26 06 2017

மீண்டும் சர்வதேசத்தை நோக்கி....

கே. சஞ்சயன்

தமிழ் மக்கள் தங்களால் முடிந்தவரை பொறுமையாக இருந்து விட்டார்கள். இனியும் அவர்களால் பொறுமையாக இருக்க முடியாது” என்று, கடந்தவாரம் கொழும்புக்கான பயணத்தை மேற்கொண்டிருந்த இலங்கைக்கான சுவீடன் தூதுவர் ஹரோல்ட் சான்ட்பேர்க்கிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்  இரா.சம்பந்தன் கூறியிருந்தார்.

இலங்கை, இந்தியா, மாலைதீவு, நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகளுக்கு சுவீடனின் தூதுவராக இருப்பவர்தான், ஹரோல்ட் சான்ட்பேர்க். புதுடெல்லியில் இருந்து கொண்டு அவ்வப்போது, இலங்கை உள்ளிட்ட ஏனைய நாடுகளுக்கு வந்து, தமது இராஜதந்திரப் பணியைக் கவனிப்பவர்.ஸ்கன்டினேவிய நாடான சுவீடன், 2002 ஆம் ஆண்டு, அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போர்நிறுத்தத்தைக் கண்காணிக்கும் குழுவுக்குப் பிரதிநிதிகளை அனுப்பியிருந்தது. போர்நிறுத்த உடன்பாடு முறிவடைந்த பின்னர், சுவீடனுக்கும் இலங்கைக்குமான இடைவெளி அதிகரித்தது. இப்போதைய நிலையில், இலங்கைக்கு பெரியளவில் அழுத்தங்களைக் கொடுக்கக் கூடிய நிலையில் சுவீடன் இல்லை என்பதே உண்மை.

கடந்த மாத இறுதியில், இலங்கைக்கான பயணத்தை மேற்கொண்டிருந்த சுவீடன் தூதுவர், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேசியிருந்தார். அப்போதுதான், “தமிழ் மக்கள் முடிந்தவரை பொறுமையாக இருந்து விட்டார்கள் இனிமேலும் அவர்களால் பொறுத்திருக்க முடியாது” என்று இரா.சம்பந்தன் கூறியிருக்கிறார். “வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகள் உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டும். காணிகள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை; மீள்குடியமர்வு பூர்த்தியடையவில்லை; அரசியல் கைதிகள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை; இராணுவப் பிரசன்னம் குறையவில்லை; காணாமல்போனோர் பிரச்சினை தீர்க்கப்படவில்லை; மைத்திரி- ரணில் கூட்டு அரசாங்கம், பதவிக்கு வந்து இரண்டு ஆண்டுகளாகி விட்டன. தமிழ் மக்களின் பிரச்சினைகள் விரைவாகத் தீர்க்கப்பட வேண்டும். சர்வதேச சமூகம் இதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்” என்று சுவீடன் தூதுவரிடம் தாம் தெரிவித்ததாக இரா.சம்பந்தன் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.

தமிழ் மக்களின் பொறுமை தொடர்பாக இரா.சம்பந்தன், சர்வதேச இராஜதந்திரிகள் மத்தியில் வெளிப்படுத்திய மிகக் கடுமையான ஒரு கருத்தாக இதனைக் குறிப்பிடலாம்.இதற்கு முன்னர் வேறெந்த வெளிநாட்டுப் பிரதிநிதிகளிடமும் அவர் இவ்வாறான கருத்தை வெளியிட்டதாகத் தெரியவில்லை. சுவீடன் தூதுவருடனான சந்திப்பு நடந்த அன்று, அரசியலமைப்புத் திருத்தத்துக்கான வழிநடத்தல் குழுவின் கூட்டத்திலும், இரா.சம்பந்தன் காரசாரமான கருத்துகளை வெளியிட்டிருந்தார். ஒற்றையாட்சி, கூட்டாட்சி போன்ற பதங்கள் தொடர்பாகவே அந்தக் கூட்டத்தில் காரசாரமான கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றிருந்தன. ஒற்றையாட்சி அரசியலமைப்பை உருவாக்குவதில் அரசாங்கத்தில் உள்ள கட்சிகள் தீவிர கவனம் செலுத்தினாலும், அத்தகைய பதம் சேர்க்கப்படுவதை இரா.சம்பந்தன் எதிர்த்திருப்பதாகத் தெரிகிறது.

இதன்போது, இரா.சம்பந்தன் சூடாக வெளிப்படுத்திய கருத்துகளால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்டவர்கள் பதில் கூற முடியாமல் திணறி நின்றதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. அரசியலமைப்பு மாற்றம் இரா.சம்பந்தனுக்கு கடுமையான ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் கடந்த ஆண்டு இறுதியிலேயே அரசியலமைப்பு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று நம்பியிருந்தார். அதனால்தான் அவர், 2016 டிசெம்பருக்குள் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்று கூறியிருந்தார். அதற்குப் பின்னர், அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான, இடைக்கால அறிக்கையை வெளியிடுவதில் கூட இன்னமும் வெற்றி பெற முடியவில்லை. கடந்த வாரத்தில் நடத்தப்பட்ட வழிநடத்தல் குழுக் கூட்டத்திலும் இணக்கப்பாடுகள் ஏற்படவில்லை. தற்போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமெரிக்கா சென்று விட்டதால், அவர் திரும்பும் வரையில், எந்த நகர்வும் இடம்பெறப் போவதில்லை. அரசியலமைப்பு மாற்றம் என்பது இழுபறிக்குள்ளாகிக் கொண்டிருக்கிறது.

இது, இரா.சம்பந்தனுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் கடும் அழுத்தங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அரசாங்கத்துடன் சேர்ந்து கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் மக்களை ஏமாற்றுகிறது என்பது போன்று, கூட்டமைப்புக்கு எதிரான கட்சிகள் பிரசாரத்தில் இறங்கியிருக்கின்றன.
இது, கூட்டமைப்பின் எதிர்காலத்துக்கு சவாலாகவும் மாறியிருக்கிறது. இவையெல்லாம் இரா.சம்பந்தனுக்கான நெருக்கடிகளைத் தீவிரப்படுத்தியிருக்கின்றன. கடந்த மாதம், ஐ.நா வெசாக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கொழும்பு வந்திருந்தபோது, கட்டுநாயக்க விமான நிலையத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களைச் சந்தித்திருந்தார்.
அப்போதும் கூட, “எதிர்பார்த்ததுபோல, அரசியலமைப்பு மாற்றம் இடம்பெறவில்லை; அதற்கான பணிகள் இழுத்தடிக்கப்படுகின்றன” என்று இரா.சம்பந்தன் தனது விசனத்தை வெளிப்படுத்தியிருந்தார். அதற்கு இந்தியப் பிரதமரும், “இலங்கை அரசாங்கம் மெதுவாகவே செயற்படுகிறது என்பதை இந்தியாவும் கவனித்து வருகிறது” என்று கூறியிருக்கிறார். அரசியலமைப்பு மாற்ற விடயத்திலும், தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் நீளுகின்ற நிலையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தனது கவனத்தைச் சர்வதேச சமூகத்தை நோக்கித் திருப்பத் தொடங்கியுள்ளது.

இந்தியப் பிரதமர் மற்றும் சுவீடன் தூதுவர் ஆகியோரிடம் இரா.சம்பந்தன் வெளிப்படுத்திய கருத்துகளின் உள்ளடக்கமானது, ‘அரசாங்கம் இழுத்தடிக்கிறது; தமிழ் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள்’ என்பதாகவே உள்ளது. அதனால்தான், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண சர்வதேசம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருக்கிறார். இலங்கை அரசாங்கத்துக்கு சர்வதேசம் எவ்வாறு அழுத்தம் கொடுக்கப் போகிறது- எதை வைத்து அதைச் சாதிக்கப் போகிறது என்று தெரியவில்லை.

மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு, போர்க்குற்ற விவகாரங்களைப் பயன்படுத்தி ஜெனிவாவில் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன. ஜிஎஸ்பி பிளஸ் போன்ற தடைகளைப் பயன்படுத்தியும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன. ஆனாலும், மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தைத் தமது இலக்குவரை, பணிய வைக்க சர்வதேச சமூகத்தினால் முடியவில்லை. அதனால்தான், மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை வெளியேற்றுவதற்காக சர்வதேசம் திட்டமிட்டது. இப்போதைய அரசாங்கத்தை உருவாக்கிய சர்வதேச சமூகம், மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் காலத்தில் கொடுக்கப்பட்டு வந்த அழுத்தங்களை ஒவ்வொன்றாக நீக்கிவிட்டது.

இப்போதைய அரசாங்கத்துக்கு சர்வதேச நெருக்கடிகள் கிடையாது, பொருளாதார நெருக்கடிகள் இருந்தாலும், இராஜதந்திர நெருக்கடிகள் இல்லை என்றே கூறலாம். பொருளாதார மற்றும் இராஜதந்திர அழுத்தங்களைப் பிரயோகிப்பதன் மூலம் மாத்திரமே, சர்வதேச சமூகத்தினால் காத்திரமான பங்காற்ற முடியும். அத்தகையதொரு சூழல் தற்போது இலங்கையில், இருப்பதாகத் தெரியவில்லை.
சர்வதேச சமூகத்துக்கு தமிழர்களின் பிரச்சினை ஒன்றும் பெரியது அல்ல. விடுதலைப் புலிகள் இருந்த வரைக்கும்தான், சர்வதேசத்தினால் உற்று நோக்கப்பட்டது. விடுதலைப் புலிகள் இல்லாத சூழலில், இலங்கையின் புவிசார் அரசியல் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டே சர்வதேச சமூகம் முடிவுகளை எடுக்கிறது.

தமிழ் மக்களின் பிரச்சினை, அதற்கான தீர்வு எல்லாமே சர்வதேசத்துக்கு இரண்டாம் பட்சம்தான். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில், அரசாங்கத்துக்கு ஆதரவு அளித்து, தீர்வு ஒன்றை எட்டலாம் என்று நம்பியிருந்தது. அந்த நம்பிக்கை உடையத் தொடங்கியிருக்கிறது என்பதையே சம்பந்தனின் அண்மைய கருத்துகள் உணர்த்தியிருக்கின்றன. ஒரு வகையில் இது அவருக்கான நிர்ப்பந்தமும் கூட. காணிகள் விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை, உள்ளிட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதால் கூட்டமைப்புக்கான நெருக்கடிகள் அதிகரித்து வருகின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் தமிழ் மக்களின் பிரதிநிதியாகவே இருக்க வேண்டுமானால், அரசாங்கத்தை எதிர்க்க வேண்டியது தவிர்க்க முடியாததாகி வருகிறது. தமிழ் மக்களின் தேவைகளையும் கோரிக்கைகளையும் நிறைவு செய்யும் ஓர் அரசாங்கத்துக்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முண்டு கொடுக்கலாம். தமிழ் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதை இழுத்தடிக்கும் அரசாங்கத்துடன் அண்டியிருப்பது ஆபத்தானது என்பதை கூட்டமைப்பு இப்போது உணரத் தவறினால், அது அவர்களின் அரசியல் தற்கொலையாகவே அமைந்து விடலாம்.அதனால்தான், சர்வதேச சமூகத்தின் மூலம் அரசாங்கத்துக்கு அழுத்தங்களைக் கொடுப்பதற்கான முயற்சிகளை ஆரம்பித்திருக்கிறார் இரா.சம்பந்தன்.

இந்த விடயத்தில் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் இராஜதந்திர நெருக்கடிகள் அரசாங்கத்துக்கும் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. பி்ரதமர் ரணில் விக்கிரமசிங்க, அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக அண்மையில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் வெளியிட்ட கருத்து அதைத்தான் வெளிப்படுத்துகிறது. ஆனாலும், அரசியல், பொருளாதார, இராஜதந்திர மட்டங்களில் சர்வதேச சமூகத்தின் தொடர் அழுத்தங்கள் முன்னெடுக்கப்படாமல், கொழும்பின் அரசியல் தலைமைகள், தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்த்து வைக்க முன்வரும் என்று நம்புவது கடினமாகவே இருக்கிறது.
tamilmirror.lk 04 06 2017

Published in Tamil
19 06 2017

ஈழத் தமிழராக இனம் மாறிய யாழ்பாணத் தெலுங்கு, கன்னட குடியேறிகள்

யாழ்ப்பாண‌த்தில் குடியேறி, ஈழ‌த் த‌மிழ‌ராக‌ ஒன்று க‌ல‌ந்த‌ தெலுங்க‌ர்க‌ள், க‌ன்ன‌ட‌ர்க‌ள் ப‌ற்றிய‌ விப‌ர‌ம். ஈழ‌த்த‌மிழ் ச‌மூக‌ம் ஆயிர‌மாயிர‌ம் ஆண்டுக‌ளாக‌ இன‌த்தூய்மை பேணி வ‌ருவ‌தாக‌ நினைப்ப‌து அறியாமை.யாழ்பாணத்தில் தெலுங்கர்க‌ள், க‌ன்ன‌ட‌ர்க‌ள் குடியேறிய‌ இடங்க‌ளின் பெயர்கள், ஆந்திரா, க‌ர்நாட‌காவில் உள்ள‌ ஊர்க‌ளின் பெய‌ர்க‌ளுட‌ன் ஒத்துப் போவ‌தை க‌வ‌னிக்க‌வும்.யாழ்ப்பாணத்தில் குடியேறிய‌ தெலுங்க‌ர்க‌ள், (க‌ன்ன‌ட‌ர்க‌ளும்) வேளாளர் பட்டத்தை ஏற்றன‌ர். ஆகையினால் இன்றைய‌ வெள்ளாள‌ சாதியின‌ர் “தூய‌ த‌மிழ‌ர்க‌ள் அல்ல‌” என்ப‌து குறிப்பிட‌த் த‌க்க‌து! (அவ‌ர்க‌ளில் ப‌ல‌ர் தீவிர‌ த‌மிழ்த் தேசிய‌வாதிக‌ளாக‌ இருப்ப‌தில் ஆச்ச‌ரிய‌ம் இல்லை.)

ஆந்திர தேசம்: 
1. கஞ்சாம் – கஞ்சாம்பத்தை (சுழிபுரம்).
2. கதிரி – கதிரிப்பாய்.
3. நக்கன் தொட்டி – நக்கட்டி உடையாபிட்டி
4. வடுகு – வடுகாவத்தை (சுன்னாகம், தெல்லிப்பழை)
5. அந்திரன் – அந்திரானை (தொல்புரம் வட்டுக்கோட்டை)
6. வேங்கடம் – வேங்கடன் (சங்கானை).

கன்னட தேசம்: 
1. கன்னடி – மாவிட்டபுரம்
2. குலபாளையம் – குலனை (அராலி)
3. சாமண்டிமலை – சாமாண்டி (மாவிட்டபுரம்)
4. மாலூர் – மாலாவத்தை (புன்னாலைக் கட்டுவன்).
5. பச்சூர் – பச்சந்தை (கட்டுவன், தொல்புரம்).
6. மூடோடி – முட்டோடி (ஏழாலை).

துளுவம் (க‌ர்நாட‌கா மாநில‌ம்): 
1. துளு – அத்துளு (கரவெட்டி).
2. துளுவம் -துளுவன் குடி (அளவெட்டி)

தமிழர் குடியேற்றம் தொண்டைமண்டலம், வட தமிழகம். தொண்டநாட்டு ஊர்ப்பெயரோடு கூடிய குடியேற்றங்கள்:

1. கச்சி – கச்சினாவடலி (சுன்னாகம்).
2. கம்பாநதி –கம்பாமூலை, கம்பாக்கடவை (மல்லாகம்).
3. ஆலங்காடு – ஆலங்குழாய் (சண்டிலிப்பாய்)
4. காரைக்கால் – காரைதீவு. குதரைக்காடு (இணுவில்).
5. உடுப்பூர் – உடுப்பிட்டி
6. காஞ்சி – காஞ்சிக்கோட்டம் (மானிப்பாய்).
7. சோழிங்கள் – சோழங்கள் (கரணவாய்)
8. தொண்டை – தொண்டைமானாறு, தொண்டைமான் தோட்டம் (வட்டுக்கோட்டை),
9. மயிலம் – மயிலங்காடு (ஏழாலை.)

