வாக்களிப்பவர்கள் இனவாதிகள் அல்ல என்றால் ஆட்சியும் இனவாதம் களைந்ததாக இருக்கும். அதற்கு முன்னதாக நாட்டில் உள்ள சிக்கல்கள் அனைத்தையும் களைவதற்கு நாம் சகலரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
virakesari.lk 17 01 2017
புதிய அரசியல் சாசனத்திற்கான சரித்திர பயணம் (05)
புதிய அரசியல் சாசனத்திற்கான சரித்திர பயணம் (05)
( ஆர். ராம்)தமிழ் மொழியில் ஒற்றை ஆட்சி எனக் கூறப்படுகின்றது. அதன் பிரகாரம் அதிகாரங்கள் அனைத்தும் ஒரு இடத்திலே குவிக்கப்பட்டிருப்பவை அதாவது ஆங்கிலத்தில் யுனிற்றரி (unitary) என்ற சொற்பிரயோகத்திற்கு ஒவ்வான சொல்லாகவே காணப்படுகின்றது.ஏக்கிய ரஜய என்பதன் அர்த்தத்தின் பிரகாரம் அதனை பயன்படுத்துவதில் எமக்கு எதிர்ப்பிருக்கமுடியாது. ஆனால் தமிழில் ஒற்றையாட்சி எனவும்இ ஆங்கிலத்தில் யுனிற்றரி (unitary) எனவும் பயன்படுத்த முடியாது என்பதே எமது நிலைப்பாடு.இருப்பினும் ஏக்கிய ரஜய என்பதன் உண்மையான அர்த்தத்திற்கு அப்பால் 1972ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரைக்கும் ரnவையசல ளவயவந என்பதற்கு இணையாக அச்சொற்பதம் பயன்படுத்தப்பட்டுள்ளதன் காரணத்தால் அச்சொற்பதத்தின் வரைவிலக்கணமும் அதற்கருகிலேயே சொல்லப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.
அதாவது ஏகிய ரஜய என்ற சொற்பதத்தை பயன்படுத்துவதால் அதன் அர்த்தம் ஒரு பிரிக்க முடியாத நாட்டை குறிப்பதாக இருக்கும் என்பது உறுப்புரையில் கூறப்பட வேண்டும். ஆட்சி முறை பற்றி கூறுவதாக அச்சொற்பதம் இருக்கக்கூடாது. ஆட்சிமுறை என்பது ஒற்றையாட்சி என வரக்கூடாது என்பதே என்பதே எமது நிலைப்பாடு.ஆனால் சொற்பிரயோகத்தால் மட்டும் அதனை அடைந்துவிடமுடியாது. ஓஸ்ரியா நாட்டின் அரசியலமைப்பில் ஒற்றையாட்சி என கூறப்பட்டிருந்தாலும் அங்கு சமஷ்டி ஆட்சியே நடைபெறுகின்றது. ஸ்பெயினில் ஒற்றையாட்சி என எழுதப்பட்டிருக்கின்றது. ஆனால் சமஷ்டி ஆட்சிமுறையே நடைபெறுகின்றது.ஆகவே வெறுமனே பெயர்ப் பலகையைப்போட்டுவிட்டு திருப்தி அடைய முடியாது. உள்ளடக்கம் சரியாக அமையவேண்டும். அதற்காக உபயோகிக்கப்படும் சொற்பிரயோகங்களில் நாம் கவனம் செலுத்தாமலில்லை. விசேடமாக உள்ளடக்கப்படும் சொற்பிரயோகங்கள் குறித்து நீதிமன்றங்கள் பொருள்கோடல் செய்யும்போது ஒற்றையாட்சி முறை என நியாயாதிக்கம் செய்யாத வகையிலேயே அமையவேண்டும் என்பதிலும் கவனம் செலுத்துகின்றோம்.
கேள்வி:- சமஷ்டி தீர்வை முன்வைத்து ஆணைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அச்சொற்பதத்தை புதிய அரசியலமைப்பில் நேரடியாக பயன்படுத்துமாறு அழுத்தமளிக்கின்றதா?
பதில்:- சமஷ்டி என்ற சொற்பதத்தை பிரயோகிக்க வேண்டும் என்று நாங்கள் அழுத்தமளிக்கவில்லை. நாம் தற்போது எடுத்துக்கொண்டது திடீர் நிலைப்பாடு அல்ல. பொதுத் தேர்தலுக்கு முன்னதாகவே நான் பகிரங்கமாக கூறியிருந்திருக்கின்றேன். யாழ்ப்பாணத்தில் கஜேந்திரகுமாருடன் நடைபெற்ற விவாதமொன்றிலும் பெயர்ப்பலகைகளால் மட்டும் நம்பிக்கை வைக்கவில்லை. உள்ளடக்கம் சரியாக இருக்க வேண்டும் எனக் கூறியிருக்கின்றேன்.
