ஓஸ்டியோபோரோஸிஸ் எனப்படும் எலும்பு புரை நோயை வராமல் தற்காத்துக் கொள்வது எப்படி?
தற்காலத்தில் நாற்பது வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும் முதுகு வலி மற்றும் கழுத்து வலி ஏற்படுவது சாதாரணமாகிவிட்டது. இதற்கு காரணம் எலும்பு தேய்மானம் என்று கூறுவர். இதனை தடுக்க இயலாதா? என்று ஒரு பிரிவினரும், இதனை வராமல் தற்காத்துக் கொள்வது எப்படி? என்று மற்றொரு பிரிவினரும் கேட்பார்கள்.
எலும்புக்கு வலுவூட்டுவது கல்சியம் என்னும் தாதுசத்து. இந்த சத்தை நாம் எம்முடைய உடலில் குறையாமல் பார்த்துக்கொண்டால் எலும்பு தேய்மானம் ஏற்படாது. அலட்சியப்படுத்தினால் உடலில் கல்சியத்தின் அளவு குறைந்து எலும்பின் வலு குறையும். இதனால் எலும்பு முறிவு கூட ஏற்பட வாய்ப்புண்டு.
மாரடைப்பு ஸ்ரோக் முதலான உயிர்க்கொல்லி நோய்கள் பற்றி உரையாடும்போதெல்லாம் கொலஸ்ட்ரோல் பற்றிய அச்சம் இன்று பலரிடம் பரவலாக இருப்பதை காண்கிறோம்.இதனால் கொழுப்பு உணவுகள் எல்லாவற்றையும் கட்டுப்படுத்த ஆரம்பிக்கிறோம். முட்டை, பால் ,இறைச்சி உள்ளிட்ட பல உணவுகளை தவிர்க்கின்றோம்.இதனால் எமக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் புரதம் மற்றும் நுண்போசனைகளை இழந்துவிடுகிறோம் என்பதை பற்றி சிந்திக்க மறந்து விடுகிறோம்.உலகமயமாதலுடன் ஏற்பட்ட சில தப்பான புரிதல்களே இதற்கு காரணமாக இருக்கிறது.சுகாதார கல்வி அறிவூட்டலின் தவறான விளைவுகளும் கூட இதற்கான காரணம் எனலாம்
எம்மில் பலரும் ஒரு அசௌகரியமான சூழலில் ஆரோக்கிய ரீதியாக தங்களைப் பொருத்திக் கொள்ள முடியாதபோது அதன் பல வெளிப்பாடுகளில் முதன்மையானது தும்மல். அத்துடன் தும்மும் போது அதன் வேகம் குறித்து நாம் ஏற்கனவே அறிந்திருப்போம். ஆனால் ஒரு தும்மல் எவ்வளவு தூரம் பயணிக்கிறது என்பது குறித்து தெரியாது. ஆனால் தற்போது அமெரிக்காவிலுள்ள மருத்துவ விஞ்ஞானிகள் ஒரு தும்மலின் தூரத்தை நவீன கமெரா மூலம் படமாக்கி, ஒரு தும்மல் 25 அடி தொலைவு வரை பயணிக்கிறது என்பதை கண்டறிந்திருக்கிறார்கள்.
இரவு உணவினை அதிகமாக சாப்பிட்டுவிட்டால், அந்த உணவு செரிமானம் அடைய வேண்டும் என்பதற்காக வாழைப்பழத்தை சாப்பிட்டு தூங்கச்செல்வார்கள். மேலும், மலச்சிக்கல் பிரச்சனைக்கும் வாழைப்பழம் தான் சிறந்தது என்று அனைத்து மருத்துவர்களும் பரிந்துரை செய்கிறார்கள்.இரவு உணவிற்குப் பின் எந்த பழமும் சாப்பிடுவது நல்லது கிடையாது. அதிலும் குறிப்பாக வாழைப்பழம் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு உகந்தது இல்லை.
உலகம் முழுவதும் இன்று 500 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிறுநீரக செயலிழப்பிற்கு ஆளானவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் ரெட் மீட் என்றழைக்கப்படும் மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி ஆகியவற்றை முழுவதுமாகவும், முறையாகவும் பதப்படுத்தாமல் சாப்பிட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இன்றைய காலங்களில் 12 வயதிற்குட்பட்ட சிறார்கள் உடற்பருமனால் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு காரணம் அவர்களின் பால்ய காலத்தில் சரியாக உறங்காததே காரணம் என்று அண்மையில் ஒரு ஆய்வின் மூலம் கண்டறிந்திருக்கிறார்கள் அமெரிக்காவைச் சேர்த்த ஓஹியோ பல்கலைகழக விஞ்ஞானிகள்.