(ஆதார‌ம்: யாழ்ப்பாணக் குடியேற்றம்) ilakkiyainfo.com 26 05 2017

Published in Tamil
12 06 2017

யாழ்ப்பாணக் குடியேற்றம் 1

யாழ்ப்பாணக் குடியேற்றம் என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்டது
யாழ்ப்பாணக் குடியேற்றம் : முன்னைநாட் சென்னை லொயலாக் கல்லூரித்  தலைமைத் தமிழ்ப் விரிவுரையாளர்  இளைப்பாறிய அராலி இந்துக்கல்லூரி அதிபர் கு முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை, டீ.யு இயற்றியது

 6. மலையாள அரசு

மலையாளக் குடியேற்றத்தின் முன்னோடிகளாக விளங்கிய முக்குவர்கள் நெடுந்தீவு, ஆனைக்கோட்டை, வட்டுக்கோட்டை, பொன்னாலை, கீரிமலை, மயிலிட்டி முதலிய இடங்கனளிற் குடியேறித் தமது திறமையாலும், விடாமுயற்சியாலும் முன்னேறி நெடுந்தீவில் ( யாழ் - வை- மாலை, பக் 10) வெடியரசன் தலைமையில் ஒரு அரசியற் பீடத்தை அமைத்தனர், வெடியரசன் குறகிய காலத்திற்குள் தரைப்படை, கடற்படை முதலிய படைகளுடன் சிறந்த அரசனாக விளங்கினான். சேரி அரசன் அவன் வலிமையைக் கண்டு பொறாமை அடைந்து அவனை அடக்கக் கருதி மீகாமன் தலைமையில் ஓர் கடற்படையை அனுப்பி அவனோடு போர்புரிந்து அவனைத் தோல்வியுறச் செய்தனன். தோல்வியுற்ற முக்குவர்களில் அநேனர் மட்டக்களப்புக்குச் சென்று பாணகை, வலையிறவு முதலிய இடங்களிற் குடியேறினர். இச்சரிதத்தைக் கடலோட்டு, வெடியரசன் சரித்திரம் முதவலிய நூல்களால் அறியலாம். “மண்டு மண்டடா மட்டக்களப்படா” என்ற பாரம்பரியக் கூற்றும் இவ்வுண்மையை நன்கு புலப்படுத்தும். தேசாதிபதி றிக் லொப்வான் கூன்ஸ் யாழ்ப்பாண முக்குவருக்கும், மட்டக்களப்பு முக்குவருக்குமிடையிலுள்ள ஒற்றுமையை எடுத்துக் கூறியுள்ளார்.

7. மலபார் மொழியும் மக்களும்
மலபார் என்னும் சொல்லை முதலில் உபயோகித்தவர் அப்பரணி (யுனனநசயni) என்னும் அரேபியராவர். (2) பின்னர் போத்துக்கேயரும் அச்சொல்லை உபயோகித்தனர். அம்பலக் காட்ழல் முதல்முதல் கி. புp. 1577இல் அச்சிட்ட தமிழ்ப் நூல் மலவார் என்று கூறப்பட்டது. மலையாளம் ஒரு தனிமொழியாக கி.பி. 11ம் நூற்றாண்டில் மாறியபோது மலவார் என்பது மலையாளமாக மாறியது. இலங்கையை ஆங்கிலஅரசுக்குக்கீழ் கொண்டுவந்த கீளெக்கோன் (1), இலங்கைத் தேசாதிபதி சேர் றொஙேபற் பிறவுணிங் (2) சேர் எமேசன் ரெனென்ற் (3) என்போரும் யாழ்ப்பாணத் தமிழர்களை “மலபார்கள்” என்று கூறியிருக்கின்றனர்.

மலையாளம் தனிமொழியாக வருதற்குரிய காரணத்தை டாக்டர் இராசாணிக்கனார் பின்வருமாறு கூறுகின்றார். “தமிழ்ப்மொழி” கன்னடத்தின் தொடர்பாலும், கிரந்த எழுத்துக்களின் வன்மையாலும், நம் பூதிரிகளின் செல்வாக்காலும், பௌத்த சமணப் பிரசாரம் வடமொழி கலந்த மொழியிற் செய்யப்பட்ழடமையாலும் கொடுந்தமிழாக மாறிப் பிற்காலத்தில் தனிமொழி மாறியது”

மக்களுடைய தோற்றத்தில் ஏற்பட்ட மாற்றத்தை சைஸ் கிவித் என்பவர் பின்வருமாறு விளக்கியுள்ளார். “ கிறீஸ்து பிறப்பதற்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சீரியர், அபிசீனியர், பபிலோனியர், பாரசீகர் முதலிய மேனாட்டவர் வந்து மக்களிடையே கலந்துகொண்டதனால் சேரநாட்டவர்கள் மொழியும், நடையும், உடற்கூறும் திரிந்து தமிழ்ப் நாட்டின் கூறு என்ற குறிப்பே இல்லாதவாறு தோன்றிவிட்டது. இவ்வித மாற்றங்கள் ஏற்பட்ட பின்னரும் தமிழ்ப் மக்கள் ஒல்லாந்த தேசாதிபதி கோணிலிஸ் யோன் சிம்மன்ஸ் என்பவது தேசவழமைச் சட்டங்களைத் தொகுத்து “மலபார் தேசவழமைச் சட்டம் “ என்னும்; பெயரோடு கி.பி. 1707இல் வெளியிட்டபோது மலபார் என்று கூறப்பட்டதை, அச்சட்டத்தைச் சரிபார்த்துக் கைச்சாத்திட்ட பன்னிரண்டு முதலிமார் தானும் மறுக்கவில்லை, “மலபார்” என்று தமிழ் மக்களை அழைப்பதை முதல் முதல் மறுத்தவர் சேர். பொன். இராமனாதனவர்கள். ஆவர் சட்ட அதிகாரியாய் இருந்தபோது “மலபார்’ என்ற சொல்லை அச்சட்ட முகவரியிலிருந்து நீக்கிவிட்டார்;. (1) . டாக்டர் சிவரத்தினம் என்பவர் தமது இலங்கைச் சரித்திரத்தில் “மலபார்” என்னும் சொல் தமிழ்ப்நாட்டின் சகல பகுதிகளில் வசிக்கும் மக்களைக் குறிக்கும் என்று கூறியது பொருத்தமற்றது.

8. தமிழர் குடியேற்றம்
யாழ்ப்பாணம் இந்தியாவிலிருந்து 36 மைல் தூரத்திலிருந்தும் தமிழ் மக்கள் இங்கு முறையாகக் குடியேறவில்லை. இதற்குக் காரணம் ஆரியர் இலங்கையை இராக்கதபூமி என்று இடைவிடாது செய்த தீவிர பிரசாரமாகும். அவர்கள் இலங்கையின் வடபகுதியில் வசிக்கும் நாகர்களளைப் பாம்புகள் என்றும், தென்னிலங்கையில் வசிக்கும் இயக்கர்களை முனிவர்களை விழுங்கும் பேய்கள் என்றும் வருணித்தனர். கி.பி. 5ம் நூற்றாண்டில் இங்குவந்த சீன யாத்திரிகனாகிய பாகியன். (குயர்யைn) என்பவனும் அவ்வாறே கூறினான். யோன் றெசில்டாரும் அதே கருத்தை வெளியிட்டனர். (1). சிங்கள சரித்திர நூலாகிய தீபவம்சமும் அதே கருத்தை வெளியிட்டது. (2). வுpஜயன் காலத்தில் இந்திய மக்களை இங்கு குடியேற வரும்படி கேட்டகொழுது “கன்னியாகுமரி தொடக்கம் இமயம் பரியந்தம் இருந்த அனைவரும் இராக்கத நாடாகிய இலங்கைக்கு வரமுடியாது” என்று கூறி மறுத்தனர்;. இக்காலத்திலும் இலங்கைக்கு வரப்பயப்படுகிறவர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள்.