சமஷ்டி என்பதில் இரண்டு முக்கியமான அம்சங்கள் உண்டு. ஓரு விடயம் சம்பந்தமாக மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட்டால் அந்த விடயம் சம்பந்தமாக மத்தி அதற்கு பின்னர் தலையிடக்கூடாது. அவ்வாறு கொடுக்கப்பட்ட மாகாணத்திற்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை மத்தி தானாகவே திரும்பி பெற்றுக்கொள்ளாதவாறு இருக்க வேண்டும்.
இந்த இரண்டு அம்சங்களும் காணப்படுமாயின் அது சமஷ்டி அடிப்படையிலான ஆட்சி முறையே. இந்த இரண்டு முக்கிய அம்சங்களும் புதிய அரசியலமைப்பில் உள்வாங்கப்படுவதுதான் எமது பிரதான நோக்கமாகவுள்ளது. சமஷ்டி என்ற பெயர்ப் பலகையை மட்டும் எழுதி ஒட்டப்படவேண் டும் என்பது நோக்கமல்ல.
கேள்வி:- புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் பயணத்தில் வடக்குஇ கிழக்கு இணைப்பு சாத்தியமாகுமா?
பதில்:- இந்தப் பயணத்தில் சாத்தியமாகும். ஆனால் உடனடியாக சாத்தியமாகாது. இந்த வருடத்தில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுமாகவிருந்தால் உடனடியாக வடக்குஇ கிழக்கு இணைப்பு சாத்தியமாகாது. அதற்கான சாத்தியக் கூறுகளும் அரிதாகவே உள்ளது என்பது தான் உண்மையான எனது பதிலாகும்.
அதற்கு காரணம் முஸ்லிம்களின் நிலைப்பாடு அதற்கு எதிராக இருக்கின்றது. முஸ்லிம் மக்கள் எடுக்கும் நிலைப்பாடு தொடர்பில் நாம் சரியாக அணுகவேண்டும். அவ்வாறு சரியாக அணுகும் பட்சத்திலேயே தான் சிறிது காலம் தள்ளியேனும் வடக்குஇ கிழக்கு இணைப்பு சாத்தியமாகும்.
ஆகவே நாம் முஸ்லிம்களின் கருத்தை நிராகரித்து வடக்குஇ கிழக்கு இணைக்கப்படவேண்டும் என முரண்டு பிடிப்போமாகவிருந்தால் தமிழ்இ முஸ்லிம் உறவு மேலும் விரிசலடைந்து விடும்.
போர்க்கால சூழலில் தமிழ், முஸ்லிம் உறவு பாதிக்கப்பட்டமையால் தான் தற்போது வடக்குஇ கிழக்கு இணைப்பு உடனடியாக சாத்தியமாகாதுள்ளது. ஆகையினால் யாரையும் குறை கூறிக்கொண்டிருக்காது அடுத்து எவ்வாறு நகரமுடியும் என்பது பற்றி சிந்திக்க வேண்டும்.
வடக்குஇ கிழக்கு இணைப்பு குறித்து முஸ்லிம் தரப்புடனும் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றோம். அவர்களுடைய உத்தியோகபூர்வ நிலைப்பாடு என்பதுஇ இணைப்புக்கு எதிரானது அல்ல. ஆனால் முஸ்லிம் மக்களுக்கு காணப்படும் பலவிதமான பயங்கள்இ சந்தேகங்களின் அடிப்படையில் உடனடியாக இணங்க மறுக்கின்றார்கள்.
ஆகவே குறைந்த காலத்தினுள் வடக்கு, கிழக்கு இணைப்பை பெற்றுக்கொள்வதற்கான பொறிமுறையை வைத்துக்கொண்டு அரசியலமைப்பை உருவாக்க வேண்டும். தமிழ்இ முஸ்லிம் உறவு பாதிக்கப்படாத நிலையிருந்த 1987ஆம் ஆண்டில் 13ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டபோது கூட ஒரு வருடத்தினுள் கிழக்கு மாகாணத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்றே கூறப்பட்டுள்ளது. ஆகவே முஸ்லிம்களின் அங்கீகாரம் இல்லாது அதனை சாத்தியப்படுத்த முடியாது.
