மூக்கில் சளி ஒழுகுதலால் வரும் பிரச்சினை
மூக்கு ஒழுகுதல், சளி, இரத்தம் ஆகியவை பொதுவாக 100-க்கு 50 பிள்ளைகளுக்கே இருக்கும். இது ஒரு பிரச்சினையாகவே கருதப்படுகிறது. சிறு குழந்தைகளுக்கு பொதுவாகவே காணப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில் குழந்தை அழும் அல்லது காய்ச்சல் வரும். சில நேரத்தில் குழந்தை அமைதியாக இருக்கும்.மூக்கு ஒழுகுதல் கசிவு நீராகவோ, இரத்தமாகவோ, சளியாகவோ இருக்கலாம். இரத்தப் போக்கு மூக்கில் இருந்தால் வேறு ஏதாவது இடத்தில் இரத்தம் வருகிறதா என ஆய்வு செய்ய வேண்டும். கோடையில் வறண்ட காற்று அதிகமாக இருப்பதால் குழந்தைகளுக்கு இப்பிரச்சினை அதிகமாக இருக்கும். இதனால் மூக்கில் தொற்று ஏற்படும். இந்தத் தொற்று காரணமாக புண் உண்டாகும்.
ஸ்மார்ட் கையடக்கத்தொலைபேசியின் அறிமுகத்தின் பின்பு நின்னா செல்பி, நடந்தா செல்பி, சாப்பிட்டா செல்பி என ஒரே செல்பி மயமாகியுள்ளது. மிக அபாயமான இடங்களில் செல்பி எடுக்கும் ஆர்வமும் இளைஞர்களிடம் அதிகரித்துள்ளதால் பலர் உயிரிழந்த சம்பவமும் நடந்துள்ளது. செல்பி மோகம் எந்த வயதினரையும் விட்டு வைக்கவில்லை. அடிக்கடி செல்பி எடுப்பதால் முகத்தில் சுருக்கம் விழுந்து சீக்கிரமே முதியவர் தோற்றத்தை ஏற்படுத்தி விடும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். கையடக்கத்தொலைபேசியில் இருந்து வெளிப்படும் ஒளியானது சருமத்தில் உள்ள நுண்துளைகள் வழியாக அடிப்பகுதிக்குள் ஊடுருவுவதால் அதிக வெப்பத்தை வெளிப்படுத்தி மெலனின் பிக்மென்ட் உற்பத்தியை அதிகரிக்கச் செய்கிறது.
அலர்ஜியால் திடீரென சளி பிடிக்கும். நாள்பட்ட சளியானது காசநோயாக மாறும். காய்ச்சலை உண்டாக்கும். அதிக சளியால் மூச்சு திணறல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படும். தூதுவளையை பயன்படுத்தி சளி பிரச்சினையை தீர்க்கும் மருந்து தயாரிக்கலாம். 10 தூதுவளை இலைகளை எடுக்கவும். இதனுடன், சிறிது முசுமுசுக்கை இலை, பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர சளி, இருமல் இல்லாமல் போகும்.
பிரபலம் பெற்று விளங்கும் விற்றமின் மற்றும் ஏனைய போஷணை சார்ந்த மாத்திரைகளை தினசரி உள் எடுப்பது அந்தப் போஷணைகள் உடலில் அளவுக்கு அதிகமாக உடலில் சேர வழிவகை செய்து உடல் நலத்துக்கு நன்மையை விடவும் அதிகளவு தீங்கை ஏற்படுத்தக் கூடியது விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடல் ஆரோக்கிய நிலை கருதி விற்றமின் ஈ, சி மற்றும் டி மாத்திரைகளை தினசரி உபயோகிப்பது விதைப்பை புற்றுநோய், இருதய நோய் உள்ளடங்கலான உடல் நலப் பாதிப்புகளை ஏற்படுத்துவதாக அமெரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழுவினர் எச்சரித்துள்ளனர்.
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் பாகற்காய் ஜூஸ் குடித்தால் இது உங்களின் செரிமான திரவத்தின் அளவை அதிகரித்து, பசியின்மையைப் போக்கும் மற்றும் வயிற்றில் உள்ள பூச்சிகளையும் அழிக்கும். மேலும் பாகற்காய் ஜூஸ் இரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்பாட்டுடன் வைத்திருக்கும்.ஆனால் பாகற்காய் ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், இரத்த சர்க்கரை அளவை சீராகப் பராமரிக்கலாம். முக்கியமாக இது சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஏற்ற ஜூஸ்.
புத்தகம் படிக்கும் போது மனமானது அமைதியாக இருக்கும். ஆனால் இதயமோ புத்தகத்தின் அடுத்த பக்கத்தில் என்ன இருக்குமோ என்றும், அடுத்து என்ன நடக் குமோ? என்றும் பதைபதைக்கும் இப்படி செய்தாவது இதயத்துடிப்பை அதிகரிக்கச் செய்து இதயத்தைக் காத்திடலாம். அல்லது தேநீரில் உள்ள ப்ளேவோனாய்ட்டுகள் இரத்தக் குழாய்களை மேம்படுத்தி அதனை ஓய்வெடுக்க வைக்கும். இதன் மூலமாகவும் இதயத்தைக் காத்திடலாம்.