துமிழ்ப் மக்கள் மலையாள மக்களைப்போற் சங்கடப்படவில்லை. சோழ பாண்டிய அரசர்கள் செங்கோல் செலுத்தித் தமது நாடுகளைச் சிறப்புற ஆண்டனர். தொண்டைநாடு சான்றோருடைத்து, சோழநாடு சோறுடைத்து, பாண்டிநாடு முத்துடைத்து என்னும் வாக்கியங்களால் அவற்றின் சிறப்பு நன்கு புலனாகும். முத்துக்கள் நிறைய இருந்தாலும் உலகத்தினராற் போற்றப்படும் இரத்தினம் இல்லாதகுறை தமிழ்ப் நாட்டிற்கு உண்டு. இரத்தினங்கள் பெருமளவிற் கிடைக்கக்கூடிய இடம் இரத்தினதீபம் என்றழைக்கப்படும் இலங்கையே. ஊலக வியாபாரப் பொருள்களாகிய கறுவா, இஞ்சி, மிளகு முதலிய பொருள்களும் பெருமளவிற் கிடைக்கக்கூடிய இடமும் இவ்விலங்கையே. இத்தகைய பெருமை வாய்ந்த தீவை, எவ்விதத்திலும் கைப்பற்ற வேண்டும் என்னும் பேராசையால் தூண்டப்பெற்ற சோழபாண்டிய மன்னரும் பிறரும் கி.மு. 117 தொடக்கம் கி.பி. 1256ஆம் ஆண்டு வரையும் இடைவிடாது பலமுறை படையெடுத்தனர். அப்படையெடுப்புக்களில் அடைந்த வெற்றிகளும், தோல்விகனும் பலவாகும். தோல்வியடைந்தபோது தப்பி ஓடினவர்களும், சம்பளம் கொடுபட்hததனால் படையைவிட்டு விலகினவருமாகிய பல்லாயிரம் படைவீரர் அமைதியான சுதந்திர வாழ்வுக்கு உகந்த இடமாகிய யாழ்ப்பாணம் வந்து குடியேறினர்.

தமிழ்ப்நாட்டுச் சாதிகளும் குடியேறிய இடங்களும்
தமிழ் நாட்டிலுள்ள முக்கியம் வாய்ந்த நாற்பத்தெட்டுச் சாதிகளுள் முப்பத்து நான்கு சாதிகளைச் சார்ந்த படைவீரர்கள் யாழ்ப்பாணத்தின் பலபாகங்களிலும் குடியயேறினார்கள் என்று தோம்புகளைக் கொண்டு ஊகித்து அறியக்கூடியதாயிருக்கிறது.
சாதிகளும் குடியேறிய இடங்களும்
அம்பட்டன் வளவு (மல்லாகம்) (2) ஆண்டி – ஆண்டி சீமா (ஆவாரங்கால்) (3) இடையன் - இடையன் சீமா (சிறுப்பிட்டி) (4) ராயார்- சேனாதிராயர் வளவு (சுழிபுரம்), (5) கரையான் - கரையான் தோட்டம் (நவாலி), (6)கணக்கன் புலம் (மானிப்பாய்). (7) ஒட்டன்கட்டு (கந்தரோடை). (8) கள்ளன் புலம் (இணுவில்). (9) கம்பன் சீமா – (சிறுப்பிட்டி, தொல்புரம்), (10) சுன்னான் பிட்டி (அராலி), (11) குசவன் கிளனை (கோப்பாய்), (12) குறவன் சுலட்டி (சுன்னாகம்), (13) கைக்கோளன் - கைக்குளப்பை (தெல்லிப்பழை),(14). ஊடையான் - வயல் (மண்டைதீவு), (15) சக்கிலியன் - சக்கிலியாவத்தை (சிறுப்பிட்டி). (16) சாலியன் கொட்டி (இருபாலை). (17) சிவியான் பிட்டி (வரணி, சிலியாதெரு). (18) சாண்டான்காடு (சரவணை, சண்டிருப்பாய்). (19) செட்டியா தோட்டம் (புங்குடு தீவு) (20) நாடார் – தில்லைநாடார் வளவு (நாவற்குழி). (21) படையாச்சி – படையாச்சி தேனி (சண்ழருப்பாய்). 22)பள்ளன் - பள்ளன் சீமா (பெரியவிளான்). (23) பறையன் - பறையன் தாழ்வு (தங்கோடை). (24) மாப்பாணன் தூ (புலொலி). (25) பிராமணன் சீமா (இருபாலை). (26) வேடுவன் குளம் (நவாலி. (27) வன்னியன் ஒல்லை (அளவெட்டி). (28) மறவன் புலம் (29) வண்ணான் தோட்டம் (நாவற்குழி). (30) செம்மான் கண்டு (தொல்புரம்). (31) திமிலன் காடு (அராலி). (32) துரம்பன் - துரம்பிச்சி ஒல்லை (சரவணை) (33) தச்சன் தோப்பு (கரவெட்டி). (34) கொல்லன்கலட்டி (தெல்லிப்பழை).

தொண்டநாட்டு ஊர்ப்பெயரோடு கூடிய குடியேற்றங்கள்.
1. கச்சி – கச்சினாவடலி (சுன்னாகம்). (2) கம்பாநதி –கம்பாமூலை, கம்பாக்கடவை (மல்லாகம்). (3) ஆலங்காடு – ஆலங்குழாய் (சண்டிருப்பாய்) (4) காரைக்கால் - காரைதீவு. குதரைக்காடு (இணுவில்). (5) உடுப்பூர் – உடுப்பிட்டி (6) காஞ்சி – காஞ்சிக்கோட்டம் (மானிப்பாய்). (7) சோழிங்கள் - சோழங்கள் (கரணவாய்) (8) தொண்டை – தொண்டைமானாறு, தொண்டைமான் தோட்டம் (வட்டுக்கோட்டை), (9) மயிலம் - மயிலங்காடு (ஏழாலை.)

சோழநாட்டு ஊர்ப்பெயரோடு கூடிய குடியேற்றம்.
1. கண்டி – பொலிகண்டி (2) ஆவடையார் கோயில் - ஆவடையார் பொக்கட்டி (3) கோட்டை நகர் – கோட்டைக்காடு (4) குடந்தை – குடந்தனை (5) குமாரபுரம் - குமாரசிட்டி (தம்பாலை) (6) கோயில் - கோயிலாக் கண்டி, கோயிற்கடலை. (7) தாழையூத்து – தாழையடி (8) தில்லை – தில்லையிட்டி (சுன்னாகம்) (9) துவ்வூர் – தூ (வடமராட்சி). (10) தோப்பூர் (அச்சுவெலி, தோப்புவளவு (சுன்னாகம்), (11) நயினாகரம் - நயினாதீவு. (12) நார்த்தாமலை – நார்த்தாவளை (13) நாவல் - நாவற்குழி (14) நல்லூர் – நல்லூர் (15) வயலூர் _ வலலூர் (அரியாலை, கோப்பாய்). (16) கோம்பை – கோம்பையன்திடல் (வண்ணார்பண்ணை)

பாண்டிநாட்டு ஊர்ப்பெயரோடு கூடிய குடியேற்றங்கள்
1. கோம்பி – கோம்பிசிட்டி (வேலணை). (2) சாத்தான் - சாத்தான்குளம் (தங்கோடை) , சாத்தனாவத்தை (தெல்லிப்பழை). (3) சுழியல் - சுழிபுரம் (4) தம்பன் வயல். (5) நீராவி – நீராவியடி (வண்ணார்பண்ணை. (6) நெல்வேலி – கொக்குவில். துpரு நெல்வேலி.

கொங்குநாட்டு ஊர்ப்பெயரோடு கூடிய குடியேற்றங்கள்
1. உடுமலைப்பேட்டை – உடுமலாவத்தை (2) காரமடை – காரமட்டை (நெடுந்தீவு) (3) கல்லார் (நீலகிரி) – கல்லாரை (மல்லாகம்). (4) கொங்குநாடு –கொங்காலோடை (ஆவரங்கால்) (5) சிங்க நல்லூர் – சிங்காவத்தை (தெல்லிப்பழை). (7) மானா – மானாவத்தை (மானாமுதலி).

