இதோ.. உங்கள் கொழுப்பை குறைக்க கொண்டைக்கடலை.!
இரத்த நாளங்களில் கொழுப்பு படிவதையும் வயிற்றில் ஏற்படும் புற்றுநோயையும் கொண்டை கடலை தடுக்க வல்லது.
இதில் புரதம், போலிக் ஆசிட், மாப்பொருள், கலோரி, நார்ச்சத்து மற்றும் தாது உப்புக்களான கால்சியம், பொஸ்பரஸ், இரும்பு, மக்னீஷியம், சோடியம், பொட்டாஷியம் ஆகியவை அதிக அளவில் இருக்கின்றன.
வெள்ளை நிறக் கொண்டைக் கடலையைக் காட்டிலும் சிறிய அளவிலானக் கறுப்பு நிறக் கொண்டைக் கடலையில் அதிக அளவு நார்ச்சத்து காணப்படுகிறது.
கோடை காலம் வந்து விட்டாலே வெயிலின் தாக்கம் அதிகரித்து காற்றில் ஈரப்பதம் குறைந்து சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்படும். இதனால் உடல் ஆரோக்கியத்தில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும். நம் உடலுக்குத் தேவையானதைவிட தண்ணீரை அதிகமாகக் குடிப்பதாலும், குறைவாகக் குடிப்பதாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை விளக்கி, தேவையான ஆலோசனைகளை வழங்குகிறார் உணவியல் வல்லுநர்.பொதுவாக, உணவில் உள்ள ஊட்டச் சத்துக்கள் அனைத்தும் இரத்தத்தில் கலந்துவிடும். சோடியம் போன்ற உப்புச்சத்துப் பொருட்களை அதிகம் சாப்பிடுவதால், அவை ரத்தத்தில் கலந்து சில நேரங்களில் ஏதாவது ஓரிடத்தில் ரத்த நாளங்களில் படிந்துவிடக்கூடும்.நாளடைவில் அவை இரத்தத்திலேயே தங்கி, இரத்தக்கொதிப்பு போன்ற பிரச்சினை வரக்கூடும். சாப்பிட்டதும் ஒரு டம்ளருக்குக் குறையாமல் தண்ணீர் குடிப்பதால், உடனடியாக உப்பு மற்றும் இதர பொருட்கள் சிறுநீர் வழியாக வெளியேறிவிடும்.
தூக்கக் குறைபாடு பலதரப்பட்ட மக்களையும் பாதித்து வருகிறது. 4 ஆண்களில் ஒருவருக்கும், 9 பெண்களில் ஒருவருக்கும் குறட்டை, தூக்கத்தில் மூச்சுத்திணறல் உள்ளிட்ட தூக்கக் குறைபாடுகள் உள்ளன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.தூக்கத்தின் அவசியம்: உடலுக்கும், மனதுக்கும் ஓய்வை அளிப்பது தூக்கம் மட்டுமே. நன்கு ஆழ்ந்து தூங்கி விழித்துக் கொள்பவர்கள் மிக உற்சாகமாகச் செயல்படுவார்கள். முறையான தூக்கம் உடல் உறுப்புகள் சுறுசுறுப்பாக இயங்க உதவுகிறது. ஒரு மனிதன் தன் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கை தூக்கத்துக்கு செலவழிக்கிறான். ஆனால் அந்த அவசரக் காலத்தில் தூக்கத்தின் அளவு குறைந்து கொண்டே போகிறது.மூன்று நிலைகள்: தூக்க குறைபாட்டை ஆரம்ப நிலை, இடைநிலை, இறுதி நிலை என்று மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
சின்ன உடல்நலக் குறைவு என்றால் கூட மருத்துவரை நாடி ஓடாமல் வீட்டில் கிடைக்கும்பொருட்களை கொண்டு தடுக்கலாம். அவை என்னவென்று பார்க்கலாம்.
நமது உடல் கொலஸ்ட்ரோலைத் தன்னிலிருந்தே உற்பத்தி செய்து கொள்கிறது. நம் கல்லீரல் நாளொன்றுக்குச் சுமார் 1000 மில்லிகிராம்கள் வரை கொலஸ்ட்ரோலை உற்பத்தி செய்கிறது.கல்லீரலும் மற்ற செல்களும் சேர்ந்து இரத்தத்தின் மொத்த கொலஸ்ட்ரோல் அளவில் 75% உற்பத்தி செய்கின்றன.25% கொலஸ்ட்ரோல் நாம் உட்கொள்ளும் உணவு வகைகளான முட்டைக் கரு, மாமிசம், கோழியிறைச்சி, பால் மற்றும் பால் தயாரிப்புகளிலிருந்து கிடைக்கிறது.
பெண்களில் ஏற்படக்கூடிய புற்று நோய்கள் பல உள்ளன.அதில் மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை வாசல் புற்றுநோய், சூலகப்புற்று நோய் என பல வகைகள் உள்ளன. இதில் சூலகப்புற்று நோய் என்பது கிட்டத்தட்ட நடுத்தர வயதில் சூலகங்களில் ஏற்படக்கூடியது. மற்றைய உறுப்புக்களில் ஏற்படக்கூடிய புற்று நோய்கள் போல் இல்லாது சூலகப்புற்று நோய் எவ்வித நோய் அறிகுறிகளையும் காட்டாது அமைதியாக உருவெடுத்து வளரக்கூடியது. ஆகையால், சூலகப்புற்று நோயை கண்டறியும் போது சற்று தாமதமாகிய பரவிய நிலையாக இருக்கலாம். இதனால் இதற்கு சிகிச்சைகள் வழங்கும் போது அதாவது சத்திர சிகிச்சையாக இருந்தாலும் சரி ஊசிகள் மூலமான சிகிச்சைகளாக இருந்தாலும் சரி எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காமல் விடலாம். சூலகப்புற்று நோய்களின் மிக ஆரம்ப நிலையை கண்டறிவது சிறந்த வெற்றிகரமான சிகிச்சையை வழங்க உதவும். இதன் மூலம் நோய் ஏற்பட்ட பெண்களும் நோயிலிருந்து முற்றாக விடுபடக்கூடியதாக உள்ளது