அல்சர் குணமடைய எளிய தீர்வுகள்
கறிவேப்பிலை, சீரகம், மிளகு, மஞ்சள், திப்பிலி, சுக்கு சம அளவு எடுத்துப் பொடித்து அதில் அரை ஸ்பூன் எடுத்து மோரில் கலந்து பருகுதல்.
மணத்தக்காளிக் கீரையைப் பாசிப் பயிறு, நெய் சேர்த்துச் சமைத்து உண்ணல்.
அரை ஸ்பூன் சுக்குத்தூளைக் கரும்புச்சாற்றில் கலந்து காலை வேளையில் அருந்துதல்.
பெருஞ்சீரகம், சுக்கு, மிளகு திப்பிலி, சம அளவு எடுத்துப் பொரித்து, 2 கிராம் எடுத்து, உணவிற்குப் பின் உண்ணல்.
பலரும் வெந்தயம் தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த மட்டும் தான் பயன்படும் என்று நினைக்கின்றனர். ஆனால், இந்த வெந்தயம் சருமத்திற்கும் பல நன்மைகளைத் தரும் என்பது தெரியுமா? ஆம், வெந்தயத்தைக் கொண்டு சருமத்தில் ஏற்படும் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். வெந்தயம் எளிதில் கிடைக்கக்கூடிய பொருள் என்பதால், இதனைக் கொண்டு சருமத்தை எளிதில் பராமரிக்கலாம்.சரி, இப்போது வெந்தயம் எந்த சரும பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வளிக்கும் என்பதையும், அப்பிரச்சினைகளைப் போக்க வெந்தயத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதையும் பார்ப்போம்.
ஒரு சிலருக்கு தலைச்சுற்றல் ஏற்படும். அதையே வேறு சிலர் தலை கிறுகிறுத்தது என்பர். உடனே எம்மை அணுகி இரண்டும் ஒன்றா? என கேட்பர். இதற்கு பதிலளிக்க வேண்டும் என்றால், இரண்டு வேறு வேறு. அதாவது தலைச்சுற்றல் என்பது வேறு. தலை கிறுகிறுப்பது என்பது வேறு. இரண்டிற்கும் வித்தியாசம் இருக்கிறது. ஒரு சிலருக்கு உட்கார்ந்திருப்பார்கள். எழுந்திருக்கும் போது அரை நொடிக்கு குறைவான கால அவகாசத்தில் சர்ரென்று தலை சுற்றியடிக்கும். அதன் பின் அவை சரியாகிவிடும். எந்த விளைவோ தொடர் பாதிப்போ இருக்காது. ஆனால் ஒரு சிலருக்கு அடிக்கடி தலைச் சுற்றல் வரும். சில சமயத்தில் இது தொடர்ந்து வரக்கூடும். இப்படி ஏற்பட்டால், முதுகு தண்டுவடம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள நரம்புகள், எலும்பு பகுதி பாதிக்கப்படும் அள விற்கு ஒரு எரிச்சலும் ஏற்படும். இதனை தலைச்சுற்றல் என்று எண்ணி அலட்சியமாக இருந்துவிடாதீர். ஏனெனில் இவை தான் வெர்டிகோ பிரச்சினை.
இயற்கை மருத்துவத்தில் நிறைய நன்மைகள் இருக்கின்றன. அதில் ஒன்று தான் எலுமிச்சை நீரில் உப்பு கலந்து குடிப்பது. தினமும் இதை காலை வேளையில் தவறாமல் பின்பற்றி வந்தால் உடலுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கின்றன. தேவையான பொருட்கள்: நீர், எலுமிச்சை சாறு, இரண்டு டீ ஸ்பூன் உப்பு
அதிகளவில் சீனியை உபயோகிப்பது மனஅழுத்தம் மற்றும் துஷ்பிரயோகங்களால் ஏற்படுவதையொத்த பாதிப்பை மூளைக்கு ஏற்படுத்துவதாக அவுஸ்திரேலிய நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். சீனி மனிதர்களின் உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் பகுதியை பாதிப்பதே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. 