9 பிறநாட்டுக் குடியேற்றம்
ஆந்திர தேசம் : கஞ்சாம் - கஞ்சாம்பத்தை (சுழிபுரம்). (2) கதிரி – கதிரிப்பாய். (3) நக்கன் தொட்டி – நக்கட்டி உடையாபிட்டி (4) வடுகு – வடுகாவத்தை (சுன்னாகம், தெல்லிப்பழை) (5) அந்திரன் - அந்திரானை (தொல்புரம் வட்டுக்கோட்டை) (6) வேங்கடம் - வேங்கடன் (சங்கானை).
கன்னடதேசம் : (1)கன்னடி – மாவிட்டபுரம் (2) குலபாளையம் - குலனை (அராலி) (3) சாமண்டிமலை – சாமாண்டி (மாவிட்டபுரம்) (4) மாலூர் – மாலாவத்தை (புன்னாலைக் கட்டுவன்). (5) பச்சூர் – பச்சந்தை (கட்டுவன், தொல்புரம்). (6) மூடோடி – முட்டோடி (ஏழாலை).
துளுவம் : (1) துளு – அத்துளு (கரவெட்டி). (2) துளுவம் -துளுவன் குடி (அளவெட்டி)
கலிங்கம் : (1) கலிங்கம் - கலிங்கராயன் வயல் (நீர்வேலி). (2) கலிங்கராயன் வயல் (நீர்வேலி). (2) கலிங்கராயன் சீமா (கட்டுவன்.)
ஒரியா : ஒரியாத்திடல் வேலணை).
சீனாசீனன் வயல் (சண்டிருப்பாய்).
முகமதியர்: (1) உசன் (தென்மராட்சி.) (2) மரக்காயன் தோட்டம் - நவாலி (3) துலக்கன் புளி – அல்லைப்பிட்டி
புத்தர் : புத்தர் கோயில், புத்தர் குடியிருப்பு, புத்தர்புலம் (துணவில்)
குளப்பிரர்: களப்பிராவத்தை (புலொலி).
இயக்கர் : இயக்குவளை (கொக்குவில்)
யாவகர்: சாவகச்சேரி, சாவரோடை (சுழிபுரம்) சாவன்கோட்டை (நாவற்குழி).

யாழ்ப்பாணத்திற் குடியேறியவர்களின் தொகை 40000 வரையிலிருக்கலாம் என்று தோம்புகளின் அடிப்படையில் ஊகிக்க இடமுண்டு . குடியேறியவர்களின் வீதம் வருமாறு:
நேரநாட்டுத் தமிழர் 48%
தமிழ் நாட்டவர் 30%
பிறநாட்டினர் 22% 

9 தமிழர் ஆதிக்கம்
யாழ்ப்பாணத்தில் இதுவரை காலமும் அரசியல் ஆதிக்கம் பெற்றிருந்த நாகர், லம்பகர்னர் என்போருடைய ஆட்சிகள் முறையே கி.பி. 303 கி.பி, 556. என்னும் ஆண்டுகளோடு முடிவடைந்தது. இதன் பின்னர் குடியேறிய படைவீரர்களுஐடய ஆதிக்கம் வளர்ச்சியடையத் தொடங்கியது. மறலர்பன் வட கிழக்கிலும், தென்கிழக்கிலும்பாணர்கள் தென்மேற்குப் பகுதிகளிலும் ஆட்சிப் பீடங்கள் அமைத்தனர்;. அவை வடமறாச்சி (வடமறவர் ஆட்சி, தென்மறாட்சி (தென்மறவர் ஆட்சி) என்னும் பெயர்களைப் பெற்றன. பாணர்கள் அமைத்த ஆட்சிப்பீடம் யாழ்ப்பாணம் என்று அழைக்கப்பட்டது. கிபி. 6ம், 7ம், 8ம் நூற்றபண்டுகளில் சிங்கள அரச குடம்பங்களுக்குள் ஏற்பட்ட கலகங்கள் காரணமாக அநேக அரசர்களும், பிரமுகர்களும் கொல்லப்பட்டனர் இது காரணமாக யாழ்ப்பாணத்திற் சிங்களவருடைய ஆதிக்கம் நிலைகுலைந்தது. இதைக்கண்ட மறவர், பாணர் முதலிய தமிழ்ப்ப்பிரமுகர்கள் சிங்கள அரசுக்கு மாறக வரிகொடா இயக்கத்தையும்,நிலச் சுவீகரிப்பு இயக்கத்தையும் தொடங்கிப் பூரணவெற்றி பெற்றனர். இவ்வெற்றி சிங்களவரை யாழ்ப்பாணத்தைவிட்டு வெளியேறச் செய்தது. சகல வாய்ப்புகளும் நிரம்பிய இந்த நேரத்தில் தமிழ்ப்ப் பிரமுகர் ஒன்றுகூடி யாழ்ப்பாணத்தில் ஓர் தமிழரசைத் தாபிக்க முடிவுசெய்து தங்கள் தலைவனாகிய பாண்டி மழவனை மதுரைக்குப்போய் ஒரு இராசகுமாரனை அழைத்து வருமாறு அனுப்பினர். 

10. தமிழரசு கி.பி. 795
பாண்டியமழவன் மதுரைக்குப் போய், இராமபிரானாற் சேதுஐவ காவல் செய்யுமாறு நியமிக்கப்பட்ட இருவரின் வipத்தோன்றலும், சேதுபதி அரசர்களின் வம்சத்தொடர்பு உடையவனும், Nசுதுபதி அரசர்களின் வம்சத்தொடர்பு உடையவனும், பாண்டிய மன்னனின் சேனைத் தலைவனுமாக விளங்கிய சிங்கையாரியனை (கூழங்கையனை) அழைத்துவந்து முடிசூட்டி யாழ்ப்பாணத்துக்கு அரசனாக்கினான். ஆரியன் என்னும்அ சொல் ஓர் உபசாரப் பட்டமேயன்றி பிராமணத் தொடர்பைக் குறிக்காதென்பது “ஆரியன் என்னும் சொல் ஓர் உபசாரப் பட்டடேனற்நி பிராமணத் தொடபைக் குறிக்காதென்பது “ஆரியவேந்தனென்றணிமணிப் பட்டமும் நல்கி” என்றும் செகராச சேகரமாலைப்பாட்டால் விளங்கும். ஆரசர்கள் தங்கள் உயர்பதவிக்கேற்ப உயர்குலப் பட்டங்களைத் தங்கள் பெயரோடு சேர்த்து எழுதுதல் மரபு. கலிங்க அரசர்கள் தங்களளைக் கறகா குலத்தவரென்றும் சேர அரசர்கள் தங்களை அக்கினி குலத்தவரென்றும், பாண்டிய அரசர்கள் தங்களைச் சந்திர குலத்தவர் என்றும் கூறுவது அக்கால வழக்கமாக இருந்த. கலப்பு விவாகம் பிராமணருக்கும், மறவருக்கும் இடையில் நடக்கும் வழக்கம் இல்லை. நடந்தாலும் கலப்பு விவாகத்தாற் பிறந்த பிள்ளைகளுக்கு அரசுரிமை கிடையாது. ஆரியன் என்ற சொல்லில் மயங்கி டாக்டர் லிவறா, கீயுறோஸ் (ஞரநசைழண) காசிச்செட்டி முதலியோர் சிங்கையாரியனுக்குப் பிராமணத் தொடர்பு கற்பித்தனர்.

ஆரியர் சக்கரவர்த்திகள் செந்தமிழ் பேசுந் தமிழரே அன்றி தெலுங்கு பேசும் கலிங்க நாட்டவர் அல்லர். ஆரசகுமாரர்கள் தமிழ் நாட்டில் இருக்கும் போது பாண்டி மழவன் அவர்களைத் தேடி ஆயிரம் மைலுக்கப்பாலுள்ள கலிங்க நாட்டிற்குப் போவவேண்டிய அவசியமே இல்லை. இராசநாயக முதலியார் சிங்கையாரியனை கலிங்கதேசத்தவனாக்கினது சிறிதும் பொருந்தாது. ஆரியச் சக்கரவர்த்திகள் எல்லாரும் தமிழ்ப்மொழி பேசினரேயன்றித் தெலுங்கு முதலிய பிறமொழிகளைப் பேசினார் என்பதற்கு ஒரு வகையான ஆதாரமும் கிடையாது. அவர்கள் தமிழமொழி பேசினர் என்பது “கூயுறொஸ்’ என்பது கூற்றினால் அறியலாம். (1) யாழ்ப்பாணத் தமிழரசர்கள் இராமேஸ்வரத்தை ஆண்ட சேதுபதி அரசர்களுக்கு நெருங்கிய தொடர்புடையவர்கள் என்பது, அவர்களது நாணயங்களின் சேது என்னுஞ் சொல் பொறிக்கப்பட்டிருப்பதாரும் அறியலாம்.

