02 07 2017 அறிந்தும் அறியாமலும்: 7 - உயிர் வாழ்தலா? உயிர்ப்புடன் வாழ்தலா? சுப வீரபாண்டியன் வாழ்க்கை முழுவதும் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் என்கிறீர்களா, படித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்கிறீர்களா என என்னைக் கேட்கிறது ஒரு மின்னஞ்சல். ஆம்! கற்றல் (Learning) வேறு, படித்தல் (Reading) வேறுதான். படித்தல் என்பது, பிறந்து சில ஆண்டுகளுக்குப் பின் தொடங்குவது. கற்றல் என்பதோ, பிறப்பிலிருந்தே தொடங்குவது! பிறந்த குழந்தை, தன் தாயிடம் பால் குடிக்கக் கற்கிறது. பிறகு, தவழக் கற்கிறது, நடக்கக் கற்கிறது, பேசக் கற்கிறது... ஒரு கட்டத்தில் படிக்கக் கற்கிறது. ஆதலால், படித்தல் என்பது கற்றலின் ஒரு பகுதிதான். கற்காதவர்கள் உலகில் எவரும் இல்லை. இருக்கவும் முடியாது. கற்றலின் அளவும், விரைவும் மாறுபடலாமேயன்றி, எதனையும் கற்காமலே ஒருவர் உலகில் வாழ இயலாது. ஆகையினால், வாழ்க்கை முழுவதும்…
24 06 2017 அறிந்தும் அறியாமலும் - 6: ஓதுவது ஒழியேல்!  சுப வீரபாண்டியன்  உலகில் உள்ள எல்லாத் துறைகளையும், சென்ற பகுதியில் கூறப்பட்டுள்ள ஏழு தலைப்புகளின் கீழ் அடக்கிவிட இயலுமா என்று சிலர் கேட்டுள்ளனர். இயலும் என்றுதான் கருதுகின்றேன். விளையாட்டு, சமயம் ஆகியனவற்றிற்கு இடமில்லையா என்று ஒரு நண்பர் கேட்டுள்ளார். கண்டிப்பாக இடம் உண்டு. விளையாட்டுத் துறை, பண்பாடு என்னும் தலைப்பின் கீழும், சமயத் துறை, பண்பாடு, தத்துவம் ஆகிய தலைப்புகளின் கீழும் இடம்பெறக்கூடியன. அடங்காத துறைகள் இருப்பின், எட்டாவது பிரிவை நாம் உருவாக்கிக் கொள்ளலாம். அறிவியல், தொழில்நுட்பம், வணிகம், தொழில், பொருளாதாரம், சட்டம் ஆகியன அன்றாடத் தேவைகளாக இருப்பதால், எவரும் அவற்றை விலக்குவதில்லை. பாட நூல்களிலும் அவற்றுக்கு இடமுண்டு. வாழ்க்கை அனுபவத்திலிருந்தும் நாம் அவற்றைக் கற்றுக் கொள்கின்றோம். அரசியல், வரலாறு, கலை, இலக்கியம், பண்பாடு,…
17 06 2017 அறிந்தும் அறியாமலும் - 5: ஆழ்ந்தும் அகன்றும்... - சுப வீரபாண்டியன் 1976 ஆம் ஆண்டில்தான், தமிழகத்திற்குள் முதன்முதலாகத் தொலைக்காட்சி வந்தது. அப்போது அரசின் தொலைக்காட்சி மட்டுமே ‘தூரதர்ஷன்' என்னும் சமற்கிருதப் பெயருடன் வந்து சேர்ந்தது. தனியார் தொலைக்காட்சிகள் வரிசையில், 1990களில் முதலில் அறிமுகமானது ‘சன் தொலைக்காட்சி'. கடந்த 10 ஆண்டுகளுக்குள் ஏராளமான தனியார் தொலைக்காட்சிகள் வந்துவிட்டன. அன்றைக்குத் தொலைக்காட்சியை நாங்களெல்லாம், ஓர் அறிவியல் கருவியாய்ப் பார்க்கவில்லை. ஒரு பெரிய அதிசயமாகவே பார்த்தோம். வீட்டுக்குள்ளேயே திரைப்படமும், பாடல்காட்சிகளும் வரும் என்பது நம்பமுடியாத ஒன்றாக இருந்தது. 