29 01 2018 அறிந்தும் அறியாமலும்…(33) உலகெலாம் வாழ நாமும் வாழ்வோம்!சுப.வீரபாண்டியன் தந்தை பெரியாரின் இந்துமத எதிர்ப்பு கடவுள் மறுப்பாகவும் மாறியது. அதனை மட்டுமே பெரிதுபடுத்தி,அவரை வெகு மக்களின் எதிரியாகக் காட்டும் முயற்சி தொடங்கியது. அது இன்று வரையில் கூடத் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. அவர் இறந்து 40 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் அவர் குறித்த பாராட்டுகளும், விமர்சனங்களும் ஓயவே இல்லை. அவர் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதற்கு அதுவே பெரும் சான்றாக உள்ளது. சாதியை எதிர்க்கப் புறப்பட்ட அவர், சாதியின் வேர் இந்து மதத்திற்குள் இருப்பதை உணர்ந்தார். மூட நம்பிக்கைகளின் வேர் எல்லா மதங்களுக்குள்ளும் இருப்பதை உணர்ந்தார். எனவே மதங்களை எதிர்த்தார். அனைத்து மதங்களின் வேர்களும் கடவுளுக்குள் இருப்பதை எண்ணித் தெளிந்தபோது, கடவுளை எதிர்க்காமல், கடவுளை மறுக்காமல் தன் சமூகப் பணி நிறைவடையாது என்னும் முடிவுக்கு…
23 01 2018 அறிந்தும் அறியாமலும்…(32) பிறவி முதலாளி எதிர்ப்பு சுப.வீரபாண்டியன் சுயமரியாதை இயக்கத்தின் தொடக்க காலச் செயல்பாடுகள் அனைத்தும் வருண-சாதி அமைப்பை எதிர்ப்பதாகவே இருந்தன. இந்தியாவில் பொதுவுடமைக் கட்சி காலூன்றிய காலமும் அதுதான். 1916ஆம் ஆண்டில், நீதிக்கட்சி,மறைமலை அடிகளாரின் தனித்தமிழ் இயக்கம், அன்னி பெசன்ட் அம்மையாரின் ஹோம் ரூல் இயக்கம் ஆகியவை தோன்றின.1925-26இல், சுயமரியாதை இயக்கம், பொதுவுடமைக் கட்சி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஆகியவை தோன்றின. பொதுவுடமைக் கட்சி வர்க்க எதிர்ப்பை முன்னிலைப் படுத்தியது. ஏழை மக்களின் உழைப்பைச் சுரண்டும் முதலாளிகளை எதிர்ப்பதே அக்கட்சியின் முதன்மை நோக்கமாக இருந்தது. ஆனால் பெரியாரோ, அதற்கு முதலிடம் தரவில்லை. அதற்கான காரணத்தையும் பெரியார் சொன்னார். முதலாளி என்பவன் பரம்பரையாக வருபவன் அல்லன். இன்றைய முதலாளி நாளையே இன்சால்வென்ட் கொடுத்து பாப்பர் ஆகிவிடலாம். அது போலவே, இன்று கஞ்சிக்குத் திண்டாடுபவன் நாளைக்குப்…
14 01 2018 அறிந்தும் அறியாமலும்…(31) மகாத்மாவும், ஸ்ரீமான் காந்தியும்"மனிதரில் நீயுமோர் மனிதன் மண்ணன்று இமைதிற எழுந்து நன்றாய் எண்ணுவாய் தோளை உயர்த்து சுடர்முகம் தூக்கு என்று பாடினார் புரட்சிக்கவி பாரதிதாசன். மனிதர்களைப் பார்த்து, நீங்கள் மனிதர்கள்தாம், மண் இல்லை என்று சொல்ல வேண்டுமா? அதற்கு ஒரு கவிஞர் தேவையா? ஆம், சொல்ல வேண்டியிருந்தது. அதற்கு ஒரு கவிஞர் இல்லை, ஓர் இயக்கமே தேவை