11 தமிழரசும் குடியேற்றக்காரரும்
தமிழரசு கி.பி. 795இல் யாழ்ப்பாணத்தில் தொடங்கியபோது குடியேற்றக்காரருக்கு நல்லகாலம் பிறந்தது. துமிழரசின் கீழ் உயர்ந்த உத்தியோகம் பெறக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டது. ஆனால் அவர்களுக்கு இரண்டு குறைகள் அவ்வுத்தியோகங்களைப் பெறத்தடையாயிருந்தன. அவை படைகளை விட்டு விலகி மறைமுகமாகக் குடியேறினது, உயர்குடிப்பிறப்பின்னை என்னும் இரண்டுமாகும். அவற்றை நீக்கி மதிப்புடன் அரசியலில் உயர்ந்த பதவிகளில் அமரவேண்டும் என்னும் பேரவாவினால் தூண்டப்பெற்ற மழவர், பாணர் முதலியோர் பல வழியிலும் அக்குறைகளை நீக்க முயற்சி செய்தனர். இதே சமத்தில் இடைச்சாதிகளைச் சேர்ந்த பலர் தங்கள் சாதிப் பட்டங்களை மறைத்து வேளாளருக்குரிய பிள்ளை, முதலி என்னும் பட்டங்களைத் தமது பெயரோடு வைத்து வேளாளராக முயன்றனர் என்பதைப் பின்வரும் நாட்டுப் பாடலால் அறியலாம்.
“கள்ளர் மறவர் களத்ததோர் அகம்படியர்ஸ மௌ;ள மௌ;ள வெள்ளாள ராயினர்”

வையா பாடலின் குடியேற்றத்தைப் பற்றி :
இங்கு குடியேறியவர்கள் சோழபாண்டியர்களின் படைவீரர்களுள் தமது நாட்டுக்குத் திரும்பிப் போகாது அங்கே தங்கியவர்களும், கி.பி. 34க்கும், கி.பி. 809க்கும் இடையில் நடந்த சிங்கள அரசரின் குடும்பக் கலகங்களில் ஈடுபட்ட இந்தியக் கூலிப்படை வீரருமாவர். படைகளோடு வந்த வன்னியர் பெரும்பாலும் வன்னி நாட்டிற் குடியேறினர் என்பது சீ.எ!;. நவரத்தினம் என்பவது கருத்தாகும்.

இதே கருத்தைச் சுவாமி ஞானப்பிரகாசரும் தாம் எபுதிய யாழ்ப்பாணக வைபவமாலை விமர்சனத்திற் கூறியுள்ளார். அது வருமாறு:-
“இலங்கை மேற்படையெடுத்து வந்த வெற்றியாளரைத் தொடர்ந்து தமிழ்வீரர்களின் குடும்பங்களாலும், அன்னொருடன் குடியேறிய பரிசனங்களாலும் மட்டுடன்றி, இளநாகன் கி.பி. (31-41).………. ஆதியாம் சிங்கள அரசர்கள் தத்தம் உள்ளர்ச் சமர்களுக்கு உட் பலமாகச் சோழ பாண்டிய நாடுகளினின்றும் அவ்வக்காலம் வரித்த தமிழ்ச் சேனைகளில் எஞ்சி நின்றோராலும் ராஜரட்டம் மலிந்து பொலிந்தது

இராசநாயக முதலியாரும் இது விஷயமாகப் பின்வருமாறு கூறுயள்ளார்:-
“ பிற்காலத்தில் சோழ பாண்டியர்களுடன் வந்த போர் வீரராகிய வன்னியர் சிலர் இலங்கையில் தங்கிக் கோயில் அதிகாரத்தைக் கைப்பற்றினதுமன்றி, மன்னார் முதல் திருக்கோணமலை வரையும், யானையிறவு முதல் காட்டுத் தம்பளை வரையும் உள்ள பரந்த பிரதேசத்தின் அதிகாரிகளாகவும், சிற்றரசர்களாகவும் இருந்தார்கள்.
தமிழரசர் ஆட்சி கி.பி. 1620 இல் முடிவடைந்து போகப் போத்துக்கேயர் ஆட்சி கி.பி. 1621இல் தொடங்கியது

Published in Tamil
05 06 2017

யாழ்ப்பாணக் குடியேற்றம் 1

யாழ்ப்பாணக் குடியேற்றம் என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்டது
யாழ்ப்பாணக் குடியேற்றம் : முன்னைநாட் சென்னை லொயலாக் கல்லூரித்  தலைமைத் தமிழ்ப் விரிவுரையாளர்  இளைப்பாறிய அராலி இந்துக்கல்லூரி அதிபர் கு முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை, டீ.யு இயற்றியது

1. நாகர்கள்
இலங்கையின் ஆதிவாசிகளாகிய நாகர்கள் அத்தீவின் வடபகுதியிலும் மேற்கிலும் வசித்தனர். அவர் வசித்த இடம் நாகதீவம் என்று அழைக்கப்படும். நூகதீவம் நாக அரசர்களால் ஆளப்பட்டது. சிங்கள சரித்திர நூலாகிய மகாவம்சம் கி.மு. 6ம் நூற்றாண்டில் நாகதீவம் மகோதரன் என்னும் அரசனால் ஆளப்பட்டது என்று கூறுகின்றது. (1). நூகர்கள் மலையாளத்திலிருந்து இங்குவந்து குடியேறிய நாயர்கள் என்று நீலகண்ட சாஸ்திரியார்;, உவூட்கொக் (றுழழனநழஉம), காக்கர் (Pயசமநச) முதலியோர் கருதுகின்றனர். அது பொருந்தாது. நூகர்கள் பிற்காலத்தில் யாழ்ப்பாணத்திற் குடியேறிய நாயர்களோடு கலந்து கொண்டனர் என்று கருதுதல் பொருந்தும். நூகர்கள் திராவிடரைச் சார்ந்தவர்கள் என்பது வி. ரங்காச்சாரியார் கருத்தாகும் (2) . பி.சி. முசம்தாரும் (3), ஆ. கனகசபைப்பிள்ளையும் (4) நாகர்கள் இமயமலைக்கப்பா லிருந்து வந்து இந்தியாவுக்குள் குடியேறினர் என்று கூறும் கொள்கைக்கூற்று ஏற்புடையதன்று. பழக்கவழக்கங்களில் நாகர்கள் தமிழரை ஒத்திருத்தலாலும், அவர்களுட் சிலர் மதுரைத் தமிழ்ச்சங்கப் புலவராக விளங்கினமையாலும் நாகர்கள் தமிழினத்தைத் சார்ந்தவர்கள் என்று பலர் கருதுகின்றனர்.

முற்காலத்தில் நாகர்கள் இந்தியா முழவதிலும் அரசியல் ஆதிக்கம் பெற்றிருந்தனர். (5), ஆரியர்கள். இந்தியாவுக்குள் கி.மு. 1500 இல் நுழைந்தபோது நாகரோடு கடும்போர் புரிந்து அவர்களை வென்று தெற்குப் பக்கமாகப் பின்வாங்கச் டிசய்தனர் அவர்கள் பிற்காலத்தில் வலியற்று நாகதீபத்தில் வசித்தனர். கடைசியாக ஏற்பட்ட கடல்கோளினால் அவர்கள் நாடும், செல்வாக்கும், மக்கள் தொகையும் குறைந்தன. இந்நிலையில் அவர்கள் கடற்கொள்ளையினால் வியாபாரம் தடைபடுதை உத்தேசித்துச் சேரமன்னன் அவர்களைத் தண்டித்து அடக்கினான். நாகர்கள் வீழ்ச்சி அடைந்த பின்னர் லம்பகர்னர் என்னும் சாதியார் யாழ்ப்பாணத்தில் ஆதிக்கம் பெற்றனர்.

