28 09 2017 (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -36) தமிழினியின் திருமணமும் -மரணமும்: நான் சிறையிலும் புனர்வாழ்விலும் இருந்த காலப் பகுதிகளில் எனது தங்கை குடும்பமும் எனக்கு நெருக்கமான சில அன்புள்ளங்களும் எனது தாயாருக்கு அவ்வப்போது சில பொருளாதார உதவிகள் செய்திருந்ததை மறக்க முடியாது.வவுனியா தடுப்பு முகாமிலிருந்து மீண்டும் பரந்தனுக்குச் சென்ற எனது தாயார் குறைந்த செலவில் ஒரு தற்காலிக இருப்பிடத்தை ஏற்படுத்தி வசிக்கத் தொடங்கினார்.எனது சகோதர சகோதரிகள் திருமணமாகி, குடும்பங்களுடன் வாழ்ந்துவரும் நிலையில் நானும் ஒரு திருமணம் செய்துகொள்ள வேண்டுமென எனது தாயார் வற்புறுத்தத் தொடங்கினார்.எனது கடந்தகால வாழ்வில் திருமணத்திற்கு அதிக அளவு முக்கியத்துவம் கொடுத்து நான் சிந்தித்தது கிடையாது. அதற்காகத் திருமணமே செய்துகொள்ளக்கூடாது என்ற வைராக்கியமும் இருக்கவில்லை. என்னையும் எனது கடந்தகாலத்தையும் ஆழமாகப் புரிந்துகொள்ளக்கூடிய ஒரு ஆண் துணை அமைந்தால் திருமணம்…
20 09 2017 ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -(பாகம் -35) வவுனியா புனர்வாழ்வு நிலையத்தில் நடைபெற்ற தோழி பிரியாவின் திருமணத்தில் கலந்துகொண்ட தமிழினி!! ஆண்களுக்கான புனர்வாழ்வுப் பயிற்சி நிலையங்கள் வவுனியாவிலும் வெலிக்கந்தையிலும் அமைக்கப்பட்டிருந்தது. புனர்வாழ்வு பெறுபவர்களின் தொகை குறைந்துசென்ற காரணத் தால் வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்திற்கு ஆண்களும் மாற்றப்பட்டிருந்தனர்.ஒரு குறிக்கப்பட்ட தொகைக்கு அதிகமானவர்கள் புனர்வாழ்வு காலத்தை நிறைவுசெய்யும்போது அவர்களைப் பெற்றோரிடம் கையளிக்கும் நிகழ்வு பெரிய வைபவமாக முன்னெடுக்கப்படுவது வழக்கம்.நானிருந்த காலப்பகுதியில் இப்படியான இரண்டு ‘விடுவிப்பு வைபவங்கள்’ இடம்பெற்றன. ஒவ்வொரு நிகழ்விலும் நூற்றுக்கும் அதிகமான முன்னாள் போராளிகள் குடும்பத்தவர்களிடம் ஒப்படைக்கப் பட்டனர்.2013 தமிழ்ச் சிங்கள சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு வவுனியா நகரசபை மண்டபத்தில் விளையாட்டுப் போட்டிகளும் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. இந்த நிகழ்வுக்குச் சிறைச் சாலைகள் மற்றும் புனர்வாழ்வு மறுசீரமைப்பு அமைச்சரும் அவருடைய ஏற்பாட்டில் காலி, மாத்தறை…
12 09 2017 ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -34  புனர்வாழ்வு: எனக்காக எந்தச் சட்டத் தரணியும் வரவில்லை, எனக்காக ஒரு சட்டத் தரணியை ஏற்பாடு செய்வதற்காக எனது ஏழை அம்மா மிகவும் கஷ்டப் பட்டார் எனது வழக்குக்காகப் பதினாலு நாட்களுக்கு ஒருதடவை கொழும்பு அளுத்கடையிலுள்ள நிதிவான் நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட்டேன்.