இருந்தது. அந்த இயக்கம்தான் சுயமரியாதை இயக்கம். அதன் நிறுவனர் தந்தை பெரியார்! நீதிக்கட்சி தொடங்கப்பட்ட வேளையில், அவர் அதில் இடம் பெற்றிருக்கவில்லை. அவர் அப்போது காங்கிரஸ் கட்சியில் இருந்தார். நீதிக்கட்சிக்குப் போட்டியாகக் காங்கிரஸ் கட்சி தொடங்கிய 'சென்னை மாகாண சங்கத்தின்' துணைத் தலைவராகவும் இருந்தார். அச்சங்கம் மூலமாகத்தான் நாய்டு, நாயக்கர், முதலியார் என சாதிப் பெயர்களால் வரதராஜுலு, பெரியார், திரு.வி.க.ஆகிய மூவரும்…
06 01 2018 அறிந்தும் அறியாமலும்…(30)  திராவிடரும் பார்ப்பனரும் சென்ற வாரம் வெளியான கட்டுரைக்கு நாற்பதுக்கும் மேற்பட்ட பின்னூட்டங்கள் வெளிவந்துள்ளன. அவற்றுள் சில நியாயமான கேள்விகளாகவும், சில அவதூறுகளாகவும் உள்ளன. நான் தி.மு.க. ஆதரவாளன் என்றும், அதனால் கலைஞரை ஆதரித்தே நான் எழுதுவதாகவும் சிலர் குறிப்பிட்டுள்ளனர். உண்மைதான். இதனை நானே ஆயிரம் முறை மேடைகளிலும், என் எழுத்துகளிலும் குறிப்பிட்டுள்ளேன். இதனைக் கண்டுபிடிக்க நிபுணர் குழு ஏதும் தேவை இல்லை. புதிதாக ஏதேனும் கண்டுபிடித்துச் சொன்னால் விவாதிக்கலாம். மேலும், என்னை நான் நடுநிலையாளன் என்று எப்போதும் சொல்லிக் கொண்டதில்லை. யாருமே நடுநிலையாளர்களாக இருந்துவிட முடியாது. நான் வெளிப்படையாக ஒப்புக் கொள்கிறேன். மிகப் பலர் தங்களின் சார்பினை மறைத்துக் கொள்கின்றனர். அவ்வளவுதான் வேறுபாடு! ஒவ்வொருவருக்கும் ஒரு விதமான சார்பும், நிலைப்பாடும், அவரவர் படிப்பு, அனுபவம், வாழ்க்கைச் சூழல் ஆகியனவற்றை ஒட்டி…
28 12 2017 அறிந்தும் அறியாமலும்…(29) மானோடும் ஓட்டம்.... புலியோடும் வேட்டை! சுப.வீரபாண்டியன் 1912இல் நடேசனார் தொடங்கிய அந்த இயக்கத்தின் பெயர்தான் 1913இல், அதன் முதல் ஆண்டு விழாவின் போது 'திராவிடர் சங்கம்' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பார்ப்பனர் அல்லாதவர்களின் பிள்ளைகளையும் படிக்க வைக்க வேண்டும் என்பதே அதன் நோக்கம். அதனால் முதலில், பார்ப்பனர் அல்லாதோர் சங்கம் என்றே பெயரிடக் கருதினர். ஆனால் அது எதிர்மறையான பெயராக உள்ளதால், திராவிடர் சங்கம் என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தனர். இங்கே நாம் கூர்மையாகக் கவனிக்க வேண்டிய ஒன்று உள்ளது. திராவிடர் என்பது ஆரியர் அல்லது பார்ப்பனர் என்னும் சொற்களுக்கு எதிர்ச் சொல்லாகத்தான் கருதப்பட்டுள்ளது. கேரள, ஆந்திர, கர்நாடகப் பகுதிகளைச் சார்ந்தோர் என்னும் பொருளில் அன்று. இதன் தொடர்ச்சியாகவே 1916ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட 'தென் இந்திய நல உரிமைச் சங்க'த்தைப்…