2.லம்பகர்னர்
விஜயன் பிறக்குமுன் இலங்கை ஒரு சிறந்த குடியேற்ற நாடாக விளங்கியது. என்று போல் பீறிஸ் கூறியுள்ளார். (1). “ இந்தியா கிட்ட இருப்பதாலும் வாடைக் காற்றுக் காலத்திலும், சோழகக்காற்றுக் காலத்திலும் கடற்பிரயாணஞ் செய்யக்கூடிய வசதி இருத்தலாலும் அங்கிருந்து மக்கள் வந்து குடியேறியிருக்க வேண்டும்.” என்று று.யு.ளு. போக் என்பவர் கூறியுள்ளார் (2). இதே கருத்தை சேர். உவில்லியம் யோன்ஸ் (3), லூயிஸ் நெல், ஊ.ளு. நவரத்தினம் (1) என்போரும் வெளியிட்டிருக்கின்றனர். விஜயன் நகுலேஸ்வர ஆலயத்தைப் புதுப்பித்தான் என்று கூறப்பட்டிருத்தலாலும், திருமூலர் இலங்கையைச் சிவபூமி என்று கூறியிருத்தலாலும் (2) மிகப்பழைய காலத்தில் தமிழர்கள் இங்கே குடியேறினர் என்று கருத இடமுண்டு. அப்படியானால் அவர்கள் யார்? என்ற கேள்வி எழுகின்றது. அவர்கள் தென்னிந்திய கீழைக்கரையோரங்களில் ஆதிக்கம் செலுத்திய கள்ளர் என்னும் சாதியார் என்று கூறலாம். கள்ளருடைய காதுகள் பாரமான காதணி;களுடன் தூங்கியிருப்பதைக்கண்ட சிங்களவர் பரிகாசமாக அவர்களை லம்பகர்னர் என்று அழைத்தனர். லம்பம் - தூங்குகின்ற, கர்னர் – காதுடைவர் என்பது அதன் பொருள் (3), கள்ளர் மறவரைச் சார்ந்த “சாதியார். ஆவர்கள் கொள்ளை, கொலை , களவு முதலிய மறத்தொழிலைச் செய்யும் இயல்புடையவர். போர் புரிதலிலும் வல்லவர்கள் என்று “சேர் வால்றார் எலியெற்’ கூறியுள்ளார். (4). ஆவர்கள் இலங்கையின் வடபகுதியை 200 வருடங்கள் ஆட்சி செய்தனர்.

3. வடஇந்தியப் படையெடுப்புக்கள்
ஆரியர்கள் இந்தியாவுக்குள் நுழைந்தபோது (கி.மு. 1500) அவர்களை எதிர்த்துப் போர் புரிந்த நாகர்களையும், இயக்கர்களையும், திராவிடர்களையும் அவர் கள் முறையே பாம்புகள் என்றும் கூறினார். தமது பகைவர்களைக் கொல்லுமாறு இந்திரன், அக்கினி முதலிய தெய்வங்களை வேண்டினர் என்பது இருக்கு, சாமம் முதலிய வேதங்களால் அறியலாம் (1). திராவிடர் ஒருபோதும் அசுரராகார் என்பது ரா. இராகவையங்களாரது உறுதியான கருத்தாகும் (2). திராவிடர்களைத்தாசர் என்று கூறுவதும் பொருந்தாது என்பது பேராசிரியர் றாப்சன் கருத்தாகும் 

தென்னாட்டில் வசிக்கும் பகைவர்களை அழிப்பதற்கு அவர்கள் ஐந்து படையெடுப்புக்களில் ஈடுபட்டனர்(4).அவை, கந்தன் தலைமையில் ஒரு தெய்வீகப் படையெடுப்பு, அகத்தியர் தலைமையில் ஒரு முனிவர் படையெடுப்பு(5), இராமன் தலைமையில் ஓர் அரசர் படையெடுப்பு, புத்தன் தலைமையில் ஓர் அரசர் படையெடுப்பு (6), விஜயன் தலைமையில் ஓர் மக்கட் படையெடுப்பு என்பன. இப்படையெடுப்புக்களால் அதிகம் குடியேற்றம் நடைபெறவில்லை. அகத்தியரோடுவந்த பிராமணர் தென்னிந்தியாவிலும், யாழ்ப்பாணத்திலும் குடியேறினர்.

4 வியாபாரமும் குடியேற்றதும்
மேலே கூறப்பட்ட படையெடுப்புக்களினால் இராக்கதபயம் ஓரளவு நீங்கியது. சகலதேச மக்களும் வியாபார நோக்கத்தோடு இங்கு வரத்தொடங்கினர். இங்குள்ள துறைமுகங்களும் முக்கியத்துவம் அடைந்தன. “உறற்றேபற்றா” (ஊர்காவற்றுறை), சம்புகோவளம் என்னும் இரண்டும் பிறநாட்டுக் கப்பல்கள் ஏற்றுமதி செய்யும் துறைமுகங்களாயின. ஊர்காவற்றுறை கலிங்கமாகனால் அரண் செய்யப்பட்ட துறைமுகமாக விளங்கினதென்பது பூசாவளி என்னும் நுலினால் அறியக்கிடக்கிறது. (1). வட இந்திய வியாபாரங்கள் இங்குவற்து வியாபார!; செய்ததாகச் சாதகங்கள் கூறுகின்றன. (2). குந்தரோடையில் எடுக்கப்பட்ட 2 நாணயங்களும் இவ்வுண்மையை வற்புநத்துகின்றன. சேரநாட்டு வியாபாரிகள் பாலைக்காடு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, திருச்சி, பட்டுக்கோட்டை, புகார் முதலிய இடங்களுக்கூடாக உள்ள வியாபாரப்பாதை வழியாக வந்து தென்னிலங்கையிலிருந்து பொதிமாடுகள் மூலம் கொண்டுவரப்பட்ட வியாபாரப் பொருள்களை வாங்கிச் சென்றதனால் சேரநாட்டிற்கும் யாழ்ப்பாணத்திற்கும் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. இத்தொடர்பு சேரநாட்ழனர் இங்கு வந்து குடியேறச் சாதகமாக இருந்தது. 

5.சேரநாட்டுக் குடியேற்றம்
முதலில் யாழ்ப்பாணத்தில் குடியேறியவர்கள் சேரநாட்டினராகிய மலையாளிகள் என்பது நீலகண்ட சாஸ்திரியார் கருத்து (3), கிறீஸ்த சகாப்தத்திற்கு முன் மலையாளிகள் இங்கு வந்து குடியேறினர் என்னும் பாரம்பரியச் கூற்றுத் தமிழ்மக்களுள் இருந்து வருகிறதாகச் சேர். எமேசன் ரெனென்ற் (ளுசை நுஅநசளழn வுநnநெவெ) கூறுகிறார். மலையாளத்திலிருந்து நாடுகடத்தப்பட்டவர்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டார்கள் என்று லிபிறோஸ் (டுiடிநலசழள) என்னும் சரித்திராசிரியர் கூறுகிறார் (1). மலையாளத்திற் பரசுலராமராற் குடியேற்றப்பட்ட நம்பூதிரிப் பிராமணர்கள் மலையாளிகளை நாட்டைவிட்டு வெளியேற்றினர் என்று மலையாள சரித்திர நூலாசிரிய கேரளோற்பத்தி என்றும் நூல் கூறுகின்றது. இதெ கருத்தைப் பேராசிரியர் வி. ரங்காசாரியரும் கூறியிருக்கிறார் (2). நாட்டை விட்டு வெளியேறிய மலையாளிகளுட் சிலர் இருபது மைல் அகலமுள்ள பாலைக்காட்டுக் கணவாய்க்குள்ளால் வந்து வியாபாரப்பாதை வழியாகச் சென்று யாழ்ப்பாணம் வந்து குடியேறினர். அதே கணவாயாற் சென்று கொல்லிமலை, பச்சைமலை, சவ்வாது மலைகளில் மறைமுகமாகக் குடியேறி வாழ்கின்றனர். வேறு சிலர் கடல்மார்க்க்மாகக் கன்னியாகுமரி, காயல்பட்ழனம் இராமேஸ்வரம், மரந்தை வழியாக வந்து யாழ்ப்பாணத்திலும். தேன்னிலங்கையிலும் குடியேறினர்.