எனக்காக ஒரு சட்டத் தரணியை ஏற்பாடு செய்வதற்காக எனது ஏழை அம்மா மிகவும் கஷ்டப் பட்டார்.மனித உரிமை அமைப்பு ஒன்றிடம் அம்மா பல தடவை சென்று கேட்டபோதும் அவர்கள் என்ன காரணத்தாலோ எனது வழக்கை எடுத்துக்கொள்ள முடியாது என மறுத்துவிட்டனர்.நான் விளக்கமறியலில் வைக்கப்பட்டு ஒரு வருடமளவும் எனக்காக எந்தச் சட்டத் தரணியும் நீதிமன்றத்திற்கு வரவில்லை.எனது வழக்கைக் கையாண்ட நீதிபதி பலதடவைகள் என்னிடம் “உங்களுக்குச் சட்டவாளர் இல்லையா?” எனக் கேட்டபோது “இல்லை“ என்றே பதிலளித்தேன்.ஒரு பலம் பொருந்திய…
05 09 2017 (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -33)  சரணடைவும் சிறைச்சாலையும்: “கைவிடப்பட்ட சிறை மனிதர்களின் கண்களில் தேங்கியிருக்கும் ஏக்கத்தின் வலி மகா கொடுமையானது”.. சிறைச்சாலையில் பெரும்பான்மையானவர்கள் போதைப் பொருள் தொடர்பான வழக்குகளுக்காகவே அடைக்கப்பட்டிருந்தனர்.கிலோ கணக்கில் போதைப் பொருட்களை விற்பனை செய்யும் பெரு முதலாளிகள் தொடக்கம், கிராம் கணக்கில் விற்பனை செய்யும் சிறிய வியாபாரிகள், வெளிநாடுகளிலிருந்து போதை மருந்து கடத்தியவர்கள் என நூற்றுக்கணக்கான பெண்கள் அங்கிருந்தனர்.இவர்களில் பெரும்பான்மையானவர்கள் சிங்களப் பெண்களாக இருந்தபோதும், முஸ்லிம் மற்றும் கொழும்பு பகுதிகளைச் சேர்ந்த தமிழ்ப் பெண்களும் இருந்தனர்.போதை மருந்தைத் தமிழில் ‘தூள்’ எனவும் சிங்களத்தில் ‘குடு’ எனவும் குறிப்பிட்டு அழைப்பார்கள். சிறைச்சாலையில் நான் நேரடியாகக் கண்ட அனுபவத்தின்படி இந்தத் தூள் வியாபாரம் செய்யும் முதலாளிகள் தூள் குடிப்பதில்லை.அவர்களுக்குத் தினசரி கொண்டுவரப்படும் வீட்டுச் சாப்பாடு மிகச் சிறப்பானதாக இருக்கும். ஒருவரைப் பார்த்த…
31 08 2017 (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -32) “இவ ஏன் உயிரோட வந்தவ, இதுகள் செத்திருக்கவேணும், இதுகளை நம்பி நாங்கள் உதவி செய்து போட்டு இங்க வந்திருக்கிறம்” என திட்டிய சிறையிலிருந்த பெண்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து கடலிலும், தரையிலும் பல்வேறு தாக்குதல் சம்பவங்களில் உயிருடன் பிடிபட்ட பெண் போராளிகளும், கரும்புலி நடவடிக்கைக்காக அனுப்பிவைக்கப்பட்ட நிலையில் வவுனியா மற்றும் கொழும்பு போன்ற நகரங்களில் கைது செய்யப்பட்டவர்களான பெண் கரும்புலி உறுப்பினர்களும் அங்கிருந்தனர்.நான் அங்குப் போயிருந்தபோது விடுதலைப் புலி வழக்கிலிருந்த ஒரு சில பெண்கள் மட்டுமே என்னுடன் இயல்பாகக் கதைத்துப் பழகினார்கள்.பெரும்பாலானவர்கள் விலகி நின்றதுடன் என்னைக் கோபமாக விமர்சித்தும் திட்டியும் தமது உணர்ச்சிகளை வெளிப்படுத்தினார்கள். “இவ ஏன் உயிரோட வந்தவ, இதுகள் செத்திருக்கவேணும், இதுகளை நம்பி நாங்கள் உதவி செய்து போட்டு இங்க…