அவதானம் : மக்களை வதைக்கும் தொற்றா நோய்கள்
நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வம். மனித வாழ்வில் ஆரோக்கியம் முக்கியமானதாகும். உலகில் வாழும் மக்கள் நீண்ட காலம் உயிர் வாழ வேண்டும் என ஆசைப்படுகின்றனர். அதற்காக அவர்கள் என்ன விலை கொடுக்கவும் தயாராய் உள்ளனர்.தற்காலத்தில் தொற்றா நோய்களின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகின்றது. இதயநோய், நீரிழிவு (சர்க்கரை/சீனி) வியாதி, சிறுநீரக நோய், குருதியமுக்கம், வாதம், பக்கவாதம், புற்று நோய், மன அழுத்தம்…. போன்ற நோய்கள் அதிகரித்துள்ளன. உலக சனத்தொகையில் 33 வீதத்திற்கும் அதிகமானவர்கள் தொற்றா நோய்களுக்கு ஆளாகியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவிக்கின்றது.
உணவில் அதிக எண்ணெய் பயன்படுத்துவதை தடுக்கும் எளிய வழிமுறைகள்
பலருக்கும் எந்த எண்ணெய் நல்லது என்று தெரியாமல் குழம்புகின்றனர். கடுகு எண்ணெய், சோயா எண்ணெய் ஆகியவற்றை கலந்து பயன்படுத்துவது நல்லது என்கின்றனர் நிபுணர்கள். இவற்றை எல்லாம் விட, ஒலிவ் எண்ணெய் மிகச் சிறந்தது; இதய நோய் வருவதற்கு காரணம், கொலஸ்டரோல் தான். கெட்ட கொலஸ்டரோல் , இரத்தத்தில் சேரும்போது, இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. நம்மில்பல பேருக்கு எண்ணெய் பழக்கத்தை கைவிட முடியாது தான்; ஆனால் , கட்டுப்படுத்திக்கொள்ளலாமே.
நீரிழிவு நோயாளிகளுக்கான கட்டளைகள்
நீரிழிவு முற்றிலும் குணமாகாது என்பதால் நீரிழிவு நோயாளிகள் மாத்திரை, ஊசியோடு வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். மாதம் ஒருமுறை சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் இரத்தப் பரிசோதனை, 3 மாதங்களுக்கு ஒருமுறை இரத்தச் சர்க்கரை சராசரி அளவு சோதனை, 6 மாதங்களுக்கு ஒரு முறை ஈ.சி.ஜி. மற்றும் கண் பரிசோதனை போன்ற தேவையான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். சுய வைத்தியம் கூடாது. வைத்தியரின் ஆலோசனைக்குப் பின்னரே மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும். அதிகாலை நாலரை முதல் ஆறு மணிக்குள் நடைப்பயிற்சி செய்ய வேண்டும். மாவுச்சத்தைத் தவிர்த்து நார்ச்சத்து உணவை அதிகரித்துக்கொள்ள வேண்டும். பழங்களில் மா, பலா, வாழையை தவிர்த்து கொய்யா, நாவல், பப்பாளி, அத்தி அதிகம் சேர்க்க வேண்டும்.
குழந்தைகளை பாதிக்கும் மன நலக் கோளாறு
குழந்தை மற்றும் டீனேஜரைப் பாதிக்கும் மனச்சோர்வுக் கோளாறுகளில் ஒன்றான சீர்குலைக்கும் மனநிலை கோளாறு (DMDD) பற்றி அலசுவோம்...
எல்லாக் குழந்தைகளுமே, தனக்குப் பிடித்தவாறு விஷயங்கள் நடக்கவில்லையெனில், சண்டித்தனம் செய்வது வழக்கமே. பெரும்பாலான குழந்தைகள் கோபம், வருத்தம் போன்ற மோசமான எதிர்மறை மன நிலையுடன் காணப்படுவதும் சகஜமே. அதுவே, அடிக்கடி / கடுமையாக, விரும்பத்தகாத அளவில் எரிச்சல் மற்றும் கோபத்தை வெளிக்காட்டினால், அது அவர்கள் பள்ளி, குடும்ப வாழ்க்கையை பாதிக்கக்கூடும். தொடர்ந்து எரிச்சல் மனநிலையிலேயே இருப்பது மற்றும் அடிக்கடி, கடுமையாகவும் பெருங்கோபத்துடனும் சுய கட்டுப்பாட்டை மீறி செயல்படும் 18 வயதிற்குட்பட்டவர்களுக்கு இக்கோளாறு இருக்கும். இக்குழந்தைகளுக்கு தங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்பாட்டில் வைத் திருப்பது மிகவும் கடினமான விஷயம். சிறு வயதிலிருந்தே, தொடர்ந்து எரிச்சல் / கோபம் கொள்ளும் குழந்தைகளுக்கு DMDD தாக்கும் அபாயம் அதிகம்.
தூங்கும் முன் ஒரு கப் தண்ணீர்
உடல் வறட்சியடைவதைத் தடுக்க சிறந்த வழி தண்ணீர் குடிப்பது தான். அதிலும் தூங்கும் முன் தண்ணீர் குடிப்பதால், உடலின் நீர்ச்சத்து சீராகப் பராமரிக்கப்படும். பகலில் தண்ணீர் குடிப்பது போல, இரவில் நம்மால் தண்ணீர் குடிக்க முடியாது. இருந்தாலும் இரவில் உடலுறுப்புகளின் செயல்பாடு அதிகம் இருக்காது என்பதால், அதிகளவு தண்ணீர் தேவைப்படாது. இருப்பினும் தூங்குவதற்கு முன் ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பதால், மறுநாள் காலையில் எழும் போது நல்ல புத்துணர்ச்சியை உணரக்கூடும். தினமும் குடிக்கும் நீரின் அளவை அதிகரிப்பதுடன், இரவில் படுக்கும் முன் தண்ணீர் குடியுங்கள். இதனால் பகல் நேரத்தை விட, இரவில் உடல் சுத்தமாவதுடன் டாக்ஸின்கள் வெளியேற்றப்பட்டு, உடல் வேகமாக சுத்தமாகும்.
நீரிழிவும் பார்வைக் குறைபாடும்
நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை தெற்காசியாவில் மிகவும் வேகமாக அதிகரித்து வருவதால் பார்வைக் குறைபாடு தொடர்பான சிக்கல்களின் எண்ணிக்கையும் அதிகரித்தே வருகிறது. பார்வைக் குறைபாடுகளில் டயாபடீக் ரெட்டினோபதி எனப்படும், நீரிழிவு நோயால் ஏற்படும் பார்வைக் குறைபாடு, மூன்றாம் இடத்தில் உள்ளது. பொதுவாக பார்வைக் குறைபாட்டைப் பொறுத்தவரை கண்புரை நோயால் பாதிக்கப்படுவோர் அதிகம். அதற்கு அடுத்த இடத்தில் இருப்பது க்ளூக்கோமா எனப்படும் கண் நீர் அழுத்தத்தால் ஏற்படும் பார்வைக் குறைபாடு. இதற்கடுத்து வருவது டயபடீக் ரெட்டினோபதி. மேற்கூறிய மூன்று வித பார்வைக் குறைபாடுகளும் ஆரம்பக் கட்டத்தில் கண்டறிப்பட்டால் பார்வையிழப்பிலிருந்து பாதுகாக்க இயலும். அதற்கான அனைத்து நவீன வசதிகளும் தற்போது வந்துவிட்டன. கண்ணைப் பரிசோதிக்கும்போதே, கண்ணின் பார்வைத் திறன் கணக்கிடப்படுகிறது.