மளையாள நாடு களப்பியர் (கி.பி. 3-9, சாளுக்கியர் (கி.பி. 6). பாண்டியர், மகமதியர் (கி.பி. 1768-1793), விக்கிரமாதித்தன் முதலிய வேற்றரசர் ஆளகைக்குட்பட்டபொம், மலையாளிகள் நாட்டைவிட்டு வெளியேறினர். சிங்கள அரசர் வைத்திருந்த மலையாளக் கூலிப்படையைச் சேர்ந்த பலர் சம்பளம் ஒழுங்காகக் கொடுபடாமையாலும், வேறு காரணங்களாலும் படையைவிட்டு விலகி யாழ்ப்பாணம் வந்து குடியேறினர். அநேக மலையாளிகள் இங்கு வந்து குடியேறினர் என்பதை ஆ.னு. இராகவன் தமது நாகர்கோயில் வரலாற்றாய்வில் விளக்கியுள்ளார் (1). முலையாளத்தில் வேலைவாய்ப்பின்மையும் மலையாளக் குடியேற்றத்திற்குக் காரணமாகும்.

மலையாளத்திலுள்ள முக்கிய சாதிகள் இருபத்தேளுள் பதினான்கு சாதிகள் யாழ்ப்பாணத்திற் குடியேறியிருக்கின்றன என்பது போத்துக்கேயர் எழுதிவைத்த தோம்புகளால் அறியக் கிடக்கின்றது. (2). தோம்புகளின் அடிப்படையில் இங்குவந்து குடியேறியுள்ளார்கள் என்று ஊகிக்கலாம். மலையாளிகள் வந்து குடியேறிய இடங்களுக்குத் தங்கள் ஊரின் பெயரையோ, தங்கள் நாட்டின் பெயரையோ அல்லது அரசன் பெயரையா ஏதாவதொன்றை வைத்துள்ளனர்.
{2. தோம்பு என்பது ஊhகளிலுள்ள காணிகளின் பெயரும், பரப்பும், உடையவன் பெயரும் சாதியும், அரசிறை வரியும், கடமைகளும், ஊழியமும் குறிக்கப்பட்ட ஏட்டின் பெயராகும். இது கி.பி. 1623 இல் எழுதப்பட்டது. }

மலையாளச் சாதிகளும் குடியேறிய இடங்களும்
(1) குறும்பர் – குறும்பாவத்தை (சுதமலை), குரம்பசிட்ழ (ஏழாலை.
(2) முக்குவன் - முக்குவிச்சி ஒல்லை (இணுவில்).
(3) நாயர் – பத்திநாயன் வயல் (மல்லாகம்).
(4) புலையன்- மூப்பன்புலம் (ஏழாலை).
(5) மலையன் - மலையன் சீமா (சிறுப்பிட்டி).
(6) பணிக்கன் - பணிக்கன் சாட்டி (வேலணை).
(7) தீயன் - தீயா வத்தை (கோப்பாய்.)
(8) பட்டன் - பட்டன் வளவு (வரணி).
(9) வாரியார் – வாரிக்காவற்கட்டு (புங்குடு தீவு).
(10) வேடுவன் - வேடுவன் கண்டி (மூளாய், நவாலி).
(11) பாணன் - மாப்பணன் வயல் (நாவற்குழி).
(12) பிராமணன் வயல் (நாவற்குழி).
(13) வேளான் - வேளான் பொக்கட்டி (கச்சாய்).
(14) நம்பி – நம்பிராயன் தோட்டம் (சுதமலை).

மலையாளம் எ;னனும் பெயரோடு கூடிய குடியேற்றங்கள்
1. மலையாளன் காடு – அராலி, கோப்பாய்,
(2) மலையாளன் ஒல்லை – உடுவில்.
(4) மலையாளன் பிட்டி – கள பூமி.
(5) மலையாளன் தோட்டம் - சங்காணை , சுழிபுரம், சுமலை,
(6) மலையாளன் வளவு – அத்தியடி, அச்செழு.
(7) மலையாளன் புரியல் – களபூமி.

சேரன் என்னும் பெயரோடு கூடிய குடியேற்றங்கள்
1. சேரன் – சேரதீபம் (இலங்கை) .
(2) சேரன் கலட்டி – வரணி.
(3) சேரன் எழு – நவுண்டில்.
(4)சேரன் தம்பை – தனக்காரக்குறிச்சி.
(5) சோபாலன் சீமா – மாவிட்டபுரம். நவிண்டில்.
(6) வில்லவன் தோட்டம் – சங்கானை, சில்லாலை.

சிறிய மாற்றத்தோடு கூடிய சேரநாட்டுப் பெயர்கள்
1. கோட்டையம் - கோட்டைக்காடு. (2) சாத்தகிரி – சாத்தான் ஒல்லை (சுழிபுரம்). (3) பட்டாம்பி – பட்டாவளை (கொக்குவில்). (4) புன்னாடு – புன்னாலை, (5) முள்ளுர் – முள்ளானை (விளான்), முள்ளியான் (பச்சிலைப்பள்ளி) (6) வைக்கம் - வைக்கறப்பளை (புலொலி). (7) பைபோலை – பையோலை (கட்டுவன்). (8) மருதூர் – மருதம்பத்தை. (9) மல்லியம் - மல்லியோன் (வல்லுவெட்டித்துறை). (10) மாயனூர் – மாயனை (11) மாரி_ மாரியவளை (தெல்லிப்பழை). (12) மீசலூர் – மீசாலை. (13) எடக்காட்- இடைக்காடு (14) கச்சினாவளை – கச்சினாவடலி (சுன்னாகம்). (15) கள்ளிக்கோடு – கள்ளியங்காடு. (16) குட்டுவன் - கட்டுவன். குட்டன் வளவு (இயற்றாலை, தொல்புரம்);: (17) உரிகாட் - ஊரிக்காடு, (18) குலபாளையம் - குலனை (அராலி). (19) கொத்தலா – கொத்தியவத்தை (சுன்னாகம். (20) அலைப்பை – மலைப்பை (21) ஒட்டபாலம் - ஒட்டகப்புலம். (22) ஒல்லூர் – ஒல்லை. (23) களநாடு – களப+மி, களனை, (சங்கானை, புத்தூர், புலொலி, மாகியப்பிட்டி).

யாழ்ப்பாணத்தில் வழங்கும் சேரநாட்டு ஊhப்பெயர்கள்
(1)அச்செழு, (2) இடைக்காடு., (3) கரம்பன், (4) கிழாலி, (5) குதிரைமலை, (6) கொல்லம், (7) நாகர்கோவில், (8) கோவளம், (9) மாந்தை, (10) பாலைக்காடு முதலியன.

மலையாளத்திலும் யாழ்ப்பாணத்திலும் வழங்கும் பொதுச் சொற்கள்
1. துரம்பு, (2) வண்ணான், (3) பணம், (4) தம்பி, (5) அப்பச்சி, (6) பறைதல், (7) குட்டி முதலியன.

யாழ்ப்பாணத்திற் காணப்படும் மலையாள வழக்கங்கள்
1. பெண் வழிச் சொத்துரிமை, (2) பெண் வீட்டில் மாப்பிள்ளை வசித்தல், (3) பெண்கள் மார்புக்குக் குறுக்கே சேலையைக் கட்டுதல், (4) பெண்கள் காதோட்டையை ஓலைச்சுரள் வைத்துப் பெருப்பித்தல், (5) பெண்கள் மாதத்துடக்குக் காலத்தில் வண்ணானுடைய மாற்றுடை அணிதல், (6) சம்மந்தக் கலியாணம், (7) கட்டுக் கலியாணம், (8) குரு வில்லாக் கலியாணம், (9) ஆண்கள் வேட்டி கட்டும் முறை, (10 ஆண்கள் கன்னைக்குடுமி முடிதல், (11) கஞ்சி வடித்துச் சோறு சமைத்தல், (12) நாற்சார் வீடு கட்டுதல், (13) சங்கடம் படலை அமைத்தல், (14) வீட்டைச்சுற்றி வேலி அடைத்தல், (15) ஒழுங்கை அமைத்தல் முதலியன.

 தொடரும்

Published in Tamil