1980 வரையில், ஒரு வீதிக்கு ஒன்று அல்லது இரண்டு வீடுகளில்தான் தொலைக்காட்சி இருக்கும். அந்த வீட்டின் வாசல், சன்னல் ஓரங்களில் வெள்ளி மற்றும் ஞாயிறு மாலைகளில் பெரும் கூட்டமே நிற்கும். வெள்ளி இரவு, ‘ஒலியும் ஒளியும்' என்ற…
10 06 2017 அறிந்தும் அறியாமலும் - 4: ஓராயிரம் ஆண்டு ஓய்ந்து கிடந்த பின்னர்.. -சுப வீரபாண்டியன் ஒரு நாட்டின் மேம்பாடு, அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும், சமூக முன்னேற்றத்திலும் பிணைந்து கிடக்கின்றது என்று கண்டோம்.சமூக முன்னேற்றம் குறித்து மட்டுமே இத்தொடர் பேசுகிறது.ஒரு சமூகத்திற்கும், நாட்டிற்கும் இடையிலான வேறுபாடு நாம் அறிந்ததே. உலகில் உள்ள எந்த ஒரு சமூகமும், ஓர் அரசினால் (State)ஆளப்படுகின்றது. அவ்வாறு ஆட்சிக்கு உட்படும்போதே, சமூகம் என்பதனை நாடு (Nation) என்று அழைக்கின்றோம்.ஒரு நாட்டில் ஒரே ஒரு சமூகமும் இருக்கலாம். பல்வகைச் சமூகங்களும் இருக்கலாம். (இப்போதெல்லாம் சமூகம் என்பதைச் சாதிக்கான மாற்றுச் சொல்லாக ஆள்கின்றனர். நாம் இங்கே தேசிய இனத்தையே சமூகம் என்று குறிக்கின்றோம்). ஒரு நாட்டில் ஒரே ஒரு சமூகம் மிகப்பெரும்பான்மையாக இருக்குமானால், அதனைத் தேசிய அரசு (Nation State) என்றும், பல்வகைச்…
03 06 2017 அறிந்தும் அறியாமலும் - 3: வாழ்வின் இரு முகங்கள் சுப வீரபாண்டியன் "ஏன் எங்களையே (IT பிரிவினர் ) எப்போதும் குறிவைத்துத் தாக்குகின்றீர்கள்? எங்களைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் எழுதுகின்றார்களா?" என்று கேட்டுச் சில மடல்கள் வந்துள்ளன. "உங்கள் தலைமுறை 40 ஆண்டுகளில் ஈட்ட முடியாத தொகையை, நான்கைந்து ஆண்டுகளில் கணிப்பொறித்துறையில் உள்ள நாங்கள் ஈட்டி விடுகிறோம் என்னும் பொறாமையில் நீங்கள் எல்லோரும் புழுங்குகின்றீர்கள்" எனச் சிலர் குற்றம் சாற்றியுள்ளனர். "எட்டு மணி நேர வேலை, எட்டு மணி நேர ஓய்வு, எட்டு மணி நேர உறக்கம் என்னும் உங்களின் கோட்பாடு, மருத்துவர்களுக்குப் பொருந்துமா, தீயணைப்புத் துறை ஊழியர்களுக்குப் பொருந்துமா?" என்னும் விவாதங்களும் எழுந்துள்ளன. எப்படியோ, தங்கள் நேரத்தைச் செலவழித்து, என்னோடும், நம்மோடும் உரையாட முன் வந்துள்ள இளைஞர்களுக்கு முதலில் என் நன்றி!…