21 08 2017 அறிந்தும் அறியாமலும் -12: முடிவற்ற முரண்! இலக்கியங்களில் எவற்றைப் படிக்க வேண்டும், ஏன் படிக்க வேண்டும், எப்படிப் படிக்க வேண்டும் என்பன போன்ற சிந்தனைகளை இதுவரை பகிர்ந்து கொண்டோம். இலக்கியம் என்பது வாழ்க்கையோடு தொடர்புடையது; வாழ்விலிருந்து பிறப்பது. எனவே இலக்கியம் பயில்வது என்பதன் பொருள், வாழ்வை அறிவது என்பதே ஆகும்! வாழ்தல் எப்படி என்று அறிந்து கொள்வதற்கு முன், வாழ்க்கை என்றால் என்ன என்னும் ஒரு வினா நம்முன் விரிகிறது. வாழ்க்கை, உலகம், இயற்கை ஆகிய மூன்றினையும், அவற்றுக்கு இடையே உள்ள தொடர்புகளையும் விளங்கிக்கொள்ள, அறிஞர்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக முயல்கின்றனர். இன்றுவரை இறுதியான முடிவு எதுவும் எட்டப்படவில்லை. அது தொடர்பான, முடிவற்ற ஆய்வையும், படிப்பையும்தாம் "தத்துவம்" (Philosophy) என்று கூறுகின்றோம். தத்துவம் என்று சொன்னவுடனேயே, அது நடைமுறை வாழ்க்கைக்குத் தொடர்பற்றது என்றும், அன்றாட…
14 08 2017 அறிந்தும் அறியாமலும் - 11: மூளைதான் அலாவுதீன் பூதம்! சுப வீரபாண்டியன் ‘ ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதமாய்' ஆத்திசூடியும், திருக்குறளும் இங்கே தொட்டுக் காட்டப்பட்டன. அவை வெறும் எடுத்துக்காட்டுகள் மட்டுமே! தொல்காப்பியம் தொடங்கி இன்றுவரை தமிழில் எழுத்துகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. யார் யாருக்கு எந்தெந்தத் துறையில் எவையெவை வேண்டுமோ அவற்றைத் தேடி எடுத்துப் படிப்பது அவரவர் விருப்பம்! சரி, படிக்கலாம் என்று முடிவெடுத்த பிறகும், படிப்பதற்குப் பல தடைகள் உள்ளனவே, என்ன செய்யலாம் என்பது சிலரின் வினா. நூல்களைப் படிக்க இயலாமைக்குப் பொதுவாக மூன்று காரணங்கள் சொல்லப்படுகின்றன. (1) படிக்க நேரமில்லை (2) படிப்பது சலிப்பாய் (Boredom) உள்ளது (3) படிக்கத் தொடங்கியவுடன் தூக்கம் வந்து விடுகின்றது. இவை மூன்றுக்குமே அடிப்படைக் காரணம் ஒன்றுதான். படிப்பில், படிக்க…
30 07 2017 அறிந்தும் அறியாமலும் - 10 : அன்பு அடிமரம், அருள் கிளைமரம்! சுப வீரபாண்டியன் இளந்தமிழ் நூல்கள் ஏழினையும், நாம் அனைவரும் படிக்க வேண்டும் என்பது ஒரு தொடக்கமாக மட்டுமே! இன்னும் படிக்க வேண்டிய நூல்கள் எவ்வளவோ இருக்கின்றன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக எழுதப்பட்ட, இன்றும் எழுதப்பட்டு வருகின்ற எண்ணற்ற இலக்கியங்கள் தமிழில் உள்ளன. அவை எல்லாவற்றையும் நம் வாழ்நாளில் படித்து முடித்து விட முடியாது. தேர்ந்தெடுத்து, மிகச் சில இலக்கியங்களையாவது நாம் படித்தாக வேண்டும். 2013 ஆகஸ்டில், லண்டனில் நடைபெற்ற, உலகத் தமிழியல் ஆய்வு நடுவம் நடத்திய ஆய்வு- மாநாட்டில் பேசும்போதுகூட, நான் இந்தக் கருத்தை வலியுறுத்தினேன். வெளிநாடுகளில் வாழ்வோர் உள்பட அனைவரும், திருக்குறள் போன்ற செவ்விலக்கியங்களைக் கற்க வேண்டும் என்றேன். குழந்தைப் பருவத்திலிருந்தே குறளை ஊட்டுங்கள் என்றேன். அங்கு வாழும்…
18 07 2017 அறிந்தும் அறியாமலும் - 9 வன்சொல் இனிது!   சுப வீரபாண்டியன் "ஆத்திசூடி, கொன்றை வேந்தன் உள்ளிட்ட ஏழு நூல்களைக் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்கச் சொல்கின்றீர்களே, ‘ஆலயம் தொழுவது சாலவும் நன்று', ‘திருமாலுக்கு அடிமை செய்' ஆகிய வரிகள் எல்லாம் உங்களுக்கு உடன்பாடுதானா?" என்று நண்பர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். அவ்வளவு தூரம் நூல்களுக்குள் செல்ல வேண்டாம். நூல்களின் பெயர்களே இந்துக் கடவுளர்களின் பெயர்களைத்தாம் குறிக்கின்றன. ‘கொன்றை வேந்தன்' என்பதே, கொன்றைப் பூ மாலையை அணிந்துள்ள சிவ பெருமானைத்தான் குறிக்கும் என்கின்றன புராணங்கள். ‘ஆத்திசூடி' என்றால் என்ன? ஆத்திப் பூ மாலையை அணிந்திருப்பவன், அதாவது விநாயகன் என்று பொருள். அதனால்தான், அந்நூலின் கடவுள் வாழ்த்து, "ஆத்திசூடி அமர்ந்த தேவனை, ஏத்தி, ஏத்தித் தொழுவோம் யாமே" என்கிறது. உலகநீதியைத் தொடங்குகையில், "கரிமுகன் (பிள்ளையார்) காப்பு" என்கிறார் உலகநாதர்.…
10 07 2017 அறிந்தும் அறியாமலும் - 8 : ஒன்று தமிழ்... இன்னொன்று வாழ்க்கை! -சுப வீரபாண்டியன் பாடப் புத்தகங்களில் அறிவை வளர்க்க முற்பட்ட நாம், மனிதநேய உணர்வை வளர்க்க ஏன் மறந்தோம்? அயல்மண்ணின் அருமை பெருமைகளையெல்லாம் எடுத்துச் சொன்ன நாம், சொந்த மண்ணின் துயரங்களையும், பெருமைகளையும் ஏன் சொல்ல மறந்தோம்? பணம், பதவி, வெற்றி என்பவைகளை நோக்கியே நம் குழந்தைகளைத் துரத்தும் நாம் குற்றவாளிகள் இல்லையா? ஏறு, ஏறு, மேலே ஏறு என்று பிள்ளைகளை விரட்டிக் கொண்டே இருந்த நாம், அவர்கள் மேலேறிய பிறகு பெற்றோரை, உறவினர்களை மறந்துவிட்டார்களே என்று ஆதங்கப்படுவதில் என்ன நியாயம் உள்ளது? குழந்தைகளுக்காக ஏராளமாக எழுதிக் குவித்துவிட்டு, தன் 90ஆவது வயதில், அண்மையில் இறந்துபோன, புகழ்பெற்ற எழுத்தாளர் வாண்டுமாமா, "இந்தக் காலக் குழந்தைகள் பாவம் என்று சொல்லத் தோன்றுகிறது. இவர்களுக்கென்று…