தமிழ்இ முஸ்லிம் உறவை சீர்செய்யும் நோக்கில் தான் கிழக்கு மாகாண சபையில் எமக்கு பதினொரு உறுப்பினர்கள் இருந்தபோதும் முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுத்து ஒரு கூட்டாட்சியை நடத்திக்கொண்டிருக்கின்றோம். இவை எல்லாம் இழந்து விட்ட நம்பிக்கையை மீளப்பெறுவதற்கான சில வழிமுறைகள். ஆகவே இந்த அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டதும் வடக்குஇ கிழக்கு உடனடியாக வந்துவிடும் என்று பொய்கூறுவதற்கு நான் விரும்பவில்லை.
கேள்வி:- வடக்குஇ கிழக்கு இணைந்திருக்கின்ற பட்சத்தில் முஸ்லிம்களுக்கு கரையோர நிர்வாக அலகொன்று உருவாக்கப்பட்டு வழங்கப்படவேண்டும் என்பதை தந்தை செல்வா உட்பட அனைத்து தமிழ்த் தலைவர்களும் ஏற்றுக்கொண்டிருந்தார்கள். அந்த நிலைப்பாட்டிலிந்து நீங்கள் விலகி நிற்கின்றீர்களா?
பதில்:- நாங்கள் அந்த நிலைப்பாட்டிலிருந்து மாறவில்லை. முஸ்லிம் பிரதிநிதிகளும் மாறவில்லை. தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும்இ ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் உடன்பாடுகள் எட்டப்பட்டன. அந்த உடன்பாடுகளை நாம் தற்போதும் ஏற்றுக்கொள்கின்றதாக காணப்படுகின்றது.
இருப்பினும் சிலர் தற்போது இணைப்பு இல்லாத நிலையில் அதனைப் பற்றி ஏன் பேசவேண்டும் எனக் கருதுகின்றார்கள். எவ்வாறாயினும் வடக்குஇ கிழக்கு இணைக்கப்படுகின்றபோது தனியான முஸ்லிம் அலகு வழங்கப்படுவதை எதிர்க்கவில்லை. அதற்கு முழுமையான இணக்கம் தெரிவிப்போம். இருப்பினும் அதற்கான உடனடிச் சூழல் இல்லை.
கேள்வி:- தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக திம்பு முதல் ஒஸ்லோ வரையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் ஒன்று காணப்பட்டது. தற்போது உள்ளகஇ சர்வதேச அரசியலில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் அரசாங்கத்துக்கும்இ கூட்டமைப்பிற்கும் இடையிலான நேரடிப்பேச்சுவார்த்தையில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் அவசியமா? தற்போது பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதா?
பதில்:- தற்போது அனைத்துக் கட்சியினரும் ஒன்றாக அமர்ந்து பேச்சுவார்த்தைகளை வழிநடத்தல் குழுவில் நடத்துகின்றோம். இந்த பேச்சுவார்த்தைகள் மிகவும் பகிரங்கமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
சில சமயங்களில் வழிநடத்தல் குழுவின் உறுப்பினர்களுடன் நாங்கள் பேச்சு நடத்தியுள்ளோம். அவ்வாறான பேச்சுக்கள் தான் இடம்பெறுகின்றன. அதனைவிடுத்து அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான நேரடியான பேச்சொன்று ஆரம்பிக்கப்படவில்லை.
தற்போதைய நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் அரசாங்கத்திற்கும் பேச்சுவார்த்தை நடக்கிறது. அதில் மூன்றாவது தரப்பு இருக்கின்றது என்ற தேவை இல்லாத நிலையில் தான் இருக்கின்றோம். ஏனென்றால் நேரடியாகவே நாம் ஒருவரோடு ஒருவர் பகிரங்கமாக பேசக்கூடிய சூழல் இருக்கின்றது.
சர்வதேச சமூகத்திற்கு தமிழ் மக்களுக்கு எவ்வாறான விடயங்கள் வழங்கப்பட வேண்டும் என்பது நன்கு தெரிந்தவிடயம். அதேநேரம் நாம் சர்வதேச சமூகத்துடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கின்றோம். அவர்கள் அரசாங்கத்துடனும் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கின்றோம். அவர்கள் அரசாங் கத்துடனும் பேசுகின்றனர்.
ஆகவே வெளிநாட்டுத்தலையீடு அர
சாங்கஇ கூட்டமைப்பு பேச்சுவார்த்தையில் இருக்கின்றது என்று சிங்கள மக்களுக்கு பயம் காட்ட வேண்டிய தேவை தற்போதைக்கு
இல்லை. எங்களுக்குள்ளே பேசித் தீர்க்க கூடிய நிலைமை இருக்கின்றது என்பது தான் சிறப்பு. ஆனால் சர்வதேசத்தின் முழுமையான ஈடுபாடும் இப்பணிகளில் இருக்கின்றது.
(முற்றும்) virakesari'lk 09 01 2017